Monday, January 1, 2024

தனுசு ராசிக்கு 2024 புத்தாண்டு பலன்கள் என்ன? தனுசு ராசிக்கு 2024 ஆண்டு எ...


தனுசு ராசி

தனுசு ராசிக்கு குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024 வரை  ராசிக்கு 5ல் சஞ்சரிப்பார். இதுவரை திருமணம் தடை பெற்றவர்கள் இந்த கால கட்டத்தில் திருமணம் நடைபெறும். குழந்தைகள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் 6ல் அமர்ந்து 10,12,2 இடங்களை பார்வை இடுவார். 6ம் இடத்தில குரு சஞ்சரிப்பதால் உங்கள் எதிரிகளின் கை ஓங்கி காணப்படும். குருவின் பார்வை 10 ஆம் இடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் படும் போது உங்களுக்கு தொழிலில் மேன்மை, பதவி உயர்வு, நீங்கள் பார்க்கும் வேலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வ தரிசனம், மகான்களின் அருள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். உங்கள் வாகு சாதுர்யத்தால் அனைவரையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் குதுகலம் உண்டாகும்.



 2024 ஆண்டு முழுவதும்சனி 3ம் இடத்தில சஞ்சரிக்க இருக்கிறார் .ஏழரை சனி முடிந்து தைரிய சனி ஆரம்பித்து விட்டது. தனுசு ராசிக்காரர்கள் கடந்த ஏழரை ஆண்டு காலமாகவே ஏழரை சனியின் பிடியில் சிக்கி பல கஷ்டங்கள் ,துயரங்கள்  நஷ்டங்களை சந்தித்து வந்தீர்கள்.. உங்களுக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கப்போகிறது.  இனி உங்களுக்கு  விடிவு காலம்தான்.

சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. வேலை கிடைக்காதவர்களுக்கு இனி மேல் நல்ல வேலை வீடு தேடி வரும். தடைபெற்ற திருமணங்கள் தற்போது கைகூடும்.தனுசு ராசி நேயர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வும்  ஒரு சேர கிடைக்கும். சிலருக்கு விரும்பிய  இடத்திற்கு  அனுகூல இடமாற்றம் கிடைக்கும்.



கேது 10ல் சஞ்சரிப்பதால் உங்கள் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ராகு 4ல் சஞ்சரிப்பதால் சொத்து தகராறு ஏற்படக்கூடும். ராகு பகவானுக்கு சனிக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

உங்கள் குலதெய்வத்தை அடிக்கடி மனதில் நினைத்து கொள்ளுங்கள்.. அனைத்தும் நலமாக நடைபெறும்.




No comments:

Post a Comment