Tuesday, January 2, 2024

கும்ப ராசிக்கு 2024 புத்தாண்டு பலன்கள் என்ன? கும்ப ராசிக்கு 2024 ஆண்டு எ...


கும்ப ராசி

கும்ப  ராசிக்கு குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024 வரை  ராசிக்கு 3ல் சஞ்சரிப்பார்.மனம் அலை பாயும்.



2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் 4ல் அமர்ந்து 8,10,12 இடங்களை பார்வை இடுவார்.  நல்ல மன நிலை உண்டாகும். மரண பயம் நீங்கும். சிறு விபத்துக்களே ஏற்பட்டாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.தொழிலில் மேன்மை, பதவி உயர்வு, நீங்கள் பார்க்கும் வேலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெற்றோரின் உடல் நலம் சீராகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வ தரிசனம், மகான்களின் அருள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.



கும்ப ராசி நேயர்களே , சனி பகவான் உங்கள்  ஜென்ம ராசியில் அமரப்போகிறார். ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் உங்களுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்  இதனால் சச ஏற்படுகிறது. சச யோகத்தால்  அணைத்து விதமான  நற்பலன்களே ஏற்படும். சனி கும்ப ராசிக்கு அதிபதி என்பதால்  நீங்கள் சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற படுவீர்கள். உழைப்பு ,உழைப்பு என்று 24 மணி நேரமும் உழைப்பீர்கள்.. ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். கடல் கடந்து சென்று மேல் படிப்பு , வேலை வாய்ப்பு மற்றும்  தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.. அரசு பணிக்கான தேர்வுகளை எழுதியிருப்பவர்கள்  அதில் வெற்றி பெறுவீர்கள்.

ராகு 2ல் மற்றும் கேது 8ல் சஞ்சரிப்பது , நனமையான பலன்கள் ஏற்பட தடை ஏற்படும். இல்லற வாழ்வில் சற்று  விட்டு கொடுத்து போவது நன்மை தரும். சனி கிழமைகளில் ராகு பகவானுக்கும் செவ்வாய் கிழமைகளில்  கேது பகவானுக்கும் நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.



உங்கள் குலதெய்வத்தை அடிக்கடி மனதில் நினைத்து கொள்ளுங்கள்.. அனைத்தும் நலமாக நடைபெறும். சனி கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட நன்மையான பலன்களே நடைபெறும்.


No comments:

Post a Comment