Wednesday, January 3, 2024

மீன ராசிக்கு 2024 புத்தாண்டு பலன்கள் என்ன? மீன ராசிக்கு 2024 ஆண்டு என்ன...


மீன ராசி

மீன   ராசிக்கு குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024 வரை  ராசிக்கு 2ல் சஞ்சரிப்பார். பண வரவு சரளமாக இருக்கும் .திருமணம் தடைபெற்றவர்களுக்கு தற்சமயம் திருமணம் கைகூடும். குடும்பத்தில் குதுகூலம் நிலவிடும்.



2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் 3ல் அமர்ந்து 7,9,11 இடங்களை பார்வை இடுவார். நல்ல மண வாழ்க்கை, பெற்றோரின் ஆசி, தொழில் - வியாபாரத்தில் நல்ல கூட்டாளி கிடைப்பார்கள்.கூட்டு தொழில் நல்ல லாபகரமாக அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், வெளிநாட்டில் வேலையும்  கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தந்தையின் தொழில் ஆதாயம் கிடைக்கும்.எதிர்பாராத பொருள் வரவு, அதிர்ஷ்டம் உள்ளிட்ட சுப பலன்களை எதிர்பார்க்கலாம்.

ராகு ஜென்ம ராசியில் இந்த ஆண்டு முழுதும் சஞ்சரிக்க இருப்பதும் கேது 7ல் சஞ்சரிக்க இருப்பதும் குடும்ப வாழ்வில் விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை இருந்தால் நன்மை தரும். சனிக்கிழமை ராகு பகவானுக்கும் , செவ்வாய் கிழமைகளில் கேது பகவானுக்கும் நெய் விளக்கேற்றி வழிபட வாழ்வில் வெற்றிகள் குவியும்.

மீன ராசிக்கு சனி பகவான்  12,ஆம் வீட்டில்  பயணம் செய்வது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. 2023 ஆம் ஆண்டு முதல் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு விரைய சனியாக ஏழரை சனி காலம் தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் பணத்தை  சேமித்து வைத்திருக்காமல்  சுப சிலவுகள் மற்றும்  சொத்துக்களில் முதலீடு செய்யலாம். ராசிக்கு 12ம் அதிபதியான சனி பகவான் 12ல் ஆட்சி பெற்று காணப்படுவது  விமல யோகம் ஆகும். இதனால் மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். 

சனி பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு அதிபதி. விரைய சனி காலமாக இருப்பதால் லாப சனி காலத்தில் சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது. அது தவிர சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது.

சனி கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வர வாழ்வு வளமாக அமையும். வெற்றிகள் குவியும். உங்கள் குலதெய்வத்தை அடிக்கடி மனிதில் நினைத்து வழிபட்டு வர வளமான வாழ்வு அமையும்.


No comments:

Post a Comment