நாக தோஷம் என்றால் என்ன ? கால
சர்ப்ப தோஷம் என்றால் என்ன ? நாக தோஷத்திற்கும் கால சர்ப்ப தோஷத்திற்கும் என்ன வேறுபாடு
?
நாக தோஷம்
ஏற்படும் முறைகள் ஜாதகத்தில் லக்னத்துக்கு 7ம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று
நாக தோஷத்தை எற்படுத்தும் திருமண தாமதம் ஏற்படுத்தும். லக்னத்துக்கு 10ம் இடத்தில்
ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு நாக தோஷத்தை உருவாக்குவார்கள். ஜாதகத்தில்
லக்னத்துக்கு 5ம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகுவோ, கேதுவோ நின்று நாக தோஷத்தை ஏற்படுத்துவார்கள்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளதும் நாகதோஷம்.
நாக தோஷத்திற்கும்
கால சர்ப்ப தோஷத்திற்கும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் நாக தோஷத்தில் அணைந்து
கிரஹங்களும் ராகு கேது இடையே இருக்காது. ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் அணைத்து கிரஹங்களும்
ராகு மற்றும் கேது இடையே அமையப்பெற்று இருக்கும்.இதை உதாரண ஜாதகங்கள் மூலம் விளக்கியிருக்கிறேன்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள
உதாரண சர்ப்ப தோஷம் ஜாதகத்தில் செவ்வாய் , சந்திரன் , குரு ராகு கேதுக்களின் பிடிகளில்
இருந்து வெளியில் உள்ளது .
ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்போ
அல்லது பின்போ ராகு அமைந்தால் சர்ப்ப தோஷம் என்று கொள்ளவேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு
2ல் அல்லது 12ல் ராகு தனித்து நின்றால் நாக தோஷம் என்று கூறப்படும்.
ஜாதகத்தில் லக்கினத்தில் ராகு மற்றும்
7ம் இடத்தில கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாக தோஷத்தால் திருமண தாமதம் ஏற்படும்.
புத்திர ஸ்தானம் என்று அழைக்க கூடிய
5ம் இடத்திற்கு திரிகோண ஸ்தான மான 1,5,9 ராகுவோ அல்லது கேதுவோ அமையப்பெற்றால் அது புத்திர
தோஷத்தை தரும்.
இத்தகைய அமைப்பை சுப கிரஹங்கள் பார்வை
இட்டால் தோஷம் விலகும்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது
கேது கிரகம் லக்னம் 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு
சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் உண்டாகிற
பாம்பு புற்றுகளை இடிப்பதாலும்,
நாக பாம்புகளை கொல்வதாலும் நாக தோஷம் உண்டாகிறது. இந்த தோஷத்தால் திருமண தாமதம், கணவன்
மனைவி பிரிதல், குழந்தை பாக்கியம் இல்லாதிருத்தல், வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில்
வியாபாரங்களில் நஷ்டம், திடீர் விபத்துகள் போன்ற
பலன்கள் ஏற்படக்கூடும்.
பரிஹாரம்
நாக தோஷம் விலக அடிக்கடி சர்ப்ப சாந்தி செய்ய வேண்டும். வேப்பமரம் மற்றும்
அரசமரத்தின் அடியில் விநாயகர் உடன் உள்ள நாகத்திற்கு
பால் அபிஷேகம் செய்து வர தோஷம் விலகும்.
நாக பஞ்சமி
ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை பஞ்சமி
அன்று அல்லது ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வருகின்ற வளர்பிறை கருட பஞ்சமிக்கு முந்தைய
தினமான சதுர்த்தியை நாக சதுர்த்தி என்கின்றனர். இந்த சிறப்பான நாளில் விரதமிருந்து
நாக பிரதிகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வதை நாகசதுர்த்தி விரதம், நாக சதுர்த்தி
திதி என்கின்றனர்.
போகர் சொன்ன நாகதோஷத்திற்க்கு பரிஹாரம்
இந்த நாக சதுர்த்தி அன்று அரசமரத்திற்கு அடியில், ஒரு நாக சிலை பிரதிஷ்டை
செய்ய வேண்டும். அந்த நாக சிலை எப்படி இருக்க வேண்டுமென்றால், அதன் அடியில் நாக எந்திர
பீடத்தில் மீது இருப்பது போலவும். அந்த நாகங்கள் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய
வண்ணம் இருப்பது போல உள்ள நாகத்தின் கருங்கல் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு
செய்ய வேண்டும். இப்படி செய்வதால் நாக தோஷம் நம்மிடமிருந்து நிரந்தரமாக விட்டு செல்லும்
என்கிறார் போகர்.
நாக சிலை செய்யும் முறை குறித்து போகர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது நாக சிலை இரண்டரை அடிக்கும்
குறைவான உயரம் (பீடத்தை சேர்த்து), பாம்புகள் இரண்டு அல்லது ஐந்து சுற்றுக்கள் பிண்ணிக்
கொண்டிருப்பது போல இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதிஷ்டை செய்யும்
தினத்தில் முழு விரதம் இருக்கலாம். அல்லது பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக்
கொண்டு பய பக்தியுடன் விரதமிருந்து செய்ய வேண்டும்.
இப்படி நாக தோஷம் உள்ளவர்கள்
போகரின் குறிப்புகளின் படி நாக சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், அவர்களுக்கு
இருக்கும் நாக தோஷம் நிரந்தரமாக விட்டு நல்வாழ்வு வாழலாம்.
ராகு நட்சத்திரங்களில்
பிறந்தவர்கள்
திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்சத்திரமாக வரும் ஜாதகர்களுக்கும்,
லக்னத்தில் அல்லது அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று
சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது
.கேது நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்
அசுவினி, மகம், மூலம்,
நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்மாந்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில்
கேது பகவான் லக்னத்திலோ, அல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.
============================================================
கால சர்ப்ப தோஷம்
ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு கேது கிரகங்களுக்கிடையே மற்ற கிரகங்கள்
இருப்பின் கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
உதாரணம் லக்கினம் முதல் 7ம் வீடு வரை ,2ம் வீடு முதல் 8 வீடு வரை அது
3,4,போன்று 5,மற்றும் 12ம் இடங்களில் ராகு கேது இடையே அணைத்து அமைவது காலசர்ப்ப தோஷம்
என்று அழைக்க படும்.
அனந்த கால சர்ப்ப தோஷம்
ராகு முதல் வீட்டிலும் (லக்கினத்தில்), கேது 7ம் இடத்திலும் இருப்பதால்
அனந்த கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இதற்கு விபரீத கால சர்ப்ப தோஷம் என்பார்கள்.
சங்க சூட கால சர்ப்ப தோஷம்
ராகு 9ம் இடத்திலும், 3ல் கேதுவும் இருக்கும் இந்த ஜாதகத்தினர் பொய்களை
அதிகம் பேசுவார்கள்
கடக சர்ப்ப தோஷம் –
ராகு 10ம் வீட்டிலும், கேது 4ல் அமையப்பெற்ற இவர்களுக்கு
குளிகை சர்ப்ப தோஷம் –
ராகு 2ம் இடத்திலும் கேது 8லும் இருப்பவர்கள்
வாசுகி சர்ப்ப தோஷம் –
ராகு 3லும், கேது 9ம் இடத்திலும் அமையப்பெற்றிருப்பின் வாசுகி சர்ப்ப
தோஷம் ஏற்படும்.
சங்கல்ப சர்ப்ப தோஷம்-
ராகு 4ம் இடத்திலும், கேது 10ம் இடத்தில் அமையப்பெற்றிருந்தால்
பத்ம சர்ப்ப தோஷம் –
ராகு 5ம் இடத்திலும்,
கேது 11ம் இடத்தில் அமைந்திருந்தால்
மகா பத்ம சர்ப்ப தோஷம்-
ராகு 6லும் கேது 12ல் இருக்கப்
பெற்றால் மகா பத்ம சர்ப்ப தோஷம்
தக்ஷக சர்ப்ப தோஷம்-
கேது லக்கினத்திலும், ராகு 7ம் இடத்தில்
அமையப்பெற்றவர்கள்
கார் கோடக சர்ப்ப தோஷம்-
ராகு 8ம் இடத்திலும், கேது 2ம் இடத்திலும்
அமைந்தால் கார் கோடக சர்ப்ப தோஷம்
விஷ் தார சர்ப்ப தோஷம் –
ராகு 11ம் இடத்தில் அமைந்து கேது 5ல் அமைந்தால்
சேஷ நாக சர்ப்ப தோஷம் –
ராகு 12ல் அமர்ந்து, கேது 6ம் இடத்தில்
இருப்பின் சேஷ நாக சர்ப்ப தோஷம்
பரிகார கோயில்கள்
கர்நாடகாவில்
உள்ள குக்கே ஸ்ரீ சுப்ரமண்ய கோயில்
ஆந்திராவில்
உள்ள கால ஹஸ்தி கோயில்
தமிழகத்தில்
உள்ள திருநாகேஸ்வர போன்ற கோயிலுக்கு சென்று சர்ப சம்காரம் நிவர்த்தி பூஜை செய்யவும்.\
No comments:
Post a Comment