Search This Blog

Saturday, January 13, 2024

மறைந்த நடிகர் விஜயகாந்த் ஜாதகம் - ஒரு விரிவான அலசல்


கடந்த 28 டிசம்பர் 2023 இல் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் இறந்தார். இவர்  இறந்த போது அவருக்கு வந்த கூட்டத்தை பார்க்கும் போது உண்மையிலேயே நிஜமாகவே ஹீரோவாக வாழ்ந்திருக்கிறார். அவருடைய சமாதி இன்று ,அண்ணா  கலைஞர் , காமராஜர் , ஜெயலலிதா போன்று இன்று பிரபலமாக  உள்ளது. இதிலிருந்து இவர் தமிழ்நாடு அரசியலில் , கலைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்பதை உணரலாம்.


மறைந்த நடிகர் விஜயகாந்த் ஜாதகத்தில் லக்கினாதிபதி சூரியன் லக்கினத்தில் ஆட்சி. லக்கினாதிபதி வலுப்பெற்றால் யோகமான வாழ்வு உண்டாகும்.

சாமர யோகம்

விஜயகாந்த் ஜாதகத்தில் லக்கினாதிபதி சூரியன் லக்கினத்தில் ஆட்சி பெற்று  அதை குரு பார்ப்பதால்  சாமர யோகம் என்று அழைப்பார்கள். அந்த காலத்தில் அரசர்களுக்குத்தான் சாமரம் வீசுவார்கள். அதாவது ஜாதகர் ஒரு மன்னனை போல் வாழ்வார் .  இந்த யோகத்தில் பிறந்தவர்கள் சிறந்த குலத்தில் பிறந்தவர் வேகமாக முன்னேறுவார்கள். ஆன்மிக ரீதியான வளர்ச்சிகளையும் அடைவார்கள். அரசின் உயர்ந்த பதவி அவரைத் தேடி வரும். சமூகத்தில் செல்வாக்கும் பாராட்டும் பெறுவார்கள்.

வாழ்வில் படிப்படி உயர்வும் புகழ் கிடைக்கும் .

"அருட்சாமி கேந்திரமாக வலது தானுச்சமாகத்

தருக்கான பொன்னே பார்க்கிற் சாமரை யோகமென்பர்

உருக்காணு மழகு கீர்த்தி யுயர்தனம் சாஸ்திரங்கள்

புருக்கானு மநேகமைந்தர் செல்வமுமுடைய யோனாமே"

 (சாதகசிந்தாமணி )



புனர்பூ தோஷம் அல்லது விஷ கன்னிகா தோஷம்

நடிகர் விஜயகாந்த் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டில் சனி சந்திரன் சேர்க்கை பெற்றது

புனர்பூ தோஷம் அல்லது விஷ கன்னிகா தோஷம் என்று கூறுவார்கள்.

ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது

புணர்ப்பு தோஷம் கொண்டவர்கள் பொதுவாழ்விலும் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபடுவதால் அவர்களுக்கு தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். அதுவே அவர்களுக்கு குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாகிறது.

அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் ஆன்மீகத்தொண்டு செய்பவர்களுக்கும் பத்தில் எட்டு பேருக்கு இந்த சந்திர-சனி கிரக சேர்க்கை கட்டாயம் இருக்கும்.

சனி, சந்திரன் சம்பந்தம் பெற்ற ஜாதகர்கள் கடின உழைப்பாளிகள், நாட்டின் உயர்பதவிகளில் அமரக்கூடிய பாக்கியமுடையவர்கள். தலைமைப் பதவிகள் இவர்களைத் தேடி வரும். சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, விட்டுக் கொடுப்பது எல்லாம் இவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும். ஆணவம், அகங்காரம் இல்லாமல் அமைதியாக சாதித்துக் காட்டுவார்கள்.திருமண தாமதத்தை ஏற்படுத்தும்.

ஜலதி யோகம்

நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் நட்பு ஸ்தானத்தில் பலம் பெற்றிருந்து நான்கிலும் சுபக்கிரகம் இருக்க அல்லது பார்க்க ஆடையாபரண அலங்காரப் பிரியராகவும் , வாகன சுகம் , பந்து மித்திரர்களால் சௌக்கியம்  தாய் நலம் உள்ளவராகவும் , அரசர்களால் மதிக்கப்படத்தக்கவராகவும் குளம் , கிணறு , தர்ம சத்திரம் போன்றவை ஏற்படுத்தி நற்பெயரை அடைவார் .



4ம் அதிபதி செவ்வாய் 4ல் ஆட்சி பெற்று காணப்படுவது  ருசக யோகம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்கும் சந்திரனுக்கும் 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் செவ்வாய் அமர்ந்து, அந்த இடம் செவ்வாய்க்கு சொந்தவீடாகவோ, உச்ச வீடாகவோ இருப்பது ருசக யோகம் ஆகும். செவ்வாய் தன் சொந்த வீடுகளான மேஷம், விருச்சிகம் ஆகியவற்றிலும், உச்ச வீடான மகரத்திலும் இருந்தாலும் யோகம் உண்டாகும். செவ்வாய் இப்படி வலுக்கும்போது, சொந்த வீடு-மனை, வாகனங்கள் ஆகியன சேரும். மனத்துணிவு உண்டாகும். தன்னம்பிக்கையோடு செயலாற்ற முடியும். வெற்றிகள் குவியும். பிடிவாத குணமும் கொண்டவர்கள். தனவான்கள். சூரர்களாகவும், எதிரிகளை அழிப்பவர்களாகவும் இருப்பார்கள். யாரைப்பற்றியும் அஞ்சாமல் கேள்வி கேட்கும் மன தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். அரசியலில் பெரிய பதவிகள் தேடி வரும்.

ஓடிப்போனவனுக்கு 9ல் குரு

9 ம் இடம் பித்ரு ஸ்தானம். இங்கு குரு இருந்தால் தந்தைக்கும் மகனுக்கும் ஆகாது. இளம் வயதில் வீட்டை விட்டு ஓடி   போவார்கள் . ஒன்பதாம் இடத்தில் குரு இருந்தால் அவன் சுகவாசியாக இருப்பான். கஷ்டங்கள் வந்தால் தாங்கிக் கொள்ள முடியாமல் ஊரை விட்டே ஓடி விடுவார் . பின்னால் ஒரு செல்வந்தனாக ஆவார் .  இது விஜய காந்த் ஜாதகத்தில் உணரமுடிகிறது. இவர் தந்தை செல்வந்தராக இருந்தாலும் தந்தை விட்டு பிரிந்து சென்னை வந்து   திரைப்பட துறையில் தன் சொந்த முயற்சியில் வாழ்க்கையில்  வாழ்க்கையில் உயர்ந்தார். 9ல் உள்ள குரு தசை விஜயகாந்துக்கு  மிக பெரிய வெற்றியை, புகழை  சினிமாவில் கொடுத்தது.

சுக்கிரன் சுப பலம்

மறைந்த நடிகர் விஜயகாந்த் ஜாதகத்தில் சுக்கிரன் லக்கினத்தில் லக்கினாதிபதியோடு சேர்ந்து அமர்ந்து சுபபலமாய்  உள்ளார். ஜாதகத்தில் சுக்கிரன் வலு பெற்றால் கலை உலகத்தில் பிரபலம் அடைவது நிச்சயம் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. செல்வி ஜெயலலிதா ஜாதகத்தில் 10ல் உச்சம் பெற்று மாளவிய யோகம் அடையப்பெற்றதால் கலையுலகில் பெரும் புகழும் பெற்றார் என்பதை நாம் உணரவேண்டும்.

சனி தசை சந்திர புக்தி

6 மற்றும் 7 ம் அதிபதியான சனி தசையில் தான் 2005இல்கட்சியைஆரம்பிக்கிறார். சனி மற்றும் சந்திரன் 2ல் அமர்ந்ததால் சனி, வளற்பிறை சந்திரன் இணைவில் சட்ட மன்ற உறுப்பினர், எதிர்கட்சி தலைவராகும் வாய்ப்பை கொடுத்தது.

12ல் அமர்ந்த புதன் தசை

சிம்ம லக்கினத்திற்கு புதன் 2 மற்றும் 11ம் அதிபதி ஆவார். 12ல்  மோக்ஷ ஸ்தானத்தில் அமர்ந்து காணப்பட்டார்   . புதன் தசையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு   மோக்ஷம் அடைய காரணமாய் இருந்தது புதன் தசை என்பதை உணரலாம்.


No comments:

Post a Comment