இந்தியாவிலிருந்து
அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ஓரே நடிகர் சிவாஜி கணேசன்
அமெரிக்க
ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது கடந்த 1962 ஆம் ஆண்டு அமெரிக்க பூங்கா ஒன்றுக்கு வரும்
குழந்தைகள் விளையாடுவதற்காக யானை குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார்.
அமெரிக்காவில்
உள்ள இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு சிவாஜி கணேசன் அனுப்பிய யானை
குட்டி சென்றது.
அமெரிக்காவில்
உள்ள குழந்தைகள் அந்த யானை குட்டியுடன் விளையாடிய செய்தி ஊடகங்களில் பரபரப்பான நிலையில்
இது குறித்து கென்னடி கேள்விப்பட்டார்.
உடனடியாக
சிவாஜி கணேசன் யார்? அவருடைய பின்னணி என்ன என்பதை அறிய முயற்சி செய்தார்.
சென்னையில்
உள்ள அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்ட அமெரிக்க அரசு, சிவாஜி பற்றிய முழு விவரங்களையும்
கேட்டது.
சென்னையில்
உள்ள அமெரிக்க தூதரகம் சிவாஜி கணேசன் பற்றிய தகவல்களை அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்து
பார்த்து ஆச்சரியமடைந்த கென்னடி உடனடியாக சிவாஜி கணேசன் அமெரிக்க அரசின் விருந்தினராக
சுற்றுலா வருவதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.
இதன்படி
சிவாஜி கணேசனுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று கொண்ட சிவாஜி கணேசன் அமெரிக்க
அரசின் விருந்தினராக அமெரிக்கா சென்றார்.
இந்தியாவிலிருந்து
ஒரு நடிகர் அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது அதுவே முதல்முறை.
இந்த பயணத்தின்
போது தான் உலகின் மிகச்சிறந்த நடிகர் என்று அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோவை சிவாஜி
கணேசன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின்போது
அவர் அமெரிக்க அதிபர் கென்னடியையும் சந்தித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சிவாஜி கணேசன்
சென்னை திரும்பியபோது அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்த எம் ஜி ஆர் மாலை அணிவித்து
சென்னை விமான நிலையத்தில் சிவாஜியை சிறப்பாக வரவேற்றார். அதுமட்டுமின்றி சிவாஜியை நடிகர்கள்
ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment