நடிகர் விஜய் ஜாதகம் - அரசியலில் வெற்றி கொடி
நடுவாரா ? இல்லற வாழ்வு எவ்வாறு இருக்கும் ?
விஜய் கன்யா லக்கினம் , கடக ராசி , பூசம்
நட்சத்திரத்தில் பிறந்து உள்ளார். இவர் ஜாதகத்தில் பல்வேறு யோகங்கள் காணப்படுகிறது.
லட்சுமி
யோகம்
9ம் அதிபதி சுக்கிரன் 9ல் ஆட்சி - லட்சுமி
யோகம் - கலைத்துறையில் ஒருவர் பிரபலம் அடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுபெறவேண்டும். விஜய்
ஜாதகத்தில் சுக்கிரன் 9ல் ஆட்சி பெற்று மிக வலுவாக உள்ளார். அனைத்து செல்வங்களையும்
பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவான். நற்குணங்கள் உடையவராகவும், அழகானவராகவும், புகழ்
பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும். இவர் ஒரு திரை படத்தில் நடிக்க
ரூ 100 கோடி சம்பளமாக பெறுகிறார்.
பத்ர
யோகம்
10 ம் அதிபதி 10ல் ஆட்சி பெறுவது பத்திர
யோகம். இந்த யோகம் மிகவும் நுண்ணிய அறிவாற்றல்
நிறைந்த பலனையும் பலருக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பாகவும் உள்ளது.இந்த யோகம் நட்பு வட்டத்தை
மிகவும் பெரிதாகவும் படித்தவர்களாகவும் பெரிய தொழில் அதிபர்களாகவும் இருக்க வைக்கும்
அமைப்பை விஜய்க்கு தருகிறது. பத்திர யோகம் பெட்ரா புதனை விஜய் ஜாதகத்தில் குரு பார்ப்பது
பிரபல யோகத்தை தருகிறது.
10ல்
சூரியன் திக்பலம் -
10ல்
சூரியன் திக்பலம் பெற்ற ஜாதகருக்கு புகழ், மரியாதை, அங்கீகாரம், செல்வம் மற்றும் அரசாங்கத்தின்
கௌரவத்தை தருவார்.அரசியலில் உயர் பதவி பெற 10ல் திக்பலம் பெற்ற சூரியன் விஜய்க்கு உதவியாய்
இருப்பார்.முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஜாதகத்தில் 10ல் சூரியன் திக்பலம்
அடைந்து காணப்பட்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
10
ல் புதஆதித்தய யோகம்
இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும்.
எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும்,
மரியாதையையும் கொடுக்கும். முன்னாள் பிரதமர் லால்பகதூர்
சாஸ்திரி ஜாதகத்தில் 10ல் புதஆதித்தய யோகம்
இருந்ததை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
10ல்
சனி சூரியன் சேர்க்கை
சனி சூரியனுடன் சேர்ந்தால் தந்தைக்கும்
மகனுக்கும் ஆகாது . விஜய் தன் தந்தையை தற்போது கருத்து வேறுபாட்டால் ஒதுக்கி வைய்த்துள்ளார்..
புஸசி ஆனந்துக்கு கிடைக்கும் மரியாதையை விஜயின் தந்தைக்கு கிடைக்க வில்லை.
11ம்
அதிபதி சந்திரன் 11ல் ஆட்சி - :பாரிஜாத யோகம்
வரவதிகம் , செல்வம் அடைவார்கள் .சுகபோகங்களை அனுபவிப்பராக
இருப்பார். அவருக்கு அரசு அரசாங்க மரியாதைகள் கிடைக்கும். அவரிடம் அதிகமான வசதி வாய்ப்புகள்
குவியும்
செவ்வாய்
நீச்ச பங்க ராஜ யோகம்
கன்யா லக்கினத்திற்கு 3 மற்றும் 8ம் அதிபதி
செவ்வாய் நீச்சம் அடைவது நன்மை தரும். நீச்ச பங்க ராஜ யோகா வாழ்வை ஜாதகருக்கு அளிக்கும்
. திரு மோடி ஜாதகத்தில் சந்திரன் நீசபங்க ராஜயோகத்தை தந்ததால் அவருக்கு முதலமைச்சர்
மற்றும் பிரதம அமைச்சர் ஆக முடிந்தது. விஜய்க்கும் இந்த யோகம் உள்ளது. விஜய் ஜாதகத்தில் செவ்வாய் அம்சத்தில் ஆட்சி பெற்று
காணப்படுவதால் இவர் நிச்சயம் அரசியலில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார்.
விஜய்
ஜாதகத்தில் வசுமதி யோகம்
சுபர்களான குரு ,சுக்கிரன் ,புதன் மூவரும்
லக்கினம் அல்லது கேத்திரங்களில்ருந்து உபஜெய ஸ்தானங்களில் இருப்பது. ஜாதகருக்கு சொத்து
, சுகங்களையும் , முன்னேற்றத்தையும் அளிக்கும்
விஜய்
ஜாதகத்தில் அமலா யோகம்
இந்த யோகத்தை உடைய ஜாதகதாரர் அழகிய முக
தோற்றமும், உடல் தோற்றமும் கொண்டவர். அழகோடு மிகவும் சிறந்த அறிவாற்றலும், விவேகமாக
செயல்படக்கூடியவராக இருப்பார்.அழகு, அறிவைத் தாண்டி மற்றவர்கள் மீது இரக்க குணத்துடன்
இருப்பதோடு, தாயின் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள். சமீபத்தில் இவரது பெற்றோர்
வீஜயை பார்க்க சென்றனர். விஜய் அவரது தந்தையை சந்திக்க மறுத்துவிட்டார். ஆனால் தன தாயை
சந்தித்தார்.அன்பும், ஆற்றலும் பெற்றவர், வற்றாத புகழும், வடியாத செல்வமும் உடையவர்.
நல்லவர், வல்லவர் என எல்லோராலும் புகழப்படுபவர். கலை சினிமா, அரசியல் துறைகளில் புகழ்
பெற்று வாழ்வார்கள்.
விஜய்
ஜாதகத்தில் பர்வத யோகம்
லக்கினாதிபதியும் , 12ம் அதிபதியும் ஒருவருக்கு
ஒருவர் கேந்திரத்தில் இருப்பது பர்வத யோகம் என அழைக்கப்படுகிறது. நல்ல செல்வ செழிப்பு
உண்டாகும். அதிர்ஷ்டமும், ஆதரவும் தேடி வரும். மிகவும், அன்பானராகவும், பாசம் மிகுந்தவராகவும்
இருப்பர். பேச்சுத் திறமை நன்றாகவே இருக்கும்.
மன தைரியம் உடையவராகவும், கற்பனை வளம் மிகுந்தவராகவும் இருப்பர்.
விஜய்
ஜாதகத்தில் சிரீநாத யோகம்
புதன் ,சுக்கிரன் , 9ம் அதிபதி ஆகிய 3 கிரஹங்களும்
கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் உச்சம் அல்லது ஆட்சி அடைந்து காணப்பட்டால் இந்த
யோகம் ஏற்பட்டுள்ளது.ஜாதகர் பணிவான பேச்சு , அதிக நண்பர்கள் கூட்டம் மற்றும் அதீத கடவுள்
நம்பிக்கை உடையவர் ஆக இருப்பர்.
விஜய்
ஜாதகத்தில் சசி மங்கள யோகம்
இந்த யோகத்தினால் எதிர்பாராத தன வரவு, செல்வாக்கு,
கல்வி, அதிகாரம், காரிய வெற்றி, வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும்
திருமண
வாழ்க்கை
கன்யா லக்கினதிற்கு குரு பாதகாதிபதி மற்றும்
7ம் அதிபதியாவார். 7ம் அதிபதியான குரு 6 ல்
மறைவது நன்மை தரும். ஆனால் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை ஏற்படுத்துவார். விஜய் மனைவி தற்சமயம் லண்டனில் தன் மகளின் படிப்புக்காக
வசித்து வருகிறார். விஜய் அவரை சென்று கடந்த 2 ஆண்டுகாலமாக பார்க்கவில்லை. விஜயின்
மகனும் விஜயுடன் கருத்து வேறுபாடு என்று கூறுகிறார்கள். விஜயுடன் கருத்து வேறுபாட்டால்
அவரது மனைவி சங்கீதா விவாகரத்து பெறாமல் தனித்து வாழ்ந்து வருகிற என்று கூறப்படுகிறது.
சுக்கிர
திசை
விஜய்யின் ஜாதகத்துக்கு 2033 வரை சுக்கிர
திசை நடக்கிறது. கன்யா லக்கினத்திற்கு 2 மற்றும் 9 மதிபதியாகி யோககாரகர் ஆன லட்சுமி
யோகம் பெற்ற சுக்கிர திசை இவருக்கு பிரபல யோகத்தை
தரும் என்பதில் ஐயம் இல்லை. 2025க்கு மேல் வசூல் சக்கரவர்த்தியாக திகழப்போகிறார் மற்றும்
அரசியலில் காலூன்றி உயர்ந்த நிலைக்கு வர உள்ளார்.உலகளவில்
மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலிக்கவும் வாய்ப்புண்டு.
நடப்பு தசை புக்தி
சுக்கிர தசையில் குரு புக்தி 12-1-2024 முதல்
12-09-2026 வரை நடைபெற இருக்கிறது. சுக்கிரன் 9ம் அதிபதி ஆவார். அவர் 9ல் அமர்ந்து
திசை நடத்துவது பிரபல யோகத்தை தரும். புக்தி நரான குரு 4 மற்றும் 7ம் அதிபதி ஆவார்.
பாதகாதிபதியான குரு 6ல் மறைந்து புக்தி நடத்துவது பிரபல யோகத்தை தரும். சுக்கிரன் சூரியனின் நட்சித்திரமான கிருத்திகையின்
பகை சாரம் பெற்று தசை நடத்துகிறார். குரு சுய
சாரம் பெற்று புக்தி நடத்துகிறார். அரசியலுக்கு காரகர் ஆன சூரியன் சாரம் பெற்று சுக்கிரன் தசை நடத்துவதால் , இவர் இந்த காலகட்டத்தில்
அரசியலில் ஈடுபடுவர். ஆயினும் சுக்கிரன் பகை
சாரம் பெற்று தசை நடத்துவதால் பல போராட்டங்களுக்கு நடுவில் அரசியலில் முன்னேற்றம் காணுவார்
. ஆக சுக்கிர தசை விஜய் அரசியலிலும் திரைத்துறையிலும் சாதனை செய்வார் என்பதில் எள்ளளவும்
சந்தேகமில்லை.
No comments:
Post a Comment