Tuesday, April 30, 2024

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே13, 2025வரை...


தனுசு   ராசி குரு பெயர்ச்சி  பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

1 மற்றும் 4ம் அதிபதி

 தனுசு  ராசிக்கு குரு பகவான் 1ம்  மற்றும்  4ம்  வீட்டிற்கு அதிபதி ஆவார். குரு பகவான் 6ம் வீட்டில்  சஞ்சரிக்க்க இருக்கிறார்.. இதுவரை உங்கள் ராசிக்கு 5ம்  வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு  6ம் வீட்டில்  ருண ,ரோக , சற்று சத்ரு ஸ்தானத்தில்  சஞ்சரிக்கப் போகிறார். தனுசு  ராசிக்கு  குரு பகவான்  6ம் இடத்தில  இன்னும் ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க இருக்கிறார். இதுநாள்  வரை 5ம் இடத்தில்  இருந்த  குரு பகவான் உங்கள் தொழிலில் வளர்ச்சி  , வேலையில் முன்னேற்றம்   போன்ற அனுகூலமான   பலன்களை தந்து இருப்பர். ஆனால் தற்சமயம் 6ல் சஞ்சரிக்க இருப்பதால் கடன் வாங்கும் நிலையை  ஏற்படுத்துவார். எதிரிகளின் கை ஓங்கி இருக்கும். இன்னும் ஒரு வருட காலத்திற்கு சிறிய சங்கடங்களை சந்திக்க நேரிடும்.



குரு 10ம் இடத்தை பார்ப்பதால் , உத்தியோக உங்கள் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இது நாள் வரை தடை பெற்ற உத்யோக உயர்வு தற்சமயம் கிடைக்கும். தொழில் நன்றாக இருக்கும். அபரீத லாபம் உண்டாகும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். பொருளாதார நிலை மேம்படும். வருமானம் உயரும்.  இந்த காலக்கட்டத்தில் சொத்துக்கள் வாங்கும் நிலை உருவாகும் .   ஒரு சிலருக்கு பொன் , ஆபரணம் ,  வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்;.

6ல் குரு இருப்பதால் உடல்  ஆரோக்கியத்தில் சற்று கவனம்  தேவை. அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது  நன்மை  தரும். சிலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளீப்பீர்கள். எதிரிகளின் கை ஓங்கி இருக்கும். வழுக்குகள் இழுவை நிலை காணப்படும்.



குரு பகவான் 6ம் இடத்தில சஞ்சரிப்பதால் எந்தவொரு செலவையும் செய்வதற்கு முன்பு சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும்.

ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன் துறைகளில் அதிக வருமானத்தை தரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.மாணவர்கள்  படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.

இனிமேல்  தனுசு  ராசிக்கு 6ம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10,12,2ம் இடத்தை பார்வை இடுவார்.

குரு 10ம் இடத்தை பார்வை

குரு ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். அரசு வழியில்  உதவிகள் கிடைக்கும்.  பயண வாய்ப்புகள் கைகூடிவரும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.தொழில், கர்ம ஸ்தானத்தில் படும் போது உங்களுக்கு தொழிலில் மேன்மையும், பதவி உயர்வு, வேலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெற்றோரின் உடல் நலம் சீராகும்.

குரு 2ம் இடத்தை பார்வை

குரு 9ம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். . தனவரவுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சொத்துக்களை வாங்கும் யோகம் ஏற்படும்.

குரு 12ம் இடத்தை பார்வை

விரய ஸ்தானம், சயன, மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை படும்போது, உங்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வ தரிசனம், மகான்களின் அருள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

குரு பெயர்ச்சியில் உங்கள் தொழிலில்  பணியில் நல்ல முன்னேற்றம் , அதற்கான தனவரவுகளும், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.

உங்கள் வீடு அருகில் உள்ள கோவிலில் உள்ள நவகிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியமும், கல்வியில் முன்னேற்றமும், எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் , வழக்குகளில் சாதகமான தீர்ப்பு ஆகியவை கிடைக்கும்.



 தனுசு    ராசிக்கு  கிரஹ நிலைகள்  -01-05-2024 முதல் மே 13, 2025 வரை

தனுசு  ராசி நேயர்களுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு கோச்சாரம்  சுமாராக  இருக்கிறது.

6ல் குரு , 4ல் ராகு , 10ல் கேது , 3ல் சனி ஆட்சி சௌரிய யோகம்   தருகிறது.இந்த யோகத்தால் தனுசு ராசி நேயர்கள் பராக்கிரமசாலியாகவும் , எடுத்தக் காரியத்தை முடிக்கும் தீரனாகவும் ,சகோதரர்களால் வெற்றி ஆகியவை அமையும்.

குரு பகவான் கோச்சாரத்தில் தனுசு ராசிக்கு 6ல் சஞ்சரிக்க இருப்பதால் , இந்த ஒரு வருட காலத்தில் சில எதிர்பாராத தடைகளை நீங்கள் சந்திக்கலாம்,


 

4ல் ராகு

ராகு  பகவான் 4ல் கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது ,  விஷஜந்துக்கலால் பாதிப்பு ஏற்படலாம்.. தாயாரின் உடல்நிலை கெட வாய்ப்பு உள்ளது . கணவன் மனைவி அன்னியோன்யம் நிறைந்து இருக்கும் . பெரியோர்களின் ஆதரவு ம் ஒத்துழைப்பும் இருக்கும்.  கால்நடை ஜீவன்களுக்கு மருத்துவ செலவு ஏற்படும்.



10ல் கேது

10ல் ஒரு பாபியாவது இருக்க வேண்டும் என்று சொல்கிறது ஜோதிட நூல்கள். 10ல் சுபர்கள் அமர்ந்தால் கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்பட்டு தீய பலன்கள் ஏற்படலாம். கேது  பத்தாமிடத்திற்க்கு வரும்போது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர சிலவுகள் செய்ய நேரிடும்.. பணவரவு சரளமாக  இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். வேலை செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பனி உயர்வு , விரும்பிய இடத்திற்கு இடம் மாற்றம் ஆகியவை ஏற்படும். பல கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட யோகம் ஏற்படும்.

3ல் சனி ஆட்சி

பொதுவாக சனி 3ம் இடத்தில இருக்கும் பொழுது யோகமான பலன்களை தருவார். வருமானம் தாராளமாக இருக்கும்.. மண்ணை தொட்டாலும் பொன்னாகும். நோய் விலகி உடல் நலம் பெறுவார்கள். எவரை கண்டும் அஞ்சாத  மனது அமையும். கடும் பகைவர்களையும் வெற்றி காணும் நிலை அமையும்.புதிய வீடு, வாகனம், பதவி சுகம் கிடைக்கும்.

3ல் சனி ஆட்சி சௌரிய யோகம்   தருகிறது.இந்த யோகத்தால் தனுசு ராசி நேயர்கள் பராக்கிரமசாலியாகவும் , எடுத்தக் காரியத்தை முடிக்கும் தீரனாகவும் ,சகோதரர்களால் வெற்றி ஆகியவை அமையும்.

தனுசு ராசிக்கு  குரு பகவான் 6ல்   சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

1. குரு பகவான் கோச்சாரத்தில் 6ல் சஞ்சரிக்கும் பொழுது  சிறைவாசம் ஏற்படலாம். சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தளை பூண்டதும்  என்பார் புலிப்பாணி முனிவர். தளை என்பது காலிலே சங்கிலி இணைத்து இருப்பது என்று பொருள்.

2.தாளப்பா ஆறுக்கு தோஷம் உண்டு தார்வேந்தர் பகை உண்டு ரோகம் உண்டு என்பார் புலிப்பாணி முனிவர். 6லே குரு வரும்பொழுது அரசாங்கம் தண்டனையால் சிறைவாசம் நேரிடும். உடல் ஆரோக்கியம் பாதிக்க படும் என்று பொருள்.

3. பணியில் இடை நீக்கம் செய்ய பட்டிருந்தால் தற்சமயம் பணியில் சேரும் வாய்ப்பு அமையும்

 

4.புதிய வேளையில் சேரும் யோகம் உண்டாகும்

5.இதுநாள் வரை தடை பெற்ற  உத்யோக உயர்வு , சம்பள உயர்வு தற்போது கிடைக்கும்

6.குழந்தை இல்லாதவர்களுக்கு தற்சமயம் குழந்தை பாக்கியம் உண்டாகும்

7.உங்கள் செல்வாக்கு மற்றும் சொல்வாக்கு அதிகரிக்கும்

8.வெளிநாடு பயணம் , தீர்த்த யாத்திரை செல்லும் யோகம் ஏற்படும்

9.இது நாள் வரை தடை பெற்ற குழந்தை பாக்கியம் தற்சமயம் உண்டாகும்

10.சுப விரய சிலவுகள் ஏற்படும்

11.நீண்ட நாள் இருந்து வந்த கடன் தொல்லை தற்சமயம்  திருப்ப செலுத்துவீர்கள்

12.பணவரவு சரளமாக இருக்கும்

13.சுபநிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது

பரிஹாரம்

தனுசு   ராசி நேயர்களுக்கு குரு   6ல் சஞ்சரிக்க  இருப்பதால் , வியாழக்கிழமைகளில்   உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள குரு   பகவானுக்கு  நெய்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

வியாழக்கிழமைகளில் குரு ஹோரையில் ,காலை 6 am  to 7 am குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி , கொண்டக்கடலை மாலை சாற்றி , நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வர வெற்றிகள் குவியும் .

ராகு பகவான் 4ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் , சனிக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள ராகு   பகவானுக்கு நெய்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

 


No comments:

Post a Comment