Tuesday, April 30, 2024

மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வர...


மகர  ராசி குரு பெயர்ச்சி  பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

12 மற்றும் 3ம் அதிபதி

மகர ராசிக்கு குரு பகவான் 12ம்  மற்றும்  3ம்  வீட்டிற்கு அதிபதி ஆவார். குரு பகவான் 5ம் வீட்டில்  சஞ்சரிக்க்க இருக்கிறார்.. இதுவரை உங்கள் ராசிக்கு 4ம்  வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு  5ம் வீட்டில்  பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில்  சஞ்சரிக்கப் போகிறார்.    மகர  ராசிக்கு  குரு பகவான்  5ம் இடத்தில  இன்னும் ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க இருக்கிறார். இதுநாள்  வரை 4ம் இடத்தில்  இருந்த  குரு பகவான் உங்கள் தொழிலில் வளர்ச்சி இன்மை , வேலையில் முன்னேற்றம் இன்மை   போன்ற அனுகூலமற்ற    பலன்களை தந்து இருப்பர். ஆனால் தற்சமயம் 5ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் திருமணம் நடக்கும். குழந்தை வரவு உண்டாகும்.. புதிய வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். வேலை ஆட்கள் , சேவகர் விருத்தி உண்டாகும். கல்வியில் நல்ல முன்னேற்றம், உள்ளத்தில் ஏற்றம் , திரண்ட  செல்வ சேர்கை, அளவில்லா மகிழ்ச்சி ஏற்படும். குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.



பொது பலன்

இந்த பெயர்ச்சிக் காலத்தில்  மகர ராசி நேயர்கள்  சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.பணியிடத்தில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள்.  மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.பணியில் புதிய பொறுப்புகள்  மற்றும் ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.தொழிலில்  உங்கள் கடின உழைப்பால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி காணப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே  சுமுக நல்லிணக்க உறவு இருக்கும். கணவன் மனைவி பரஸ்பர உறவு அற்புதமாக இருக்கும் .

தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.


ஒரு சில மகர ராசி நேயர்களுக்கு வெளி நாடு சென்று கல்வி கற்கும் யோகம் உண்டாகும்.அரசியல்வாதிகள்  மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் புதிய பதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். புதிய வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்ப்புகள் அகலும்.மனக் குழப்பங்கள் நீங்கும்.

குரு பார்வை 11,1,9

இந்த குரு பெயர்ச்சி மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை நடக்கும். குரு எந்தஇடத்தை கோச்சாரத்தில் பார்வையிடுகிறாரோ   அந்த இடம்  பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது  தன இருக்கும் குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். 5ம் பார்வையும்,9ம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

இந்த பெயர்ச்சி காலத்தில் குரு விருச்சிக  ராசிக்கு  11வது வீடு, 1வது வீடு மற்றும் 3வது வீடு ஆகிய இடங்களை பார்வை இடுகிறார்.

குரு பார்வை கோடி நன்மை என்பார்கள்.  குரு பகவான் தனக்காரகர் , தேவர்களின் குரு, பிரகஸ்பதி என அழைக்கப்படுகிறார். இவரின் அருள் இருந்தால் திருவருள் நிச்சயம் கிடைக்கும் என்பதை நியதி. எனவே தான், குருவின் பார்வை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குரு பகவானைப் பொறுத்தவரையில் சுப பலனை அதிகமாகவும், தீமைகளைக் குறைவாகவும் கொடுப்பவராக இருக்கிறார். யார் ஒருவர் தன்னுடைய கோச்சாரத்தில்  குருவின் சுப பலன்களை பெறக்கூடிய நல்ல இடத்தில் அமர்ந்துள்ளாரோ, அவர் சமூகத்தில் மற்றவர்களால் போற்றும்படியாக வாழ்வார்.



குரு 1ம் இடத்தை பார்ப்பதால்

1-ம் இடத்தை, அதாவது ஜன்ம ராசியைப் பார்த்தால், பேரும் புகழும் உண்டாகும். அந்தஸ்து, மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். நீங்கள் எடுத்த காரியம் வெற்றி உண்டாகும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உற்றார் , உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதிலே வெற்றியும் காணிப்பீர்கள். சொத்துக்களில் இருந்த வில்லங்கம் விலகும்.

குரு 9ம் இடத்தை பார்ப்பதால்

9-ம் இடத்தை, பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள்.உங்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வும், வெளிநாட்டில் வேலையும்  கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தந்தையின் தொழில் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் உங்கள் வசம் ஆகும். கோயில்களில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

குரு 11ம் இடத்தை பார்ப்பதால்

குரு 11ம் இடத்தை பார்ப்பதால் லாப ஸ்தானத்தைப் பார்க்கும்போது, எதிர்பாராத பொருள் வரவு போன்ற சுப பலன்கள் ஏற்படும்.

உத்தியோக உங்கள் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இது நாள் வரை தடை பெற்ற உத்யோக உயர்வு தற்சமயம் கிடைக்கும். தொழில் நன்றாக இருக்கும். அபரீத லாபம் உண்டாகும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். பொருளாதார நிலை மேம்படும். வருமானம் உயரும்.  இந்த காலக்கட்டத்தில் சொத்துக்கள் வாங்கும் நிலை உருவாகும் .   ஒரு சிலருக்கு பொன் , ஆபரணம் ,  வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

மகர  ராசிக்கு  கிரஹ நிலைகள்  -01-05-2024 முதல் மே 13, 2025 வரை

மகர  ராசி நேயர்களுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு கோச்சாரம்  நன்றாக இருக்கிறது.

5ல் குரு , 3ல் ராகு , 9ல் கேது , 2ல் சனி ஆட்சி தேனு யோகம்  தருகிறது

5ல் குரு

5ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் திருமணம் நடக்கும். குழந்தை வரவு உண்டாகும்.. புதிய வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். வேலை ஆட்கள் , சேவகர் விருத்தி உண்டாகும். கல்வியில் நல்ல முன்னேற்றம், உள்ளத்தில் ஏற்றம் , திரண்ட  செல்வ சேர்கை, அளவில்லா மகிழ்ச்சி ஏற்படும். குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.

3ல் ராகு

பொதுவாக 3ல் ராகு கோச்சாரத்தில் அமையும் பொழுது யோகமான பலன்களை ஜாதகருக்கு வழங்குவார்.

3ம் இடம் தைரிய ஸ்தானம் என்பதால் நல்ல மனோதைரியம்  ஏற்படும். அடிக்கடி அலைச்சலை ஏற்படுத்தும். பண வரவு சரளமாக இருக்கும்.. கமிஷன் தொழில் லாபம் தரும்.. ஒரு சில நேயர்களுக்கு காது வலி ஏற்படும். உங்களின் துணைவரின் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

9ல் கேது

அதிக ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவீர்கள் . தீர்த்த யாத்திரை , புனித தலங்களுக்கு பயணம் செய்வீர்கள் . அலைபாயும் மனதை ஆன்மீக ஈடுபாட்டால் மன அமைதியை கொண்டு வருவீர்கள். தந்தைவழி உறவினர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.. பூர்விக சொத்துகளிலில் சிக்கல்கள் ஏற்படலாம். குல தெய்வ வழிபாடு அவசியம் இந்த நேரத்தில்.

2ல் சனி ஆட்சி

இதுவரை ஜென்ம சனியால் அவதியுற்ற   மகர ராசி நேயர்கள் தற்சமயம் பாத சனியால்  2ல் உள்ள சனியால் சற்று ஆறுதல் அடைவீர்கள். இன்னும் ஏழரை சனி முடிய இரண்டு வருடங்கள் கழிந்தாக வேண்டும். இருந்தாலும்  தற்போது இப்போது 2ல் ஆட்சி பெற்ற சனியால் மென்மையான , யோகமான பலன்களே ஏற்படும்.. பண வரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது யோகமான பலன்களை தரும். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை., உங்களுடைய ஆற்றல் மங்கும், கர்வம்  அதிகரிக்கும் .

தேனு யோகம்

2ல் சனி ஆட்சி தேனு யோகம்  தருகிறது. 2ல் உள்ள சனியால் நல்ல வாக்கு வன்மை ஏற்படும். செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்கல்வி யோகம் பெறுபவர்களாக , பெரிய வசதியான  குடும்பம் , அறுசுவை உணவு , சகல வசதி , சுகவாழ்வு கிட்டும்

உங்கள் தசை , புத்தி வலுவாக இருந்தாலும் , உங்கள் பிறப்பு ஜாதகத்தில் கிரஹங்கள் வலுவாக இருந்தாலும். குரு பகவான் ஜாதகத்தில் உச்சம் , திக்பலம் ,மூலதிரிகோணம் , நீசபங்க ராஜயோகம் அடைந்துஇருந்தாலும் நல்ல யோகமான பலன்களே நடைபெறும்.

மகர ராசிக்கு  குரு பகவான் 5ல்   சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

1.குழந்தை வரவு உண்டாகும்.

2. புதிய வீடு, வாகன சேர்க்கை உண்டாகும்.

3.கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

4.மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

5.பணியில் புதிய பொறுப்புகள்  மற்றும் ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

6.தொழிலில்  உங்கள் கடின உழைப்பால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

7.குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி காணப்படும்.

8.கணவன் மனைவி பரஸ்பர உறவு அற்புதமாக இருக்கும்

9.புதிய வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்

10மனக் குழப்பங்கள் நீங்கும்.

11.வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

12 உற்றார் , உறவினர்கள் ஆதரவு கிடைக்கும்.

13.வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.

பரிஹாரம்

கேது பகவான் 9ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் , செவ்வாய்க்கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள கேது  பகவானுக்கு நெய்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

மகர  ராசி நேயர்களுக்கு சனி  2ல் சஞ்சரிக்க  இருப்பதால், ஏழரை சனியில் பாத சனி  என்பதால் , சனிக்கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள சனி  பகவானுக்கு எள்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்


No comments:

Post a Comment