மிதுன ராசி குரு பெயர்ச்சி 24-25பலன்கள்
1 மே 2024 முதல் மே 13, 2025 வரை
7 மற்றும்
10ம் அதிபதி
மிதுன ராசிக்கு குரு
பகவான் 7ம் மற்றும் 10ம் வீட்டிற்கு
அதிபதி ஆவார். மிதுன ராசிக்கு இரு கேந்திரங்களுக்கு அதிபதியான குரு பகவான் அயன சயன
போக ஸ்தானமான 12ம் இடத்தில் இன்னும் ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க இருக்கிறார்.
பொது
பலன்
12ம்
இடத்தில குரு இருப்பது விரய குரு என்று அழைக்க படும்.
வன்மையுற்றிட
ராவணன் முடி பன்னிரெண்டில் வீழ்ந்ததும் என்கிறது ஜோதிட பாடல்.
விரய
குரு என்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் அமையும். ஆகவே சிக்கனத்தை கடைபிடிக்கவும். சுப
விரய சிலவுகளான வீடு , மனை வாங்குதல் , திருமணத்திற்கு அல்லது சுப நிகழ்ச்சிகளுக்கு
சிலவுகள் செய்வது பொன்பொருள் வாங்குவது போன்றவற்றில் ஈடுபடலாம். 12ல் விரய குருவாக
இருந்தாலும் வருமானம் வரும் . ஆனால் அதனை தகுந்த
முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும். அதிக வட்டி தருவதாக சொல்லி ஏமாற்றும் நிதி நிறுவனங்களில்
முதலீடு செய்தல் கூடாது. பங்கு சந்தை , தரகு
போன்றவற்றில் ஈடுபட கூடாது.
தனியார்
நிறுவனங்களில் முதிலீடு செய்வதை வரும் இரண்டு ஆண்டு காலத்திற்கு தவிர்க்கவும். பழைய
வாகனங்களை விற்று புது வாகனங்களை வாங்கும் காலம் இது. குழந்தைகளின் மேற்படிப்புக்கு
முதலீடு செய்யலாம். எதிர்பாராத தனவரவு ஒரு சில நேயர்களுக்கு ஏற்படும். நீண்ட நாட்களாக
வராமல் இருந்த கடன் தற்சமயம் திரும்பி வரும்.
குரு பார்வை 4,6,8
இந்த
குரு பெயர்ச்சி மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை நடக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில்
குரு மிதுன ராசிக்கு 4 வது வீடு, 6வது வீடு மற்றும் 8வது வீடு ஆகிய இடங்களை
பார்வை இடுகிறார்.
குரு
பகவான் 4ம் இடத்தை பார்வை இடுவதால்
குடும்பத்தில்
சாதகமான சூழ்நிலை நிலவும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே
உங்களின் செல்வாக்கு உயரும்.
குரு
பகவான் 6ம் இடத்தை பார்வை இடுவதால்
உங்கள்
எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றலை பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகளை பெறுவீர்கள்
. உடல் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படும். தீராத கடன் இந்த காலகட்டத்தில் தீரும்.
குரு
பகவான் 8ம் இடத்தை பார்வை இடுவதால்
ஆயுள்
ஸ்தானமான 8ம் இடத்தை குரு பகவான் இந்த கால கட்டத்தில் பார்வை இடுவது உங்கள் ஆயுள் விருத்தி
அடையும்.
குரு
அஸ்தங்கம்
மே
3 2024 முதல் ஜூன் 32024 க்கு இடையில், குரு அஸ்தங்க நிலையில் நிலையில் இருக்கும் போது, நீங்கள் உங்கள் பணியில்
, தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பேச்சின் மூலம் யாரிடமும் தவறாக
பேச வேண்டாம். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்
குரு
வக்கிரம்
குருவின்
வக்கிர கதியின் போது, அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை, குரு பகவான்லாப ஸ்தானமான 11ல் சஞ்சரிப்பதால் ,உங்கள் நிதி வளர்ச்சி ஏற்றமாக
இருக்கும்.. மனம் குதூகலமாக இருக்கும்.. இந்த
காலகட்டத்தில் நீங்கள் ஆன்மீக விஷயத்தில் அதிக கவனம் செலுத்தலாம் உங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலையில்
பதவி உயர்வு கிடைக்கும்.
மாணவர்கள்
குரு
பகவான் 4ம் இடத்தை கல்வி ஸ்தானத்தை பார்வை இடுவதால் , கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..
படிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அதிக தீவிரத்தை நீங்கள் படிப்பில் காண்பிக்கும்
நிலை ஏற்படும். மாணவர்கள் அவர்கள் விருப்பமான
பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதற்கான கனவுகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள் . மேலும்,
வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களும் நல்ல
வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
தொழில்
மற்றும் உத்தியோகம்
மிதுன ராசி நேயர்களுக்கு தற்சமயம் ராகு 10 ல் இருப்பதால் ,10ல் ஒரு பாபியாவது இருக்க வேண்டும் என்பதற்குஏற்ப பணியில் இருப்பவர்கள் தற்போது உள்ள பணியை தொடர்வது நல்லது, புதிய பணிக்கு முயற்சி செய்தல் வெற்றி கிடைக்கும்.. அதே போல தொழில் செய்பவர்களும், தங்களின் தொழிலை அப்படியே தொடர்ந்து நடத்தவும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் அந்த முயற்சியில் ஈடு பட்டால் வெற்றி கிடைக்கும். தொழிலில் நீங்கள் நினைத்த அளவிற்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அரசியல்
மிதுன ராசி நேயர்களுக்கு தற்சமயம் 9ல் உள்ள ஆட்சி
பெட்ரா சனி லட்சுமி யோகத்தை தரும். 10ல் ராகு இருப்பது உங்களுக்கு அரசியலில் செல்வம்
, செல்வாக்கு ஏற்படுத்தும்.அரசியலில் இருப்பவர்களுக்கு உங்களின் செயல், பேச்சில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.. .எதிரிகளிடம் கவனமாக
இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பது மிகவும் சுலபம். உங்கள் அரசியல்
எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம்.
கலைத்
துறை
மிதுன
ராசி நேயர்களுக்கு சசனி 9ல் ஆட்சி பெற்று காணப்படுவதும்
, 10 ல் ராகு இருப்பதும் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.. எதிர்பார்த்த முன்னேற்றம்
எளிதாக இருக்கும்.. அதனால் உங்களின் திறமை வெளிப்பட்டுப் பெயர், புகழ் செல்வாக்கு உயரும்.
கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன்
முடிப்பீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள்.
மிதுன
ராசியின் கிரஹ நிலைகள் -01-05-2024
முதல் மே 13, 2025 வரை
12ல்
குரு , 10ல் ராகு , 4ல் கேது , 9ல் சனி ஆட்சி லட்சுமி யோகம்
சனி, உங்கள் ராசிக்கு இப்போது சிறந்த நிலையில் உள்ளது, அதாவது 2024-2025 இல் லாபத்தையும் வளர்ச்சியையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். சனி பகவான் 9ல் ஆட்சி பெற்று கோச்சாரத்தில் தற்சமயம் சஞ்சரிப்பதால் , எ உங்கள் தொழில் வாழ்க்கையில் மகத்தான வெற்றியையும் முன்னேற்றத்தையும் தரும்.உங்கள் பழைய கடனை அடைப்பீர்கள் .4ல் கேது இருப்பது அவ்வளவு நன்மையான பலன்கள் தராது. 9ல் சனி ஆட்சி பெற்று காணப்படுவது லட்சுமி யோகத்தை தருவதால் , செல்வ சேர்க்கை , சுபநிகழ்ச்சிகள் , சொத்துக்கள் , வாகன சேர்க்கை ஏற்படும். 10ல் ராகு இருப்பது தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் நீண்ட காலம் தடை பெற்ற உயர்வு தற்போது கிடைக்கும்
மிதுன ராசிக்கு குரு பகவான் 12ல் சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்
1. பணியில் உள்ளவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேலதிரிகளை , சக ஊழியர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
2. தொழில் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய தொழில் அல்லது இருக்கின்ற தொழிலை விஸ்திரிக்க ஏற்ற காலம் இல்லை இது.
3. வாகனங்களில் செல்லும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
4. அதிக சேமிப்பு இருந்தால் அதை சுப முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும். மனை வாங்குதல் , வீடு கட்டுதல் , பொன் , பொருளும் வாங்க கூடிய நேரம் இது.
5.
திருமணம் , சுப நிகழ்ச்சிகளுக்கு சிலவு செய்யும் காலம் இது.
6.
நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த சண்டை , சச்சரவுகள் நீங்கும்
7.
சிக்கலில் இருந்த சொத்துக்கள் உங்கள் வசம்
வரும்.
8.வருமானம்
பெருகி கடன் தொல்லை தீரும்
9.எதிரிகள்
தொல்லை நீங்கும்
10.வழக்குகளில்
சாதகமான தீர்ப்பு கிடைக்கும்
11.உடல்
ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் காணும்
12.வீடு
, வாகனம் , தங்க நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும்
பரிஹாரம்
கேது
4ல் இருப்பதால் சொத்துக்களில் வில்லங்கம் , கடின உழைப்பு , வாகன மூலம் சிறு விபத்து போன்றவை மிதுன ராசி நேயர்களுக்கு ஏற்படலாம். செவ்வாய் கிழமைகளில் உங்கள்
வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.
குரு
12ல் சஞ்சரிப்பதால் , வியாழக்கிழமைகளில் உங்கள்
வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.
No comments:
Post a Comment