கடக
ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 24-25
1 மே 2024 முதல் மே 13, 2025 வரை
6 மற்றும்
9ம் அதிபதி
கடக ராசிக்கு குரு பகவான் 6ம் மற்றும்
9ம் வீட்டிற்கு அதிபதி ஆவார். கடக ராசிக்கு
குரு பகவான் லாப ஸ்தானமான 11ம் இடத்தில
இன்னும் ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க இருக்கிறார். இதுநாள் 10ம் இடத்தில் இருந்த
குரு பகவான் உங்கள் தொழிலில் பாதிப்பு , வேலை இழத்தல் போன்ற அனுகூலமற்ற பலன்களை
தந்து இருப்பர். இனிமேல் உங்களுக்கு நல்ல காலம்தான். தொழில் பாதிப்பு அடைந்தவர்கள் , மற்றும் வேலை இழந்தவர்களுக்கு இனிமேல்
நல்ல காலம்தான்.
பொது
பலன்
11ம்
இடத்தில குரு இருப்பது லாப குரு என்று அழைக்க படும். மேலும் 11ல் குரு இருக்கும் காலத்தை
குரு பலம் என்று .அழைப்போம் .பண லாபம் கிட்டும்.
தொழிலில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் நீங்கள் அன்பான
உறவைப் பெறுவீர்கள். புதிய தொழில் ஒப்பந்தங்கள் மூலம் ஆதாயம் கிட்டும். வருமானம் சரளமாக
இருக்கும்.. உங்கள் கடன் சுமை குறைப்பீர்கள். நீங்கள் ஈட்டும் வருமானத்தை நல்ல முறையில் முதலீடு செய்ய வேண்டும் .திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு
திருமணம் கை கூடும். கணவன் மனைவி உறவு ஓரளவு சீராக இருக்கும். கூட்டு தொழில் அமோகமாக இருக்கும். நன்பர்களின் ஆதரவு தாராளமாக
கிடைக்கும். காதல் திருமணம் தடைகளை மீறி நடைபெறும்.
குடும்பத்தில் புது வரவு இந்த காலகட்டத்தில் அமையும். உங்கள் உத்தியோக வாழ்க்கையில் அதிக நன்மைகளுக்கு வழிவகுக்கும்.
குரு
பார்வை 3,5,7
இந்த
குரு பெயர்ச்சி மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை நடக்கும். குரு எந்தஇடத்தை கோச்சாரத்தில்
பார்வையிடுகிறாரோ அந்த இடம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ
தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது தன இருக்கும் குரு இருக்கும் இடத்தில் இருந்து
5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். 5ம் பார்வையும்,9ம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
இந்த
பெயர்ச்சி காலத்தில் குரு கடக ராசிக்கு 3வது
வீடு, 5வது வீடு மற்றும் 7வது வீடு ஆகிய இடங்களை பார்வை இடுகிறார்.
3ம்
இடம்
தைரிய,
இளைய சகோதரர் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கும் போது, உங்களுக்கு எதிரிகள் தொல்லை விலகும்.
தைரியமாக நல்ல விஷயங்களை செய்வீர்கள்.குரு பகவான் 3ம் இடத்தை பார்வை இடுவதால், மனோ
தைரியம் , கீர்த்தி , புகழ் , இளையசகோதரருக்கு முன்னேற்றம் ஆகியவை ஏற்படும். 3ஆம் இடத்தை
குரு பார்ப்பதால் பயணங்கள் மூலம் பண வரவு இருக்கும்
5ம்
இடம்
குரு பார்வை கோச்சாரத்தில் 5ம் இடத்திற்கு ஏற்படும் பொழுது
பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கும் போது ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு,
குருவின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பூர்வி சொத்து சார்ந்த
சிக்கல்கள் நீங்கி சொத்து அவர்கள் கைக்கு வரும். 5ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பூர்வீக சொத்து பாதிப்பில் இருந்த
சங்கடங்கள் அகன்று பணவரவு வரும்
7ம்
இடம்
களத்திர ஸ்தானம், மனைவி, துணை, தொழில் கூட்டாளியைக்
குறிக்கும் 7ம் இடத்தை குரு பார்ப்பதால் நல்ல மண வாழ்க்கை அமையும். கணவன் மனைவி அன்னியோன்யம்
ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல கூட்டாளி கிடைப்பார்கள் . கூட்டு தொழில் நல்ல
லாபத்தை தரும். 7ஆம் இடத்தை குரு பார்ப்பதால், உங்கள் வாழ்கை துணை மூலமாக பணவரவு கிடைக்கும்.
நீண்ட
நாட்கள் திருமணம் நடக்காத கடக ராசிக்காரர்களுக்கு திருமணம் ஆகும். திருமணம் ஆகி பிரிவில்
இருக்கும் தம்பதிகள் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
குரு
அஸ்தங்கம்
குரு
பகவான் கடக ராசிக்கு 9ம் அதிபதி என்பதால் (திரிகோணாதிபதி) அஸ்தங்கத்தால் கடக ராசி நேயர்களுக்கு
தீமையான பலன்கள் நடைபெறாது.
மே
3 2024 முதல் ஜூன் 32024 க்கு இடையில், குரு அஸ்தங்க நிலையில் நிலையில் இருக்கும் போது, நீங்கள் எதனையும் செய்யமுடியும் என அதீத கர்வத்துடன் இருத்தல்,அளவுக்கு
மீறிய வாக்குறுதிகளை கொடுத்தல் ஆகியற்றை தவிர்க்கவம். நியாபகமறதி அதிகம் இருத்தல்,உடல்
வலி, வாயு தொல்லைகளினால் அவதிப்படுதல் ஆகிய பலன்களும் ஏற்படலாம் .
குரு
வக்கிரம் (பின்னோக்கி நகருதல்)
குருவின்
வக்கிர கதியின் போது, அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை, குரு பகவான் கர்ம மற்றும் தொழில் ஸ்தானமான 10ல் சஞ்சரிப்பதால் ,உங்கள் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும்..
பணியில் இருப்பவர்கள் பதவி இரக்கம் , அனுகூல அற்ற இடங்களுக்கு பனி மாற்றம் , பனி நீக்கம் போன்ற பழங்கள் ஏற்படலாம் . . இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆன்மீக விஷயத்தில் அதிக
கவனம் செலுத்தலாம்
குரு
வக்ரம் பெற்றால் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை, புத்திர பாக்கிய தடை, பெண் என்றால்
கர்பபை பிரச்சனைஉண்டாகிறது.குரு வக்ர நிலையில் இருக்கும் போது பாதிப்பை சந்திப்பவர்கள்,
வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து குருபகவானை வணங்கவும்.
தொழில்
மற்றும் உத்தியோகம்
கடக
ராசி நேயர்களுக்கு தற்சமயம் அஷ்ட சனி என்பதால் , அகப்பட்டவனுக்கு அஷ்டம சனி என்ற ஜோதிட
விதிகளுக்கு ஏற்ப தொழில் அதிக கவனம் செலுத்த நேரிடும். குரு பகவான் லாப ஸ்தானமான
11ல் இருப்பதால் பண வரவு சரளமாக இருக்கும். தொழில் மற்றும் பணியில் நல்ல முன்னேற்றம்
காணப்படும்.
வியாபாரிகளுக்கு
இத்தனை நாட்களாக வராத கடன்கள் வந்து சேரும். வேலை கிடைக்காத நபர்களுக்கு, ஊதிய உயர்வுடன்
கூடிய பணி கிடைக்கும்.
பணியில் இருப்பவர்கள் தற்போது உள்ள பணியை தொடர்வது நல்லது, புதிய பணிக்கு முயற்சி செய்தல் கூடாது. அதே போல தொழில் செய்பவர்களும்,
தங்களின் தொழிலை அப்படியே தொடர்ந்து நடத்தவும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள்
அந்த முயற்சியில் தற்சமயம் ஈடுபடவேண்டாம். குருவின் வக்கிர கதியின் போது, அக்டோபர்
9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை, குரு
பகவான் கர்ம மற்றும் தொழில் ஸ்தானமான 10ல்
சஞ்சரிப்பதால் ,உங்கள் தொழில் அல்லது வேளையில் வளர்ச்சி பாதிக்கப்படும். வியாழக்கிழமைகளில்
குரு பகவானுக்கு நெய் தீபம் அல்லது கொண்ட கடலை மாலை அல்லது அர்ச்சனை செய்து வரவும்.
அரசியல்
கடக ராசி நேயர்களுக்கு தற்சமயம் அஷ்டம சனி நடை பெறுவதால் உங்களுக்கு அரசியலில் செல்வம் , செல்வாக்கு பாதிக்க
படும்..அரசியலில் இருப்பவர்களுக்கு உங்களின்
செயல், பேச்சில் சற்று எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பது
மிகவும் கஷ்டம் . உங்கள் அரசியல் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம். அரசியலில்
இருப்பவர்களுக்கு அடுத்தகட்ட பொறுப்புகள், பதவிகள் வந்துசேரும். உங்களது சமயோசித மூளையால்
வாழ்வில் முன்னேறுவீர்கள்.
கலைத்
துறை
கடக
ராசி நேயர்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால்
, புதிய வாய்ப்புகள் சற்று தாமத படும். குருவின்
வக்கிர கதியின் போது, அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை தொழில் சற்று சங்கடங்களை
சந்திக்க நேரிடும். வருமானம் சரளமாக இருந்தாலும் சிலவுகள் அதிகமாகும். மனதில் இனம்
புரியாத கவலை சூழும். வியாழக்கிழமைகளில் குரு , மற்றும் சனி கிழமைகளில் சனி பகவானை
வழிபட்டு வரவும். ஜாதகத்தில் தசை புக்தி வலுவாக உள்ளவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படாது.
கடக
ராசியின் கிரஹ நிலைகள் -01-05-2024
முதல் மே 13, 2025 வரை
11ல்
குரு , 9ல் ராகு , 3ல் கேது , 8ல் சனி ஆட்சி அஷ்டம சனி சரள யோகம்
சனி,
உங்கள் ராசிக்கு8ல் உள்ளது அஷ்டம சனி ஆகும்., அதாவது 2024-2025 இல் சில பிரச்சனைகளை
சந்திக்க . சிலவுகள் அதிரிகப்பதால் கடன் வாங்கி சமாளிப்பீர்கள். .3ல் கேது இருப்பது நன்மையான பலன்கள் தரும்.11ல் குரு இருப்பதால் சரளமான
பணவரவு இருக்கும். 9ல் ராகு இருப்பதால் தந்தை மகன் உறவு சற்று விரிசலடைந்து காணப்படும்.
தந்தை வழி சொத்துக்களில் வில்லங்கம் உண்டு. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்பதால்
, சற்று சோதனையான காலம் . சிறு உடல்
உபாதைகளுக்கு சில மருத்துவ செலவுகள் இருக்கலாம்.
கடக ராசிக்கு குரு பகவான் 11ல் சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்
1.
உங்கள் முயற்சிகள் வெற்றியை குவிக்கும்.
2.
கடக ராசிக்கு குரு 3ம் இடத்தை பார்ப்பதால் இளைய சகோதரர்களிடம் நிலவி வந்த பிரச்சனைகள்
நீங்கி நற்பலன்கள் உண்டாகும்.
3.
புதிய ஒப்பந்தங்கள் மூலம் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
4.குரு
5ம் இடத்தை பார்வையிடுவதால் , பூர்விக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
5.நீண்ட
காலமாக குழைந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த கால கட்டத்தில் குழந்தை தரிக்கும்.
6.குரு
7ம் இடத்தை பார்ப்பதால் திருமணம் ஆகதவர்களுக்கு தற்சமயம் நடைபெறும்.
7.
குரு 3ம் இடத்தை பார்வையிடுவதால் நல்ல முன்னேற்றம் , பெயர் , புகழ் அமையும்.
8.அஷ்டம
சனி என்பதால் பல தடைகளையும் , சங்கடங்களை சந்திக்க நேரிடும். சனி பிரீத்தி செய்வது
நன்மை தரும்.
9.குருவின்
வக்கிர கதியின் போது, அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை குரு 10இடத்தில்
அமர்வதால் , 10ல் குரு வந்த பொழுது இறைவனே ஒரு தலையோட்டில் இரந்து உண்டதால் , தொழில்
, பணியில் அதிக கவனம் செலுத்த நேரிடும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபட்டு வர
மேன்மை உண்டாகும்.
10.
ஜன வசீகரம் அதிகரிக்கும் . நண்பர்கள் வட்டம் விரிவு அடையும். பேர் , புகழ் உண்டாகும்.
11.
புதிய பொன் ,பொருள் , ஆபரண சேர்க்கை உண்டாகும்.
12.9ல்
ராகு அமைந்துள்ளதால் , தீர்த்த யாத்திரை , புனித ஆன்மீக பயணங்கள் உண்டாகும்.
பரிஹாரம்
ராகு
9ல் இருப்பதால் தந்தை வலி சொத்துக்களில் வில்லங்கம்
, கடின உழைப்பு , வாகன மூலம் சிறு விபத்து
போன்றவை கடக ராசி நேயர்களுக்கு ஏற்படலாம். சனி கிழமைகளில் உங்கள்
வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள ராகு
பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான
பலன்களே உண்டாகும்.
குரு
10ல் வக்கிரமாய் அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி
4, 2025 வரை சஞ்சரிப்பதால் , வியாழக்கிழமைகளில்
உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.
No comments:
Post a Comment