Search This Blog

Thursday, May 2, 2024

மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025...


மீனம்  ராசி குரு பெயர்ச்சி  பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

மீன ராசிக்கு  குரு பெயர்ச்சியின் பொழுது நிலைகள்

ராசியில் ராகு ஜென்ம ராகு , 3ல் குரு , 7ல் கேது , 12ல் சனி  (ஏழரை சனி தொடக்கம்)

குரு பார்வை 7,9,11

பொது பலன்

மீன ராசிக்கு குரு பகவான் 1ம் மற்றும் 10ம் அதிபதி ஆவார். இரு கேந்திரங்களுக்கு அதிபதி ஆவார்.

தீதிலா மூன்றில்  துரியோதனன் படை மாண்டதும் , தாளப்பா ஆறில் தோஷம் உண்டு தார்வேந்தர் பகை உண்டு ரோகமும் உண்டு  என்கிறது புலிப்பாணி ஜோதிட பாடல் .

தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு வரும்  குரு பகவானால் நினைத்த காரியங்கள்  நடக்கும் .மனநிம்மதி  நிலவும் . . வருமானம் உயரும். வீண் விரயம்  ஏற்படுவதை தவிர்ப்பீர்கள்.செய்தொழிலில் நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். இதனால் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும்.புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குரு 7ம் இடத்தை பார்வையிடுவதால் திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கும்.பெற்றோர் வழியில் சில மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல்  நல்லபடியாக முடியும்.மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.



அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாகமுடிப்பார்கள்.நல்லவேலை கிடைக்கும். வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ராசியில் ராகு ஜென்ம ராகு

ஜென்ம ராசியில் ராகு கோச்சாரத்தில் நன்மையான பலன்களை தராது. எந்த ஒரு காரியத்தையும் சிரத்தையாக உழைத்து முடிக்கும் நிலை ஏற்படும். அவப்பெயரை எளிதாக சமபதிக்கும் நிலை ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் மறைமுக தொல்லை உண்டு. நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.



3ல் குரு

உத்தியோகத்தில் , தொழில் சிறு தடங்கல் ஏற்படலாம்.  பிறந்த ஊரை விட்டு வெளி ஊரில் தொழிலுக்கு அல்லது பனி நிமித்தம் சென்று இருக்கும் நேரம் ஆகும் இது. மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். . மதிப்பு குறையும். மனோசஞ்சலம், காரியத்தடை ஏற்படும்.

கோச்சாரத்தில் 7ல் கேது

 வாழ்க்கை துணை வழியாக பிரச்சினை ஏற்படலாம். . உடல்நிலை பிரச்சினை ஏற்படலாம்.கூட்டுத்தொழில் பிரச்சினை ஏற்படலாம். அடிக்கடி பயணம் ஏற்படும். ஆன்மீக பயணங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்லும் நேரம் இது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து போக  வேண்டும். விட்டு கொடுத்து போனால் இல்வாழ்வு  சிறக்கும்.

7ல் கேது  இருந்தாலும் அவரை குரு பார்ப்பதால் கேள யோகம் , கோடீஸ்வர யோகம் ஏற்படுகிறது. இதனால் திடீர் தன யோகம் ஏற்படுகிறது. எதிர்பாராத வகையில் பல கோடிகளை குவிக்கும் யோகம் மீன ராசி நேயர்களுக்கு அமைகிறது.



12 ல் சனி ஆட்சி

12ல் சனி ஆட்சி பெறுவதால் , முசலயோகம் ஏற்படுகிறது. : மீன ராசி நேயர்கள் இந்த கால கட்டத்தில் கடின உழைப்பு ,மற்றும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள் .

பன்னிரெண்டாம் பாவத்தில் சனி கிரகம் இருப்பதால் .எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  இவருக்கு எதிரிகளாக மாறி  விடக்கூடிய வாய்ப்பு உண்டு. பணம் ஈட்டுவதில் குறிக்கோளாய் இருப்பவர்.இவரது கண்டிப்பான போக்கு இவருக்கு எதிரிகளை நிறைய உருவாக்கும்.தாம் எண்ணிய செயலை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என வெறி உள்ளவர்.ஏழரை சனி கால கட்டத்தில் மனைவி குழந்தைகள் உறவினர் நண்பர் ஆகியோருடன் பகை ஏற்படலாம். விட்டு கொடுத்து போவது நன்மை தரும்.

குரு பார்வை 7,9,11

குரு பகவான் 7ம் இடத்தை பார்ப்பதால்

மீன ராசிக்கு 7ம் இடமான வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளி ஸ்தானத்தை குரு பார்வை இடுவதால் , இதுவரை திருமணம் நடக்காமல் இருக்கக்கூடிய மீன ராசி நேயர்களுக்கு , விரைவில் திருமண நடக்க வாய்ப்புள்ளது.திருமணம் ஆனவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் இன்னும் ஓராண்டுக்குள் கிடைக்க வாய்ப்புள்ளது.கூட்டு  தொழில் அமோகமாக இருக்கும். நண்பர்களின் உதவி தக்க நேரத்தில் கிடைக்கும். கணவன் மனைவி உறவு அமோகமாக இருக்கும். அன்னியோன்யம் கூடும்.

களத்திர ஸ்தானம், மனைவி, துணை, தொழில் கூட்டாளியைக் குறிக்கும் 7ம் இடத்தை குரு பார்ப்பதால் நல்ல மண வாழ்க்கை அமையும். கணவன் மனைவி அன்னியோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல கூட்டாளி கிடைப்பார்கள் . கூட்டு தொழில் நல்ல லாபத்தை தரும். 7ஆம் இடத்தை குரு பார்ப்பதால், உங்கள் வாழ்கை துணை மூலமாக பணவரவு கிடைக்கும்.  திருமணம் ஆகி பிரிவில் இருக்கும் தம்பதிகள் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

குரு பகவான் 9ம் இடத்தை பார்ப்பதால்

மீன ராசிக்கு குரு பகவான்  தனது பார்வையால்  9ம் இடமான தந்தை  மற்றும் பாக்கிய ஸ்தானத்தின் மீது அவரின் பார்வை விழுகிறது. இதனால் நீண்ட நாட்களாக தந்தையுடன் அல்லது தந்தை வழி உறவுகளுடன் இருந்த மன கசப்பு தீரும் .அப்பா  வழியில் சொத்து, பண வரவுகள் கிடைக்கும்.9ம் இடம் என்பதால்  என்பதால் சொத்துக்கள், திடீர் பண வரவுகள், புதிய வாய்ப்புகள் இந்த கால கட்டத்தில் வரக்கூடும். நீண்ட நாட்களாக தந்தை வழி சொத்துக்களில் உள்ள வில்லங்கம் தீர்ந்து சொத்துக்கள் உங்கள் வசம் ஆகும்.

குரு பகவான் 11ம் இடத்தை பார்ப்பதால்

குரு பகவான் 11ம் இடத்தை பார்ப்பதால்,  பறிபோன பதவி மீண்டும் கிடைக்கும். இழந்த பொருள் மீண்டும் வந்து சேரும். புதிய பொருளும் வந்து சேரும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.



 குரு பகவான் லாப ஸ்தானமான 11ம் இடத்தை பார்வையிடுவதால்  , பண வரவு சரளமாக இருக்கும். தொழில் நல்ல வளர்ச்சி காணும். பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை தாமதப்பட்ட உத்யோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இந்த 1 வருட காலத்திற்குள் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் படிப்படியாக உயரும்.உங்களுக்கு எதிர்பாராத பொருள் வரவு, அதிர்ஷ்டம் உள்ளிட்ட சுப பலன்களை எதிர்பார்க்கலாம். பங்கு சந்தை , ஸ்பெகுலேஷன் போன்றவற்றில் திடிரென்று அதீத லாபம் கிடைக்கும்.

லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். வருடம் முழுவதும் வருமானம் நிறைந்த ஆண்டாக அமையும். செய்யும் தொழிலில் லாபத்தை தரும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும், அறிவித்திறன் அதிகரிக்கும். சனி சிக்கல்களை உருவாக்கினாலும் குருவினால் பாதிப்புகள் குறையும். தொட்டதெல்லாம் பொன்னாகும் பொற்காலமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது.

தசை , புத்தி

உங்கள் தசை , புத்தி வலுவாக இருந்தாலும் , உங்கள் பிறப்பு ஜாதகத்தில் கிரஹங்கள் வலுவாக இருந்தாலும். குரு பகவான் ஜாதகத்தில் உச்சம் , திக்பலம் ,மூலதிரிகோணம் , நீசபங்க ராஜயோகம் அடைந்துஇருந்தாலும் நல்ல யோகமான பலன்களே நடைபெறும்.

மீன ராசிக்கு குரு பகவான் 3ம் இடத்தில சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள்

1.நினைத்த காரியங்கள்  நடக்கும் .மனநிம்மதி  நிலவும் .

2.புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும்.

3.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

4.குரு 7ம் இடத்தை பார்வையிடுவதால் திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கும்

5.மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

6.வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

7.மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். . மதிப்பு குறையும். மனோசஞ்சலம், காரியத்தடை ஏற்படும்.

8.ஆன்மீக பயணங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்லும் நேரம் இது.

9.பல கோடிகளை குவிக்கும் யோகம் மீன ராசி நேயர்களுக்கு அமைகிறது.

10.இவரது கண்டிப்பான போக்கு இவருக்கு எதிரிகளை நிறைய உருவாக்கும்.

பரிஹாரம்

குரு

மீன ­ராசி நேயர்களுக்கு குரு 3ல் சஞ்சரிக்க  இருப்பதால்  தீமையான பலன்கள்   ஏற்படலாம்.. வியாழக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம், கொண்டக்கடலை சாற்றி அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

கேது

கேது 7ம் இடத்தில இருப்பதால் செவ்வாய் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள கேது   பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

சனி

மீன  ராசி நேயர்களுக்கு சனி  12ல் சஞ்சரிக்க  இருப்பதால் சனிக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள சனி  பகவானுக்கு எள்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

1ம் ராகு

ராகு பகவான் 1ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் , சனிக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள ராகு   பகவானுக்கு நெய்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.


No comments:

Post a Comment