ஜாதகத்தில் களத்திர காரகர் சுக்கிரன் அல்லது 7ம் அதிபதி அஸ்தங்கம்
அடைந்தால் திருமணம் நடைபெறதா?
சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக்
கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது
அவசியம். சூரியனுக்கு அருகில் செல்லும் போது அஸ்தங்கம், மெளட்யம்,மூடம் எனப்படும் தன்மைகளை
அடைகிறார்
சுக்கிரன் காரகத்துவம்
மனைவி, அழகு, கவர்ச்சி, நளினம், மென்மை, காதல், திருமண சுகங்கள்,
கலை நிகழ்ச்சி, அழகு சாதனங்கள் மற்றும் அதன் மூலம் வருமானம், உல்லாச விடுதி, பாலின
இன்பங்கள், சுரோணிதம், ஹார்மோன் மாற்றம், இனக்கவர்ச்சி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை.
ஆடம்பர பொருட்கள், இயல், இசை, நாடக கலைஞர்கள், சொகுசு மாளிகைகள்,
வெள்ளி, உயர்ரக மதுபானங்கள்,
கன்னம், பிறப்புறுப்பு, சிறுநீரகம், கண்களில் ஊனம்
சினிமா, கலைத்துறை பளபளப்பான மேனி, தேவ பெண்கள், மகாலட்சுமி,
துணி வியாபாரம், பைனான்ஸ் ஆகியன.
சுக்கிரன் ஜாதகத்தில் பலம் பெற்றால் சினிமா துறையில் பிரபலம்
அடைகிறார்கள். எம் ஜீ ஆர் , சிவாஜி , கமல் , ரஜினி , விஜய் , பதமினி , நயன்தாரா , கீர்த்தி
சுரேஷ்
நீசமான கிரகங்கள் அஸ்தங்கம் அடைவதும் நல்ல நிலை அல்ல.
உதாரணத்திற்கு சுக்கிரன் நீசமான நிலையில் அஸ்தங்கம் பெற்று
இருந்தால் சுக்கிரனுடைய காரகத்துவ விஷயங்களில் ஜாதகருக்கு பெரியளவில் குறைபாடுகள் இருக்கும்.
ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரன் அஸ்தங்கமாக இருப்பது திருமணம்
சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடை தாமதங்களை ஏற்படுத்தும்.
அஸ்தங்கம் அடைந்த கிரகங்களின் பலனை சூரியனே எடுத்து செய்வார்
என்பதால் அனுதினமும் ஆதித்ய ஹிருதயம் அல்லது சூரிய காயத்ரி சொல்லி சூரிய பகவானை வழிபட்டு
வருவது நன்மை தரக்கூடிய அமைப்பாகும்
சூரியன் – சுக்கிரன் மட்டுமே இணைந்து இருந்தால் மனமகிழ்ச்சி
கொடுப்பதில்லை. வாழ்க்கையில் பல பிரச்சினைகள், ஏமாற்றங்கள் தருகிறது. காட்டாற்று வெள்ளத்தில்
நிந்தி கரையேறுவது போல வாழ்க்கை இருக்கும். சின்ன விஷயத்திலும் இன்னல் தரும். காரணம்,
சூரியன் நெருப்பு, சுக்கிரன் நீர். நீரும் நெருப்பு வெவ்வேறு தன்மை கொண்டதல்லவா
லக்கினத்திற்கு 12-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், துறவி
போல் வாழ்க்கை கொடுக்கும்.
சூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமைய பெற்றிருந்தால்
சுக்கிரன் அஸ்தங்கம்.
ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிரம் அடைந்து காணப்பட்டால் , சந்தேக
மனப்பான்மையால் இல்வாழ்வு அமையாது அல்லது சிறக்காது. உங்கள் மீது பாசம் காட்டுவோர்களை
உதாசீனப்படுத்துவார்கள்.
ஜாதகத்தில் 7ம் அதிபதி வக்கிரம் அடைந்தாலும் இல்வாழ்வு அமைவதில்லை
அல்லது சிறக்காது.
புதன்,சுக்கிரன்
ஆகிய இரு கிரகங்கள் மட்டுமே அஸ்தங்கம் அடையும் போது வக்கிரம் அடைகிறது. மற்ற கிரகங்கள்
அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் அடையாது.
திருமணம் ஆகாத ஆண் ஜாதகரின் ஜாதக ஆய்வு உங்கள் பார்வைக்கு... ஜாதகருக்கு வயது 47
முக்கியமான சில குறிப்புகள் மட்டும் தரப்பட்டுள்ளன....
1. இரண்டாம் மற்றும் ஏழாம் அதிபதியான சுக்கிரன் சுக்கிரன்
உச்சம் பெற்றாலும் சூரியனை நோக்கி மிக நெருக்கமான பாகையில் 1 degree நெருக்கத்தில்
பரிபூரணமாக அஸ்தங்கம் பெற்றுள்ளது..
இரண்டு - குடும்ப ஸ்தானம்
ஏழு - களத்திற ஸ்தானம்
2. இரண்டில் மாந்தி, லக்னாதிபதி சாரம்
3. ஏழாம் இடத்தில் இராகு லக்னாதிபதி சாரம்.
4. லக்னாதிபதி பாதக ஸ்தானத்தில்.
5. லக்னத்தில் புதன் கேது சேர்க்கை , அதற்கு சனியின் 10 ஆம்
பார்வை என்பதால் புதன் , சனி , கேது தொடர்பு, துறவு போன்ற வாழ்க்கை..
6. தாம்பத்திய சுகத்தை குறிக்கும் சுக்கிரன் பரிபூரண அஸ்தங்கம்
( 1 deg ) பெற்றதால் , பெண் சுகம் கிடைப்பதில் சிரமம் மற்றும் நாட்டமின்மை..
7. லக்னாதிபதி மற்றும் ஆறாம் அதிபதி பாகை முறை இணைவில் தொடர்பு
என்பது, பிறவியில் தொடங்கிய தாம்பத்ய உறவில் குறைபாடு...
8. வீரியம், களத்திரம், போகம் குறிக்கும் 3,7,11 ஆம் அதிபதிகள்
மூன்று பேருமே அலி கிரக நட்சத்திர சாரம் பெற்று வீரிய குறைபாட்டை உறுதி செய்கின்றனர்..
3 ஆம் அதிபதி - கேது சாரம்
7 ஆம் அதிபதி - புதன் சாரம்
11 ஆம் அதிபதி - சனி சாரம்
9. புத்திர ஸ்தானாதிபதி சூரியன் 12 இல் மறைவு, புத்திர காரகன்
குரு மாந்தி உடன் சேர்ந்து பாதக ஸ்தானத்தில் அமர்ந்த செவ்வாயின் பார்வையில் , பகை வீட்டில்
வலு குறைந்த நிலையில்.
10. சதுர் கேந்திர சனி, கர்ம யோக ஜாதகம்..
11. நடப்பு தசை சுக்கிர தசை ( 2039 வரை, ).
No comments:
Post a Comment