Friday, June 28, 2024

நீசம் அடைந்த கிரகம் எவ்வாறு ஆன பிரதிபலனை தரக்கூடியதாக இருக்கும்.

 நீசம் அடைந்த கிரகம் எவ்வாறு ஆன பிரதிபலனை தரக்கூடியதாக இருக்கும்.


நீச சூரியன் - ஜாதகரின் தந்தையை பாதிப்பது குறைவு. ஜாதகரின் பிரகாசத்தை குறைக்கும். ஜாதகர் திறமையுடன் இருந்து வளர்ச்சிக்காக ஏங்கி தவிப்பார். (குறிப்பாக கர்ணனின் நிலை போல)



நீச சந்திரன் - தாயின் தேகத்தை பாதிப்பது குறைவு. ஜாதகரின் முகத்தோற்றத்தை கரும்புள்ளிகளால் சேதப்படுத்துவது, தன்னைத் தானே குறைத்து எடை போடுவது, எதிலும் திருப்தி பெறாமல் காரியங்களை செய்வது.


நீச புதன் - ஜாதகரின் கல்வி நிலையை பெரிதளவு தடை தராது. தாய்மாமன் உறவுகளில் பிரச்சனைகளும், உறவு இல்லாமலும் அமையும். சிறந்த புத்திசாலியாக இருப்பார்கள் அவர்களுக்கான இடமானது கிடைக்காது. புதிய புதிய செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்.


நீச சுக்ரன் - ஜாதகரின் களத்திர வாழ்வில் பெருதளவு பாதிப்பு தராது. மனைவியின் பொருளாதார நிலை குறைவு ஏற்படும்.  பெண்களால் சங்கடங்கள் ஏற்படும். சுகங்களுக்கான இடம் இங்கு பறிக்கப்படும்.



நீச செவ்வாய் - ஜாதகரின் தைரியத்தை பெரிதாக பாதிக்காது. ஆனால் ஜாதகர் எதை சொன்னாலும் தயக்கத்துடனே சொல்வார். நில புலங்களால் பிரச்சனைகளும், இதனை அனுபவிக்க முடியாமலும். உடலில் உள்ள வீரியத்தை சேதப்படுத்துவார். சகோதரர்-சகோதரிகளால் வஞ்சிக்கப்படுவார்.


நீச குரு - ஜாதகர் மனநிலையும் உடல் நிலையும் பாதிக்காது. ஜாதகரின் பொருளாதார நிலையில் பாதிப்புகள் உண்டாகும். தேவையில்லாத பூஜா பலன்களால் செய்து கஷ்டங்களை உண்டாக்கி கொள்வார். குருவின் ஆசிர்வாதம் பெறுவது கடினம். (குறிப்பாக ஏகலைவனை போல் குருவே அவனின் கலைகளை பறிப்பது போல)


நீச சனி - ஜாதகர் ஆயுள் பங்கத்தை தராமல், ஜாதகரின் கரும (தொழில்) நிலையை பாதிப்புக்குள் உண்டாக்குவார். சுற்று வட்டாரத்தின் நட்புகள் குறைவு. மற்றவர்கள் ஜாதகரை ஏமாளி என்று கூறுவார்கள். தனிமையில் ஜாதகரை வழி நடத்தி செல்வார்.


நீச ராகு - ஜாதகரை பெரிதளவு சிக்கலில் மாட்ட வைப்பதில்லை. ஜாதகருக்கு சிறுபிள்ளைத்தனமாக செயல்களை செய்ய கடமைப்படுத்துவார். மற்றவர்கள் தன்னை புண்படுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பார்.


நீச கேது - ஜாதகரை ஒருபோதும் சன்னியாசி ஆக்கிவிட மாட்டார். ஜாதகரின் செயல்பாடுகள் ஜாதகருக்கு அறியாமல் செயல்பாடுகளில் ஈடுபடுவார். (உதாரணமாக நான் கடவுள் என்று சொல்பவர்கள்) புராணங்களில் உள்ள தகவல்களை தன்னோடு ஒப்பிட்டுக் கொண்டே பேசக்கூடிய நபராக இருக்கும்

No comments:

Post a Comment