குதிரை லாடமானது வீட்டைதுர்சக்தி களிடம் இருந்து பாதுக்காக தாந்தரீக முறை
குதிரை லாடத்தை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல வழிகளை உருவாக்கும்.
கண் திருஷ்டி
குதிரை லாடமானது அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதைத் தவிர கண் திருஷ்டியை நீக்குகிறது.
வீட்டின் பிரதான வாசலில்
குதிரை லாடத்தின் நன்மைகள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, குதிரை லாடத்தை வீட்டின் பிரதான வாசலில் வைத்தால், வீட்டினுள் எதிர்மறை மற்றும் கெட்ட சக்திகள் நுழைவது தடுக்கப்படும். இதனால் வீட்டினுள் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகமாக இருக்கும். குதிரை லாடமானது ஒருவரது வீட்டில் இருந்தால், அது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும். அதோடு வீட்டில் பண பிரச்சனை மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தால், அதிலிருந்து விடுபடலாம். முக்கியமாக குதிரை லாடம் வியாபாரம் செய்பவர்களின் நிதி நிலைமையை வலுப்படுத்துவதாக கூறப்படுகிறது.
வடக்கு அல்லது மேற்கு
வீட்டின் பிரதான கதவின் வடக்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். குதிரை லாடத்தின் தலைகீழ் U வடிவத்தை வைப்பதாக இருந்தால், அதில் ஒரு கண்ணாடியையும் வைத்து தொங்கவிட வேண்டும்.
குதிரை லாடத்தின் தலைகீழ் U வடிவத்தை வைப்பதாக இருந்தால், அதில் ஒரு கண்ணாடியையும் வைத்து தொங்கவிட வேண்டும்.
கருப்பு குதிரை லாட பரிகாரங்கள் *
பணப்பிரச்சனை நீங்க
வீட்டின் நிதி நிலை சிறப்பாக இல்லாவிட்டால், கருப்பு குதிரையின் வலது காலின் லாடத்தை வீட்டின் பிரதான வாசலில் U வடிவில் கட்ட வேண்டும். இப்படி வைத்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கும்.
வியாபாரத்தில் நஷ்டத்தை தவிர்க்க
* வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால் கடையின் கதவில் குதிரை லாடத்தை வையுங்கள். இப்படி வைத்தால், வியாபாரத்தில் இருமடங்கு லாபத்தையும், முன்னேற்றத்தையும் காணலாம்.
ஏழரை சனி அல்லது சனியின் தாக்கத்தைக்
ஏழரை சனி அல்லது சனியின் தாக்கத்தைக் கொண்டவர்கள், கருப்பு குதிரை லாடத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை வலது கையின் விரலில் அணிவது நல்லது. இதனால் சனியின் தாக்கம் குறையும். *
வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்க
வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்க வேண்டுமானால், கருப்பு குதிரை லாடத்தை வைத்திருப்பது நல்லது. இப்படி வைத்திருப்பதன் மூலும், வீட்டில் பண பற்றாக்குறையே ஏற்படாது. அதுவும் இந்த குதிரை லாடத்தை அரிசி வைக்கும் அறையில் வைத்தால், அந்த வீட்டில் உணவுத் தட்டுப்பாடே ஏற்படாது.
கருப்பு கலர் குதிரையின் வலதுகால் லாடம் என்பது தான் பயன்படுத்தவேண்டும்.. அதுவும் நன்கு ஓடி தேய்ந்து தானாக விழுந்ததாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment