நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவாரா?
நடிகர் கமல்ஹாசன் ஜாதகம்
என்ன சொல்கிறது?
நடிகர் கமல்ஹாசன் உத்திரட்டாதி (1ம் பாதம்) நட்சித்திரத்தில்
பிறந்துள்ளார். அவருடைய லக்கினம் மகர
லக்கினம். அவருடைய ராசி
மீனம் ஆகும். நடிகர்
கமல்ஹாசன் அவர்கள் ஒரு பன்முக திறமைசாலி
ஆவார். தலை சிறந்த
நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர் ,
நடன இயக்குனர் , கதாசிரியர் , பாடகர் , தயாரிப்பாளர் ஆவார் .
நடிகர் கமல் ஹாசனின் ஜாதகம்
சந்திரன்
|
கேது
(வ)
|
சனி
|
சூரியன்
|
செவ்வாய்
|
|||||
ராசி
07/11/1954
11-59
காலை பரமக்குடி
உத்திரட்டாதி (1ம் பாதம்)
|
குரு
|
கேது
|
நவாம்சம்
|
||||||
லக்கினம்
செவ்வாய்
|
சுக்கிரன்(வ) சந்திரன்
குரு ராகு(வ)
|
||||||||
ராகு(வ)
|
சுக்கிரன்
(வ)
|
சூரியன் புதன்(வ)
சனி
|
புதன்(வ)
|
||||||
இவரின்
ஜாதகத்தில் பின் கண்ட யோகங்கள் காணப்படுகின்றன.
ருசக யோகம்
லக்கினத்தில் செவ்வாய் உச்சம் பெற்று
காணப்படுவதால். இதனால் இவருக்கு நல்ல
பேரும் புகழும், தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை,. திரைப்படத் துறையில் சாதனைகள் போன்றவை
ஏற்பட்டது.
ஹம்ஸ யோகம்
குரு பகவான் உச்சம் பெற்று ஏழாம் இடத்தில் காணப்படுவது. திரைப்பட துறையில் நல்ல
பெயர் புகழ் , நல்ல வருவாய் போன்ற பலன்கள்.
சசயோகம்
சனி பகவான் உச்சம் பெற்று ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில
காணப்படுவது . செய்யும் தொழில் வெற்றி , ஒன்றுக்கு
மேற்பட்ட திறமைகளில் பெயர் புகழ் , பிறரால் சாதிக்க
முடியாததை தொழில் செய்து காண்பிப்பது.
நீசபங்க ராஜயோகம்
சூரியன் நீச்சம் பெற்று துலாத்தில் காணப்படுவது. ஆனால் நீச்சல் நின்ற
ராசிநாதன் சுக்கிரன் சந்திரனுக்கு கேந்திரம் பெற்றதால் நீச்சம் பங்கம் ஆகி
ராஜயோகத்தை ஏற்படுத்திகிறது.இதனால் நடிகர் கமல் ஹாசனுக்கு திடீர் சம்பத்துகளும்
பெயரும் புகழும் உண்டாகும்.
அமல யோகம்
லக்கினத்திற்கு 10ம் இடத்தில சுப
கிரகமான புதன் அமைந்திருப்பது. பெரும்
தனவந்தராகவும் , இதனால் நடிகர் கமல் ஹாசனுக்கு பெரும் புகழ் , கலை துறையில் பேரும் புகழும் வந்தடைகிறது. மேலும் சூரியன்
அம்சத்தில் உச்சம் பெற்று காணப்படுவது நீச்சதை பங்கம் செயகிறது.
கஜ கேசரி யோகம்
நடிகர் கமல் ஜாதகத்தில்
பார்வையிடுவதால் சந்திரனை குரு பார்வையிடுவதால் கஜ கேசரி யோகம் அமைந்து
காணப்படுகிறது. இதனால் நடிகர் கமல்
ஹாசனுக்கு நற்பெயர் , தலைமை தாங்கும் ஆற்றல் , புகழ் , நல்குணம் , ஈகை , பெருச்செல்வம் , நுண்ணறிவு , உயர்கல்வி , உயர்ந்த குடும்பம் , இறந்தபிறகும்
நிலைத்திருக்கும் புகழ் ஆகியவை நடை பெற்று கொண்டிருக்கிறது.
அஸ்தங்க தோஷம்
நடிகர் கமல் ஜாதகத்தில் சூரியனுக்கு 2.12 பாகைக்குள் சனி பகவான் உச்சம் பெற்றதால்
அஸ்தங்கம் அடைந்து காணப்படுகிறார். இதனால் சனி பகவான் பலம் குன்றி ஜாதகத்தில்
காணப்படுகிறார். அஸ்தங்க தோஷம் பெற்ற கிரகம், அதன் தெசாபுக்தி
காலங்களில் பலன் அளிப்பதில்லை. அதாவது அந்த கிரஹம் தன்னுடைய வலுவை இழந்து
நற்பலன்களை ஜாதகருக்கு தர முடியாமல் போகிறது.
சனி பகவான் அஸ்தங்கம் அடைந்து
ஜாதகத்தில் காணப்பட்டால் ,உடல் நலத்திற்கு கெடுதல் , வேலையாட்கள் ஒத்துஉழையாமை , பலகீனமான உடல்நிலை , தீராத கடன் தொல்லை ஆகியவற்றை தரும்.
திரைப்படமான விஸ்வரூபம் அப்போதைய முதல்
அமைச்சர் ஜெயலலிதாவால் திரையிடுபடுவதிற்கு தடைகள் ஏற்படுத்தினார். ஜெயலலிதாவிற்கு
சொந்தமான தொலைக்காட்சிக்கு விஸ்வரூபம் உரிமை தராததால் அவர் பலத்த எதிர்பை சந்திக்க
நேரிட்டது. அப்பொழுது கமல் ஹாசன் விஸ்வரூபம் வெளியிட தடைகளை நீக்காவிட்டால்
தன்னுடைய சொத்துக்கள் ஏலத்திற்கு வந்து விடும் என்று அறிக்கை விட்டார். மேலும்
அவர் படங்கள் தேவர் மகன் , சண்டியர்
, ஹே ராம் போன்றவை சில சமுதாய மக்களிடமிருந்து எதிர்ப்பை
சம்பாதித்தது,
இவையெல்லாம் லக்கினாதிபதி மற்றும் தன
ஸ்தானாபதியான சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் உச்சம் பெற்றாலும் அஸ்தங்கம் அடைந்ததால்
யோக பலன்கள் ஏற்படுவதற்கு தடைகளை ஏற்படுத்தியது
உச்சனை உச்சன் பார்த்தால் நீச்சபலனே ஏற்படும்
கமல் ஹாசன்
ஜாதகத்தில் லக்கினத்தில் செவ்வாயும் காலத்திரஸ்தானமான கடகத்தில் குரு பகவானும்
உச்சம் அடைந்து காணப்படுகிறர் . உச்ச்சம் பெற்ற செவ்வாயும் மற்றும் உச்சம் பெற்ற
குருவும் ஒருவரை ஒருவர் சம சப்தமாக பார்வையிடுவதால் அவர்கள் நீச்சம் அடைகிறார்கள்.
இதனால் ஹம்சா யோகமும் ருச்சக யோகமும்
முழுமையான பலன்களை தர முடியவில்லை.
சுக்கிர . பகவானும் கலையுலகில் புகழும்
மகர
லக்கினத்திற்கு சுக்கிர பகவான் . அதி யோக காரர் ஆவார். அவர் வக்கிரம் அடைந்து 11ம் இடமான பாதக ஸ்தானத்தில்
அமர்ந்ததால் , அவர் கலை உலகில் ரஜினி காந்த்
போன்று புகழ் பெறமுடியவில்லை. இதே நிலைதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும்
ஏற்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எம்ஜிஆர் போன்று புகழ் அடையமுடியவில்லை.
நடப்பு தசை மற்றும் புக்தி விவரம்
கமல்
ஹாசனுக்கு தற்சமயம் சுக்கிர திசையில் கேது புக்தி
வருகிற 15 ஆகஸ்ட் 2017 வரை நடைபெற உள்ளது . அதன்
பிறகு சூர்ய பகவான் தசைஆகஸ்ட் 2023 வரை நடைபெற உள்ளது. சூரிய
பகவான் குரு பகவான் நட்சத்திரமான விசாகம் சாரம் பெற்று தசை நடத்த போகிறார். சூரிய
பகவான் மகர லக்கினத்திற்கு அஷ்டமாதி என்றாலும் அவர் ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில இருந்து தசை நடத்த போகிறார்..
மேலும் ராசி கட்டத்தில் நீச்சம்
பெற்றாலும் அம்சத்தில் உச்சம் பெற்றுள்ளதால் அவர் தசை கமல் ஹாசனுக்கு பெரும் புகழும் ஆஸ்கர் போன்ற பட்டங்களும் அவரை வந்து
அடையும். அவருக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்படும் அதில் வெற்றியும் காண்பார் .
சூரியன் திக் பலம் பெற்று , அம்சத்தில் உச்சம் பெற்று குரு பகவான் சாரம் பெற்று தசை நடைபெறுவதால் அவருக்கு சூரிய தசையில் நிரம்ப செல்வமும் , புகழும் , அரசியலில் உயர் பதவி மற்றும் ஆஸ்கர் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.
சூரியன் திக் பலம் பெற்று , அம்சத்தில் உச்சம் பெற்று குரு பகவான் சாரம் பெற்று தசை நடைபெறுவதால் அவருக்கு சூரிய தசையில் நிரம்ப செல்வமும் , புகழும் , அரசியலில் உயர் பதவி மற்றும் ஆஸ்கர் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.





