காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலை பற்றி நீங்க அறிந்திராத தகவல்கள்
பதவி உயர்வு,குழந்தை வரம் தரும் பெருமாள்
A blog Devoted to research in Tamil Astrology
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலை பற்றி நீங்க அறிந்திராத தகவல்கள்
பதவி உயர்வு,குழந்தை வரம் தரும் பெருமாள்
மதுரை பாண்டி முனீஸ்வரர் அற்புதங்கள்
பாண்டி முனீஸ்வரர் பக்தர்களுக்கு நேரில் காட்சி அளிப்பாரா ?
https://youtu.be/8lBL9-J96vk
பாண்டி முனீஸ்வரர் தென் தமிழகத்தின் புகழ்பெற்ற காவல் மற்றும் குலதெய்வம் ஆவார். நீதி தவறியதற்காக தண்டனை பெற்ற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே, மறுபிறவி எடுத்து முனிவராக மாறி ஈசனை நோக்கி தவமிருந்து பாண்டி முனீஸ்வரராக அருள்பாலிப்பதாக ஐதீகம்.
வரலாறு மற்றும்பின்னணி:
பாண்டிய மன்னன்: கண்ணகி வழக்கில் தவறான தீர்ப்பு வழங்கி கோவலனைக் கொன்ற மன்னன் நெடுஞ்செழியன், அந்த பாவத்திற்கு பரிகாரமாக பூமிக்கு அடியில் தவம் செய்வதாகக் கூறப்படுகிறது.
கண்டெடுக்கப்பட்ட விதம்:
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, வள்ளியம்மை - பெரியசாமி தம்பதியரின் கனவில் தோன்றிய முனிவர், தான் யார் என்பதை உணர்த்தி தன்னை பூமிக்கு அடியிலிருந்து எடுத்து வழிபடுமாறு கூறினார்.
கோவில் உருவாக்கம்:
அதன்படி அவர்கள் மேலமடை (தற்போதைய மதுரை மாட்டுத்தாவணி அருகில்) பகுதியில் எட்டு அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலையை வைத்து வழிபடத் தொடங்கினர்.
வழிபாட்டு முறைகள்:
எல்லைத் தெய்வம்: இவர் மக்களைத் தீய சக்திகள், பில்லி, சூனியம் ஆகியவற்றில் இருந்து காக்கும் உக்கிரமான காவல் தெய்வமாக நம்பப்படுகிறார்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்கள் குறைகள் தீரவும், நீதி நிலைநாட்டப்படவும் இவருக்கு சுருட்டு, சாராயம், மற்றும் படையல்கள் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பரிகாரம் செய்ய உகந்த நாட்கள்:
செவ்வாய் (மிகவும் விசேஷம்), வெள்ளி மற்றும் அமாவாசை நாட்கள்.
செய்வினை நீக்கும் “சங்கிலி” பரிகாரம்
பாண்டி கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் வருவது “செய்வினை கோளாறு” மற்றும் தீய சக்திகளின் பிடியில் இருந்து விடுபடத்தான்.
காத்திருத்தல்:
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உச்சிவேளையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அருள் வாக்கு:
இங்குள்ள பூசாரி (கோடாங்கி) அருள் வந்து ஆடும்போது, பக்தர்கள் தங்கள் குறைகளைச் சொல்வார்கள்.
சங்கிலி பரிகாரம்:
பூசாரி கையில் உள்ள பெரிய இரும்புச் சங்கிலியால் பக்தரை (பொதுவாக முதுகில்) அடித்து ஆசீர்வதிப்பார். இந்த அடி பக்தருக்கு வலிப்பதில்லை என்றும், அது அவர்கள் உடலில் உள்ள தீய சக்திக்கான அடி என்றும் நம்பப்படுகிறது.
உடனடி நிவாரணம்: இந்த பரிகாரத்திற்குப் பிறகு, மனபாரம் குறைந்து நிம்மதி கிடைப்பதாக பல பக்தர்கள் கூறுகிறார்கள்.
மதுரை பாண்டி கோவில் நடை திறக்கும் நேரம் என்ன?
பாண்டி கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், தரிசனம் செய்ய கூடுதல் நேரம் ஆகலாம்.
செய்வினை பரிகாரம் செய்ய உகந்த நாள் எது? செய்வினை கோளாறு, பில்லி சூனியம் மற்றும் தீய சக்திகள் விலக செவ்வாய்க்கிழமை மதியம் (உச்சிவேளை) மிகவும் உகந்த நேரம். அமாவாசை நாட்களும் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்றது.
பாண்டி முனீஸ்வரர் பக்தர்களுக்கு நேரில் காட்சி அளிப்பாரா ?
அமைவிடம்: இவரின் பிரசித்தி பெற்ற பாண்டி கோயில் மதுரை ரிங் ரோட்டில் மேலமடை பகுதியில் அமைந்துள்ளது.தீய சக்திகளை அழித்து பக்தர்களைக் காக்கும் கருணைத் தெய்வமாக விளங்கும் பாண்டி முனீஸ்வரர், மதுரை பாண்டி கோவில் வழிபாட்டில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
அந்த ஜோதிட இதழின் பிரிதியை தேடி வருகிறேன் . யாரிடமாவது அந்த பிரிதி இருந்தால் அதனை அனுப்பி வைத்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்
ஜோதிட சாகரம் ஆர் வீ சேகர் 79047 19295
காகவந்தியா(புருஷவந்தியா):தோஷம் என்றால் என்ன ?
வந்தியா தோஷம்: ஜோதிடத்தில் குழந்தைப்பேறு தொடர்பான குறைபாடுகளை “வந்தியா தோஷம்” என அழைக்கிறார்கள். இது நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது:
கதவீ வந்தியா – பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.
ஸ்திரீ வந்தியா – ஆண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.
மிருத வந்தியா – குழந்தைகள் பிறந்து உயிரிழப்பது.
ஸாஷாத் வந்தியா – குழந்தை பிறக்காத நிலை.
காகவந்தியா தோஷம் என்பது ஜோதிடத்தில் “வந்தியா தோஷம்” எனப்படும் நான்கு வகை தோஷங்களில் ஒன்றாகும். இது “புருஷ வந்தியா” என்றும் அழைக்கப்படுகிறது; அதாவது, ஜாதகருக்கு ஆண் குழந்தை பிறக்காமல், பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் நிலையை குறிக்கிறது.
ஐந்தாம் இடத்தில் குரு நின்று , ஐந்தாம் அதிபதி பலம் இழந்து , சனி பார்வை செய்தால் இந்த தோஷம் அமையப்பெறுகிறது. எத்தணை குழந்தைகள் பிறந்தாலும் ஒரு குழந்தை மட்டுமே உயிர் வாழும்.
காகவந்தியா தோஷம் (புருஷ வந்தியா):
ஜாதகத்தில் சனி, சூரியன் இலக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் சேர்ந்து இருந்தாலும், அல்லது தங்கள் சொந்த வீட்டில் இருந்தாலும்,
அதே அமைப்பில் சந்திரன், புதன் கூடினாலும்,
ஜாதகருக்கு ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு குறையும்; பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.
இந்த தோஷம் நீங்க என்ன பரிஹாரம் செய்ய வேண்டும் ?
கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது, முருகப்பெருமானை வழிபடுவது, நவக்கிரக வழிபாடு செய்வது போன்றவை நவக்கிரக தோஷங்களை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
பரிகார பூஜைகள்: சனீஸ்வரன், சூரியன், சந்திரன், புதன் ஆகியோருக்கான சிறப்பு பூஜைகள்.
கோவில் வழிபாடு: பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற முருகன் கோவில்களில் சஷ்டி விரதம்.
ஜோதிட சாகரம் ஆர் வீ சேகர் 79047 19295
7ல் ராகு செவ்வாய்-7ம் இடத்திற்கு சனி பார்வை -மனநோயாளி மனைவி அமையும் வாய்ப்பு?
கிரிஷ்ன் சோகக்கதை
கிரிஷ்
நன்கு படித்தவன் ஐ டி துறையில் வேலை கைநிறைய சம்பளம் சொந்த வீடு வாகனம் அமைய பெற்றவன்
வயது
27 அவனுக்கு அவன் பெற்றோர்கள் பெண் பார்க்க.
ஆரம்பித்தார்கள்
. நல்ல வசதியான குடும்பத்தில் ஒரே பெண்ணாக அமைந்தது .
ஆசையுடன் முதலிரவு
திருமணம்
பெரும் கோலாகலமாக நடைபெற்றது. அன்று இரவு முதலிரவு . ஆசையுடன் அழகிய மனைவியை எதிர்பார்த்து
காத்திருந்தான். மனைவியும் பால் சொம்புடன் அறைக்குள் வந்தாள் ,
அவன்
ஆசை ஆசையாக மனைவின் கையை பிடித்தான். அவ்வளவு தான் அவன் முகத்தில் ஒரு குத்து விழந்தது
,
அறைந்தது
வேறு யாருமில்லை . அவனின் ஆசை புது மனைவிதான் ,
என்னை
தொந்திரவு செய்யாதீர்கள் , எனக்கு அசதியாக இருக்கிறது. நான் தூங்க வேண்டும் என்றாள்
.
சரி
பரவாயில்லை என்று கிரிஷ் நினைத்தான் . நாளை எல்லாம் சரியாகி விடும் என்று கருதினான்.
அடுத்த நாளும் இதே கதைதான்.
இவ்வாறு
ஒரு மாதம் சென்றது . தினமும் இதே கதைதான். அவன் பொறுமை இழந்து பெண்ணின் பெற்றோர்களிடம்
விஷயத்தை சொன்னான் .
மனநோய் பிரச்னை
அவர்கள்
தங்கள் மனநோய் பிரச்னை உள்ளது என்று கூறினார்கள் . மருத்துவர்கள் திருமணம் நடந்தால்
மனநோய் சரியாகிவிடும் என்று சொன்னதால் திருமணம் செய்தோம் என்று கூறினார்கள். பிறகு
இரு குடும்பமும் கலந்து உரையாடி விவாகரத்து செய்து கொண்டார்கள்.
7 இடத்தில் ராகுவும் செவ்வாயும்
கிரிஷ் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7 இடத்தில் ராகுவும் செவ்வாயும் இணைந்து காணப்பட்டதாலும் , 7 இடத்தை சனி பார்த்ததாலும் இந்த அவல நிலை ஏற்பட்டது.
|
|
லக்கினம் |
|
|
|
|
|
|
|
|
|
சனி |
||
|
|
|
செவ்வாய்
, ராகு |
|
சனி பார்வை
7-ம்
இடத்தில் ராகு-செவ்வாய் சேர்க்கை மற்றும் அதன் மீது சனி பார்வை இருப்பது, கடுமையான
திருமண தோஷமாகக் கருதப்படுகிறது. இது திருமண வாழ்க்கையில் அதிக மனக்கசப்பு, தாமதம்,
பிரிவினை அல்லது துணையின் உடல்/மனநல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனினும், லக்னாதிபதி
பலம், குரு பார்வை இருந்தால் பாதிப்பு குறையும். கவனமான ஜாதகப் பொருத்தம் அவசியம்.
7-ல் ராகு-செவ்வாய்:
இந்த
சேர்க்கை திருமண வாழ்க்கையில் தேவையற்ற வாக்குவாதங்கள், கோபம், அவநம்பிக்கை மற்றும்
ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம்.
சனி பார்வை:
7-ம் வீட்டின் மீது சனியின் பார்வை, திருமண வாழ்க்கையில்
தேக்கநிலை, பற்றுதலின்மை, கணவன்-மனைவி இடையே இடைவெளியை உண்டாக்கலாம்.
மனைவியின் நிலை:
இத்தகைய
அமைப்புள்ள ஜாதகத்தில், துணையின் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் (மன அழுத்தம், மனநல பாதிப்புகள்)
அல்லது குணநலன்களில் கடுமையான மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.
11ம் இடத்தில சுக்கிரனும் புதனும்
ஆயினும் கிரிஷ் ஜாதகத்தில் 11ம் இடத்தில சுக்கிரனும் புதனும் இணைந்து காணப்படுவதால் கிரிஷுக்கு மறுமணம் விரைவில் அமையும் என்று பலன் கூறப்பட்டது..
தோஷ சாம்யம்
தோஷ
சாம்யம் என்பது திருமணப் பொருத்தத்தில், ஆணுக்கும்
பெண்ணுக்கும் ஜாதகத்தில் உள்ள பாபக் கிரகங்களின் (செவ்வாய், சனி, ராகு, கேது, சூரியன்)
பாதிப்பு சமமாக உள்ளதா அல்லது ஒத்துப் போகிறதா என்று பார்ப்பதாகும்.
பெண்ணை விட ஆணுக்கு அதிக தோஷம் இருந்தால், அது பிரிவினை
அல்லது குடும்ப வாழ்வில் கடுமையான கருத்து வேறுபாடுகளை உண்டாக்கலாம்.
ஜோதிட ஆலோசைணைகளுக்கு ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295