Search This Blog

Sunday, November 15, 2026

ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, பாதச்சனி துயரங்களை போக்கும் நாகப்பட்டினம் ஸ்ரீசொர்ணஆகர்ஷணபைரவர்

 ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, பாதச்சனி  துயரங்களை போக்கும் நாகப்பட்டினம் ஸ்ரீசொர்ணஆகர்ஷணபைரவர்


ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, பாதச்சனி  துயரங்களை போக்கும் நாகப்பட்டினம் ஸ்ரீசொர்ணஆகர்ஷணபைரவர்


https://youtu.be/PAV5uIfsbWs


நாகப்பட்டினத்தில்  சித்தர் இராமதேவர் நிறுவிய  ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஸ்ரீ சொர்ணதா தேவியுடன்!!! 

இராமதேவர் என்னும் சித்தர் பெருமான் அஷ்டமாசித்திகளைப் பெறுவதற்காக பல திருத்தலங்களுக்குப் பயணித்த வண்ணம் இருந்தார்.

அப்போது ஒருமுறை காசிக்குப்பயணித்தார்;அங்கே இருந்த கங்கையில் அவர் நீராடிய போது, அவருக்கு அழகிய பைரவ மூர்த்தி தனது மனைவியுடன்  கூடிய விக்ரகம் கிடைத்தது.அதை நிலைப்படுத்தி,சிறப்பு பூஜைகளைச் செய்தார்;அதன் மூலமாக பல சித்திகளைப் பெற்றார்.

இராமத்தேவர் காசியில் கிடைத்த  சொர்ண பைரவர் சொர்ணதாதேவி விக்ரகத்தை தொடர்ந்து வழிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சோழீஸ்வரர் என்பவர் தமிழ்நாட்டில் இருந்து முக்தியைத் தேடி காசிக்கு வருகை தந்தார்.

அவர் இராமதேவரைப் பணிந்து,அவரையே குருவாக ஏற்றுக் கொண்டார்

சோழீஸ்வரருக்கு இராமதேவர் தான் கங்கையில் கண்டெடுத்த பைரவமூர்த்தியை அளித்து அவரை பூசித்து வழிபடும்படி பணித்தார்.

சோழீஸ்வரர் கனவில் பைரவ மூர்த்தி தோன்றி தாம் ஆதிக் காயாரோகணத்தில் கோவில் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

சோழீஸ்வரர் நாகப்பட்டிணத்துக்கு வந்து,ஆதி காயாரோகணத்தில் பைரவ மூர்த்தியை ஸ்தாபிக்க கொண்டு வந்தார்.ஆனால., அவரிடம் ஸ்தாபித்து கோவிலாக்கிட பொருள் வளமில்லை;

பைரவ மூர்த்தி சூட்சுமமாக சோழீஸ்வரரிடம் ஒரு வழி கூறினார்.

திருமலைராயன் பட்டின மன்னன் மகளை பிடித்திருக்கும் பிரம்ம ராட்சதனை விரட்ட வேண்டும்.

அதன்படியே சோழீஸ்வரர் திருமலைராயன் பட்டின மன்னனின் மகளைப் பிடித்திருந்த பிரம்ம ராட்சதனை தனது பக்தி பலத்தால் விரட்டினார்.

இதனால் மனம் மகிழ்ந்த திருமலைராயன் பட்டின மன்னன் சோழீஸ்வரருக்கு நன்றிக்கடனாக தான் செய்ய வேண்டியது யாது? என்று கேட்டார்.

சோழீஸ்வரரின் வேண்டுகோள் படி பைரவ மூர்த்திக்கு கோவில் கட்டிக்கொடுத்ததுடன்,வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும்,  விழாக்கள் வருடம் தோறும் நடைபெறுவதற்கும் ஏற்பாடு செய்தார்.

இந்த ஆலயத்தில் சுவர்ணமயமான சட்டநாத மூர்த்தி,அமுதவல்லி என்ற அம்பிகையுடன் கட்டுமலைமீது வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

இவ்வாறு தேவியுடன் பைரவர் இருப்பது மிக அரிதாகும்.இந்தக் கட்டுமலைக்குத் தெற்கில் ஆதிக்காயாரோகணர் ஆதிநீலாயதாட்சி ஆலயங்கள் இருக்கின்றன.

பத்துக்கரங்களைக்  கொண்ட ஆகாச பைரவ மூர்த்தி

கட்டுமலை மண்டபத்தை ஒட்டி பத்துக்கரங்களைக்  கொண்ட ஆகாச பைரவ மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவராகக் காட்சியளித்து வருகிறார்.

ராமதேவர் சித்தரின் ஜீவசமாதி

இவருக்கு நேர் எதிரில் உள்ள சன்னதித் தெருவின் மையத்தில் ராமதேவர் சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது. இதன் மீது பைரவபீடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்  கோவிலில் பைரவரின் கொடியேற்றம் துவங்கி,பத்தாவது நாள் திருவிழாவாக சித்ரா பவுர்ணமி வரும் விதமாக வருடம்தோறும் அமைந்திருக்கும்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும், திருவாதிரை அன்றும் சிகப்பு அரளிமாலை, சந்தனாதித்தைலம், அத்தர், புனுகு, ஜவ்வாது போன்றவைகளுடன் சென்று அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு எட்டு தேய்பிறை அஷ்டமிகள் அல்லது எட்டு திருவாதிரை நட்சத்திர நாட்கள் அல்லது எட்டு வளர்பிறை அஷ்டமிகள் வழிபாடு செய்து முடித்தால்,தீராத பிரச்னைகள் தீரும்.

நீண்டகால வழக்குகள் தீரும்.

தொழிலில் ஓய்ந்து போன நிலை மாறி, விறுவிறுப்பு கூடும்;.

வராத கடன்கள் வசூலாகும். தர வேண்டிய பணத்தை கொடுக்குமளவுக்கு வருமானம் அதிகரிக்கும்;

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி, கண்டச்சனி,பாதச்சனி  முதலான சனியின் துயரங்கள் நீங்கும்.

கோயில் பற்றிய தகவல்கள்

ஆதி காயாரோகணம் (அல்லது மேல் காயாரோகணம்) என்பது தமிழ்நாடு, நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சட்டநாத சுவாமி திருக்கோயிலைக் குறிப்பதாகும். இது புகழ்பெற்ற நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோயிலின் (திருநாகைக்காரோணம்) ஒரு உப-கோயிலாக விளங்குகிறது.

இந்தக் கோயிலைப் பற்றிய முக்கிய ஆன்மீகத் தகவல்கள்:

• அமைவிடம்: நாகப்பட்டினம் நகரின் மையப் பகுதியில், நீலா மேல வீதியில் (LIC அலுவலகம் அருகில்)  திருத்தலம் அமைந்துள்ளது.

• புண்டரீக மகரிஷி ஐக்கிய விழா: இத்தலத்தின் மிக முக்கிய ஐதீக நிகழ்வு புண்டரீக மகரிஷியின் முக்தி விழாவாகும். வருடந்தோறும் நடைபெறும் இவ்விழாவின் போது, புண்டரீக மகரிஷி புறப்பாடாகி இந்த ஆதி காயாரோகணம் (சட்டநாதர்) கோயிலை வந்தடைவார்.

• தொடர்புடைய கோயில்கள்: இக்கோயிலுக்கு எதிரே புகழ்பெற்ற "காக்கா குளம் பிள்ளையார்" என்று அழைக்கப்படும் சாபம் தீர்த்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

இது போன்ற கோயில் தகவல்களை அறிய, எனது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்

Sunday, July 12, 2026

ஜாதகத்தில் உள்ள வக்ர தோஷங்கள் நீக்கும் திருவக்கரை வக்கிர காளியம்மன்

ஜாதகத்தில் உள்ள வக்ர தோஷங்கள் நீக்கும் திருவக்கரை வக்கிர காளியம்மன்


திருவக்கரை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஒரு சக்தி வாய்ந்த காவல் தெய்வம் ஆகும்.

 ஜாதகத்தில் உள்ள வக்ர தோஷங்கள், கிரக தோஷங்கள் மற்றும் தீராத கர்ம வினைகளை நீக்கும் முதன்மை பரிகாரத் தலமாக இக்கோவில் விளங்குகிறது.

வக்கிர காளியம்மன் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஒரு சக்தி வாய்ந்த காவல் தெய்வம் ஆகும்.

ஆலயத்தின் முக்கிய சிறப்புகள்

வக்கிர அமைப்பு: இக்கோவிலில் உள்ள ராஜகோபுரம், கொடிமரம், நந்தி, மற்றும் மூலவர் சன்னதிகள் வழக்கமான நேர்கோட்டில் அமையாமல், ஒன்றுக்கொன்று வக்கிரமாக (மாறி) அமைந்துள்ளன.

வக்ரகாளி வடிவம்:

வக்கிராசூரனை வதம் செய்த பின் காளி தேவி சினம் தணிந்து சாந்த சொரூபியாக இங்கு அமர்ந்துள்ளார். இவரது முகம், கை, கால்கள் மற்றும் ஆபரணங்கள் கூட வக்கிர அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன.

மும்முக லிங்கம்:

 இத்தலத்தின் மூலவரான சந்திரமௌலீஸ்வரர் எங்கும் காண முடியாத அரிய மூன்று முகங்கள் கொண்ட சிவலிங்கமாக அருள் பாலிக்கிறார்.



ஆதிசங்கரரின் சக்கரம்:

காளியின் உக்கிரத்தைக் குறைக்க, அவளது இடது பாகத்தில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.

வழிபாட்டு பலன்கள்

வக்கிர தோஷ நிவர்த்தி:

ஜாதகத்தில் சனி, குரு போன்ற கிரகங்கள் வக்கிரமாக இருப்பதால் ஏற்படும் வக்கிர தோஷங்கள் நீங்க இங்கு வக்கிர காளியை வழிபட்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும்

ஜாதகத்தில் வக்கிர சனி பகவான் அமையப்பெற்றால் , இங்குள்ள வக்கிர சனி பகவானை வழிபாடும் பொழுது வக்கிர நிவர்த்தி ஏற்படுகிறது

தோஷ நிவர்த்தி:

வக்கிர தோஷங்கள் என்பது ஜாதகத்தில் கிரகங்கள் பின்நோக்கிச் சஞ்சரிக்கும் (retrograde motion) நிலையைக் குறிக்கும்.

இவை வாழ்க்கையில் தடை, துன்பம், மனஅழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

ஜாதகத்தில் ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் வக்கிர கதியில் இருப்பதால் ஏற்படும் தடைகள் மற்றும் வக்ர தோஷங்கள் உடனடியாக நீங்கும்.

திருமணம் கைகூட , குழந்தை பேறு கிட்ட , மற்றும் நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜை செய்வதன் மூலம் திருமணம் கைகூடும், குழந்தை பேறு கிட்டும், மற்றும் நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்கும்.

பௌர்ணமி அமாவாசை ஜோதி தரிசனம்:

ஒவ்வொரு பௌர்ணமி இரவு 12 மணிக்கும், அமாவாசை பகல் 12 மணிக்கும் வக்கிர காளி அம்மனுக்கு நடக்கும் மகா ஜோதி தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.

சிறப்பு அம்சங்கள்

வக்கிர சன்னதிகள்: காளி, சனி, சிவன் ஆகியோர் வெவ்வேறு திசைகளில் வக்கிரமாக (சாய்ந்த நிலையில்) அமைந்துள்ளனர்.

சனி பகவானின் வாகனம் காகம் – இங்கு தெற்கு நோக்கி இருப்பது விசேஷம்.

சக்தி தலம்: சிவன் கோவிலாக இருந்தாலும், காளி குடி கொண்டிருப்பதால் சக்தி தலமாகவும் விளங்குகிறது

பயண விவரங்கள்:வழித்தடம்:

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

 விழுப்புரம், திருக்கனூர் மற்றும் கொடுக்கூர் வழியாக எளிதாக அடையலாம்.

பாண்டிச்சேரியிலிருந்தும் இந்த கோயிலுக்கு செய்வதற்கு பேருந்து வசதி உள்ளது

என்னுடைய யூடுயூப் சேனலை மறவாமல் சுப்ஸ்க்ரைப் செய்யுங்களA