Search This Blog

Monday, June 19, 2017

அஸ்தங்க தோஷம் அல்லது கிரஹம் வலுவிழப்பது என்றால் என்ன? Planet Combustion

அஸ்தங்க தோஷம் அல்லது கிரஹம் வலுவிழப்பது என்றால் என்ன?
Sun God

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு மிக அருகில் மற்ற கிரஹங்கள் அமைந்துஇருந்தால் , அந்த கிரஹம் அல்லது கிரஹங்கள் தங்களுடைய வலுவை இழந்து பலன் தராது.
சூரிய மண்டலத்தில் உள்ள எந்த ஒரு கிரகமும், சூரியனுக்கு அருகில் குறிப்பிட்ட கோணஅளவு நெருங்கும் பொழுது
அது சூரியனின் பிரகாசத்தால் மணித கண்களுக்கு தெரிவதில்லை இதையே அஸ்தங்கம் என்று அழைக்கிறோம்.
சூரியன் ஒரு ராசியில் 30 நாட்கள் தங்கி சஞ்சரிக்கிறார். ஒவ்வொரு ராசியும் 3ம் பகைகளாகும். பொதுவாக சூரியன், ஒரு ராசியில் சஞ்சரிக்கும்போது, இதர கிரகங்கள் சூரியனுக்கு மிக அருகில் சம்பந்தம் பெற்றாலோ இணைந்து நின்றாலோ, அந்த கிரகத்திற்கு அஸ்தங்க தோஷம் உண்டாகிறது. அஸ்தங்க தோஷம் பெற்ற கிரகம், அதன் தெசாபுக்தி காலங்களில் பலன் அளிப்பதில்லை. அதாவது அந்த கிரஹம் தன்னுடைய வலுவை இழந்து நற்பலன்களை ஜாதகருக்கு தர முடியாமல் போகிறது.
ராகு கேது இவர்கள் சூரியனுடன் இணைந்து ஒரு ராசியில் அமையப்பெற்றால் அவர்களுக்கு அஸ்தங்க தோஷம் ஏற்படுவதில்லை.
 ஆனால் ராகு சேர்க்கை பெறும் போது சூரியன் பலம் இழந்து விடுகிறார். இதனால் கிரகண தோஷம் உண்டாகிறது, பெரியோர்களிடம் , ஒத்துபோவாமை , தந்தையிடம் கருத்துவேறுபாடு , சட்டத்திற்கு புறம்பான வழியில் செல்லுதல் போன்றவை நடைபெறும்.
ஜோதிட மூலநூலான சூரிய சித்தாந்தத்தில் 12 மற்றும் 13 அத்யாயம் கிரக அஸ்தங்கம் பற்றி கூறுகிறது.

புதன்(12 பாகை, & 14 பாகை), சுக்கிரன்(8 பாகை), செவ்வாய்( 17 பாகை), குரு (11 பாகை), சனி (15 பாகை)  அடைப்பில்  சூரியனுக்கு அருகில் வரும் பொழுது அது கண்களுக்கு புலப்படுவதில்லை. ஆகவே , அந்த கிரஹங்களுக்கு அஸ்தங்க தோஷம் ஏற்படுகிறது.
Sarpa Dosha

செவ்வாய் அஸ்தங்கம்

சூரியனுக்கு 17  செவ்வாய் அமைந்துயிருந்தால் செவ்வாய் அஸ்தங்கம் அடையப்பெறுகிறது. . ஜாதகத்தில் செவ்வாய் அஸ்தங்கம் அடைந்துஇருந்தால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு ஏற்படும்.சகோதர்களிடையே ஒற்றுமையின்மை  ரத்த சம்பந்தமான நோய், , அரிவாள் , கத்தி போன்ற ஆயுதத்தால் வெட்டு காயங்கள் ஏற்படும்.

Lord Bhuthan

புத அஸ்தங்கம்
பொதுவாக புத பகவான் சூரியனுக்கு மிக அருகாமையில் அமைந்து இருப்பர்.. புதன், சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அஸ்தங்க தோஷம் ஏற்படுவதில்லை. அதனால் புதன் தமக்கே உரிய பலன்களை முழுமையாக அளிக்கவல்லதாகும்..
மேலும் , புதனும் சூரியனும் சேர்ந்து இருந்தால் புதாத்ய யோகம் ஏற்படுகிறது புதாத்ய யோகம் 1,4,8 ல் அமையப்பெற்றால் , ராஜ யோகத்தை தருகிறது. புதாத்ய யோகம் நுண்ணறிவு ஆற்றல் , விடாமுயற்சி , அறிவாற்றல் , கல்வியில் மேன்மை போன்ற பலன்களை தருகிறது. கணிதத்தில் நிபுணத்துவம் பெறவைக்கும்.
புதன் அஸ்தங்கம் அடைந்துஇருந்தால் , தாய்மாமன்களுக்கு கெடு பலன்கள் , நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களை கொடுக்கும்.
Rahu & Kethu

சனி அஸ்தங்கம்
ஜாதகத்தில் லக்னத்திற்கு களத்ர ஸ்தானத்தில்/ 7ம் இல்லத்தில்/இராசியில்/, சூரியனுடன், சனி பகவான் அஸ்தங்கம் அடைந்து இருந்தால் மிகவும் கடுமையான பாதிப்பை அளிக்கும்.. ஜாதகருக்கு அற்ப ஆயுள் ஏற்பட வாய்ப்புள்ளது . லக்னத்திற்குபூர்வ புண்யம் அல்லது லாப ஸ்தானத்தில் ( 5/11ம் இல்லத்தில்/இராசியில்) சூரியனுடன் சனிபகவான் அஸ்தங்கம் ஆகி காணப்பட்டால் ஜாதகரின் உத்தியோகத்தில் தொழிலில் கடுமையான நஷ்டம், பாதிப்பு, அசுபப்பலன்கள் அடையப்பெறுவர்.
சனி பகவான் அஸ்தங்கம் அடைந்து ஜாதகத்தில் காணப்பட்டால் ,உடல் நலத்திற்கு கெடுதல் , வேலையாட்கள் ஒத்துஉழையாமை , பலகீனமான உடல்நிலை , தீராத கடன் தொல்லை ஆகியவற்றை தரும்
சுக்கிரன் அஸ்தங்கம்
களத்திரக் காரகனான சுக்கிரன்/,சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் அஸ்தங்க தோஷத்தினால், களத்ரதோஷம் ஏற்படும். சூரியன்/சுக்கிரன் தெசா புத்தி நடை பெரும் காலங்களில் ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையில் சோதனைகள் /நோயால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.  
சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்து ஜாதகத்தில் காணப்பட்டால் பால்வினை நோய்கள் , பெண்களால் அவமானங்கள் ஆகியவை ஏற்படும்.
சந்திர அஸ்தங்கம்
சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் , அமாவாசை யோகம் ஏற்படுகிறது. சந்திரனுக்கும் கிரக அஸ்தங்கம் உண்டு. சூரியனுக்கு 12 பாகைக்குள் சந்திரன் அமைய பெற்றால் மன நோய் , நீர் சம்பந்தமான நோய்கள் உண்டாகிறது
ஜாதகத்தில் சந்திரன் அஸ்தங்கம் பெற்றிந்தால்அவப்பெயருக்கு ஆளாக நேரிடுவதுடன் அரசாங்க தண்டனைக்கும் ஆளாகக் கூடும். சதா மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவி இடையில் பணியின் காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ தற்காலிகமான பிரிவு ஏற்படும்.
Sevvai Bhagawan

நேத்திரன்-ஜீவன் குருடு

பஞ்சாங்கத்தி்ல் அமாவாசை அன்று நேத்திரன்-ஜீவன் குருடு எனும் நிலையில் "0" என்று குறிப்படிப்பட்டிருக்கும் சந்திரனின் மீது விழும் ஒளியின் அளவு, மற்றும் சூரிய நிலையே நேத்திர-ஜீவன். 

;
நேத்திரம், ஜீவன் இல்லை எனெனில் அன்று திருமணம் செய்ய உகந்தநாளல்ல அதாவது அன்றைய தினம் சந்திரன், சூரிய சேர்கையால் அஸ்தங்கம் தோஷம் இருப்பதால், திருமணம் செய்வதற்கு அமாவாசை தினம் உகந்தது இல்லை.

கிரக யுத்தம் -War

புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய 5 கிரகங்களும் ஓன்றுக்கொன்று அருகில் வரும் பொழுது நிகழ்வது கிரக யுத்தம்,
கிரக சமாகமம் (conjunction)

புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி 5 கிரகங்களும் சந்திரனுடன் இணைவது சமாகமம் ஆகும் (இந்த ஐந்து கிரஹங்களும் சூரியனுடன் இணைந்தால் அஸ்தங்கம்.

கிரஹ அஸ்தங்கத்திற்கு விதிவிலக்குகள்

·        அஸ்தங்கம் பெரும் கிரஹங்கள் பரிவர்த்தனை பெற்றால் , கெடு பலன்களை தருவதில்லை.
·        மேலும் , கிரஹங்கள் சூரியனுக்கு மிக அருகில் ஒரு பாகையில் இருந்தால் , அதிகமான தீய பலன்களை தருகிறார்கள்.
·        லக்கினாதிபதி சூரியனாக இருந்தால் , அஸ்தங்கம் தீய பலன்களை தருவதில்லை.
·       சூரியனோ அல்லது சந்திரனோ  ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் அஸ்தங்கம் கெடுபலன்கள் தருவதில்லை.

·        அஸ்தங்கம் பெற்ற கிரஹங்கள் கேந்த்ரா திரிகோணாதிபதி இருந்தால் , அஸ்தங்கத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை.

13 comments:

  1. அருமையான விளக்க பதிவுகள்......................

    ReplyDelete
  2. உபஜெயஸ்தானத்தில் இருந்தால்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அஸ்தங்கம் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் என்ன பலன் ?
    Mob number 9740806542

    ReplyDelete
  5. ஐயா வணக்கம், ரிஷப லக்கினம் கடக ராசி பூச நட்சத்திரம் லக்கினம் சூரியன் சுக்கிரன் உள்ளது சுக்கிரன் தசை எப்படி இருக்கும்

    ReplyDelete
  6. எனக்கு விருச்சிகம் லக்னம் கன்னி ராசி 10 ல் சூரியன் (செவ்வாய் புதன் சுக்கிரன்) அஸ்தங்கம் பலன் கூறுங்கள்

    ReplyDelete
  7. என் பிறந்த ஜாதகத்தில் குரு வக்கரம் சனி மற்றும் புதன் அஸ்தங்கதம் ஆகியுள்ளது இவை மாற வழியுள்ளதா? DOB 15-12-1987

    ReplyDelete
    Replies
    1. தம்பி 16/12/1987 என் பிறந்த நாள் கவலை வேண்டாம் இதைவிட விதி விளக்கு ஒன்று உள்ளது குரு பாவுர்னமி சந்திர பார்வை அஸ்த்கங்க தோசத்தை முழுவதுமாக நீங்க்கும் அதன் தசாவில் அந்த கிரக பலன் மாற்றாமல் தரும்

      Delete
  8. In my horoscope saturn aathangam with sun and mercury on 12th bhavam. My self born with kadagam laknam with mars.

    ReplyDelete
  9. விதிகள் சரி ஆனால் விதிவிளக்கு முதன்மை விதி இல்லை அஸ்தகங்கம் ஆன கிரகம் ஆச்சி உச்ச குருவின் 9 அல்லது 5 பார்வை அல்லது முழு பவுர்ணமி சந்திரன் பார்வையில் இருந்தால் அஸ்தகங்க கிரகம் அஸ்தகங்க நீவர்த்தி பெறும் மேலும் அதன் தசாவில் அதற்க்கான சுய பலனை வலுத்து செய்யும் மேலும் சந்திரன் இணைவு அம்மாவாசை அஸ்தங்கம் என்று சொல்வது முற்றிலும் தவறான வார்த்தை

    ReplyDelete