Search This Blog

Thursday, June 22, 2017

திரு மோடியை பிரதமராக்கிய நீச பங்க ராஜ யோகம் ! How Debilitated planets give Raja Yoga ?

திரு மோடியை பிரதமராக்கிய நீச்ச பங்க ராஜ யோகம் !
Modi and Neecha Banga Raja Yogam

திரு மோடியை பிரதமராக்கிய நீச பங்க ராஜ யோகம் ! How Debilitated planets give Raja Yoga ?

காணொளியை காண கீழ்கண்ட லிங்க்யை அழுத்தவும்





கிரஹங்கள் தம் நீச ராசியில் இருந்தால் நீசராவார்
(பலமிழந்தவாராவார்).

ஆனால் இவர்கள் நின்ற ராசி நாதன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்றாலும் அல்லது லக்னத்திற்கோ,சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலோ நீசம் பங்கமாகி,'ராஜ யோகம்'வருகின்றது.

இதனால் இவர்களுக்கு திடீர் சம்பத்துக்களும் பெயரும் புகழும் உண்டாகும்.

உதாரணத்திற்கு , கீழே தரப்பட்டுள்ள திரு மோடி ஜாதகத்தில் , விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் அடைந்து காணப்படுகிறார். 
நீச்சம் அடைந்த சந்திரன் லக்கினத்தில் அமைப்பெற்றதால் நீச்ச பங்க ராஜா யோகம் அமையப்பெறுகிறது.

Modi Horoscope


நீச்சன் நின்ற ராசிநாதன்
ஆட்சி உச்சம் பெற்றிடின்
நீச்ச பங்க ராஜயோகம்

என்கிறது ஒரு தமிழ் ஜோதிட பாடல்.

திரு மோடி அவர்கள விருச்சிக லக்கனம் மற்றும் விருச்சிராசியில் பிறந்துள்ளார் விருச்சிக ராசியில் சந்திரன் நீச்ச அடைவார் விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய் ஆவார். விருச்சிக ராசியிலே செவ்வாய் ஆட்சி பெற்று காணப்படுவதால் சந்திரனுக்கு நீசபங்கம் ஏற்பட்டு திரு மோடி அவர்களுக்கு ராஜ யோகத்தை தந்துள்ளது.

சாதாரணமாக ஒரு டீ கடை நடத்தி வந்த திரு மோடி அவர்கள் இன்று பாரத பிரதமராக ஆக முடிந்தது. பிஜேபி கட்சியில் உள்ள பல மூத்த தலைவர்களை பின்னுக்கு தள்ளி பிரதமர் பதவியை பிடிக்க முடிந்தது.

நீச்ச பங்க ராஜா யோகம் திரு மோடி அவர்களுக்கு பெரும் புகழும் கொடுத்தது என்றால் அது மிகை ஆகாது.


Nava Grahas or nine planets


ஒரு நீச்ச கிரகம் எப்போது நீச்ச பங்கமடையும்?
1. நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்)
திரு மோடி ஜாதகத்தில் நீச்சமடைந்த சந்திரனுக்கு செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் வீடு கொடுத்துள்ளார். விருச்சிக ராசியில் செவ்வாய் ஆட்சி பெறுவதால் நீச்சமடைந்த சந்திரனுக்கு நீச்ச பங்க ராஜ யோகம் ஏற்படுகிறது. சந்திரனுடைய தசை மற்றும் புக்திகளில் திரு மோடி அவர்களுக்கு ராஜ யோகத்தை தரும்

2. நீச்ச கிரகத்துடன் அந்த வீட்டில் ஒரு கிரகம் 
உச்சம் பெறுதல் ((நீச்ச பங்க ராஜ யோகம்)











ராசி







சனி சூரியன்


மேல கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில், 
துலாத்தில் சூரியன் நீச்சம் அடைகிறார். துலாத்தில் சனி உச்சம் அடைந்து சூரியனோடு சேர்க்கை பெற்று காணப்படுவதால் , சூரியனுக்கு நீச்ச பங்கம் ஏற்படுகிறது
3. நீச்ச கிரகத்துடன் ஒரு நட்பு கிரகம் சேருதல்.









ராசி






சந்திரன் குரு



மேல கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில் விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் அடைந்துள்ளார். அவருடன் விருச்சிக ராசியில் நட்பு பெரும் குரு அமர்ந்துள்ளார். இதனால் சந்திரனுக்கு நீச்ச பங்க ராஜ யோகம் ஏற்படுகிறது.

4. ஒரு நீச்ச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம்

 பார்த்தால் நீச்ச பங்கம். (நீச்ச பங்க ராஜ 

யோகம்)











ராசி
செவ்வாய்
குரு








நீச்சனை நீச்சன் பார்த்தால்
நீச்ச பங்க ராஜ யோகமே

மேல கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில் கடக ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்றும் மகர ராசியில் குருவும் நீச்சம் அடைந்து காணப்படுகிறார்கள். நீச்சமடைந்த செவ்வாயும் குருவும் ஒருவரை ஒருவர் சமசப்தமாக பார்வை இடுகின்றனர். இதனால் செவ்வாய்க்கும் , குருவுக்கும் நீச்ச பங்க ராஜ யோகம் ஏற்படுகிறது. ஜாதகருக்கு செவ்வாய் மற்றும் குரு தசைகள் நடை பெரும் பொழுது ராஜ யோகத்தை தருகிறது.


Nava Grahas or nine planets


5. நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெறுதல்.

புதன்








ராசி








குரு

புத பகவான் மீன ராசியில் நீச்சம் பெறுவார். புதன் மீன ராசியில் இருக்க மீன ராசி அதிபதி குரு கன்னி ராசியில் அமர்ந்திருக்க புதனுக்கு நீச்ச பங்கம் ஏற்படுகிறது ஜாதகருக்கு புதன் தசை நடைபெறும்பொழுது ராஜ யோக பலன்களை தருகிறது. 

6. நீச்ச கிரகம் வர்கோதமம் 

பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்).


புதன்




புதன்



  

ராசி


அம்சம்



















வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசி கட்டத்திலும் அம்ச கட்டத்திலும் ஒரே பாவத்தில் இருப்பது.

யத்திர யத்திர கிரஹ வர்கோத்தமம்
தத்ர தத்ர பரிபூரணம்

என்கிறது ஒரு சமஸ்க்ரித சுலோகம் அதாவது ஒரு ஜாதகத்தில் எத்தனை கிரஹங்கள் (ஒன்றுக்கு மேற்பட்டவர்கோத்தம அடைந்து காணப்பட்டால் அப்படிப்பட்ட ஜாதகர் மிகுந்த யோகக்காரராக இருப்பார் என்கிறது.

மேல கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில் புத கிரகம்மீன ராசியில் ராசியிலும் அம்சத்திலும் நீச்சமடைந்து அமர்ந்துள்ளது. புதன் வர்கோத்தமம் பெற்று அமைந்துள்ளதால் புதனுக்கு நீச்ச பங்கம் ஏற்படுகிறது.
7. நீச்ச கிரகம் வக்கிரம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்)
புதன் (வக்கிரம்)








ராசி










மேல கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில் புத பகவான் மீன ராசியில் நீச்சம் பெற்று வக்கிரம் அடைந்து காணப்படுகிறார். இதனால் புதனுக்கு நீச்ச பங்கம் ஏற்படுகிறது. புதன் தசை மற்றும் புக்தி நடைபெறும் பொழுது ஜாதகருக்கு தீய பலன்கள் ஏற்படுவதில்லை. மாறாக , புதன் தசை மற்றும் புக்தி ஜாதகருக்கு ராஜ யோக பலன்களை தருகிறது.

8. சந்திர கேந்திரத்தில் நீச்ச கிரகத்திற்கு வீடு 

கொடுத்தவன் இருத்தல்.







செவ்வாய்

ராசி






சந்திரன்



மேல கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில் விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் அடைந்துள்ளார். விருச்சிகத்தில் அதிபதியான செவ்வாய் சந்திரனுக்கு கேந்த்ர ஸ்தானமான கும்பத்தில் அமர்த்துள்ளதால் , சந்திர பகவானுக்கு நீச்ச பங்கம் ஏற்படுகிறது.
9. லக்ன கேந்திரத்தில் நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் இருத்தல்.








ராசி
கடக லக்கினம்
செவ்வாய்





சந்திரன்



மேல கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில் விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் அடைந்துள்ளார். விருச்சிகத்தில் அதிபதியான செவ்வாய்  கேந்த்ர ஸ்தானமான கும்பத்தில் அமர்த்துள்ளதால் , சந்திர பகவானுக்கு நீச்ச பங்கம் ஏற்படுகிறது. லக்கினத்திற்கு கேந்த்ர ஸ்தானமான மகரத்தில் அமர்ந்துள்ளார் இதனால் சந்திர பகவானுக்கு நீச்ச பங்கம் ஏற்படுகிறது.

10. நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் சுய நட்சத்திர சாரம் பெறுதல்







ராசி






சந்திரன்



மேல கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில் விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் அடைந்துள்ளார். சந்திரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் பகவான் தன்னுடைய சொந்த நட்சத்திர சாரம் பெற்றால் அதாவது மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் சாரம் பெற்று நின்றால் சந்திரனுக்கு நீச்ச பங்கம் ஏற்படுகிறது.

11. நீச்ச கிரகம் சுய சாரம் பெறுதல் (இது புதனுக்கு மட்டுமே சாத்தியம் - நீச்ச பங்க ராஜ யோகம்)

புத பகவான் தன்னுடைய சொந்த நட்சத்திரங்களான ஆயில்யம் கேட்டை ரேவதி நின்றால் புத பகவானுக்கு நீச்ச பங்கம் ஏற்படுகிறது.


 சதாம் ஹுசைன் ஜாதகம் 


மேல கொடுக்கப்பட்டுள்ள சதாம் ஹுசைன் ஜாதகத்தில் விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் அடைந்துள்ளார். சந்திரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் பகவான் விருச்சிகத்தில் ஆட்சி 
அடைந்துள்ளார். சந்திரனுக்கு நீசபங்கம் ஏற்பட்டு திரு சதாம் ஹுசைன்அவர்களுக்கு ராஜ யோகத்தை தந்தது.


நீச்ச பங்கமடையும் கிரகம், தன் திசையில் முன் பகுதியில் முதலில் குறைவான பலன்களை கொடுத்து பின் தசையின் பிற்பகுதியில் நற்பலன்களை கொடுக்கும். இதில் நீச்ச பங்க ராஜயோகம் அடையும் கிரகம், மிக பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்.
Free Mass Ping

17 comments:

  1. Your valuable information on nechabhanga rajayoga is very useful to me

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Sir, Thank you very much for a VIVID & MORE INFORMATIVE PRESENTATION ON NEECHABANGA RAJAYOGA. PRAY GOD TO GIVE YOU HAPPY &LONG LIFE TO ENABLE YOU TO COME OUT WITH PRESENTATIONS.

    ReplyDelete
  4. Sooper sir... Very crystal clear informations... 🙏🙏🙏

    ReplyDelete
  5. அய்யா வணக்கம். என் ஜாதகத்தில் உள்ள அமைப்பு இது.
    கும்பம் லக்கனம். மகரம் ராசி. 2, 11க்கு உடைய குரு 10ல். 3, 10 க்குடைய செவ்வாய் மகரத்தில் உச்சம். 1, 2 க்குடைய சனி 3 ல் நீசம். இந்த நீசபங்க ராஜயோகம் (பரிவர்த்தனை, சந்திர கேந்திரத்தில் (1) செவ்வாய், சந்திர கேந்திரத்தில் சனி, செவ்வாயின் 4ம் பார்வையில் சனி) நல்ல பலன் தருமா? எனக்கென எந்த சொத்துமே சேர்க்கவில்லை. இறைவன் அருள் எனக்கு உண்டா?

    உங்க தெய்வீக அருள்வாக்கு எனக்கு கிடைக்கட்டும். மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete
  6. 04_10_1987 time morning 10:20 enathu date of birth. Enku ethachum yogam ullllatha?

    ReplyDelete
  7. அருமையான விளக்ம் அருமை

    ReplyDelete
  8. அருமையான விளக்ம் அருமை

    ReplyDelete
  9. நல்ல விளக்கம்

    ReplyDelete
  10. Nice explanation with clear cut examples. Please upload more details about other yogangal.

    ReplyDelete
  11. How to copy paste these post

    ReplyDelete
  12. How is Neecha Bhanga Raja yoga for Makara rasi in November 2020

    ReplyDelete
  13. நீச்சனுக்கு வீடு கொடுத்தவன் நீச்சமானால் நீச்சபங்கமா? ஐயா.

    ReplyDelete