Search This Blog

Wednesday, June 14, 2017

கேந்திர ஆதிபத்திய தோஷம் என்றால் என்ன? What is meant by Kendra Aathipathiya Dosha ?

கேந்திர ஆதிபத்திய தோஷம் என்றால் என்ன?

கேந்திர ஆதிபத்திய தோஷம் என்பது சுபர்களான குரு, சுக்கிரன், புதன் கேந்திரங்களில் அமையப்பெற்றால் ஏற்படும் தோஷம் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பது 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களை குறிப்பதாகும். இதில் 1ம் இடம்( லக்கினம் ) கேந்திரம் மற்றும் திரிகோணத்தில் அமைப்பெற்றால் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை.

பஞ்ச மஹா புருஷ யோகம் என்பது செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகியோர் லக்ன கேந்திரத்தில் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருந்தால் ஏற்படுகிறது. அதே வேலையில் இயற்கையில் சுபர்களான புதன், குரு, சுக்ரன் கேந்திரத்திரக்கு அதிபதி அனால் கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்படும்.

இதில் முக்கியமாக கவனிக்க பட கூடிய விஷயம் என்ன வென்றால் , இயற்கையில் சுபர்களான புதன், குரு, சுக்ரன் கேந்திரங்களில் நிற்கும்பொழுது பஞ்ச மஹா புருஷ யோகம் தந்தாலும் கேந்திர ஆதிபத்திய தோஷம் அமைந்த காரணத்தினால் பஞ்ச மஹா புருஷ யோகம் கொடுக்க வேண்டிய சுப பலன்கள் தடுக்கப்படுகிறது.- தீய பலன்களே ஏற்படுகிறது.

இனி கேந்திர ஸ்தானங்களை வைத்து என்ன மாதிரியான பலன்கள் சொல்லலாம் என்பது கீழே தரப்பட்டுள்ளது.



லக்கினம் அல்லது 1 ம் இடம்
ஜாதகரின் ஆயுள் ஆரோக்கியம், குண அமைப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்
நான்காம் இடம்- சுக ஸ்தானம்
ஜாதகரின் சொகுசு வாழ்வு, வண்டி வாகன யோகம், வீடு மனை யோகம், உயர் கல்வி, தாய் ,தாய் வழி உறவுகளால் உண்டாக கூடிய பலன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்
ஏழாம் இடம்- களத்திர ஸ்தானம்
ஜாதகரின் மண வாழ்க்கை, நட்பு கூட்டுத்தொழிலில் உண்டாக கூடிய பலன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்
பத்தாம் வீடு- ஜீவன ஸ்தானம்
ஜாதகரின் உத்தியோகம் வியாபாரம்,  தொழில் பற்றி அறிந்து கொள்ளலாம்


சுப பலனை தரக் கூடிய சுப கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமைந்து ஆட்சி அல்லது உச்சம் பெரும்பொழுது நற்பலனை தருவதற்கு பதில் கேந்திராபத்திய தோஷத்தை ஏற்படுத்தி கெடு பலன்களை தருகின்றது.

மேலும் சுப கிரகங்களின் கேந்திர ஸ்தானங்களில் தனித்து ஆட்சிப் பெற்று அதன் திசா புக்தி காலங்கள் நடைபெறும்பொழுது பல்வேறு தீய பலன்களை தருகிறது.

கீழே தரப்பட்டுள்ள அட்டவணை மூலம் 12 லக்னங்களிற்கும் கேந்திர ஸ்தானம் என்ன என்ன என்றும், எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த லக்னத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதனை பார்ப்போம்.



லக்னம்
எந்த கிரகங்கள் கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்படுத்தும்?

மேஷ இலக்னம்
4ஆம் வீடான கடகமும் 7ஆம் வீடான துலாமும், 10ம் வீடான மகரமும் ேந்திர ஸ்தானங்கள் ஆகும.

4ஆம் வீடான கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்றிருந்தால் மனக்குழப்பங்கள், வாகனம் சொந்த வீடு அமையத் தடை, சுகமான வாழ்க்கை அமையத் தடை ஏற்படுகிறது.

7ம் வீடான ுலாத்தில் சுக்கிரன் ஆட்சிப் பெற்றிருந்தால் தாமத திருமணம், திருமண வாழ்வு அமைவதற்கு தடை அப்படி திருமண வாழ்வு அமைந்தாலும் நிம்மதியில்லாத நிலை உண்டாகிறது. நல்ல நண்பர்கள் கிடைப்பதில் தடை மற்றும் கூட்டு தொழிலில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ரிஷப இலக்னம்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகும். ரிஷப லக்கினத்திற்கு லக்கினாதிபதியான சுக்கிரன் ஒருவரே ஷுப கிரஹம் ஆவார். சுக்கிரன் லக்கினாதிபதி என்பதால் , அவர் லக்கினத்தில் அமர்ந்து கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்பட்டாலும் , சுக்கிரணடைய தசா புக்திகள் உயர்ந்த ஷுப பலன்களையே தருகிறது.
மிதுன இலக்னம்
மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதனும் குருவும் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தருகிறார்கள் லக்கினாதிபதியான புதன் லக்கனத்தில் அமர்ந்தால் , அதிக கெடு பலன்களை தருவதில்லை. நான்காம் இடத்தில அமர்ந்தால் , தாய்க்கு ஆரோக்கிய குறைவு , சொந்த வீடு அமைய தடை கல்வியில் முன்னேற்றம் இல்லாத நிலை ஏற்படுகிறது.

ஏழாம் வீட்டில் குரு ஆட்சி பெற்று காணப்பெற்றால் கடுமையான கேந்திர ஆதிபத்திய தோஷம் அமைகிறது. ஜாதகருக்கு திருமண வாழ்வு அமையப்பெறுவதில்லை. அப்படி அமைந்தாலும் , மணமுறிவு , விவாகரத்து ஏற்படுகிறது.

இதற்கு மிக சிறந்த உதாரணம் மறைந்த செல்வி ஜெயலலிதா ஜாதகம் ஆகும்.


Jayalalitha Horoscope

மறைந்த செல்வி ஜெயலலிதா ஜாதகம்

சுக்ரன்

ராகு

லக்கினம்


சூரியன்
புதன்


செவ்வாய்

சனி
சந்திரன்
குரு

கேது



மிதுன லக்கினத்திற்கு 10 ம் இடத்தில் சுக்ர பகவான் உச்சம் பெற்றதால் மாளவ்ய யோகம் அமையப்பெற்றது. இதனால் ஜெயலலிதா கலைத்துறை மற்றும் அரசியலில் சாதனை புரிய முடிந்தது.

மிதுன லக்கினத்திற்கு 7ம் அதிபதியான குரு பகவான் 7ம் இடத்தில் அமையப்பெற்று கேந்திர ஆதிபத்திய தோஷம் அமையப்பெற்றதால் ஜெயலலிதாவிற்கு திருமணம் என்பது ஒரு கானல் நீராக ஆனது.

மிதுன லக்கினத்திற்கு 10 ம் இடத்தில் குரு ஆட்சிப் பெற்றாலும் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகி உத்தியோக தொழில் ரீதியாக பல சங்கடங்களையும், சோதனைகளையும் ஜாதகர் சந்திக்க நேரிடுகிறது

கடக இலக்னம்
கடக லக்கினக்காரர்களுக்கு நான்காம் இடமான துலாத்தில் சுக்கிர பகவான் ஆட்சி பெற்று காணப்பெற்றால் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகிறது. சுக்கிர பகவான் கடக லக்கின காரர்களுக்கு பாதகாபதி என்பதால் , சொல்லணா துயரங்களை அவருடைய தசை புக்தி காலங்களில் சந்திக்க நேரிடுகிறது.
சிம்ம இலக்னம்
சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில சுக்கிரன் ஆட்சி பெற்று காணப்பட்டால் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகிறது, ஜாதகர் தொழில் ரீதியாக பல சங்கடங்களை சந்திக்க நேரிடும்.
கன்னி இலக்னம்
கன்யா லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் லக்கினத்தில் ஆட்சி , உச்சம் , மூலதிரிகோணம் பெற்று காணப்பட்டால் , கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகிறது.  சிறு சிறு தடைகளை ஜாதகர் வாழ்வில் சந்திக்க நேரிடும்.

சுக ஸ்தானமான  நான்காம் வீட்டில் குரு ஆட்சி பெற்றால் வீடு வாகனம் வாங்க இடையூறுகள், சுக வாழ்வில் தடை, தாய் வழி உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

களத்திரஸ்தானமான ஏழாம் இடத்தில்  குரு ஆட்சிப் பெற்றால் கடுமையான கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகிறது. ஜாதகருக்கு திருமணம் என்பது ஒரு கானல் நீராக அமைகிறது. மேலும் திருமண வாழ்வில் பல சங்கடங்கள், கூட்டு தொழிலில் பிரச்சனைகள் உண்டாகும்.
துலா இலக்னம்.
துலா லக்கணத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் லக்கினாதிபதி என்பதால் , சுக்கிரன் லக்கினத்தில் அமைந்தாலும் , பெரிய பாதிப்பகளை ஏற்படுத்த மாட்டார்.
விருச்சிக இலக்னம்.
7ஆம் அதிபதி சுக்கிரன் மட்டுமே விருச்சிக இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுப கிரகமாவார். ஏழாம் அதிபதியான சுக்கிரன் ஏழாம் இடத்திலே அமையப்பெற்றால் கடுமையான கேந்திர ஆதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தும். மேலும் சுக்கிரன் களத்திர காரகர் என்பதால் கரோகோ பாவ நாஸ்தி ஏற்பட்டு ஜாதகருக்கு திருமணம் நடை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.
தனுசு இலக்னம்.
தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுபர்களான புதனும் குருவும் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை ஏற்படுத்துகின்றனர்.

 நான்காம் இடத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று அமைந்தால் சுகமான வாழ்வு ஏற்படுவதற்கு தடை , வீடு மனை, வண்டி வாகனங்கள் அமைவதற்கு தடை,உயர் கல்வி அமைய, தடை உண்டாகும்.

7,10இல் புதன் ஆட்சிப் பெற்றால் மண வாழ்க்கையில் சங்கடங்கள், திருமண தடைகள்,  வியாபார தொழில் உத்தியோக ரீதியாக வீண் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.  
மகர இலக்னம்.
மகரலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு
ஐந்து , பத்துக்கு உரியவரான சுக்கிரன் பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்று காணப்பட்டால் , தொழில் , உத்தியோக ரீதியாக பல சங்கடங்களை உருவாக்குவார்.
கும்ப இலக்னம்.
கும்ப இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு நாலாம்  அதிபதி யான சுக்கிரன் நான்கில் ஆட்சிப் பெற்று அமைந்தால் கடுமையான கேந்திராதிபத்திய  தோஷம் ஏற்படுத்தும். வீடு வாகனம் வாங்க இடையூறுகள், சுக வாழ்வில் தடை, தாய் வழி உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

மீன லக்கினம்
 மீன இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10இல் குரு பகவான் ஆட்சிப் பெற்றால் தொழில் உத்தியோக ரீதியாக இடைஞ்சல்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கு தடை, உண்டாகும்.

நான்கு , எழில் , ஸூபர் ஆன புதன் ஆட்சிப் பெற்றால் சுகமான வாழ்க்கை அமைவதற்கு தடை, வீடு வாகனம் அமைவதில் இடைஞ்சல்கள் உண்டாகும் இல்வாழ்க்கை ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும்.. மண வாழ்க்கை அமைவதிலும் தாமதம் உண்டாகும்

Sonia Ghandhi

திருமதி சோனியா காந்தி ஜாதகம் 
SONIA GHANDHI HOROSCOPE
திருமதி சோனியா காந்திஜாதகத்தில் 4 ம் இடமான சுக ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று காணப்பெற்றாலும் , மாளவ்ய யோகம் அமையப்பெற்றிருந்தும் , கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்பட்டதால் , அவரால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றும் அவரால் பிரதம மந்திரி ஆக முடியவில்லை. மேலும் , தற்சமயம் , காங்கிரஸ் கட்சி எதிர் கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்துள்ளது.

கேந்திர ஆதிபத்திய தோஷத்திலிருந்து விலக்கு பெற

  • 1.      ஷுப கிரஹங்கள் லக்கினத்தில் இருந்தால் , கேந்திர ஆதிபத்திய தோஷத்திலிருந்து விலக்கு உண்டு. ஏனென்றால் , லக்கினம் கேந்திர திரிகோணமாக அமைவதால்.


  • 2.      1, 4, 7, 10 இடத்தில் ஷுப கிரஹங்கலான குரு , புதன் , சுக்கிரன் தனியாக அமையாமல் அவர்களுடன் ஒன்று அல்லது பல பாப கிரஹங்கள் அமையப்பெற்றால் , கேந்திர ஆதிபத்திய தோஷத்தால் கெடு பலன்கள் ஏற்படாது.

  • 3.      மிதுன லக்கினத்திற்கு , கன்யா லக்கினத்திற்கு குரு பகவான் ஏழாம் இடமான களத்திரஸ்தானத்தில் அமையப்பெற்றால் , கடுமையான கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஜாதகர்கள் திருமண வாழ்வில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது. அப்படியே திருமணம் நடைபெற்றாலும் , மண முறிவு , விவாகரத்து , பிரிந்து வாழுதல் போன்ற கெடு பலன்களே நடை பெரும்.

6 comments:

  1. Im danusu lagna ....thulam raasi
    In my fourth house guru+ sukran + bhuthan are there ....

    ReplyDelete
  2. புதன் மீனத்தில் நீசம் . சுக்கிரன் உச்சம். குரு ஆட்சி. குரு தனித்து இருப்பின் தோஷம் ஓகே. ஆனால் புதன் நீசம் அது பவரை குறைக்கிறது. சுக்கிரனுக்கு ஆட்சி வீடு அல்ல. குரு சுக்கிரன் இருவரும் பகை
    கொண்டு ஒரு வீட்டில் இருப்பதால் ஒருவர் ஆதிபத்தியம் மற்ற கிரகத்தில் தடுக்கப்படுகிறது. ஆக கேந்திர ஆதிபத்திய தோஷம் இல்லை.

    .

    ReplyDelete
  3. Sir mena lagnam buthan ,sukuran in kanni 7th house and guru sani in dhanusu 10th house is kendradhipati dhosham is there

    ReplyDelete
    Replies
    1. கேந்திர ஆதிபத்திய தோஷம் இல்லை.

      Delete
  4. Sukiran in 4th house aatchi for kumbam lagnam it is not malaviya yogam but ketrathipathi dosham ah? But in my horoscope that number of dosham is zero

    ReplyDelete
  5. ஐயா., நான் மிதுன லக்னம்.,
    7ல் குரு...
    அம்சத்தில் குரு+கேது(துலாம்)...
    10ல் வக்ரசனி(உத்-2) + கேது(உத்-3) + வளர் சந்திரன்(ரே-2)...
    சனியின் 10ம் பார்வை இருக்க தோஷம் இருக்கிறதா?

    ReplyDelete