சொந்த வீடு அமையும் யோகம்
ஜாதகத்தில் செவ்வாய் பகவான் “ஆட்சியோ” அல்லது “உச்சமோ” பெற்றிருந்தால்
அது “ரூச்சக யோகத்தை” ஏற்படுத்திக்கிறது.
விருச்சிக லக்கனம் ஆகி மனை தனை சேய்
நின்று பார்க்கில்
லக்கினாதிபதியும் 4ம் அதிபதியும் பரிவர்த்தனை
4ம் அதிபதியும் சுக்ரனும் சர ராசியில்
அமையப்பெற்றால்
4ம் வீட்டில் செவ்வாய் அமையப்பெற்றால்
4 ம் அதிபதி 11 ல் அமையப்பெற்றாலும்
, 4ம் அதிபதி மற்றும் 11ம் அதிபதி பரிவர்த்தனை அடைந்து காணப்பட்டாலும் அவர்களுக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் அமைய பெற்று அதனால் நிறைய வருமானம் கிடைக்க பெறுகிறது.
விற்காத நிலங்கள் விற்க பரிகாரம்
விற்காத வீடு , நிலம் , வீட்டு மனைகளை விற்பனை செய்ய எளிய பரிகாரம்.
வராக பெருமாள் வழிபாடு- பரிகாரம்
சிலர் தங்கள் வீட்டையோ,வீட்டு மனையையோ
அல்லது விவ்சாய நிலத்தையோ விற்பதற்கு முயற்சி செய்தும் விற்க முடியாமல் சிரமபட்டுக்கொண்டிருப்பார்கள்.
அவர்கள் தங்கள் வீட்டு முற்றம்,காலி மனை அல்லது விவசாய நிலத்திலிருந்து கொஞ்சம் மண்ணை
எடுத்துக்கொண்டு வராக பெருமாள் கோவிலுக்கு சென்று திங்கள் கிழமை புதன் ஹோரையில் அல்லது
வெள்ளிக்கிழமை புதன் ஹோரையில் அந்த மண்ணை பெருமாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து
வழிபட்டால் விரைவில் மண்,மனைகள் விற்பனையாகும்.
தொட்டா சிணுங்கி பரிகாரம்.
தாந்திரீக பரிகாரத்தில் தொட்டா சிணுங்கி
இலைக்கு கேட்ட வரத்தை கொடுக்கும் தன்மை உண்டு. இந்த தொட்டா சிணுங்கி இலையை தண்ணீரில்
புளி போல் கரைத்து கொண்டு இந்த தண்ணீரையும் நீங்கள் விற்க இருக்கும் பொருட்களின் மீது
தெளிக்கலாம். வீடு, வாகனம், நிலம் , மனை போன்ற விலை உயர்ந்த பொருட்களை நாம் நினைத்த
விலைக்கு விற்க முடியும் .
ஸ்ரீ பரசுராமர் மந்திரம்
விற்க முடியாமல் இருக்கும் வீடுகள்,இடங்கள் விற்க:-
ஓம் ராம் ராம் | ஓம் ராம் ராம் | ஓம் பரசு ஹஸ்தாய நமஹ||
ஒரு செம்புப் பாத்திரத்தில் நீர் நிரப்பி
சில துளசி இலை,கொஞ்சம் வெண்ணிறமான பூக்களைப்
போட்டு செவ்வாய்க்கிழமை அன்று கிழக்கு முகமாய் அமர்ந்து இந்த மந்திரத்தை
1008 தடவை ஜெபித்து ஜெபத்தின்
சக்தி அந்த செம்புப் பாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தில் இறங்கட்டும்
எனக் கூறி அந்த
தீர்த்தத்தை அடுத்த நாள் (புதன்கிழமை ) அதிகாலை 6 மணிமுதல் 7 மணிக்குள் விற்காத இடத்தின்
வடகிழக்கு மூலையில் (ஈசான்யமூலை)
சிறிய குழி பறித்து அதில் ஊற்றி விடவும்.விரைவில் விற்பனை ஆகிவிடும்.
இந்த மந்திரம் ஸ்ரீ பரசுராமர்
மந்திரம்எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் , நில அபகரிப்பு
பிரச்சனை ,வறுமை ,தவறான தொடர்பு இவற்றில் இருந்து விடுதலை தரும்.
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment