ஜாதகத்தில் புதன் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் அடைந்தால் , கல்வி தடை , ஞாபக சக்தி குறைவு , நரம்பு தளர்ச்சி , வலிப்பு நோய்
 
ஜாதகத்தில் புதன் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் அடைந்தால் , கல்வி தடை , ஞாபக சக்தி குறைவு , நரம்பு தளர்ச்சி , வலிப்பு நோய்புதன் அஷ்டமாதிபதி மற்றும் மாரகாதிபதி
இங்கே இணைக்க பட்டுள்ள ஜாதகத்தில் புதன் 8 மற்றும் 11 ம் அதிபதி . விருச்சிக லக்கினத்திற்கு புதன் பகவான் அஷ்டமாதிபதி மற்றும் மாரகாதிபதி . அவர் 6ல் மறைந்ததாலும் , புதன் அஸ்தங் கம் மற்றும் வக்கிரம் அடைந்துள் ளதால் மிகவும் தோஷ ஜாதகமாக அமைந்து விட்டது.
கல்வியில் ஆர்வயின்மை
ஜாதகத்திற்கு இப்பொழுது வயது 14.. இவருக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு . அதனால் கல்வியில் கவனம் செலுத்த முடிய வில்லை. இதற்போது 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் படிக்கும் பள்ளி யில் இவருக்கு கல்வி வராது என்று ம் வேறு பள்ளியில் சேர்த்து விட்டு விடுங்கள் என்று நிர்பந்திக்கி றார்கள்.
சூரியன் பகை வீட்டில் தந்தை இல்லை
தந்தையை குறிக்கும் கிரகமான சூரியன் விருச்சிக லக்கினத்திற்கு 10ம் அதிபதி . அவர் 7ம் வீட்டில் ரிஷபத்தில் அதாவது பகை வீட்டில் அமர்ந்ததால் , சூரியன் அம்சத்தில் உச்சம் பெற்றாலும் இவருடைய தந்தையை 5 வருடங்களுக்கு முன் இழந்தார்.
சந்திரன் 8ம் வீட்டில் தாய் இல்லை
விருச்சிக லக்கினத்திற்கு சந்திரன் 9ம் அதிபதி. அதாவது பாதகாதிபதி. அவர் 8ல் மறைந்தும் , பகை கிரகமான ராகு சாரம் வாங்கியுள் ளார். அதனால் இவர் அம்மாவை யும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இழந்தார், அதாவது இவருக்கு தாய் தந்தை ஆதரவை முழுமையாக இழந்தார். மேலும் புதன் அஸ்தங்கம் அடைந்ததால் இவருக்கு தாய் மாமனின் ஆதரவு இல்லை. இவர் தற்சமயம் சித்தப்பாவால் வளர்க்கப்பட்டு வருகிறார்.
புதனின் காரகத்துவம்
ஜாதகத்தில் கல்வி, கலை போன்ற வற்றுக்கு காரணமானவன். புதன் அமைப்பு தோஷமாக இருந்தால் படிப்பு தடை படுதல், பாட்டு இசைல், பாட்டு இசை, ஓவியம் போன்ற கலை ஆர்வம் தடை படுதல், அடிக்கடி உடல் சம்மந்தப்பட்ட குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல், புதன் தோஷத்தால் ஏற்படும்.
புதன் வக்கிர அஸ்தங்கம் ஒருவரை மிக சிறந்த அறிவாளியாக்கும்
புதன் அஸ்தங்கம் அடைந்தால் நரம்புத்தளர்ச்சியை தருவார். மாமன் வர்க்கங்களுக்கு பாதிப் பை உண்டாக்குவார். புதன்சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போதுபடபட ப்புடன் இருத்தல் எவ்வளவு மன அழுத்ததினையும் தாங்குதல் தான்நினைப்ப தனை வெளியில் கூறாதிருத்தல் தன்னை ப்பற்றியே அதிகம் யோசித்தல் , பேசுதல். நரம்பு பலவீனமாக இருத்தல் பித்தப் பையினால் வயிற்றில் நோய் உண்டாதல் மற்றும் பல.,புதன் அஸ்தங்கம் ஒருவரை கல்வியில் சிறந்தவர் ஆக்கும். புதன் வக்கிர அஸ்தங்கம் ஒருவரை மிக சிறந்த அறிவாளியாக்கும். எனினும் சந்திரனின் நிலை கொண்டே அவர்களின் புத்திசாலிதனத்தை (நல்ல வழி/தீய வழி ) செயல்படுத்தும் என்ற நிலை அமையும். ஏனெனில் புதனின் இயக்கம் சந்திரனின் நிலை பொருத்தது.
இங்கே சந்திர நிலை என்பது
1. சந்திரனுடன் சேர்க்கை பெற்ற கிரகம்,
2. சந்திரனை பார்க்கும் கிரகம்
3. சந்திரன் அமர்ந்த நட்சத்திர அதிபதி....
4. சந்திரன் உச்சம் மற்றும் நீசம்
5. சந்திரன் இருக்கும் ராசி
6.சந்திரனுடன் குரு சேர்க்கை இதில் சிறப்பு மிக்கது
ஆனால் இவர் ஜாதகத்தில் சந்திரன் 8ம் வீட்டில் அமர்ந்து ராகு (பகை) சாரம் பெற்று , பகை வீடான மிதுனத்தில் அமர்ந்ததால் இவர் ஜாதகத்தில் சந்திரன் வலுவிழந்து காணப்படுகிறார்.
புதன் வக்கிரம்
புதன் வக்கிரம் பெற்றால் திடீர் யோகம் தரும் .கல்வியில் மந்த நிலை எற்படும். தீய எண்ணம் உருவகும். ஞாபகத்திரன் குறை யும்.. புதன் வக்கிரம் அடைந்தால் புத்தி, அறிவு ,நிர்வாக திறன் தொடர்பு , பேச்சு திறமை போன்ற காரகதுவங்கள் தமது வலுவை இழக்கும்
ஜாதகத்தில் வலுவிழந்த புதனை வலுவேற்ற செய்ய கூடிய பரிகாரங்கள்
1. புதன் ஸ்தலமான திருவெண் காடு சென்று புதனை வழிபடலாம் 17 நெய் தீபம் ஏற்றி
2. கல்வியில் மேன்மை அடைய மரகத பச்சை அணிய வேண்டும்
3.மாணவர்கள் கல்வியில் மேம்பட பரிஹாரம் ஹயக்ரீவர் சுலோகம் தினமும் சொல்ல வேண்டும்
4புதன் கிரகத்தின் அதிதேவதை ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆவார். எனவே ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் மகாவிஷ்ணு வழிபாடு மேற் கொள் வது மிகுந்த நன்மை யை அளிக்கும்.
5.உணவில் புதன் கிரகத்திற்கு உரிய தானியமான பச்சைப் பயிறு வாரம் ஒருமுறை சேர்த்துகொள்வது மிகவும் நன்று.
6.திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளரை என்னும் திருத்தலம் உள்ளது. இங்கு அருள் பாலிக்கும் இறைவனின் திருநாமம் செந்தாமரைக் கண்ணன் ( புண்டரீகாட்ச பெருமாள்), இறைவியார் செங்கமலவல்லி தாயார் ஆவர். இத்தலம் சுமார் 11,800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறுகிறார்கள்.
ஸ்ரீ ராமர் அவதரித்ததற்கு ஏழு தலைமுறைக்கு முன்னர் சிபி சக்ரவர்த்தி (புறாவுக்காக தன் தொடையை அறுத்து அளித்த வள்ளல் என்று இவரை கூறுவர்) என்னும் அரசன் இருந்ததாக புராண நூல்கள் கூறுகின்றன. இத்தளத்தில் சிபி சக்கரவர்த்தி, பூமா தேவி மற்றும் மார்க்கண்டேய மகரிஷி இறைவனின் பாதத்திற்கு அருகில் அமர்ந்து கொண்டு இருக்கும் சிற்பங்கள் உள்ளன.
நீங்கள் உத்தராயண காலத்தில் பிறந்தவராக இருந்தால் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) உங்களது ஜாதகத்தில் புதன் எந்த நட்சத்திர சாரம் பெற்று உள்ளரோ அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் நாளில் இத்திருத்தலத்திற்கு சென்று, பிரார்த்தனை பலிபீடத் தை 28 முறை சுற்றி வந்த பின்னர், உத்தராயண வாசல் வழியாக சென்று இத்தல இறைவனை வழிபாடு செய்வது அதிக நன்மையை தரும். குறைந்தது இரண்டு முறையாவது நீங்கள் செல்லவேண்டும்.
இதுவே நீங்கள் தட்சிணாயன புண்ய காலத்தில் பிறந்தவர் என்றால் (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) உங்களது ஜாதகத்தில் புதன் எந்த நட்சத்திர சாரம் பெற்று உள்ளரோ அந்த நட்சத்திர நாளன்று, பிரார்த்தனை பலி பீடம் 28 முறை வலம் வந்து, தட்சிணாயான வாசல் வழியாக சென்று இறைவனை பிரார்த்தனை மேற்கொள்வது மிகுந்த நன்மையை தரும்
7.50 ஏலக்காய்களை கொண்டு ஒரு மாலை தொடுத்து அதனை குழந்தை கையால் ஹயக்ரீவரு க்கு மாலை அணிவிக்க கூறுங் கள். இதனை புதன் கிழமை அன்று செய்து வாருங்கள். குழந்தைகளு க்கு ஞாபக சக்தி அதிகரித்து படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நம்பிக்கையோடு இதனை செய்து வாருங்கள். “
ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”
பொருள்:
ஞானமும் ஆனந்த மயமமானவ ரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்.
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment