பேரி யோகம்
ஜாதகத்தில் பேரி யோகம் என்றால் என்ன?
'பேரி' என்ற சொல் பெரிய முரசு அல்லது பறை என்பதைக் குறிக்கிறது. முரசின் ஒலி எப்படி தூரத்திற்கு கேட்குமோ, அதேபோல இந்த யோகத்தில் பிறந்தவர்களின் புகழும், பெயரும் உலகம் முழுவதும் பரவும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
பேரி யோகம் அமைய கிரஹ நிலைகள்
லக்னம் , வியாழன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் இருந்து ஒன்பதாம் வீடு வலுவாக இருக்கும் போது அல்லது சுக்கிரன் புதன் முதல், இரண்டாம், ஏழாவது அல்லது பன்னிரண்டாம் வீட்டில் இருந்து பத்தாம் வீட்டில் வலுவாக இருக்கும்போது பேரி யோகம் உருவாகிறது
பேரி யோகத்தால் ஏற்படும் யோக பலன்கள்
1. இந்த யோகம் ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் .
2.ஜாதகருக்கு நீண்ட ஆயுட்காலத்தை கொடுக்கும்.
3.இந்த யோகம் ஒருவரை அதிகாரத்திலும் அரசியலிலும் சிறந்து விளங்க வைக்கிறது.
4.ஜாதகர் பல்வேறு வழிகளில் இருந்து வருமானம் வரும்.
5.ஜாதகர் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுவார்.
பேரி யோகத்தால் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்
நடிகை வித்யா பாலன் பேரி யோகத்தில் பிறந்தவர். இவர் மீன லக்கினத்தில் கன்னி ராசியில் பிறந்தவர். இவர் ஜாதகத்தில் குரு ,சுக்கிரன் மற்றும் சூரியன் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் அமைந்ததால் பேரி யோகம் அமைந்தது. பேரி யோகத்தால் இவர் புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார் மற்றும் பெயர் , புகழ் , செல்வ சேர்க்கை ஏற்பட்டது. இவர் ஜாதகத்தில் லக்கினாதிபதியான குரு 4ம் இடத்தில் அமர்ந்து 10 இடத்தை பார்ப்பதால் இவருக்கு கலைத்துறையில் பெயரும் , புகழ் , செல்வம் , செல்வாக்கு ஏற்பட்டது.
இணைக்கப்பட்டுள்ள ஜாதகம்
இங்கே இணைக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் சுக்கிரன் 2ம் வீட்டிலும், குருவுக்கு கேந்திரத்தில் சுக்கிரனும் ,12ல் புதன் உச்சமும் அடைந்தும் 10ம் அதிபதியான சந்திரன் 10 ல் ஆட்சி பெற்றதாலும் பேரி யோகம் அமையப்பெற்றுள்ள அமைப்பை தருகிறது.
இந்த யோகத்தின் முழுப் பலன்களையும் பெற, யோகத்தை உருவாக்கும் கிரகங்கள் (குறிப்பாக குரு, சுக்கிரன்) திசா புத்தி காலங்களில் நல்ல நிலையில் இருக்க வேண்டும். மேலும், இந்த கிரகங்கள் 6, 8, 12 ஆகிய மறைவு வீடுகளின் அதிபதிகளாக இருக்கக்கூடாது அல்லது நீசம் (Debilitated) அடையக்கூடாது.


No comments:
Post a Comment