Search This Blog

Showing posts with label அரிசி தானம். Show all posts
Showing posts with label அரிசி தானம். Show all posts

Tuesday, July 16, 2024

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்,

 

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்

==================================


பல்வேறு பாபங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில் திருந்தும் போது, அவன் முன்னர் செய்த பாபங்களை அவற்றின் தன்மைக்கேற்ப மன்னித்து அருள் செய்ய அவன் ஊழ்வினையை மாற்ற தானங்கள் உதவுகின்றன. எல்லாராலும் எல்லா தானத்தையும் செய்ய இயலாது.

அவரவர் சக்திக்கு ஏற்ப தான் தானங்களை செய்ய இயலும். வகைப்படுத்தி பலன்களை சொல்லும்போது, தானத்தின் மீது ஒரு ஆர்வமும் பிடிப்பும் வரும். ஆரம்பத்தில் பலன் கருதி செய்யும் தானம், நாளடைவில் பலன் கருதாமல் செய்யக்கூடிய உன்னத நிலைக்கு சென்றுவிடும்.

ஒருவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உதவியை செய்து அவர்கள் கஷ்டம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

பொதுவாக தானங்களில் பல வகை உண்டு. அதே போல நாம் செய்யும் ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு. ஆனால் பலனை எதிர்பார்த்து தானம் செய்வதால் எந்த பலனும் இல்லை.

தானத்தின் பலன்கள்

**********

அரிசி தானம்: பாவங்கள் தொலையும். பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும்.


அன்ன தானம்: தரித்திரமும் கடனும் தீரும். அன்னதானம். வறுமையும், கடன்களும் நீங்கும். சகல பாக்கியங்களும் உண்டாகும். பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வறுமையும், கடனும் நீங்கும்

ஆடை தானம்: ஆயுள் விருத்தியாகும். மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.

எண்ணெய் தானம்: நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.

கம்பளி (போர்வை) தானம்: துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி

காய்கறிகள் தானம்: பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.

காலணி தானம் : பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.

குடை தானம்: தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

குல தானம் (வெல்லம்): குல அபிவிருத்தி ; துக்கநிவர்த்தி

கோ (மாடு) தானம்: ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றை போக்கும். பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.

சந்தனக்கட்டை தானம்: புகழ்

சொர்ண தானம் (தங்கம்): கோடிபுண்ணியம் உண்டாகும். குடும்ப தோஷம் நிவர்த்தி அடையும். தோஷம் விலகும்

தண்ணீர் தானம்: மனசாந்தி ஏற்படும்

தயிர் சாதம் பால் சாதம்: ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் நிலைக்கும்.

தயிர் தானம்: இந்திரிய விருத்தியாகும்

திலதானம் (எள்ளு): பாப விமோசனம்

தீப தானம்: கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.

தேங்காய் தானம்: நினைத்த காரியம் வெற்றி அடையும். பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.

தேன் தானம்: புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம்தரும் இனியகுரல்

நெய் தானம்: நோய்களை நிவர்த்தி செய்யும். வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்

நெல்லிக்கனி தானம்: ஞானம் உண்டாகும்

பழ தானம்: புத்தி, சித்தி கிட்டும். புத்ரபவுத்ர அபிவிருத்தி. பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.

பாய் தானம்: பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும் . அமைதியான மரணம் ஏற்படும்

பால் தானம்: துக்கம் நீக்கும். சௌபாக்கியம்.

பூமி தானம்: பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும். இகபரசுகங்கள்



பொன் மாங்கல்யம் தானம்: மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும்.

மஞ்சள் தானம்: மங்களம் உண்டாகும்

மாங்கல்ய சரடு தானம்: காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.

வஸ்த்ர தானம் (துணி): சகல ரோக நிவர்த்தி. ஆயுளை விருத்தி செய்யும்.

விதை தானம்: வம்ச விருத்தியை தரும்

வெள்ளி தானம்: மனக்கவலை நீங்கும். பித்ருகள் ஆசிகிடைக்கும்