Search This Blog

Showing posts with label அஷ்டம சனி. Show all posts
Showing posts with label அஷ்டம சனி. Show all posts

Monday, April 10, 2023

அஷ்டம சனி மற்றும் குரு 10ல் இருப்பதால் அவதிப்படும் கடக ராசி நேயர்கள்

 அஷ்டம சனி மற்றும் குரு 10ல் இருப்பதால் அவதிப்படும் கடக ராசி நேயர்கள்

மிதுன ராசிக்கு இனி விடுதலை

கடந்த இரண்டரை வருடங்களாக அஷ்டம சனி மற்றும் கடந்த 1 வருடமாக குரு 10 ல் கோச்சா ரத்தில் அமர்ந்ததால் , பல்வேறு சோதனைக ளை சந்தித்த மிதுன ராசி நேயர்களு க்கு இனிமேல் விடிவு காலம் . 10ல் குரு இருந்த பொழுது வேலை போன மிதுன ராசி நேயர்களுக்கு இனிமேல் நல்ல நேரம் . நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த மிதுன ராசி நேயர்களுக்கு இனிமேல் நல்ல நேரம் .

கடக ராசி - கோச்சாரத்தில் அஷ்டம் சனி மற்றும் குரு 10ல்

ஆனால் , கடக ராசி நேயர்களுக்கு இந்த கால கட்டம் மிகவும் சோதனை யான கட்டம். ஏனென்றால் , கோச்சா ரத்தில் அஷ்டம் சனி மற்றும் குரு 10ல் இருப்பதால் மிகவும் சோதனையா ன கால கட்டத்தை கடந்து வரவேண்டும்

கடக ராசிக்கு கோச்சாரத்தில் குரு 10ல்

ஈசனார் ஒரு பத்திலே தலையோ ட்டிலே யிரந்துண்டதும்

சர்வேஸ்வரனுக்கு கோச்சாரத்தில் குரு 10 ல் வந்தபொழுது அவர் தலையோட் டில் பிச்சை எடுத்து வாழ நேர்ந்தது நேர்பாதி நாம் உணர வேண்டும் .

ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்

எந்த காரியத்திலும் யாரை நம்பியும் பணம் கடன் வாங்கி கொடுக்க வேண்டாம். முக்கியமா க ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அதிகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

விபத்துகள் நேரலாம் ஜாக்கிரதை

வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை. உங்களுடைய உடல் ஆரோக்கி யத்தில் அக்கறை காட்டுங்கள். வயிறு பிரச்சினைகள் வரலாம். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

அஷ்டம சனி பாதிப்புகள்

அஷ்டம சனி நடக்கிறதென்றால் அந்த குடும்பத்தில் சிக்கல்களும், பிரச்சனை களும் மாறி மாறி வந்து கொண்டுதான் இருக்கும். தேவை இல்லாமலே சண் டைகள் உருவா கும்.

உங்கள் உறவினர்கள் மூலமாக பல குழப்பங்கள் ஏற்படும்.

அதுமட்டுமில்லாமல் வேலை செய்யும் இடங்களில் பிரச்சனை, வேலை இடமாற்றம்,சிலருக்கு  திடீரென வேலை பறிபோகுதல் இவ்வாறான நிலைமையும் உண்டாகும்.

சனி பிரீதி செய்து வந்தால் தீய பலன்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும்.

அரசு தண்டனை

சனி பாதிப்பால் ஒரு ஜாதகருக்கு ஆணவம் உச்சமடையும் இதனால் நல்லவன் கெட்டவனாக மாற்றும் அறிவு தலைகீழாக மாறும் .மூலை மங்கி மது, மாது, சூது, கொலை, கொள்ளை, என ஒருவர் வாழ்க்கை யே தலைகீழாக மாறும் பெரும்பா லும் சனி ஆதிக்கம் உள்ளவர்கள் அரசு தண்டனைக்கு ஆளாக வேண் டியது கட்டாயம் நேரிடும். போலீஸ் கோர்ட் வழக்கு எனக்கு பல பிரச் னைகளை சந்திக்க நேரிடும் என்று ஜோதிடம் கூறுகின்றது.

திருமண வாழ்க்கை

அஷ்டமத்து சனி இரண்டரை வருடங் கள் தான் இருக்கும் என்பதனால் கணவன் மனைவியிடையே வரும் பிரச்சனைகளை சற்றுப் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி எவரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து சென்றால் அவர்களின் திருமண வாழ்க்கை நலமாக இருக்கும். ஆனால் ஆண், பெண் இருவருமே விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தார்கள் என்றால் நிச்சயம் அவர்களின் திருமணம் விவாகரத்தில் தான் முடியும்.

கடக ராசிக்காரர்கள் அஷ்டம சனியில் என்ன செய்யலாம் ? என்ன செய்ய கூடாது ?

1.புதிய தொழில் ஆரம்பிக்க கூடாது.

2.செய்கின்ற தொழிலை பெரிது படுத்த கூடாது.

3.அதிக கொள்முதல் செய்தலும் பெரிய order எடுத்தலும் கூடாது.

4.தகுதிக்கு மீறி கடன் வாங்க கூடாது.

5.இருக்கும் வேலையை விடக்கூடாது.

6.வாழ்கை துணையின் தாயார் உடல்நலம் பாதிக்க வாய்ப்பு இருப்பதால் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது.

7.இந்த அட்டம சனி காலத்தில் தந்தைக்கு ஏதோ ஒரு வகையில் பிரச்னை /மருத்துவ செலவு /கண்டம் போன்ற கெடு பலன் நடக்க இருப்பதால் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

8.வாழ்கை துணையின் வீடு மனை போன்ற அசையா சொத்துக்களில் பிரச்சனை வரும்.

9.வாழ்கை துணையின் வாகனம் செலவு வைக்கும். விபத்தில் சிக்கும்.

10.வருமான தடை

11.குடும்பத்தில் குழப்பம் சச்சரவு

12.தெரிந்த தொழிலும் கைகொடுக்காமல் போவது

13.கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நிலை

குரு பகவான் 10ல் இருப்பதால் என்ன மாதிரியான கெடு பலன்கள் ஏற்படும் ?

1.இருக்கும் வேலையை விடக்கூடாது.

2.மேலதிகாரிகளை அனுசரித்து போகவேண்டும்

3.பதவி உயர்வு தடை ஏற்படும்

4.விருப்பமற்ற இடங்களுக்கு மாறுதல்

5.வேலை இழத்தல்

விதிவிலக்கு

ஒருவருடைய பிறந்த கால ஜாதகத்தில் உள்ள கிரக நிலைக்கு ஏற்ப /நடப்பு தசாவுக்கு ஏற்ப மேல சொல்லபட்ட கெடுபலன் கூடுதலகாவோ குறைவாகவோ பலன்கள் நடக்கும்



அஷ்டம சனி பரிகாரங்கள் :

1 தினந்தோறும் காலையில் குளித்துவிட்டு எள் கலந்த உணவை காகத்திற்கு வைக்க வேண்டும்.

2.வாரந்தோறும் சனிக்கிழமை யன்று சனிபகவானுக்கு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

3.மேலும், வன்னி மர இலைகளை மாலையாக தொடுத்து சிவபெரு மானுக்கு சாற்றி வணங்க வேண்டும்.

4.ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையிலும், தேய்பிறை அஷ;டமி நாட்களிலும் கால பைரவரை வணங்கி வந்தால் சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

5.பிரதோஷ காலத்தில் சிவபெரு மானுக்கு வில்வ இலையை வைத்து வணங்க வேண்டும்.

6.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். வழிபாடு செய்தால் கெடு பலன்கள் குறையும்.

7.ஆஞ்சநேயர் மேலும், வீட்டில் தன்வந்திரியின் படத்தை வைத்து தினந்தோறும் தீபம் ஏற்றி வழிபடவும்.

இதனால், சனியின் முக்கிய பாதிப்புகளான விபத்து, நோய் ஏற்படாமல் தன்வந்திரி காப்பார்..

ஜீவ சமாதியை வழிபாடு செய்வதால் என்ன நன்மை ?

அஷ்டம சனி , ஏழரை சனி பாதிப்புகளிடம் இருந்து விடுபட , செய்வினை தோஷங்களில் இருந்து விடுபட ஜீவ சமாதி அடை ந்த இடத்தில் முக்கியமாக தியான ம் செய்தால் முன்னர் பல ஆன்மீக வாதிகளுக்கு ஜீவசமாதியான சித்தர்கள் நேரில் காட்சி அளித்து ள்ளனர் அது போல் காட்சி அளிக்க வாய்ப்புள்ளது.

கோச்சாரத்தில் 10ல் உள்ள குருவுக்கு பரிஹாரம்

1.கோச்சாரத்தில் குரு 10ல் இருந்து வலிமையிழந்திருக்கும் நிலையில், வியாழக்கிழமைகளில் அவருக்கு உரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் லட்டுகளை வாங்கி, தட்சிணா மூர்த்திக்கு நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதும், மங்கலகரமான மஞ்சள் நிறப் பொருள்களைப் பிறருக்கு தானம் கொடுப்பதும் சிறந்த பரிகாரங்களாகும்.

2.குருவுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி , நெய்விளக்கு அல்லது அர்ச்சனை அல்லது அபிஷேகம் செய்து வருவது நலம் .

3. மஞ்சள் துண்டு , மஞ்சள் சட்டை , வேஷ்டி, கைக்குட்டை உபயோகிக் கலாம்

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனை களும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

Friday, September 23, 2022

மிதுன ராசி நேயர்களே , ஜனவரி 2023 முதல் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கிறது

 மிதுன ராசி நேயர்களே , ஜனவரி 2023 முதல் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கிறது

நான் சமீபத்தில் பார்த்த ஜாதகம் இது. ஜாதகருக்கு வயது 28. மிதுன ராசி , 10ல் குரு - அஷ்டம சனி மற்றும் 10ல் குரு உள்ளதால் , வேலையை இழந்து உள்ளார்.

ஜாமக்கோள் ப்ரசன்னம்

ஜாமக்கோள் ப்ரசன்னபடி , 10ல் சூரியன் வேலை சம்பந்தமான கேள்வி அரசு வேலை கிடைக்குமா அல்லது எப்போது வேலை கிடைக்கும்? இங்கே உதயத்தில் சந்திரன் உள்ளது . சந்திரன் உதயத்திற்கு , லாபாதிபதி. ஜாதகருக்கு சகல லாபங்களும் வரும்.7ல் குரு சாதுக்களின் சாபம் திருமண தாமதம் ஆகும் .பரிஹாரம் சித்தர் ஜீவா சமாதி பௌர்ணமி தோறும் வழிபாடு செய்தால் , தோஷம் விலகும்.

அஷ்டம சனி

17 ஜனவரி 2023 அன்று அஷ்டம சனி மிதுன ராசிக்கு விலகுகிறது அதனால் ஜனவரி 2023 மேல் யோகமான பலன்கள் நடைபெறும்.

ஜாதகத்தில் உள்ள யோகங்கள்

2ம் அதிபதி சனி 2ல் ஆட்சி பெறுவதால் , தேனு யோகம். நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்ந்த கல்வி கற்றவர்களாக

வும்,சுகவாழ்வு கிட்டும்

10ல் சுக்கிரன் ஆட்சி மாளவ்ய யோகம்

மாளவியா யோகம் மகத்தானது. ஜாதகருக்கு யோகமான வாழ்வு , சொந்த வீடு , வாகன யோகம் அமையப்பெறுகிறது. சொந்த தொழில் அல்லது அரசு வேலை அல்லது தனியார் துறையில் வேலை கண்டிப்பாக அமையும்.

10ம் அதிபதி

10ம் அதிபதி சுக்கிரன் 10 ல் ஆட்சி பெற்றுஇருப்பதாலும் , 10 புதன் , ராகு , சுக்கிரன் சேர்க்கை இருப்பதாலும் , கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும்.

வசுமதி யோகம்

ஜாதகருக்கு வசுமதி யோகம் ,அமலா யோகம் ,பர்வத யோகம், மாத்ரு மூல தன யோகம் போன்ற யோகங்கள் இருப்பதால் பிரகாச மான எதிர்காலம் சிறப்பாக இருக்கும் . ஜனவரி 2023 க்கு மேல் கண்டிப்பாக புதிய வேலை கிடைக்கும் என்று ஆருடம் கூறியுள்ளேன்.

அஷ்டம சனி மற்றும் குரு 10 ல்

அஷ்டம சனி மற்றும் குரு 10 ல் இருப்பதால் , ஜாதகரின் வேலை இழந்தார். மிகவும் கவலையாக இருந்தார். மனக்கலக்கத்தில் இருந்தார். கண்டிப்பாக உங்கள் கவலைகள் நீங்கும். எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் கவலை பட வேண்டாம் என்று பலன் கூறப்பட்டது.

மிதுன ராசி நேயர்களே கவலை படவேண்டாம் .

உங்கள் கவலைகள் , பிரச்சனை கள் எல்லாம் வெகு விரைவில் தீர போகிறது. ஜனவரி 2023 முதல் உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்து இருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகள் , புதிய தொழில் வாய்ப்புகள் , வருமானம் பெருகி கடன் தீரும் நிலை , திருமணம் , குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் , குடும்பத்தில் புது வரவு எல்லாம் காத்து இருக்கிறது.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க , ஜாமக்கோள் பிரசன்னம் மூலமாக உங்கள் அணைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண.ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of text that says 'கேது சனி சந்திரன் செவ்வாய் லக்கினம் ராசி அஷ்டமசனியால் வேலை இழந்தஜாதகர் 21 November 1994 குருசூரியன் ரியன் ராகு புதன் சுக்கிரன்'

Saturday, April 9, 2022

ஏழரை சனி ,அஷ்டம சனி ,அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர் செல்ல வேண்டிய ...


ஏழரை சனி , அஷ்டம சனி , அர்த்தாஷ்டம சனி ஆகியவ ற்றால் பாதிக்கப்பட்டவரை நீங்கள் ?

சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர்

பெரிச்சிகோவில் நவபாஷாண பைரவர்

சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில்என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனே ஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி. இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது.

பவுர்ணமி தோறும் பூஜை

வாசனை மலர்கள் நிறைந்த பகுதியில் இந்த இடம் அமைந்த காரணத்தால், இறைவனுக்கு இப்பெயர் வந்தது.இது பைரவர் வழிபாட்டுத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். அவருக்கு அருகில் மூன்று பேர் வணங்கிய நிலையில் உள்ளனர். அதோடு பைரவரின் நாய் வாகனத்தைப் பிடித்தபடி, பாலதேவர் அருள்கிறார். பவுர்ணமி தோறும் மாலை வேளையில் இந்த பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.காசி பைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.



வடைமாலை

இந்த சிலை நவபாஷாணத்தால் ஆனது என்றும், இதனை போகர் சித்தர் செய்ததாகவும் சொல்கிறார்கள். மேலும் பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை செய்வதற்கு முன்பாகவே, இந்த பைரவர் சிலையை போகர் செய்ததாகவும் செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது.இந்த நவபாஷாண பைரவரின் மீது அதிர்வுகள் அதிகம் என்பதால், இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள், படைக்கப்படும் வடைமாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் எதுவும் பக்தர்களுக்கு வழங்கப்படு வதில்லை. சன்னிதியின் கூரை மீது போடப்படும் வடைகளை, பறவைகள் கூட சாப்பிடுவதில் லை. பைரவருக்கு அபிஷேகிக்கப் படும் தீர்த்தம் கூட, பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப் பட்டுள்ளது.



இரண்டு முகங்கள்

இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு என்கிறார்கள். பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தால், வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம். இவரை ‘ஆண்டபிள்ளை நாயனார்’ என்றும் அழைக்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்கிறார்கள்.பார்வை குறைபாடு நீக்கும் தலம்.



பெரிச்சி நவபாஷாண பைரவர் கோயிலுக்கு செல்வது எப்படி ?

மதுரையில் இருந்து 60 கி.மீ., தூரத்திலுள்ள, திருப்புத்தூர் சென்று அங்கிருந்து 8 கி.மீ., தூரத்திலுள்ள கண்டரமாணிக்கம் செல்ல வேண்டும். இவ்வூரிலிருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க

ஜாமக்கோள் ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of flower