Search This Blog

Showing posts with label கால சர்ப்ப தோஷம். Show all posts
Showing posts with label கால சர்ப்ப தோஷம். Show all posts

Sunday, May 16, 2021

கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் திருச்சி உச்சி பிள்ளையார் நாகநாத சாமீ- சசபிந்து முனிவர் ஆலயம்

 

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் திருச்சி உச்சி பிள்ளையார் நாகநாத சாமீ- சசபிந்து முனிவர் ஆலயம்

கால சர்ப்ப தோஷம் விலகும்

சர்ப்ப தோஷம் விலகவும் சகல தோஷங்களும் விலகவும் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேயே கோயில் கொண்டி ருக்கும் நாகநாத சுவாமியை வணங்கி வழிபட்டால், எல்லா நலமும் வளமும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

சார மாமுனிவர்

சார மாமுனிவர், சிவனாரை வேண்டி தவமிருந்து வரம் பெற்ற திருத்தலம் எனும் சக்தியையும் சாந்நித்தியத்தையும் கொண்டது நாகநாத சுவாமி திருக்கோயில். நாக கன்னிகள் வழிபட்டு அருள்பெற்ற திருத்தலம் என்பதால் இங்கே உள்ள சிவனாருக்கு, நாகநாத சுவாமி எனத் திருநாமம் அமைந்தது என்று விவரிக்கிறது ஸ்தல புராணம்.

திருச்சி நந்திகோயில் தெரு.

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் இருக்கிறது நந்திகோயில் தெரு. இங்கே நந்திகோயில் தெருவில் அமைந்துள்ளது நாகநாத சுவாமி திருக்கோயில். சிறிய கோயில்தான் என்றாலும் கீர்த்தி மிக்க ஆலயம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.



ஸ்ரீநாகநாத சுவாமி

அற்புதமான ஆலயம். இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் ஸ்ரீநாகநாத சுவாமி. கிழக்கு பார்த்தபடி தரிசனம் தருகிறார். அதேபோல் அம்பாளின் திருநாமம் ஆனந்தவல்லி அம்பாள். தெற்கு நோக்கிய சந்நிதியில் குடிகொண்டிருக்கிறாள்.

வழிவிட்ட நந்தி

சார மாமுனிவர் இந்தத் தலத்து இறைவனை வழிபட வந்த போது, அம்பாள் சந்நிதியில் இருக்கும் நந்தி, வழிவிட்டதாக ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.

சார மாமுனிவருக்கு காட்சி தந்த ஸ்ரீநாகநாத சுவாமி

சார மாமுனிவர், தள்ளாமையால், வயது முதிர்ந்த நிலையுடன் உச்சிப்பிள்ளையார் கோயிலில் குடிகொண்டிருக்கும் தாயுமானவ சுவாமியை தரிசிக்க வந்தார். அப்போது, படியேற முடியாமல் தவித்துப் போனார். அதை அறிந்த சிவனார், மலையில் இருந்து இறங்கி வந்து, நாகநாதராக திருக்காட்சி தந்து அருளினார்.



திருக்காளஹஸ்திக்கு இணையான திருத்தலம்

இங்கே உள்ள நாகநாத சுவாமி, காளஹஸ்தீஸ்வரருக்கு இணையானவர். இந்தத் திருத்தலம் திருக்காளஹஸ்திக்கு இணையான திருத்தலம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சர்ப்ப தோஷங்கள் விலக

ராகு - கேது தோஷம் உள்ளவர்கள், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், திருச்சி நந்திகோயில் தெருவில் அமைந்துள்ள நாகநாத சுவாமியை தரிசித்து பிரார்த்தனை செய்துகொண்டால், சர்ப்பம் முதலான தோஷங்கள் விலகிவிடும். கால சர்ப்ப தோஷமும் ராகு கேது தோஷமும் விலகிவிடும் என்பதும் ஐதீகம்.

நாகநாத சுவாமிக்கு வில்வம்

ஆலயத்தின் ஸ்தல விருட்சம் வில்வ மரம். ஆலயத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தமும் சிறப்பு வாய்ந்தது. தலம், தீர்த்தம், மூர்த்தம் என விசேஷங்களைக் கொண்ட நாகநாத சுவாமி திருத்தலத்துக்கு வருவதே புண்ணியம். நாகநாத சுவாமிக்கு வில்வம் சார்த்தி வேண்டிக்கொண்டால், சகல தோஷங்களும் சர்ப்ப பாவங்களும் விலகும். சந்தோஷம் பெருகும்.



சசபிந்து முனிவர்

சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டபோது, அவர் மேனியில் தாங்கமுடியாத உஷ்ணம் பரவிற்று. அவர் உடலில் இருந்த நாகங்கள் எல்லாம் சிவனின் உடலை விட்டு இறங்கிவிட்டது. ஆனால் அவர் உச்சந் தலை முடியில் இருந்த சசபிந்து நாகம் மட்டும் அந்த உஷ்ணத்தை தாங்கி சிவ பஞ்சாட்சர மந்திரத்தில் லைத்து இருந்தது. சசபிந்து நாகத்தின் பக்தியை மெச்சி சிவபெருமான் அந்த நாகத்திற்கு சர்ப்பதோஷம் விலக கூடிய ஆற்றலை அளித்தார். சசபிந்து நாகம் மனித உருவாக வடிவெடுத்து ஒரு முனிவராக தூணில் அமர்ந்து அருளாட்சி செய்யும் கோயிலே திருச்சி ஸ்ரீநாகநாத சுவாமி கோயிலாகும்.

கையால் அரைத்த மஞ்சள்

சசபிந்து முனிவருக்கு கையால் அரைத்த மஞ்சளை முனிவர் சிலைக்கு சாற்றி வழிபட்டால் , கால சர்ப்பதோஷம் , ராகு-கேது தோஷத்தால் நீண்ட காலமாக தடை பெற்றும் இருக்கும் தோஷம் விலகி விரைவில் நடந்தேறிவிடும்.

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of 1 person


திருப்பாம்புரம்-வாரத்தில் மூன்று நாட்கள் பாம்புகள் வந்து வழிபாடும் கோயில்

 

திருப்பாம்புரம்-வாரத்தில் மூன்று நாட்கள் பாம்புகள் வந்து வழிபாடும் கோயில்

கடக லக்கினத்தில் பிறந்த ஜாதகர்களுக்கு புலிப்பாணி சொல்லும் லக்கின பலன்

கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு

கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி

வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து

வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே

சீரப்பா திரிகோணம் மறிந்துநிற்க

சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு

கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா

கொற்றவனே நிலைசமயம் கூற்ந்துபாரே

பாடல் விளக்கம்

கடக லக்கினத்தில் ஜனித்த ஜாதகருக்கு, வெள்ளி என விளம்பும் சுக்கிராச்சாரியார்` மிகுதியான தீயபலன்களைத்தருவார். எவ்வாறெனில் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற இராவணன் மகனாகிய இந்திரசித்தும் இக்சுக்ராசாரியினால் வகைதொகையாய் மாண்டதையும் அறிவாயன்றோ? ஆயினும் இச்சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் சிவபரம்பொருளின் பேரருளினால் பெருந்தனம் வாய்க்கும். மற்றும் ரதம் முதலிய வாகன யோகமும் உண்டு. ஏனைய இடங்களில் இருப்பின் ஆகாது. இப்படிப்பட்ட ஜாதகரின் கிரக நிலை, திசாபுத்தி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்தறிந்து பலன் கூறுவதே சிறப்புடையது

திருப்பாம்புரம்-வாரத்தில் மூன்று நாட்கள் பாம்புகள் வந்து வழிபாடும் கோயில்

திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது.

மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம்

கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், நீக்கும் ஸ்தலம்



ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இன்றும் பாம்புகள் நடமாட்டம் உள்ள கோயில்

ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.



எப்படிப் போவது?

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295