Search This Blog

Showing posts with label குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக? Kumkum and its importance. Show all posts
Showing posts with label குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக? Kumkum and its importance. Show all posts

Thursday, March 30, 2017

குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக? Kumkum and its importance

குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?



1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.



6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.



குங்குமம் வைப்பதன் நன்மைகள்

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு. உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும்.

குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது. இந்தச் சக்தி பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனால்தான் நம் வீட்டுப் பெண்கள், பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக் கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்!


குங்குமம் செய்வது எப்படி?

குண்டு மஞ்சள் - 100 கிராம்

வெண்காரம் - 10 கிராம்

படிகாரம் - 10 கிராம்

நல்லெண்ணெய் - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - அரை மூடி

வெண்காரம், படிகாரம் உடைத்து வைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் இரண்டையும்தனித்தனியாக போட்டு பொடி செய்யவும். நன்கு பொடி செய்ததும் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து அரைக்கும்போது அதன் நிறம் பழுப்புநிறமாகி கொஞ்சம் ஈரப்பசையுடன் இருக்கும்.



மஞ்சளை சிறு சிறு துண்டாக உடைத்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு முழு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பொடித்து வைத்துள்ள மஞ்சள் மற்றும் வெண்காரம், படிகாரத்தை தயாராக எடுத்து வைக்கவும். எலுமிச்சைப்பழ சாறுடன் பொடித்து வைத்துள்ள வெண்காரம், படிகாரத்தை கலந்து வைக்கவும். இந்த கரைசலுடன் மஞ்சள் பொடியை கலந்து தட்டில் வைத்து பரப்பி உலர விடவும்.

நன்கு உலர்ந்தப்பிறகு செங்கல் தூள் நிறத்தில் இருக்கும். அதில் நல்லெண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்து லேசாக பிசறி விடவும். அப்போதுதான் நல்ல டார்க் மெரூன் நிறத்தில் குங்குமம் கிடைக்கும்.

மஞ்சளின் வாசனையுடன் ஒரிஜினல் குங்குமம் ரெடி. சில இடங்களில் குங்குமம் மல்லிகை, தாழம்பூ மணத்துடன் இருக்கும். இந்த குங்குமத்துடன் மல்லிகை, தாழம்பூ எசன்ஸ்களை இரண்டு, மூன்று துளி விட்டு கலந்து விடவும். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதால் உடலில் உஷ்ணநிலையை சரிசமமாக வைத்துக் கொள்ள உதவுகிறது ,


Courtesy: SAI SPIRITUALCENTER.ORG