Search This Blog

Showing posts with label சனி. Show all posts
Showing posts with label சனி. Show all posts

Thursday, November 3, 2022

அம்ஸாவதார யோகம் Amsavathaara Yogam

 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டரை ஆண்டுகளுக்கு ஏற்படும் அபுர்வ ஜாதக யோகம் அம்ஸாவதார யோகம்

அம்சாவதார யோக கிரக நிலை :

ஒரு சில அரச யோகத்தை தரக்கூடிய யோகங்கள் லட்சத்தில் ஒருவருக்கும் அமையும் வகையில் கிரக நிலைகள் இருக்கும். ஜாதகத்தில் சிறப்பான கிரக நிலையைப் பெற, ஒருவர் பிறக்கக்கூடிய நேரத்தில் இருக்கின்ற கிரக நிலை தான் காரணமாக அமைகிறது.

குரு, சுக்கிரன், சனி
ஒரு ஜாதகத்தில் குரு சுக்கிரன் ஆகிய இருவரும், லக்கினத்திற்கு கேந்திரத்திலிருந்து, குரு, சுக்கிரன் தங்களுக்குள் பரஸ்பர கேந்திரத் தில் இருக்க, லக்கினம் சர ராசியி ல் (சர ராசிகள்: மேஷம், கடகம், துலாம், மகரம்) அமைந்து, சனி உச்சம் பெற்று இருந்தால் ஏற்படுவது அம்சாவதார யோகம்.

உயர்ந்த ராஜ யோகம்
இந்த யோகமானது உயர்ந்த ராஜயோகத்தைத் தரக்கூடிய யோகமாகும். இந்த யோகத்தை ஜாதகத்தில் பெற்றவர்கள். அனைத்து அம்சங்களும் அவதரித்த ஜாதகராவார்.

புகழ் மற்றும் நல்வாழ்வு

அம்சாவதார யோகம் இது ஜாதகருக்கு புகழ் மற்றும் நல்வாழ்வு தரும் யோகங்களில் ஒன்றாகும்.

ஒரு ஜாதகத்தில் அம்சாவதார யோகம் அமைய வேண்டுமானா ல் ஆ று கீழ்கண்ட நிபந்தனைக ளை பூர்த்தி செய்ய வேண்டும்.

கீழே 6 நிபந்தனைகள் உள்ளன.

1.சுக்கிரன் மற்றும் குரு சர ராசியில் (மேஷம், கடகம், துலாம் அல்லது மகரம்) இருக்க வேண்டும்

2.அவை கேந்திரங்களில் அமைந்து இருக்க வேண்டும்.

3. லக்கினம் சர ராசியில் ஒன்றில் அமைந்து இருக்க வேண்டும்

4.சனி கேந்திரங்களில் ஒன்றில் உச்சம் பெற்றிருக்க வேண்டும்.

5. லக்கினம் துலா ராசியில் அமைந்து குருவும், சுக்கிரனும், லக்கினத்திற்கு கேந்திரமாகி இருத்தல் வேண்டும். இந்த அமைப்பு மிகவும் உயர்தரமான யோகத்தை தரும்

6.குரு, சுக்கிரன் தங்களுக்குப் பரஸ்பர கேந்திரத்தில் இருக்க சனி பகவான் உச்சம் அடைந்து இருந்தால் அந்த அம்சாவதார யோகம் ஏற்படும்.

ஜோதிட யோகங்களின் மிக முக்கியமானது அம்சாவதார யோகம்.

அரசியல் தலைவர்களுடன் நெருக்கம்

அம்சாவதார யோகத்தில் பிறந்தவர்கள் பெயரும் புகழும் அடைவார்கள். அவர்கள் கற்றறிந்த வர்கள், பல்துறையில் சாதனை புரிபவர்களாக இருப்பார்கள் , , தத்துவப் பாடங்களில் நல்ல பிடிப்பு கொண்டவர்கள் மற்றும் பொதுவாக ஆளும் வர்க்கத்தினரி டையே நல்லுறவை பேணுபவர்க ளாக இருப்பார்கள்.

30 வருடத்திற்கு ஒரு முறை ஏற்படும் யோகம்

இந்த யோகம் மிகவும் அரிது. சனியை துலாம் ராசியில் உச்சம் பெற்று இருக்கும் பொழுது மட்டும் தான் இந்த யோகம் ஏற்படுகிறது., சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் துலா ராசியில் உச்சம் பெற்று காணப்படுவார். சனி துலாம் ராசிக்குள் நுழைய முப்பது வருடங்கள் ஆகும். கடந்த 2012-2014 க்கு இடையில் சனி துலாம் ராசியில் இருந்தார். அதற்கு முன் 1983-1985 க்கு இடையில் துலாம் ராசியில் இருந்தது. மேலும் வியாழன் அல்லது சுக்கிரன் சர ராசியில் அமைந்து இருக்க வேண்டும் மற்றும் மேலும் இவை கேந்திரதில் இருக்க வேண்டும். இந்த அசாதாரணமான கிரஹ சேர்க்கைகள் இந்த யோகத்தை ஒரு ஜாதகத்தில் மிகவும் அரிதான யோகமாக ஆக்குகின்றன.

பேறும் புகழும், செல்வம், செல்வாக்கு

அரச பதவி அல்லது அதற்கு சமமான பதவியை அளித்து பேறும் புகழும், செல்வம், செல்வாக்கு பெற்று வாழக் கூடியவர்கள் இந்த யோகத்தில் பிறந்தவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்

இங்கே இணைக்கப்பட்ட ஜாதகத்தில்

1.சர லக்கினம் ஆன கடக லக்கனம் ஆக அமைந்துள்ளது.

2.குருவும் , சுக்கிரநும் தங்களுக்குள் பரஸ்பர கேந்திரத்தில் அமைத்துள்ளார்கள்.

3.குரு லக்கினத்திற்கு கேந்திரமான 7ம் இடத்திலும் மற்றும் சுக்கிரன் லக்கினத்திற்கு கேந்திரமான 10ம் இடத்தில அமைய பெற்றுள்ளது .

4. மேலும் சனி பகவான் கேந்திர ஸ்தானமான 4ம் இடத்தில உச்சம் பெற்றுள்ளார். இந்த ஜாதகத்தில் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றா ல்

மேலும் மற்றுமொரு சிறப்பு

1. லக்கினத்திலிருந்து 4ல் சனி உச்சம் (கேந்திரத்தில்)

2. சனிபகவானுக்கு 4ல் குரு (கேந்திரத்தில்)

3.குரு பகவான்னுக்கு 4ல் சுக்கிரன் (கேந்திரத்தில்)

4.சுக்கிரனுக்கு 4ல் லக்கினம் (கேந்திரத்தில்)

ஆகவே இந்த ஜாதகத்தில் உயர்தர மான அம்சாவதார யோகம் அமை ந்துள்ளது.

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , உங்கள் பிரச்சனைகளை ஜாமக்கோள் பிரசன்ன ஆருடத்தால் தெரிந்து கொள்ள , ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295