Search This Blog

Showing posts with label செய்வினை. Show all posts
Showing posts with label செய்வினை. Show all posts

Wednesday, August 7, 2024

"ராகு கேது" ,பில்லி ,சூனியம், ஏவல் மாந்திரீகம், செய்வினை,

ஜோதிட உலகத்தில் இருக்கும் "ராகு கேது" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்.



இந்த ஜகத்தை ஆளக் கூடிய சக்தி படைத்தவர்கள் ராகு-கேது பகவான்கள்.

ராகு கேது நிழல் கிரகங்கள் கிடையாது நிழல் கதிர்கள்.

ராகு பகவான் கரு நாகப்பாம்பு,கேது பகவான் செம்பாம்பு, செம் பாம்பே உன்னை சிரம் தாழ்த்தி பணிகிறேன் என்று கேதுவிற்கு ஒரு ஸ்லோகமே உள்ளது.

பரிபூரண சூரியகிரகணம் ராகு,பரி பூர்ண சந்திர கிரகணம் கேது,

பரிபூர்ண அமாவாசை ராகு, பரி பூரண பௌர்ணமி கேது,

சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் தான் ராகுவும், கேதுவும்

ஒரு சூரிய கிரகணதிற்கும், சந்திர கிரகணதிற்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே.

அந்த ஒன்றரை வருட ராகு கேது பெயர்ச்சி காலம் வேறொன்றும் கிடையாது ஒரு சூரிய கிரகணத்திற்கும் அடுத்த சூரிய கிரகணத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே,

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ஒரு மாதத்தை எப்படி  கணக்கில் எடுத்து கொண்டார்கள் என்றால்,ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ஒரு மாதமாக கணக்கில் எடுத்துக் கொண்டார்கள்.

ராகு வைரஸை பரபபும் கூடிய வைரஸ்,மிருதன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல,வைரஸை பரப்ப கூடிய வைரஸ்.

கேது வைரஸை அழிக்க கூடிய வைரஸ் அதாவது நாயகன் சினிமாவில் வரும் கமலஹாசன் போல Negativeஐ அழிக்கக்கூடிய Nagative.

ராகு அமானுஷ்ய விஷயங்களுக்கு அதிபதி பில்லி ,சூனியம், ஏவல் மாந்திரீகம், செய்வினை,போன்ற விஷயங்கள் ராகு பகவானின் காரகத்துவம்.

ஏன் பில்லி, சூனியம் ,ஏவல்,மாந்திரீகம், செய்வினை செய்பவர்கள் எல்லாம் அம்மாவாசையில் செய்கிறார்கள் ஏனென்றால் அம்மாவாசை தான் ராகு.

ஏனென்றால் அம்மாவாசையில் தான் பூமிக்கு ராகுவின் கதிர்கள் வந்து விழும்.அதனால் தான் பில்லி சூனியம் ஏவல் செய்வினை செய்வார்கள் ராகுவின் நாளிலேயே செய்கிறார்கள்.

கேது யாகத்திற்கு அதிபதி ஆன்மீகத்திற்கு காரணமான கிரகம்.அதனால் தான் பௌர்ணமி நாளில் கடவுள்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகளும் யாகங்களும் மூலிகை செடிகள் அல்லது மூலிகை பொருட்கள் பரிக்க செல்வதும் செய்கிறார்கள்.

பௌர்ணமி நாளில் கேதுவின் கதிர்வீச்சு பூமிக்கு அதிகமாக வந்து விழும்.அப்பொழுதுதான் சிறப்பு யாகங்களை நடத்துவார்கள்.

ராகு  நம்முடைய மூதாதையர்கள் அதனால்தான் நம்முடைய மூதாதையர்களுக்கு அமாவாசையில் திதி கொடுக்கிறோம் அமாவாசையே ராகு பகவான் தான்.

ராகு தீராத ஆசையுடன் இறந்து போன பிரேத ஆத்மாக்கள் அல்லது ஆவிகள் அதனால்தான் அம்மாவாசையில் இரவு நேரத்தில்  யாரும் வெளியே வரக்கூடாது என்று சொல்வது.

நமது உடலில் தீராத ஆசையுடன் உயிர் இருந்தால் அது ராகு.உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அது கேது.

கேது தான் முக்திக்கு அதிபதி.நம் உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் நமக்கு முக்தியா அல்லது மறுபிறவியா  என்பதை சொல்பவரே கேது பகவான் தான்.

கேது தோஷம் என்று ஒன்று கிடையவே கிடையாது 8 அஷ்ட கர்மங்கள் தான் ஜோதிடத்தில் உள்ளது.

கேது தோஷம் ஆகிவிட்டால் ஒரு மனிதனுக்கு இறப்பும் கிடையாது பிறப்பும் கிடையாது.

ராகு தீராத ஆசையை உடையவன் கேது தீராத கடமை உள்ளவன்.ராகு போன ஜென்மத்தில் நமக்கு தீராத ஆசையை எடுத்துச் சொல்லும்.கேது போன ஜென்மத்தில் நிறைவேறாத கடமையை எடுத்து சொல்லும்.

ராகு பகவானுக்கு வெறும் தலை மட்டும்தான் வெறும் தலை மட்டும் கொண்ட ராகு பகவானுக்கு

ஜூனரம் என்பதே கிடையாது எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது.

ராகு பகவானுக்கு ஒரு விஷயம் தனக்கு வேண்டும் என்றால் அல்லது அடைய வேண்டுமென்றால் அடுத்தவர்களின் மூலமாகத்தான்  அந்த ஆசையை ராகு பகவான் நிறைவேற்றிக் கொள்ளும்.

அதனால்தான் தீராத ஆசை உடைய ஆவிகள் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அடுத்த வர்களின் உடம்பிற்குள் சென்று தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறது.அந்தத் தீராத ஆசை உடைய ஆவிகள் தான் ராகு பகவான்.

அதே போன்றுதான் நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ராகு பகவான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ அந்த கிரக காரகத்துவங்களும் அந்த பாவ கிரக காரகத்துவங்கள் இந்த ஜாதகருக்கு இந்த ஜென்மத்தில் எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது.

கேது நம் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவ விஷயங்களும் பாவ காரகத்துவ விஷயங்களும் நாம் இந்த ஜென்மத்தில் கடனுக்கு அல்லது கடமைக்கு என்றே செய்வோம்.

நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன.

1. மூலாதாரம்

2. சுவாதிஷ்டானம்

3. மணிப்பூரகம்

4. அனாஹதம்

5. விசுக்தி

6. ஆக்நீயா

7. சகஸ்ராரம்.

இந்த ஏழு சக்கரங்களும் ராகு கேது உடைய நட்சத்திரங்களாகும்.அதாவது

மூலாதாரம் மூலம் நட்சத்திரம்.

சுவாதிஷ்டானம் சுவாதி நச்சத்திரம்.

மணிப்பூரகம் மகம் நட்சத்திரம்.

அனாஹதம் சதயம் நட்சத்திரம்.

விசுக்தி அஸ்வினி நட்சத்திரம்.

இந்த ஏழு சக்கரங்கள் தான் ஒரு மனிதனை இயக்குகிறது.அப்போது இந்த ஏழு சக்கரங்களே ராகு கேது உடையது.

இந்தப் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே இருக்கும் தொடர்பு அல்லது Connectionஐ ஏற்படுத்துபவர்களே இராகு கேது தான்.


ஏன் செய்வினை செய்பவர்கள் ஏவல், பில்லி ,சூனியம், மாந்திரீகம் செய்பவர்கள் நமது உச்சந் தலை முடியையும்.கால் நகத்தையும் கேட்கிறார்கள்.

ஏனென்றால் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பை நீக்குவதற்கு அதனால்தான் அமாவாசையில் இது எல்லாம் செய்கிறார்கள்.

அம்மாவாசை செய்தால் தான் இதையெல்லாம் செய்ய இயலும்.அல்லது பலிக்கும்.

அதனால்தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமே இராகு கேதுவின் கையில் உள்ளது.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களை மூன்று பிரிவுகளாக 1 5 9 திரிகோணங்களாக பிரிக்கின்றனர்.

அதனால்தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களில் முதல் நட்சத்திர மண்டலம் "அஸ்வினி" என்ற கேதுவின் நட்சத்திரத்தில் ஆரம்பிக்கிறது. இரண்டாவது நட்சத்திர மண்டலம்"மகம்"

நட்சத்திரத்திலும் மூன்றாவது நட்சத்திர மண்டலம் "மூலம்' நட்சத்திரத்திலும் அமைகிறது.இந்த மூன்று நட்சத்திர மண்டலங்களின் ஆரம்ப புள்ளிகளே கேதுவின் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்கிறது.

இதனால்தான் ஜோதிடத்தில் ராகு கேது பகவானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

Thursday, April 27, 2017

செய்வினை,பில்லி, சூனியம், ஏவல், வசியம் எல்லாம் யாரிடம் பலிக்காது தெரியுமா?

செய்வினை,பில்லி, சூனியம், ஏவல், வசியம் எல்லாம் யாரிடம் பலிக்காது தெரியுமா?
Lord Sun , Sun God

பில்லி, ஏவல், சூனியம், வசியம் என பல அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழி மனதை ஒருமுகப்படுத்தி இறைவழிபாடு செய்யவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதை பல ஆண்டுகளுக்கு முன்பே மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்று அகத்தியர் கூறியுள்ளார் இன்றைக்கு பல திரைப்படங்களும், தொலைக்காட்சி சீரியல்களும், பில்லி, சூனியம், செய்வினையை வைத்து ஓட்டிக்கொண்டுள்ளன. இந்து மரபியலில் மாந்திரிகம் பற்றிய பழைய நூல்கள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. அதர்வண வேதத்திலும் மாந்திரிகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
இந்த வகையில் “உத்திர காலாமிர்தம்” என்ற நூல் முக்கியமானதாக கருதப் படுகிறது. மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதன் அல்லது மனிதர்களை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன. இவை பற்றிய சுருக்கமான தெளிவுகளை இன்றைய பதிவில் பார்ப்போம்.
shree Kala Bhairava


பில்லி
மாந்திரிகம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவதே இந்த வார்த்தைதான். ஒரு மனிதனின் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து குழப்பி அவரது எண்ணம், செயல், சிந்தனைகளை நம் கட்டுக்குள் கொண்டு வந்து அவரை நம் விருப்பப்படி ஆட்டுவிக்கும் மாந்திரிக முறையே பில்லி எனப்படுகிறது. சூனியம் சூனியம் என்றால் ஒன்றுமில்லாத ஒரு நிலை .அதாவது ஒரு மனிதனை ஒன்றுமில்லாமல் போகச் செய்வதன் மூலம், அவனை முடக்குவது அல்லது அழிப்பதே இந்த வகை மாந்திரிகமுறை. இவை பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு மனிதனின் ஆடை, அணிகலன்கள், முடி, காலடி மண் போன்றவைகளைக் கொண்டு செய்யப் படுகிறது.
Lord Veera Anjeneya

வசியம்
தான் விரும்பிய அல்லது விரும்பாத ஒருவரை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதுதான் வசியம். இது ராஜவசியம், லோகவசியம், சர்வவசியம், மிருகவசியம், ஆண்பெண் வசியம் என தேவைகளின் அடிப்படையில் செய்யப் படுகிறது. பெரும்பாலும் இந்த வகையில் ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் செய்கின்றனர். பெரிய அளவில் ஏமாற்று வேலைகள் நடப்பதும், ஏமாறுவதும் இந்த வகையினரே!
செய்வினை,பில்லி, சூனியம், ஏவல், வசியம்

ஏவல்
ஏவல் என்பது ஒருவரை, அவன் விரும்பாத அல்லது உடன்படாத காரியம் ஒன்றினை செய்திடும் படி ஏவுதல் ஆகும். பூசையில் வைத்து மந்திரசக்தியூட்டப் பட்ட உணவுப் பொருட்களை உண்ணக் கொடுப்பதன் மூலமாக ஒருவரை ஏவலில் சிக்க வைக்க முடியுமாம். இந்த வகையில் நன்மையும் செய்யலாம், தீமையும் செய்ய முடியும்.
செய்வினை
தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போக செய்ய வேண்டி செய்யப்படும் மாந்திரிக முறையே செய்வினை எனப்படுகிறது. மிகவும் கொடுமையான மாந்திரிக முறைகளில் இதுவும் ஒன்று.

செய்வினை,பில்லி, சூனியம், ஏவல், வசியம்
Shri Amman

இதுவும் செய்வினையைப் போன்றதே. மந்திர சக்தியூட்டப் பட்ட பொருட்களை ஒருவரின் இருப்பிடத்தில் அவருக்கு தெரியாமல் வைத்து வைத்து அதன் மூலமாக அவருக்கு கெடுதல் செய்வதே வைப்பு முறையாகும். பூசிக்கப்பட்ட யந்திர தகடுகள், மருந்துகள் போன்றவை இவ்வாறு வைக்கப்படுகின்றன. இவை தவிர இறந்து போனவர்களின் ஆவிகளைக் கொண்டு செய்யப்படும் மாந்திரிக முறைகளும் இருக்கின்றன.
செய்வினை,பில்லி, சூனியம், ஏவல், வசியம்

மனோவசியம்
உங்களிடம் இண்டெர்நெட் இணைப்பு ,ஹெட்ஃபோன்,சாய்வு நாற்காலி இருக்கிறதா, அப்படியென்றால் வாருங்கள் வலை மூலம் வசியம் செய்து காட்டுகிறேன் என அழைப்பு விடுத்துருக்கிறார் பிரிட்டிஷ் மனோவசிய நிபுணர் ஒருவர். இண்டெர்நெட் வ‌ழியே எப்ப‌டி ம‌னோவ‌சிய‌ம் செய்ய‌ முடியும் என்ற‌ ச‌ந்தேக‌ம் ஏற்ப‌ட‌லாம்.இது சாத்திய‌மே என்று சொல்லும் ஹுயுஜ்ஸ் ஹெட்ஃபோன் மூல‌ம் த‌ன்னிட‌ம் காதுக‌ளை கொடுத்தால் போதும் வ‌சிய‌ம் செய்துவிடுவேன் என்கிறார்.
செய்வினை,பில்லி, சூனியம், ஏவல், வசியம்

மனநலம் குன்றுதல்

மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே – படித்தவர் உட்பட – பொது அறிவும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. மனநோயுற்றவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப் படுகிறார்கள். அவர்களை கண்டு சமூகம் பயப்படுகிறது (‘பராசக்தி’ வசனம்!).
Thirukadaiyur Shree Abirami
மாயம் மந்திரம்

மாந்திரீகம் மற்றும் மனோவசியம் மற்றும் மனநலம் குன்றுதல் பற்றி மேலே கூறப்பட்டவைகளை படித்ததில் இருந்து நமக்கு கீழ்கண்ட விஷயங்கள் தெளிவாகின்றன:
•மாந்திரீகத்தின் முக்கிய செயல்பாடு ஒருவரின் மனதை சிதைத்து அதன் மூலம் அவரை செயலற்றவராகவோ அல்லது பிறர் பேச்சை கேட்பவராகவோ மாற்றுவது.

•
உணவில் நஞ்சுத்தன்மையை செலுத்தி அதன் மூலம் உடல் நிலையை பாதிக்க செய்வது.
Shree Agasthiar Moola Manthiram

•
ஒருவரின் பார்வையிலோ பயம் தரும் விஷயங்களை வைப்பது அல்லது காதுபட பயம் தரும் விஷயங்களை பேசுவது அதனால் அதிக பயம் கொள்ள செய்வது.
ஜோதிடமும் மனோவசியமும்:


•மந்திரமோ அறிவியலோ! எந்த வகையில் ஒருவர் மனதை கட்டுபடுத்தினாலும் அதற்கு காரகன் சந்திரனே. “சந்த்ரமா மனஸோ ஜாத:” என்கிறது புருஷ சூக்தம். சந்திரன் பலமிழந்த நிலையில்தான் ஒருவரை மந்திரம், மாந்திரீகம் வசியம், ஹிப்னாடிஸம், மெஸ்மரிஸம் எந்த முறையிலும் கட்டுபடுத்த முடியும்.
•பில்லி சூனியம் வைப்பவர்கள் கூட எல்லாருக்கும் வைத்துவிடுவதில்லை. யாருக்கு வைக்கவேண்டுமோ அவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்து அதனை தொடர்ந்து கோசாரத்திலும் சந்திரன் நிலை கெட்டு இருந்தால் மட்டுமே செய்ய உடன்படுவார்கள்.
·        பாதிப்படையும் கிரக நிலை:
·லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது.
·சந்திரன் லக்னத்திற்க்கு 4/8/12 ஆகிய வீடுகளில் நிற்பது
·சந்திரன் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது
·•சந்திரன் ராகுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது.
·ஆத்ம காரகனாகிய சூரியன் கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது.
·     தேய்பிறையில் பஞ்சமிக்கு பிறகு வரும் திதிகளில் குறிப்பாக அஷ்டமியில் பிறந்திருப்பது.
·     சட்பலத்தில் சந்திரன் குறைந்த பக்ஷ பலம் பெற்று நிற்பது.
மனபாதிப்பு எப்போது ஏற்படும்?

•
சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திரபலம் குறைந்த தினங்கள்

•
ஏழரை, அஷ்டம அர்தாஷ்டம சனி காலங்கள்

•
சந்திரன்/சனி/ ராகு தசாபுத்தி காலங்கள்

•
சந்திரன் கேது புத்தி காலங்கள்.

•
சூரியன் /ராகு/ கேது தசா புத்தி காலங்கள்.
யாரிடம் அபிசாரமுறைகள் பயனளிக்காது?

•வேதத்தை ஓதும் அந்தனர்களிடம் அபிசாரம் பயனளிக்காது. அதாவது வேதியர்கள் அனைவரும் குருவின் ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எனவே குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் தெய்வாம்சம் நிறைந்திருப்பதால் அவர்களிடம் அபிசார வித்தைகள் பயனளிக்காது.

•
தற்கால அறிவியல் சார்ந்த மனோவசிய முறைகளும் கூட குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் பயனளிக்காது. ஏனென்றால் அவர்கள் சிறந்த மனோதிடத்துடன் சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள்.

•
காயத்ரி மந்திர ஜெபம் செய்பவர்களிடம் அபிசார வித்தைகள் அனுகாது.

•
ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்களிடமும்;

•
கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மற்றும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

•
லக்னத்தில் ராகு அல்லது கேது இருப்பவர்கள்.

•
கிரஹன காலங்களில் பிறந்தவர்கள்.

•
உணவின் காரகன் சந்திரன். தாய் அல்லது மனைவி மற்றும் நெருங்கிய ரத்த சொந்தங்கள் சமைத்ததை தவிர மற்ற இடங்களிலும் மற்ற உணவுகளையும் சாப்பிடாதவர்கள்.

•
யோகா, ப்ராணாயாமம், தியானம் செய்பவர்களிடம் அபிசாரவித்தை பலனளிக்காது ஜோதிட பரிகாரங்கள்

•
குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ருகள் வழிபாடு.

•
ராகு/கேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீ லக்ஷமி நரசிம்மர் வழிபாடு மற்றும் ப்ரத்யங்கிரா வழிபாடு மற்றும் காளி வழிபாடு.

•
மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசீலம்,திருப்பதி வழிபாடுகள்.

•
சந்திரனுக்கு வரமளித்த சந்திர மௌளீஸ்வரர் மற்றும் காமாக்ஷி வழிபாடுகள்.

•
மனதை ஒருமுகப்படுத்தும் தியான பயிற்சிகள்.
•சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பவர்கள் ஆகியவர்களை அபிசாரங்கள் நெருங்குவதில்லை.
மனதை ஒருநிலைபடுத்துங்கள் மொத்தத்தில் எந்த மந்திரம் செபித்தாலும் எக்காரியம் செய்தாலும் மன ஓர் நிலையோடு மன ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்துவதே மனோவசியம் மற்றும் அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழியாகும்.

 Courtesy newlanka.lk/