Search This Blog

Showing posts with label பலதீபிகா. Show all posts
Showing posts with label பலதீபிகா. Show all posts

Saturday, January 7, 2023

தைன்ய பரிவர்த்தனை யோகம் 6,8,12 ம் அதிபதிகளுக்குள் பரிவர்த்தனை

 தைன்ய பரிவர்த்தனை யோகம் 6,8,12 ம் அதிபதிகளுக்குள் பரிவர்த்தனை

மந்திரேஸ்வரர் -பலதீபிகா

மந்திரேஸ்வரர் தனது பலதீபிகா வில் ( VI.32-34)[1] தைன்ய பரிவர்த்த னை பற்றி குறிப்புடுகிறார், தைன்ய பரிவர்த்தனை என்பது அசுபமான கிரக பரிவர்த்தனை ஆகும்.. தைனிய யோகத்தில் பிறந்தவர்கள் புத்தி கூர்மை இருக்காது,, பிறரை அவமதித்து, தவறாகப் பேசுவார்கள் அதனால் எளிதில் மற்றவர்கள் வெறுப்புக்கு ஆளாவார்கள். தங்களது , நடத்தையிலும் மிக மோசமாக இருப்பார்கள்,எதிரிகளால் துன்பப்படுவார்கள், நிலையற்ற மனம் கொண்டவர்கள், அவ்ரகளுடைய செயல்கள் அவர்களுக்கு தடைகளையும் பிரச்சினைகளையும் உருவாக்குகின்றன.

பலதீபிகா

தைன்ய பரிவர்த்தனை ஜாதகருக்கு ஏற்படும் நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் பாதிக்கின்றன; தைன்ய பரிவர்த்தனை உள்ள ஜாதகத்தில் 6, 8 மற்றும் 12 ஆம் வீட்டுக்கு உரியவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வீடு கொடுத்து அமர்ந்தால், விபரீத ராஜ யோகத்தைக் கொடுத்து திடீர் அதிர்ஷ்ட வாழ்வைக் கொடுப்பார்கள்

11 தைன்ய யோகங்கள்

தைனிய பரிவர்த்தனை யோகம் காஹல பரிவர்த்தனை யோகத் தை விட மோசமானவை. அயன சயன போகஸ்தானமான 12ஆம் அதிபதி 6 மற்றும் 8ஆம் அதிபதி களுடன் பரஸ்பரம் பரிவர்த்தனை செய்வதால் பதினொரு தைன்ய யோகங்கள் உருவாகும் .

10 தைன்ய யோகங்கள்

ஆயுள் ஸ்தானம் ஆன 8ஆம் அதிப தி 6 மற்றும் 12ஆம் அதிபதிகளுடன் பரிவர்த்தனை அடையும் பொழுது , பத்து வகையானா தைன்ய யோக ங்கள் உருவாகின்றன,

9 தைன்ய யோகங்கள்

ருண , சத்ரு , ரோக ஸ்தானமான 6ம் அதிபதி 8 மற்றும் 12 ஆம் அதிபதிகளுடன் பரிவர்த்தனை அடையும் பொழுது ஒன்பது வகையான தைன்ய யோகங்கள் ஏற்படுகின்றன .

பராசரர்

இந்து ஜோதிடத்தின் பராஷரி அமைப்பில் ஒரு ராசி என்பது ஒரு பாவம் அல்லது வீட்டிற்கு சமம். பரஸ்பர பரிவர்த்தனை பரிமாற் றம் அல்லது பரிவர்த்தன யோகத் தில் ஈடுபடும் கிரகங்கள் அதாவது ஒவ்வொன்றும் மற்ற கிரஹத்தின் வீட்டை ஆக்கிரமித்து, சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகி ன்றன.

காளிதாசர் உத்தர கலாமிருதம்

ஆனால் , காளிதாசர் தனது உத்தர கலாமிருதத்தில் ( IV.22) சற்று வித்தியாசமான பார்வையை வழங்குகிறார்; 6, 8 மற்றும் 12 ஆம் அதிபதிகளுக்கு இடையே பரஸ்பர ராசி பரிமாற்றம் நல்ல பலன்களை வழங்குவதாக அவர் கூறுகிறார். மேலும் அத்தகைய அமைப்பு விபரீத ராஜ யோகத்தை தரும் என்கிறார்.

திடீர் ராஜ யோகம்

வாழ்க்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீர் விபரீத ராஜயோகம் தைன்ய பரிவர்த்தனையில் ஏற்படும், விபரீத ராஜயோகம், ஏற்பட்டு அதன் மூலம் ஜாதகர் திடீர் கோடீஸ்வரர் ஆகி விடுவார்.விபரீத ராஜயோகம் பலர் ஜாதகத்தில் இருந்தலும் சிலருக்கு தான் யோகத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கும் யோகத்தை தருகிறது. அடிமட்ட நிலையில் இருக்கும் ஒருவனை கோபுரத்தில் வைக்கும் சக்தி பெற்ற பலமான யோகம் ஆகும்

லாட்டரி சீட்டுக்கள், பங்கு சந்தைகளில்

லாட்டரி சீட்டுக்கள், பங்கு சந்தைகளில் மூலம் , தான் செய்யும் தொழில் அல்லது வேலை மூலம் யோகத்தை கொடுத்து திக்கு முக்காட வைத்து தகுதிக்கு மீறிய வாழ்வு தந்து அதை அனுபவிக்கும் யோகத்தை தந்து விடுகிறது

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் ஆருடத்தின் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295

May be an image of text that says "ராகு குரு தைன்ய பரிவர்த்தனை யோகம் -6,8,12 ம் அதிபதிகளுக்குள் பரிவர்த்தனை 2-10-1986 செவ்வாய் சனி சந்திரன் புதன் சுக்கிரன் லக்கினம் சூரியன் கேது"