Search This Blog

Showing posts with label முப்பந்தல் இசக்கியம்மன். Show all posts
Showing posts with label முப்பந்தல் இசக்கியம்மன். Show all posts

Friday, May 28, 2021

குழந்தை வரம், திருமண பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வு தரும் முப்பந்தல் இசக்கியம்மன்

 

குழந்தை வரம், திருமண பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வு தரும் முப்பந்தல் இசக்கியம்மன்



கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர் கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஆரல்வாய்மொழியில் அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் உள்ளது

இசக்கி அம்மன் கோர சிலை

பொதுவாக இசக்கி அம்மனின் வடிவம் ஒரு கை இடுப்பைப் பிடித்தபடியும், மறுகை ஒரு குழந்தையை இடுப்பில் இடுக்கியபடியும் இருக்கும். வாய் அகலத் திறந்திருக்கும், கழுத்தில் அழகிய ஆபரணங்கள் வரையப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு இந்த உருவம் கொடூரமாகக் காணப்படும். இதற்கு நேர்மாறான சாந்த வடிவமும் சில இடங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான இசக்கி வடிவங்கள் சுடுமண்ணால் செய்யப்பட்டவையே. கல்வடிவ இசக்கியம்மன் கோயில்கள் காலத்தால் பிற்பட்டவையாகும்.

133 அடி உயர இசக்கி யம்மனின் பிரமாண்ட சிலை

இங்கு எழுந்தருளிக்கும் இசக்கியம்மனைப் பங்காளிகள் சொத்தினைப் போல் பங்கிட்டு இரு கோயில்களாக்கி வழிபட்டு வருகின்றனர். கோயிலுக்கு சற்று தள்ளித் திறந்தவெளியில் சுமார் 133 அடி உயர இசக்கி யம்மனின் பிரமாண்ட சிலையை தரிசிக்கலாம். இங்கு, திருவிழா, கொண்டாட்டம் ஆகியவை இசக்கிக்கு இல்லையெனினும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமையில் ‘ஊட்டு படைப்பு‘ வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஒளவையாரம்மனுக்கு கொழுக் கட்டைப் படையல்

இந்த நாளில், பகல் முழுவதும் இசக்கியம்மனுக்கும் பிற தெய்வங்களுக்கும் விசேட பூசைகள் நடை பெறும். அப்போது ஒளவையாரம்மனுக்கு கொழுக் கட்டைப் படையல் வைத்து, பூசைகள் செய்வர். அன்று இரவு 12:00 மணிக்குப் பச்சரிசி சாதம் வடித்து பல வகை காய்கறி களுடன் கூட்டு சமைத்து படையலிடுகின்றனர். அப்போது இசக்கியம்மனுக்கு அருகில் உள்ள பிராமணத்தி அம்மனை பிராமணர்கள் வழிபடுவர். இந்த வைபவத்தின்போது, இசக்கியம்மனின் அருளால் வேண்டுதல் பலித்த பக்தர்கள், மனித உருவ பொம்மைகளைச் செய்து எடுத்து வந்து அம்மன் வாசலில் வைக்கின்றனர்.



குழந்தை வரம், திருமண பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வு

குழந்தை வரம், திருமண பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வு ஆகியவற்றை அருளும் இசக்கியம்மனின் மகிமையை அறிந்த கேரள மக்களும் இங்கு வந்து குழுமுகிறார்கள்.

மகிமை நிறைந்த திருஷ்டிக் கயிறு!

இசக்கியம்மன் கோயிலில் சிவப்பு மற்றும் கறுப்பு வண்ணங்களில் திருஷ்டிக் கயிறு வழங்குகின்றனர். 41 நாட்கள், அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூசித்துத் தரப்படும் இந்தக் கயிறைக் கட்டிக் கொண்டால், திருஷ்டி கழியும்; காத்து, கருப்பு அண்டாது என்பது நம்பிக்கை. இங்கு, திருநீறுக்கு பதிலாக மஞ்சனையை (தண்ணீரில் குழைத்த மஞ்சள்) வாழை இலையில் மடித்துக் கொடுக்கின்றனர்.

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295