யோகம் யோகம் என்று அடிக்கடி கூறுகிறீர்கள் அவ்வாறு யோகம் அமையப்பெற்றவர்கள் யாரையாவது ஒருவரை கூறுங்களேன் ? யோக ஜாதகம் - உதாரண ஜாதகம்
Search This Blog
Showing posts with label ருசக யோகம். Show all posts
Showing posts with label ருசக யோகம். Show all posts
Wednesday, February 15, 2023
Sunday, September 25, 2022
Friday, September 23, 2022
திக்பலம் பெற்ற சூரிய தசையில் ரூ 300 கோடி சம்பாதித்த நடிகர் கமல்ஹாசன்
திக்பலம் பெற்ற சூரிய தசையில் ரூ 300 கோடி சம்பாதித்த நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் உத்திரட்டாதி (1ம் பாதம்) நட்சித்திரத்தில் பிறந்துள்ளார். அவருடைய லக்கினம் மகர லக்கினம். அவருடைய ராசி மீனம் ஆகும். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஒரு பன்முக திறமைசாலி ஆவார். தலை சிறந்த நடிகர் மட்டுமில் லாமல் இயக்குனர் , நடன இயக்கு னர் , கதாசிரியர் , பாடகர் , தயாரி ப்பாளர் ஆவார் .
ருசக யோகம்
லக்கினத்தில் செவ்வாய் உச்சம் பெற்று காணப்படுவதால். இதனால் இவருக்கு நல்ல பேரும் புகழும், தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை,. திரைப்படத் துறையில் சாதனைகள் போன்றவை ஏற்பட்டது.
ஹம்ஸ யோகம்
குரு பகவான் உச்சம் பெற்று ஏழாம் இடத்தில் காணப்படுவது. திரைப்பட துறையில் நல்ல பெயர் புகழ் , நல்ல வருவாய் போன்ற பலன்கள்.
சசயோகம்
சனி பகவான் உச்சம் பெற்று ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில காணப்படுவது . செய்யும் தொழில் வெற்றி , ஒன்றுக்கு மேற்பட்ட திறமைகளில் பெயர் புகழ் , பிறரால் சாதிக்க முடியாததை தொழில் செய்து காண்பிப்பது.
நீசபங்க ராஜயோகம்
சூரியன் நீச்சம் பெற்று துலாத்தில் காணப்படுவது. ஆனால் நீச்சல் நின்ற ராசிநாதன் சுக்கிரன் சந்திரனுக்கு கேந்திரம் பெற்றதால் நீச்சம் பங்கம் ஆகி ராஜயோகத் தை ஏற்படுத்திகிறது.இதனால் நடிகர் கமல் ஹாசனுக்கு திடீர் சம்பத்துகளும் பெயரும் புகழும் உண்டாகும்.
சுக்கிர . பகவானும் கலையுலகில் புகழும்
மகர லக்கினத்திற்கு சுக்கிர பகவான் . அதி யோக காரர் ஆவார். அவர் வக்கிரம் அடைந்து 11ம் இடமான பாதக ஸ்தானத்தில் அமர்ந்ததால் , அவர் கலை உலகில் ரஜினி காந்த் போன்று உயர்ந்த இடத்தை பிடிக்க முடியவில்லை.. இதே நிலைதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் ஏற்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எம்ஜிஆர் போன்று புகழ் அடையமுடியவில்லை.
நடப்பு தசை மற்றும் புக்தி விவரம்
கமல் ஹாசனுக்கு சுக்கிர திசையி ல் கேது புக்தி 15 ஆகஸ்ட் 2017 வரை நடைபெற்றது. . அதன் பிறகு சூர்ய பகவான் தசைஆகஸ்ட் 2023 வரை நடைபெற உள்ளது. சூரிய பகவான் குரு பகவான் நட்சத்திர மான விசாகம் சாரம் பெற்று தசை நடத்த போகிறார். குரு பகவான் சூரியனுக்கு நட்பு கிரகம் ஆவார். சூரிய பகவான் மகர லக்கினத் திற்கு அஷ்டமாதி என்றாலும் அவர் ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில இருந்து தசை நடத்த போகிறார்..
10ல் உள்ள டசூரியன் திக்பலம் பெற்று தசை நடத்தி கொண்டு இருக்கிறார்.
மேலும் ராசி கட்டத்தில் நீச்சம் பெற்றாலும் அம்சத்தில் சூரியன் உச்சம் பெற்றுள்ளதால் அவர் தசை கமல் ஹாசனுக்கு பெரும் புகழும் ஆஸ்கர் போன்ற பட்டங்களும் அவரை வந்து அடையும்.
திக்பலம் பெற்ற சூரியன் கிழ்கண்ட பலன்களை தருவார். அரசியலில் ஈடுபட வைப்பார். திரண்ட செல்வத்தை தருவார். அவருக்கு அரசியலில் பெரும் ஆதரவு இல்லை என்றாலும் விக்ரம் படம் மூலமாக ரூ 300 கோடி சம்பாதித்து உள்ளார்.
சூரியன் திக் பலம்
சூரியன் திக் பலம் பெற்று , அம்சத்தில் உச்சம் பெற்று குரு பகவான் சாரம் பெற்று தசை நடைபெறுவதால் அவருக்கு சூரிய தசையில் நிரம்ப செல்வமும் , புகழும் , அரசியலில் உயர் பதவி மற்றும் ஆஸ்கர் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க , ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
Subscribe to:
Posts (Atom)


