Search This Blog

Showing posts with label லக்ன மாலிகா. Show all posts
Showing posts with label லக்ன மாலிகா. Show all posts

Tuesday, October 25, 2022

கிரகமாலிகா யோகதால் பல லட்சம் கோடிக்கு சொந்தக்காரரான ரத்தன் டாடா

 கிரகமாலிகா யோகதால் பல லட்சம் கோடிக்கு சொந்தக்காரரான ரத்தன் டாடா

கிரகமாலிகா யோகம்

நவ கிரகங்களில் ராகு, கேது ஆகிய இரு கிரகங்களைத் தவிர மற்ற ஏழு கிரகங்கள் ஏழு வீடுகளில் தொடர்ச்சியாக நிற்குமானால், அதற்கு ஜோதிடத்தில் கிரகமாலிகா யோகம் என்று பெயர்.வாழ்நாள் முழுவதும் யோகம் தரும் அமைப்பாகும்.

லக்ன மாலிகா ;லக்கினத்திலிருந்து தொடங்கும் , ஐந்தில் இருந்து தொடங்குவது, புத்ர மாலிகா மற்றும் பல வகையான கிரஹ மாலிகா யோகங்கள் உள்ளன . ஏழு கிரகங்கள் (ராகு மற்றும் கேதுவை த் தவிர) சம்பந்தப்பட்ட ஒரு பாவா விலிருந்து ஏழு வீடுகளை அடுத்த டுத்து ஆக்கிரமிக்க வேண்டும்.

பாவார்த்த ரத்னகரம் என்னும் ஜோதிட நூல் கிரஹ மாலிகா யோகத்தை எப்போதும் லக்னத்திலிருந்து தொடங்கி லக்னத்திலிருந்து ஐந்து முதல் ஒன்பது வீடுகளுக்குள் வகை படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

லக்ன மாலிகா - லக்கினத்திலிருந்து தொடங்கும் அரசர், ஆட்சியாளர் அல்லது தளபதி, செல்வந்தர்;

தன மாலிகா- 2ம் வீட்டில் இருந்து தொடங்கும் . மிகவும் செல்வம் உடையவர், பணிவானவர், உறுதியானவர் மற்றும் அனுதாபமற்றவர்;

விக்ரம மாலிகா -3ம் வீட்டில் இருந்து தொடங்கும்ஆட்சியாளர், பணக்காரர், நோய்வாய்ப்பட்டவர், துணிச்சலான மனிதர்களால் சூழப்பட்டவர்;

சுக மாலிகா - 4ம் வீட்டில் இருந்து தொடங்கும்தொண்டு மற்றும் செல்வம்;

புத்ரா மாலிகா - 5ம் வீட்டில் இருந்து தொடங்கும் சத் புத்திற பாக்கியம் மற்றும் பிரபலமான யோகத்தை தரும் ;

சத்ரு மாலிகா - 6ம் வீட்டில் இருந்து தொடங்கும்பேராசை மற்றும் ஓரளவு ஏழை;

களத்ர மாலிகா- 7ம் வீட்டில் இருந்து தொடங்கும்பெண்களால் விரும்பப்படும் மற்றும் செல்வாக்கு;

ரந்திர மாலிகா-8ம் வீட்டில் இருந்து தொடங்கும் ஏழை மற்றும் அடிக்கடி உடல் நலம் பாதித்தல்

பாக்யா மாலிகா 9ம் வீட்டில் இருந்து தொடங்கும்-மத வழிபாடு , நல்ல செல்வம், வல்லமை மற்றும் நல்லவர்;

கர்ம மாலிகா-10ம் வீட்டில் இருந்து தொடங்கும் மதிப்பிற்குரிய மற்றும் நல்லொழுக்கமுள்ள நடத்தை , தொழில் மேன்மை

லாப மாலிகா - 11ம் வீட்டில் இருந்து தொடங்கும் திரண்ட செல்வ சேர்க்கை , தன லாபம்

வ்ரயா மாலிகா - 12ம் வீட்டில் இருந்து தொடங்கும் மரியாதைக்குரியவர், தாராளவாதி மற்றும் மரியாதைக்குரியவர்.

பரிவர்த்தனை கிரஹ மாலிகா

ரத்தன் டாடா ஜாதகத்தில் லக்கினம் முதல் 4ம் இடம் வரை 6 கிரஹங்கள் அமையப்பெற்று உள்ளதால் , அதில் குருவும் சனியும் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் , உயர் தர கிரஹ மாலிகா யோகம் அமையப்பெற்றுள்ளது.

லக்கினத்தில் புத ஆதித்ய யோகம்

விளையும் புதன் ஆதவன் விரும்பி எட்டு , நான்கு , ஒன்றில் அமையப் பெறின் மன்னவனாம்

ரத்தன் டாடா ஜாதகத்தில் லக்கினத்தில் புத ஆதித்ய யோகம் அமையப்பெற்றதால் மன்னவனை போல் வாழும் யோகத்தை தந்துள்ளது.

2 மற்றும் 4ம் அதிபதி பரிவர்த்த னை

2-ம் இடத்தின் அதிபதியும் 4-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்த னை பெற்றால், ஜாதகருக்கு பல வழிகளிலும் பணம். வரும் பணத்தை பல தொழில்களில் முதலீடு செய்வார் , பெரிய தொழில் அதிபராக இருப்பர்.

சுக்கிரன் அஸ்தங்கம்

இவருடைய ஜாதகத்தில் சூரியன் 12 டிகிரி 54 விகலையில் உள்ளார் சுக்கிரன் 3 டிகிரி 46 விகலையில். சுக்கிரன் சூரியனிடமிருந்து 10 டிக்ரீயில் இருந்தால் , சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்து விடுவார். களத்திர காரகர் ஆன சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்தால் , திருமணம் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் அது சோபிப்பது இல்லை. 85 வயது ஆகும் திரு ரத்தன் டாடாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்படத்தக்கது.

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , உங்கள் பிரச்சனைகளை ஜாமக்கோள் பிரசன்ன ஆருடத்தால் தெரிந்து கொள்ள , ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர்79047 19295

May be an image of text that says 'சனி செவ்வாய் குரு கேது ரத்தன் டாடா ஜாதகம் கிரஹ மாலிகா யோகம் ராகு லக்கினம் சூரியன் புதன் சுக்கிரன் சந்திரன்'