ராகு-கேது
பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் ?
எந்த எந்த ராசிக்காரர்களுக்கு கெடுதல் தரும் ?
வருகிற ஜூலை 27ம் தேதி 2017
அன்று ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு
இடம் பெயர்கிறார். கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். ஹேய்விளம்பி ஆடி 11ம்
தேதி வியாழக்கிழமை அன்று உத்திர நட்சித்திரம் , சித்த யோகம் மற்றும்
சுக்ல சதுர்த்தி கூடிய நன்னாளில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.
ஜாதகத்தில் ராகு பலம் பெற்று காணப்பட்டால் ஜாதகருக்கு நிறைந்த செல்வமும் ,
வாழ்க்கையில் வளமும் , தலைமை தாங்கும் நிலையையும் ஏற்படுத்தி கொடுப்பர். கேது
பகவான் ஜாதகத்தில் வலு பெற்று காணப்பட்டால் ஆன்மிகத்தில் ஈடுபாடும் தெய்வ
அனுகிரஹமும் , சித்திகர்களின்
அருளும் , சித்தராக ஆகும்
வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுப்பார்.
மேஷ
ராசி
|
ராகு
4ம்
இடம்
4ம் இடம் வாஹனம் , சொத்து
சேர்க்கை , உயர் கல்வி , குடும்ப
ஒற்றுமை ஆகியவற்றை குறிக்கும்
கேது
10ம்
இடம்- தொழில்
உத்யோகம் , ஜீவனம் ஆகியவற்றை குறிக்கும்
|
வாகனத்தை
ஓட்டும்பொழுது கவனம் தேவை சொத்து
தகராறால் நீதி மன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
மாணவர்களுக்கு
கல்வியில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில்
ஒற்றுமை குறைந்து காணப்படும்.
உத்யோகத்தில்
மற்றும் தொழிலில் உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது
|
ரிஷப
ராசி
|
ராகு 3ம்
இடம்
கேது 9ம்
இடம்
|
மூன்றாம் இடத்தில உள்ள ராகு
ஜாதகருக்கு எதிர்பாராத செல்வதை தருவார். மனோ தைரியம் மிகுந்து காணப்படும்.
துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு ஜாதகர் நல்ல வருவாய் ஈட்டும் வாய்ப்பு
ஏற்படும். இளைய சகோதர சகோதிரிகளுக்கு
வாழ்வில் நல்ல மேன்மை ஏற்படும்
9ல் உள்ள கேதுவால் ஜாதகருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளுவார்கள். சித்தர்களின் சாதுக்களின் அருளாசி
கிடைக்கும்
|
மிதுன
ராசி
|
ராகு 2ம் இடம்
இரண்டாம் இடம் தனஸ்தானம். செல்வ நிலையைப் பற்றி
தெரிவிக்கும் இடம். 2ம் இடம் வாக்கு, குடும்பம், செல்வ
சேர்க்கை, கண்,
போன்றவற்றை அறிய உதுவுகிறது.
கேது 8ம் இடம்
8ம் இடம் ஆயுள் ஆரோக்கியம் மாங்கல்யம் பலம் போன்றவற்றை அறிய உதுவுகிறது.
|
ஜாதகருக்கு முன் கோபம் அதிகம் ஏற்படும். எளிதாக உணர்ச்சி
வயப்படுவார்கள்.
கோபத்தை கட்டுப்படுத்த தவிறினால் வீண் பிரச்சனைகளில்
மாட்டிக் கொள்ள
நேரிடும்.
பணவரவு தடை படும்.
உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் வீணாக கீழ்நிலைக்கு செல்லும் நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் உள்ள ஆர்வம் தடை ஏற்படும்.
எட்டாம் இடத்தில் உள்ள கேது மறைமுக பணவரவு, வரதட்சணை, உயில் சொத்து, லாட்டரி, ரேஸ், புதையல்
மூலம் பணவரவை தடைகளை ஏற்படுத்துவார். ஒரு
சில ஜாதகர்கள் வெளி நாடு பயணம் மேற்கொள்ள நேரிடும்
|
கடக
ராசி
|
ராகு 1ம்
இடம்
கேது 7ம்
இடம்
|
கடக ராசியில் ராகு
வீற்றிருப்பதால் ,
ஜாதகருக்கு மேன்மையான பலன்கள் ஏற்படும். ஜாதகர் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளின் வாழ்வில் நல்ல
முன்னேற்றம் தென்படும். ஒரு சிலருக்கு வீண் மனக்கவலைகள் ஏற்படும்.
களத்திர ஸ்தானமான 7ம்
இடத்திற்கு கேது வருவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமை ஏற்பட
வாய்ப்புள்ளது. கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு வியாபார கூட்டாளிகள் வீண்
பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
|
சிம்ம
ராசி
|
ராகு 12ம் இடம்
கேது 6ம் இடம்
|
அயன சயன மோட்ச ஸ்தானமான 12ம் இடத்திற்கு ராகு வருவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு
மனநிம்மதி இல்லாத நிலை ஏற்படும். வீண்
அலைச்சல் ஏற்படும். ஒரு சில ஜாதகர்கள் சிறை வாசம் அனுபவிக்க நேரிடும். ஒரு
சில ஜாதகருக்கு பணவிரயம் நிறைய ஏற்படும். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
ருண ரோக ஸ்தானமான 6ம் இடத்திற்கு கேது பகவான் வருவதால் சிலர் நிறைய கடன்
வாங்க நேரிடும் . வரவுக்கு மீறிய செலுவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிரிகளால்
தொல்லைகள் ஏற்பட
வாய்ப்புள்ளது.ஆரோகியதில் மிக்க கவனம் தேவை.
|
கன்னி
ராசி
|
ராகு 11ம்
இடம்
கேது 5ம்
இடம்
|
ராகு 11ம்
இடத்திற்கு வருவதால் ,
பண வரவு ஏற்படும் .செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம்
ஏற்படும் . உத்தியோக உயர்வு ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி காணும்.
பூர்வபுன்னிய
ஸ்தானத்திற்கு கேது வருவதால் குழந்தைகள் பற்றி மனக்கவலைகள்
ஏற்படும் . யோகமான பல ஒரு சிலர் அரசாங்க நடவடிக்கையால் பாதிக்க பட நேரிடும்
ன்கள் ஏற்பட தடை ஏற்படும்.
|
துலா
ராசி
|
ராகு 10ம் இடம்
கேது 4ம் இடம்
|
ஜீவன ஸ்தானத்திற்கு ராகு வருவதால் இந்த
ராசிக்காரர்களுக்கு தொழில் மூலம் திரண்ட செல்வம் சேரும்.. நீண்ட காலமாக
தள்ளிப்போன பதவிஉயர்வு கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும்.
தீர்த்த யாத்திரை செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.
கேது 4ம் இடத்திற்கு வருவதால் ஒரு சிலர் புதிய சொத்துக்கள் , மனை
வாங்கும் யோகம் உண்டாகும் . ஆன்மீக பயணத்தால் கடவுளின் அருளாசியை பெறுவார்கள்.
தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை..தீயோர்
சகவாசத்தினால் பொருள் சேர்ப்பும், இழப்பும் இருக்கும். பணம்
கையில் புழங்கும்.
|
விருச்சிகம்
ராசி
|
ராகு 9ம்
இடம்
கேது 3ம்
இடம்
|
பாக்கியஸ்தானத்திற்கு ராகு
பகவான் வருவதால் ,
எதிர்பாராத பண வரவுகள் இந்த ராசிகாரர்களுக்கு உண்டு. அரசாங்க
தொடர்பால் அல்லது ஒப்பந்தங்களால் ஆதாயம் ஒரு சில நேயர்களுக்கு உண்டு. நண்பர்களால்
ஆதாயம் உண்டு.
கேது பகவான் 3ம்
இடத்திற்கு வருவதால் ,
எதிர்பாராத தனவரவு
ஒரு சில நேயர்களுக்கு ஏற்படும். இளைய சகோதிரர் மற்றும்
சகோதிரிகளால் ஆதாயம் உண்டு. வலுவான
தசை புக்தி நடைபெறாத ஒரு சில நேயர்கள் கவலைகளும், கஷ்டங்களும்
இருக்கும். பணத்தைக் கெட்டதற்காகவே செலவு செய்ய
நேரிடும்.
|
தனுசு
ராசி
|
ராகு 8ம் இடம்
கேது 2ம் இடம்
|
8ம்
இடத்திற்கு வரும் ராகு பகவான் நற்பலன்களை தரமாட்டார். உடல் ஆரோக்கியம் கெடும்.
மருத்துவ சிலவு ஏற்படும். சொந்த ஊரை
விட்டு வெளியேற நேரிடும். நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது
நலம்.
கேது 2ம் இடத்திற்கு வருவதால் பணவரவு தாராளமாக இருக்கும் . குடும்பத்தில் மகிஸ்ச்சி நிலவும்
.குழந்தைகளின் கல்வியில் மேன்மை ஏற்படும்.
|
மகரம்
ராசி
|
ராகு 7ம் இடம்
கேது 1ம் இடம்
|
7ம் இடத்திற்கு வரும் ராகு பகவான் இந்த ராசி நேயர்களுக்கு
திடீர் பண வரவு, தொழிலில்
மேன்மை, கூட்டுத்தொழிலில் யோகம் போன்ற நற்பலன்களை தருவார். புதிய
ஆண் நண்பர்கள் அல்லது பெண் நண்பர்கள் கிடைப்பார்கள். ஒரு சிலருக்கு
வெளியூர்களுக்கு சென்று சம்பாதிக்கும் நிலை ஏற்படும். அரசாங்கத்தால் மற்றும் நண்பர்களால் அனுகூலமான
பலன்கள் உண்டு. ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
மருத்துவ சிலவுகள் உண்டு.
கேது பகவான் ஜென்ம ராசியில்
சஞ்சரிப்பதால் , திடீர்
தனவரவு உண்டாகும். கௌரவம் ஓங்கும் . பெயரும் நர்மதிப்பும் உண்டாகும். குழந்தைகளின் கல்வியில் மேன்மை
உண்டாகும். வாகனங்கள் ஓட்டும்பொழுது மிகவும் கவனம் தேவை. வலுவான தசை புக்தி நடைபெறாத ஒரு சில நேயர்கள்
முயற்சிகள் தடைபடும், வீண்பகை உண்டாகும். உடல் ஆரோக்கியம் கெடும்.
|
கும்பம்
ராசி
|
ராகு 6ம் இடம்
கேது 12ம் இடம்
|
ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள்
ஏற்படக்கூடும்.
எதிரிகளால் தொல்லை மற்றும் காரியத்தடை உண்டாகும். அரசியலில்
உள்ளவர்கள் தங்கள் எதிரிகளால் பதவி இழக்கும் நிலை ஏற்படும். உறவினர்களுக்கு
குறிப்பாக மாமன் வகையில் உடல் பாதிப்பு ஏற்படும். கண்
சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தீயபழக்கங்களுக்கு அடிமையாகும்
நிலை உள்ளது . ஆகையால் மிக கவனம் தேவை.
12ம் இடத்திற்கு வரும் கேது பகவானால் உடல் அரோக்கியம்
பாதிக்கப்படலாம்.தீர்த்த யாத்திரை மற்றும் சித்தர்களின் தரிசனம் ஒரு சிலருக்கு
ஏற்படும். மனதில் அமைதி என்பது ஒரு சிலருக்கு கானல் நீராக அமையும். ஒரு
சிலர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய நேரிடும். தொழில் தொடர்பாக ஒரு சிலர் பிறந்த
ஊரை விட்டு செல்ல நேரிடும்.
|
மீனம்
ராசி
|
ராகு 5ம் இடம்
கேது 11ம் இடம்
|
மீன ராசி நேயர்கள் ராகு
பகவான் 5ம்
இடத்திற்கு வருவது நல்ல ஏற்றமான பலன்களை
தருவார் . பங்கு சந்தை ,
தரகு தொழிலில் யிடுபட்டுஉள்ளவர்கள் தொடர் லாபங்களை
பெறுவார்கள். ஒரு சில நேயர்களுக்கு புதிய நண்பர்கள் அமைவார்கள்.
கேது 11ம்
இடத்திற்கு வருவதால் செயும் தொழிலில் மேன்மை உண்டாகும். வேளையில் உள்ளவர்களுக்கு
பதவி உயர்வு தேடி வரும். நண்பர்களால் உதவி உண்டு. குடும்பத்தில் சுபீக்ஷமான நிலை
இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். வேலை தேடும் அன்பர்களுக்கு
வேலை கிடைக்கும்.
|
எந்த எந்த ராசி நேயர்களுக்கு
இந்த ராகு-கேது பெயர்ச்சி நன்மையான பலன்களை தரும்.
மேஷம் சிம்மம் கன்னி துலாம் தனுசு மற்றும் கும்பம் ராசிகளில் பிறந்த நேயர்கள்
அதிக நன்மையான பலன்களை பெறுவார்கள்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடை பெரும். வேலை வாய்ப்பு
இல்லாதவர்கள் புதிய வேலைவாய்ப்பை பெறுவார்கள். திருமணம் நீண்ட நாட்களாக தடை
பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் நடை பெரும். கணவன் மனைவி இடையே கருத்து
ஒற்றுமை காணப்படும் . குடுப்பதில் ஒற்றுமை ஓங்கி காணப்படும். செயும் தொழிலில் மேன்மை உண்டாகும். வேளையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும்.
நண்பர்களால் உதவி உண்டு. புதிய தொழில்
முயற்சிகள் வெற்றியை தரும். ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய நேரிடும். திடீர்
தனவரவு உண்டாகும். கௌரவம் ஓங்கும் . பெயரும் நர்மதிப்பும் உண்டாகும். குழந்தைகளின் கல்வியில் மேன்மை
உண்டாகும்.
ரிஷபம் , மிதுனம் , கடகம்,, விருச்சிகம் , மீனம் ராசி நேயர்கள் கெடுதலான பலன்களை அனுபவிக்க நேரிடும்
. ஆகையால் , தக்க பரிகாரங்களை
மேற்கொள்வது நலம்.
பரிஹாரம்
1.
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் செய்யப்படும்
ராகு கேது பரிகாரபூஜை மேற்கொள்ளலாம்.
2.
கும்பகோணம் அருகில் உள்ள
திருநாகேஸ்வரம் சிறந்த பரிகார தலமாக உள்ளது. ஞாயிறு கிழமை மாலை 4.30 மணிக்கு
தொடங்கி 6 மணி வரை பரிகார பூஜை மேற்கொள்ளலாம்.
3. திருவாரூர் மாவட்டம்,
குடவாசல் வட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் ஊரில் பரிகார பூஜை மேற்கொள்ளலாம்.
4. பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம்.
5. அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை காலை ராகு காலத்தில்
சுற்றி வந்து வழிபடலாம்.
6.தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு வடைமாலை சாத்தி
வழிபாடு செய்யலாம்.
ராகுவால் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் ராகு பகவான்அஸ்டோத்ரத்தை பாராயணம் செய்ய அவருடைய பேரருளால் நன்மையான பலன்களே நடைபெறும். ராகு அஸ்டோத்ரத்தைகேட்க கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.
கேதுவால் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கேது பகவான் அஸ்டோத்ரத்தைபாராயணம் செய்ய அவருடைய பேரருளால் நன்மையான பலன்களே நடைபெறும். கேதுஅஸ்டோத்ரத்தை கேட்க கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.





