Search This Blog

Showing posts with label venus mount and sunline essential for actor or actress. Show all posts
Showing posts with label venus mount and sunline essential for actor or actress. Show all posts

Tuesday, July 4, 2017

நீங்கள் நடிகராக அல்லது நடிகை ஆக வேண்டுமா ? உங்கள் கையில் வலுவான சுக்கிர மேடும் சூரிய ரேகையும் உள்ளதா ? sun line and venus mount for actor and actress in Palmistry



நீங்கள் நடிகராக அல்லது நடிகை ஆக வேண்டுமா

உங்கள் கையில் வலுவான சுக்கிர மேடும் சூரிய ரேகையும் உள்ளதா ?



பொதுவாக கலைத்துறையில் புகழ் பெயர் பணவரவு வேண்டும் என்றால் அவருக்கு வலுவான சூரிய ரேகை கையில் இருக்க வேண்டும். அந்த சூரிய ரேகை தெளிவாக , வலுவாக , குறுக்கீடுகளோ , துண்டுகளாவோ , தீவுகள் ஆக அமையக்கூடாது. மற்றும் சுக்கிர மேடு வலுவுடன் பலம் பெற்று காணப்படவேண்டும்.

சுக்கிர மேடு 


கட்டை விரலுக்கடியிலிருக்கும் சுக்கிர மேடு .சுக்கிர மேடு நன்றாக உயர்ந் திருக்க வேண்டும். அதன் மையப்பகுதி மேட்டின் அடிவாரத்தில் இருக்கக் கூடாது. புகழ்பெற்ற நடிகர், நடிகை, பாடகர், திரையுலக வல்லுனர் இவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும்.

புகழ் பெற்ற திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு அவர்கள் கையில் உள்ள அணைத்து விரல்களும் மிருதுவாகவும் சற்று சரிந்தும்  காணப்படும். . மேலும் சூரிய விரல் நீண்டும் தடித்தும் காணப்படும். மேலும் அவர்களது விதி ரேகை கையில் தீர்க்கமாய் அமைந்து இருக்கும்.

புகழ் பெற்ற நடிகர்களின் கையில் சூரிய ரேகை நீண்டதாகவும் , தெளிவாகவும் , குறுக்கீடுகள் இன்றியும் அமைந்துஇருக்கும்.

சூரிய அல்லது தன ரேகை
சூரிய மேடு என்பது மோதிர விரலிற்குக் கீழ் இருப்பது. . கை ரேகை சாத்திரத்தில் சூரிய ரேகை மிகவும் முக்கியமானது. . சூரிய ரேகை ஒருவருடைய புகழ், வசியம் என்பவற்றை குறிக்கும்.. சூரிய ரேகை ஒருவருடைய திற‌மையையும் ,வெற்றியையும் குறிக்கும். ஒருவருக்கு ‌ . ங்கு தடை இல்லாத சூரிய ரேகையும், நன்கு அமைந்த சூரிய மேடும் அமைந்தால் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக அமையும்.

பிரபல அரசில்வாதிகள் மற்றும் நடிகை நடிகர்கள் கையில் சூரிய ரேகை மற்றும் சூரிய மேடு  வலுத்து காணப்படும்.

முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா


அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கையில் மிகவும் வலுவான சூரிய மேடும் மற்றும் தான ரேகையும் காணப்படுகிறது. இதனால்தான் , இவர் கறுப்பினத்தவர் என்றாலும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜொலிக்க முடிந்தது. இவர் இரு தடவை அமெரிக்கா ஜனாதிபதியாக தேர்வு செய்யபட்டதற்கும் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கும் இதுதான் காரணம்.

எ ஆர் ரகுமான் கைரேகை


நடிகர் நடிகைகளின் கையில் சூரிய ரேகையில் நட்சித்திர குறி காணப்பட்டால் அவர்கள் உலகளாவிய புகழ் அடைவார்கள். ஆஸ்கர் போன்ற விருதுகள் இவர்களை தேடி  வரும். இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்ற எ ஆர் ரகுமான் கையில் நீண்ட , தெளிவான , குறுக்கீடுகள் அற்ற சூரிய ரேகை அமையந்துள்ளது. ரேகாவின் சூர்ய ரேகையும் விதி ரேகையும் மிகவும் தெளிவாக , வலுவுடன் , குறுக்கீடு இல்லாமல் அமைந்துள்ளது.

இந்தி நடிகை ரேகாவின் கைரேகை


ரேகாவின் சூர்ய ரேகை அவருடைய ஆயுள் ரேகையின் கீழிருந்து ஆரம்பிக்கிறது. மேலும் அவருடைய விதி ரேகை அவருடைய புத்தி ரேகையில் இருந்து ஆரம்பிக்கிறது. இத்தகைய அமைப்பு இவர் இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக திரைப்படத்துறையில் பிரகாசிக்க முடியவில்லை . 

இவருடைய நடுவயதிலிருந்து தான் இவருக்கு அதிர்ஷ்டம் கலைத்துறையில் கைகொடுத்தது. இவர் கலைத்துறையில் பெயரும் புகழும் பெற இவருடைய கையில் காணப்படும் வலுவான சுக்கிர மேடும் ஒரு காரணம். ரேகா அவர்கள் கையில் உள்ள தெளிவான புத்தி ரேகை அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையும் மனோதைரியத்தையும் தந்தது.

இந்தி நடிகை தீபிகா படுகோனே
 கைரேகை


நடிகை தீபிகா படுகோனே அவர்கள் உலக புகழ் பெற்ற இறகு பந்து விளையாட்டு வீரர் பிரகாஷ் படுகோனே அவர்களின் மகள் ஆவார். இவருடைய கையில் கலைத்துறைக்கு  கர்த்தாவான சுக்கிர மேடும் , சந்திர மேடும் மற்றும் குரு மேடும் வலுவுடன் காணப்படுகிறது. இவர் கையில் வலுவான தன ரேகை மற்றும் விதி ரேகை உள்ளதால் இவர் மாடலிங் செய்து பல கோடிகளை சம்பாதிக்க முடிகிறது.

வலுவான தன ரேகை அமையப்பெற்றுள்ளதால் , இவருக்கு இளமையிலே பணவரவு ஓகோ என்று ஆரம்பித்து அவர் முதுமை அடையும் வரை தொடரும் என்பதில் சிறிதளவு ஐயம் என்பது ஒன்று இல்லை.

இந்தி நடிகை ஐஸ்வரா ராய் கைரேகை


ஐஸ்வரா ராய் கையில் சுக்கிர மேடு மிகபலமுடன் காணப்படுகிறது. சுக்கிர மேடு ஐஸ்வரா ராயின் ஆயுள் ரேகை வரை பரவி கிடக்கிறது.

அவருடைய இருதய ரேகை மிகவும் நீண்டதாகவும் பலமுடன் காணப்படுகிறது . இத்தகைய அமைப்பு ராய் குடும்ப உறவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தருவார் என்பதை உணர்த்துகிறது.

வலுவான சூரிய ரேகை அவருக்கு பெயர் புகழ் பணம் போன்றவற்றை கொடுத்தது. உலக அழகி பட்டத்தை அடைய முடிந்தது. அமிதா பச்சனுக்கு மருமகளாக  வரமுடிந்தது..

அரசியலில் அல்லது கலைத்துறையில் புகழ் பெற கீழ் கண்ட கைரேகை அமைப்பு மிகவும் முக்கியம்.

  • ·      சுக்கிர மேடு நன்றாக உயர்ந்திருக்க வேண்டும். அதன் 
     மையப்பகுதி சுக்கிர மேட்டின் அடி பக்கத்தில் இருக்கக் கூடாது.

  • ·         சூரிய மேடும் அதன் மையமும் உயரமாக இருந்தால் தந்தை, அர சாங்கம் இவைகள் வழி சொத்துண்டு.


  • ·         சூரிய மேட்டில் திரிசூலம் நட்சத்திரக்குறி இருந்தால் லாட்டரி ரேஸ் , பரிசு குலுக்கல் போன்றவற்றின் மூலம் நிறைய பணவரவு ஏற்படும்.


  • ·  மணிக்கட்டிலிருந்து சூரிய மேடு வரை செல்லும் சூரிய ரேகை, கலை தொழில் வழியாக பெரும் செல்வந்தராகும் யோகத்தை காட்டுகிறது. மேலும் பெரிய அரசியில் தலைவர்களின் கையில் இது கண்டிப்பாக காணப்படும்.



  • · ஆயுள் ரேகையிலிருந்து ஒரு கிளை ரேகை சூரிய மேட்டை நோக்கிச் சென்றால். அந்த வயதில் கலைத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டு நிறைய தன வரவு ஏற்படும்.