Search This Blog

Thursday, May 18, 2017

உங்கள் ஜாதகத்தில் என்ன என்ன யோகங்கள் உள்ளன ? நீங்கள் யோகமுள்ளவரா ?


உங்கள் ஜாதகத்தில் என்ன என்ன யோகங்கள் உள்ளன ? நீங்கள் யோகமுள்ளவரா ?

ஜாதகத்தில் காணப்படும் 148க்கு-மேலான யோகங்கள் - ஒரு ஆய்வு

R V Sekar astrologer 09848915177 rvsekar2007@gmail.com


ஜோதிட சாஸ்திரம்  18 ரிஷிகளால் இயற்றப்பெற்றது. சூரியன் , பிரம்மன் , வியாஸர், வசிஷ்டர் , அத்ரி , பராசரர் , காசியபர் , நாரதர் , கர்கர் , மரீசி , உலோமெர், யவனர் , அகஸ்தியர் , காக புஜண்டர் போன்ற முனிவர்களால் ஜோதிட சாஸ்திரம் இயற்றப்பட்டது என்று கூறுவார்கள்.

ஜோதிட சாஸ்திரம் முதன் முதலில் ப்ரம்மவால் இயற்றப்பெற்று ,பின்னர் பிரம்மா நாரதர் ரிஷிக்கு உபதேசித்தார் என்று புராணம் கூறுகிறது. நாரதர் பின்னர் தன் சிஷ்யரான கர்கருக்கு உபதேசித்தார். பின்னர் கர்கர் ரிஷி தன் சிஷ்யரான பராசரருக்கு உபதேசித்தார். ஆக , ஜோதிட சாஸ்திரம் என்பது வழி வழியாக குரு தன் சிஷ்யருக்கு உபதேசிப்பதின் மூலம் தலை தலை முறையாக பரவ செய்யப்பட்டுள்ளது.


R V Sekar astrologer 09848915177 rvsekar2007@gmail.com


ஜோதிடத்தால் ஒருவரின் எதிர்காலத்தை பற்றி முன்கூட்டிய துல்லியமாக கூறிவிடமுடியும். உதாரணமாக ,கால சர்ப்ப யோகம் -லக்னமும் எல்லாக் கிரஹங்களும் ராகு கேது இவர்களின் மத்தியில் இருப்பது.     காலசர்ப்ப யோகத்தில் பிறந்தவர்கள் அனேக கஷ்டங்களை அனுபவித்து 33 வயதுக்கு பிறகு தன்னுடைய சுய உழைப்பினால் முன்னேறக்கூடியவர்கள்.

செல்வத்திற்கு எல்லாம் அதிபதி குபேர கடவுள் ஆவர். திருப்பதி வெங்கடாசலபதி குபேரனிடம் இணறலுவும் கடன் பட்டு வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு வருகிறார். குபேரனின் ஜாதகத்தில் கால சர்ப்ப யோகம் காணப்படுகிறது. 




பிளிப்க்கார்டை   வால்மார்ட்க்கு விற்பனை மூலம் ரூ 1,50,000 கோடிக்கு அதிபதியான இளைஞர்கள் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் ,  விபரீத ராஜ யோகம் இருந்ததால் தான் அவர்கள் ஒரே நாளில் 1,50,000 கோடிக்கு அதிபதிஆகும்  யோகத்தை அடைத்தார்கள் என்றால் அது மிகையாகாது. 


இந்த பதிப்பில் ஜாதகத்தில் காணப்படும்   148 ற்கு மேலான யோகங்களை பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளேன்


R V Sekar astrologer 09848915177 rvsekar2007@gmail.com
.


யோகத்தின் பெயர்
எந்த கிரஹத்தின் சேர்க்கையால் அல்லது பார்வையால் யோகம் ஏற்படுகிறது ?
யோகத்தின் பலன்கள்
1
தர்ம கர்மாதிபதி யோகம்
9க்கும் 10க்கும் அதிபதிகள் ஒன்று கூடுவதோ அல்லது பார்ப்பதோ அல்லது பரிவர்த்தனமோ உண்டெனில், இந்த யோகமாகும். 
நல்ல புத்திமான், பெரும் பதவி, பண வசதி பேரும் புகழும் உண்டாகும்
2
அஷ்டலஷ்மி யோகம்

இராகு 6ல் நின்று குரு கேந்திரத்தில் இருப்பானாகில் இந்த யோகமாகும்
எல்லாவித சுகங்களும் சந்தோஷங்களும் உண்டு.
3
அகண்டசாம்ராஜ்ய யோகம்;
2,9 அல்லது 11க்குடையவன் ஆட்சி உச்சம் பெற்று பலமாகி நின்று, குரு ஐந்துக்கோ அல்லது பத்துக்கோ அதிபதியாகிகேந்திரங்களில் இருந்தால் இந்த யோகமாகும்
தீர்க்க ஆயுள், நல்ல பணவசதி, பேரும் புகழும் உண்டாகும்.

4
குரு சண்டாள யோகம்
பிரஹஸ்பதிக்கு ராகு, கேது அல்லது சனியின் சேர்க்கை
ஜாதகன் மதப்பற்று இல்லாதவன். கடவுள் பேரில் நம்பிக்கை இல்லாதவன்.
5
வசுமதி யோகம்
சுபக்கிரகங்கள் உபசய வீடுகளில் (3,6,10,11) இருப்பது.
நல்ல பணவசதி பேரும், புகழும் பெரும் உத்யோகம்.
6
கால சர்ப்ப யோகம்
லக்னமும் எல்லாக் கிரஹங்களும் ராகு கேது இவர்களின் மத்தியில் இருப்பது.
காலசர்ப்ப யோகத்தில் பிறந்தவர்கள் அனேக கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய சுய உழைப்பினால் முன்னேறக்கூடியவர்கள்.
7
நீசபங்க ராஜயோகம்
கிரகங்கள் தம் நீச ராசியில் இருந்தால் நீசராவார். ஆயினும் இவர்கள் நின்ற ராசிநாதன் ஆட்சியோ உச்சமோ பெற்றாலும், அல்லது லக்னத்திற்கோ சந்திரனுக்கோகேந்திரத்தில் இருந்தாலும் நீசம் பங்கமாகி, 'ராஜயோகம்' வருகிறது.
இவர்களுக்கும் திடீர் சம்பத்துகளும் பெயரும் புகழும் உண்டாகும்.
8
விபரீத ராஜயோகம்
துர்ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6,8,12 அதிபதிகள் ஒன்று கூடியோ அல்லது தனித்தனியாகவோ 6,8,12 வீடுகளில் இருப்பது. 
இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள் ஏழையாய் இருந்தாலும் ஒருசமயத்தில் திடீரென நினைக்க இயலாதராஜயோகத்தை அடைந்து பணக்காரர் ஆகிவிடுவார்கள்.
9
சுனபா யோகம்
சந்திரனுக்கு இரண்டாம் இடத்தில சூரியன் ராகு கேது தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது
நிறைந்த அறிவு பெற்றவர்,  தன் சுய முயற்சியால் முன்னுக்கு வருபவர் , நிறைந்த புகழ் உடையவர் , பெரும் செல்வந்தராக இருப்பார்.
10
அநபா யோகம்
சந்திரனுக்கு பன்னிரண்டாம் யிடத்தில் சூரியன் ராகு கேது தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது 
தர்ம சிந்தனை மிக்கவர், பெரும் புகழ் உடையவர் , கம்பீரமான தோற்றம் , வசீகரிக்கும் உடல் அமைப்பு உடையவர்
11
கேம துரும யோகம்
சந்திரனுக்கு முன் மற்றும் பின்  வீடுகளிலும் கிரஹங்கள் இல்லாமலியிருப்பது
ஜாதகர் கடுமையான துக்கங்களை அனுபவிக்க நேரும்
12
துருதரா யோகம்
சந்திரனுக்கு இரண்டு பக்கங்களிலும் சூரியன் ராகு கேது தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது
உயர்தரமான வாழ்வு , மிகுந்த செல்வ சேர்க்கை , தலைமை தாங்கும் தகுதி
13
அமல யோகம்
லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் சுப கிரஹங்களான சுக்ரன் , குரு மற்றும் புதன் போன்ற கிரஹங்கள் அமைத்திருப்பது
பெரும் தனவந்தராகவும் , பெரும் புகழ் உடையவராகவும் , கலை துறையில் பேரும் புகழும் அடைவர்
14
அதி யோகம் 
சந்திரனுக்கு ஆறாம் , ஏழாம் மற்றும் எட்டாம் இடத்தில் சுபர்களான சுக்ரன் , குரு மற்றும் புதன் அமைய பெற்றுப்பது
அறிநர்களால் புகழப்படுபவர் , நேர்மை , நாணயம் யுடையவர் , பெரும் செல்வந்தர்
15
வாசி யோகம்
சூரியனுக்கு பன்னிரெண்டாம் இடத்தில் ராகு , கேது மற்றும் சந்திரன் தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது,
பேச்சு திறன் மிக்கவர் , செல்வாக்கு மிக்கவர் , செல்வந்தர்

16
வேசி யோகம்  
சூரியனுக்கு  இரண்டாம் இடத்தில் ராகு , கேது மற்றும் சந்திரன் தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது,
அதிர்ஷடக்காரர் , நினைத்ததை முடிக்கக்கூடியவர்
17
உபய சாரி யோகம்
சூரியனுக்கு முன்னும் பின்னும் ராகு கேது தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது
பெயரும் புகழும் யுடையவர்கள், சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்
18
கஜ கேசரி யோகம்
சந்திரன் குருவுடன் சேர்ந்து யிருந்தாலும் , அல்லது சந்திரன் குருவுக்கு 4,7,10 போன்ற கேந்திர ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும்  அல்லது சந்திரனை குரு பார்வையிட்டாலும்
ஜாதகருக்கு நற்பெயர் , தலைமை தாங்கும் ஆற்றல் , புகழ் , நல்குணம் , ஈகை , பெருச்செல்வம் , நுண்ணறிவு , உயர்கல்வி , உயர்ந்த குடும்பம் , இறந்தபிறகும் நிலைத்திருக்கும் புகழ் ஆகியவை ஏற்படும்.
19

ஜெய யோகம்
பத்தாம் அதிபதி உச்சம் பெற்றும் ஆறாம் அதிபதி நீச்சம் பெற்றும்  காணப்படுவது
நீண்ட ஆயுள் , எதிரிகளை வெல்லுபவர்  , பிரபல வழக்றிநகர் ஆக விளங்குவர் 
20
சகட யோகம்
குருவிற்கு 6,8,12 ல்  சந்திரன்அமையப்பெறுவது
வறுமையில் வாடுவார், எல்லா காரியங்கிலும் தோல்வி , வாழ்க்கையே போராட்டம் ஆக விளங்கும்
21
பந்தன யோகம்
ஆறாம் அதிபதியும் லக்கினாதிபதியும் ஒன்று சேர்ந்து சனிஉடன் கூடி  1,5,7,9,10 ல் யிருப்பது
பிறருக்கு அடிமையாக இருப்பார் , நீண்ட கால சிறை வாசம் அனுபவிப்பர்
22
நள  யோகம்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற  கிரஹங்களும் உபய ராசியான மீனம்  , மிதுனம் , கன்னி மற்றும் தனுசில் அமையப்பெறுதல் 
நாடோடியாக வாழ்வார் , அருவருப்பான தோற்றம் உடையவர்
23
மாத்ரு நாச யோகம்
சந்திரன் பாவ கிரங்களளுடன் கூடி யிருந்தாலும்  ,பாவ கிரஹங்களின் மத்தியில் அமையப்பெற்றாலும்
தாயின் ஆயுள் குறைவு
24
முசல யோகம்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற  கிரஹங்களும் ஸ்திர ராசியான ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிகளில் சஞ்சரிப்பது
ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி உடையவர் , அணைத்து துறைகளிலும் மேம்பட்ட அறிவு உடையவர், செல்வந்தராகவும் , தன்மான உணர்வு உடையவர்
25
ரஜ்ஜு யோகம்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற  கிரஹங்களும் சர ராசியான மேஷம் , கடகம் , துலாம் மற்றும் மகர ராசிகளில்அமையப்பெறுவது
வெளி நாடு சென்று பொருள் ஈட்டும் யோகம் , உயர்ந்த குறிக்கோள்களை யுடையவர்
26
பாச யோகம்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற  கிரஹங்கள் ஏதாவது 5 ராசிகளில் சஞ்சரிப்பது
நேர்மையான வழியில் செல்வம்ஈட்டுவராகவும் நீதி நெறிகளை பின்பற்றுவராகவும் இருப்பர்
27
வல்லகி யோகம்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற  கிரஹங்கள் ஏதாவது 7 ராசிகளில் சஞ்சரிப்பது
கலைத்துறையில் மற்றும் சங்கீத துறையில் பெயரும் புகழும் பெறுவார்
28
கேதார யோகம்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற  கிரஹங்கள் ஏதாவது 4 ராசிகளில் சஞ்சரிப்பது
பெரும் விவசாயீ , திரளான கால்நடைகளை பராமரிப்பார் , பூமி , வாஹனம் போன்ற தொழில்களை மேற்கொள்வர்
29
தாமினி யோகம்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற  கிரஹங்கள் ஏதாவது 6 ராசிகளில் சஞ்சரிப்பது
மிக்க அறிவு யுடையவர் , பகைவர்களை எளிதாக வெல்லக்கூடியவர் , தான , தர்மம் செய்வதில் விருப்பம் உடையவர்
30
௲ல யோகம்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற  கிரஹங்கள் ஏதாவது 3 ராசிகளில் சஞ்சரிப்பது
கேடி , மற்றும் பிரபல ரவுடி ஆவார்
31
கோல யோகம்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற  கிரஹங்கள் ஏதாவது 1 ராசியில் சஞ்சரிப்பது
ஜாதகர் தீமை குணம் நிறைந்தவர் ஆகவும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுபவராகவும் இருப்பர்
32
யுக யோகம் 
ராகு கேதுவை தவிர்த்து மற்ற  கிரஹங்கள் ஏதாவது 2 ராசிகளில் சஞ்சரிப்பது
சமுதாய நெறிமுறைகளை பின்பற்றாதவர், நல்லோர்களால் வெறுக்கப்படுவர் , சிறுமையான காரியங்களில் ஈடுபடுபவர்
33
விபரீத ராஜ யோகம்
·         6ம் அதிபதி  8இல்  அல்லது 12இல் யிருப்பது
·         8ம் அதிபதி  6இல்  அல்லது 12இல் யிருப்பது
·         12ம் அதிபதி  8இல்  அல்லது 6இல் யிருப்பது
சாதாரண குடும்பத்தில் பிறந்து பின்னர் ராஜ வாழ்வு வாழ்தல்
34
கால சர்ப்ப யோகம்
ராகு கேது பிடியில் எல்லா கிரகங்களும் அமைவது
32 வயது வரை சாதாரண வாழ்க்கை ., பின்பு நல்ல முன்னேற்றம் 
35
சந்திரா மங்கள யோகம்
சந்திரனுக்கு 1,4,7,10 செவ்வாய் அமையபெற்றிடுப்பது
நல்ல புகழ் , உயர்ந்த செல்வம் உண்டாகும்
36
சதுரச யோகம் 
எல்லா கிரகங்களும் 1,4,7,10 யில் அமைவது
ஆட்சி செய்யும் ஆற்றல், நல்ல புகழ்
37
நீச்ச பங்க ராஜ யோகம்
நீச்ச கிரகம் நின்ற ராசி அதிபதி ஆட்சி , யுச்சம் பெற்றிடுப்பது
பிறரால் செய்ய முடியாத சாதனை, ராஜ வாழ்வு வாழ்தல்
38
அகண்டசாம்ராஜ்யயோகம்
2ம் 5ம் அதிபதிகள் சந்திரனுக்கோ அல்லது லக்கினத்திற்கோ வலுவாக உள்ள நிலை
சாதாரண தொண்டனாக இருந்து பெரும் தலைவராக ஆகும் தன்மை
39
தேனு யோகம்
ஜாதகத்தில் 2ம் அதிபதியை சுபர் பார்வையிட்டாலும் சேர்க்கை பெற்றாலும்
நல்ல பேச்சாற்றல் , உயர் கல்வி , நல்ல அறிவாற்றல்
40
பரிவர்த்தனையோகம்
கிரஹங்கள் தங்கள் வீடு மாரி அமர்ந்திருப்பது உதாரணமாக விருச்சிகத்தில் குருவும் தனுஷில்  செவ்வாயும் பரிவர்த்தனை அடைந்து காணப்படுவது
பரிவர்த்தனை பெற்ற கிரஹங்களின் தசை மற்றும் புக்தி காலங்களில் ஜாதகருக்கு நற்பலன்கள் ஏற்படுகின்றது
41
முக்தி யோகம்
லக்கினத்திலிருந்து  12ல் ( மோட்ச ஸ்தானம் ) கேது அமையப்பெற்றால்
ஆன்மிக வாழ்வில் அதீத ஈடுபாடு , மறுபிறவி இல்லாத நிலை தீர்த்த யாத்திரை ஈடுபாடு
42
புஷ்கலா யோகம்
சந்திரனுக்கு சுபர் பார்வை ஏற்பட்டு லக்கினாதிபதி லாப ஸ்தானத்தில் அமையப்பெறுவது
நிலைத்த புகழ் , மற்றவர்களால் மதிக்கப்படும் தன்மை , பிறரிடம் அன்பு காட்டுதல்
43
ஸ்ரீ நாத யோகம்
லக்கினத்தில் இருந்து  4,7,10 ல் சுக்ரன் , புதன் மற்றும் சூரியன் இணைந்து காணப்படுதல்
நிறைந்த புகழ் , செல்வம் , செல்வாக்கு , ஆன்மிகத்தில் ஈடுபாடு
44
கனக யோகம்
சர லக்கினமாகி 5.10 திற்கு உரியவர்கள் கேந்த்ரா ஸ்தானங்களில் அமையப்பெற்றால் 
செல்வம் , செல்வாக்கு, நிலைத்த புகழ்
45
சக்கரவர்த்தி யோகம்
புதன் , சுக்ரன் , குரு ஜாதகத்தில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்று காணப்படுதல்
நாட்டை ஆளும் யோகம் , சிறந்த தலைவர் என்ற நற்பெயர்
46
விரின்சி யோகம்
குரு , லக்கினாதிபதி மற்றும் சனி  பலமுடன் காணப்படுதல்
நிலைத்த புகழ் , வலிமை , பேராற்றல்
47
ரவி யோகம்
சூரியனுக்கு இரு புறமும் ஷுப கிரஹங்கள் அமைவது
  உயர்ந்த சாதனை படைக்கும் திறன் , பெரும் புகழ் , திரண்ட செல்வம் 
48
சரஸ்வதி யோகம்
புதன் , குரு , ஷுக்ரன் கேந்திரத்திலிலோ அல்லது திரிகோணத்திலோ வலுவுடன் அமைய பெற்றுஇருந்தால்  
எழுத்தற்றால் , பேச்சு வன்மை , மந்திரி பதவி
49
வசுமதி யோகம்
பலம் பெற்ற 3,6,11ம் அதிபதிகள் அமையப்பெற்று காணப்பற்றால்
வலிமை , பேராற்றல். திரண்ட செல்வம் 
50
சங்க  யோகம்
5,6ம்  அதிபதிகள்  இணைந்து ஒரே வீட்டில் யிருந்தாலும் அல்லது ஒருவரையொருவர் சம சப்தமாக பார்வையிட்டாலும்
உயர் கல்வி , நல்ல அறிவாற்றல், பெரும் புகழ்
51
பூமி பாக்கிய யோகம்
4 ம் 9ம் அதிபதிகள் துஷ்டானங்களான  அமர்த்திருக்கக்கூடாது . நீச்சம் பெறக்கூடாது. பாபர்கள் சேர்க்கை பெற்றிருக்க கூடாது.
பூமி வாகன மற்றும் திரண்ட சொத்து சேரும்
52
ராஜ யோகம்
9ம் அதிபதி ஆட்சி பெற்று குருவின் பார்வை ஏற்பற்றிருந்தால்
வீடு வாகன யோகம் , திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு ஏற்படுகிறது
53
வரிஷ்ட யோகம்
சூரியனுக்கு 3.6.9.12 ல் சந்திரன்அமைப்பெறுவது
உயர்ந்த  அறிவு , நல்ல பழக்க வழக்கங்கள் , மனோ தைரியம் , செல்வாக்கு
54
லட்சுமி யோகம்
9ம் அதிபதி 9ல் ஆட்சி பெற்று காணப்படுவது
வீடு வாகன யோகம் , திரண்ட செல்வம்
55
தரித்திர யோகம்
9ம் அதிபதி 12 ல் மறைந்து காணப்பட்டால்
வறுமையான வாழ்வு , சொத்துக்கள் சேதாரம் ஆகும் நிலை
56
கலாநிதி யோகம்
குரு 2ல் 5ல் ஆட்சி உச்சம் பெற்று காணப்பட்டாலும் 
சுக்ரன் , புதன் , குரு 2,5,9 ல் அமர்ந்திருந்தாலும்
நாட்டை ஆளும் யோகம் , திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு
57
அந்திய வயது யோகம்
 1,2ம் அதிபதிகள் பரிவர்த்தனை அடைந்து காணப்பட்டாலும் , லக்கினத்தில் அமையப்பெற்றாலும்
இளமையில் வறுமை 50 வயதுக்கு மேல் செல்வந்தர்
58
பாப கத்திரி யோகம் 
சந்திரனுக்கோ , லக்கினத்திற்கோ இருபுறங்களிலும் பாபிகள்அமையப்பெறுவது
நிம்மதி இல்லாத வாழ்வு அமைகிறது
59
திரி லோசன யோகம்
செவ்வாய் , சூரியன் , சந்திரன் கேந்திர திரிகோணம் பெற்றுருந்தால்
திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு, எதிரிகளை வெல்லும் திறன்
60
அரச யோகம்
சந்திரன் லக்கினத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்று அப்படி பட்ட சந்திரனை குரு சுக்ரன்பார்வையிட்டால்
ராஜ வாழ்க்கை அமையும்
61
பர்வத யோகம்
லக்கினாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெறின் அல்லது லக்கினத்திற்கு கேந்திரம் பெற்று காணப்பட்டாலும்
பெரும் புகழ், திரண்ட செல்வம் ,
62
வசீகர யோகம்
சனி  புதன் மற்றும் சுக்ரன் ஒன்று சேர்ந்து காணப்பட்டால்
முக வசீகரம் , பிறரை எளிதாக வசப்படுத்த கூடியவர்
63
பிரம்மா யோகம்
சுக்ரன் கேந்திரத்தில் அமையப்பெற்று புதன் லக்கினத்திலோ அல்லது ஜீவன ஸ்தானத்திலோ அமைய வேண்டும்.
உயர் கல்வி , நல்ல அறிவாற்றல், பெரும் புகழ்
64
கௌரி யோகம்
ஜீவன ஸ்தானத்தில் லக்கினாதிபதியுடன் ஒரு உச்ச கிரஹம் அமையப்பெற்ற வேண்டும் 
உயர்ந்த  அறிவு , நல்ல பழக்க வழக்கங்கள் ,
65
காம யோகம்
களத்ர ஸ்தானத்தில் சுபர் வீற்றிருப்பதும் , ஏழாம் இடத்தை சுபர் பார்வையீடுவதும்
மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை , நல்ல மனைவி
66
சுமந்திர யோகம் 
லக்கினத்தில் கேது அமர , களத்திரஸ்தானத்தில் சந்திரன் அமர , லக்கினத்திற்கு எட்டில் சூரியன் அமரவேண்டும். 
கிராம சபை , ஊராட்சி  தலைவர்
67
மாருத யோகம்
3,6,11 ஆகிய எதாவுது ஒரு வீட்டில் ராகு அமர்ந்து சுபர் பார்வை ஏற்பட்டிருக்க வேண்டும்
பெரும் புகழ், திரண்ட செல்வம் ,
68
யவன யோகம்
இரண்டாம் வீட்டில் சுபர் அமையப்பெற்று 2க்கு உரிய கிரஹம் பலம் பெற்று காணப்படுவது
உயர் கல்வி , நல்ல அறிவாற்றல், பெரும் புகழ்
69
அசுபர யோகம்
லக்கினத்தில் சந்திரனும் குருவும் இனைந்து காணப்பட்டு , லக்கினாதிபதி ஷுப கிரகத்துடன் இணைந்து காணப்படுதல்
  40 வயதுக்கு பிறகு அரசியலில் யுயர்ந்த பதவி , புகழ்
70
நாக யோகம்
பாக்கிய ஸ்தானத்தில் குருவும் , 9ம் அதிபதி 7ல் அமையப்பெற்று , சந்திரன் சுபர் சம்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்
நல்லஅறிவாற்றல்,உயர் கல்வி , பெரும் புகழ்
71
சாமர யோகம்
லக்கினம் சர லக்கினமாக அமைந்து , குரு பகவான் கேந்திர ஸ்தானங்களில் அமையப்பெற்று , லக்கினாதிபதி  3,6,9,12 ஆகிய இடங்களில் எதாவது ஒன்றில் அமையப்பெறவேண்டும்
திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு, எதிரிகளை வெல்லும் திறன், அரசியலில் யுயர்ந்த பதவி
72
குரு சண்டாள யோகம்
ராகுவும் குருவும் இணைந்து மற்றும் ஒருவரை ஒருவர் பார்வை இட்டாலும்
திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு
73
கபட யோகம்
ஷுக ஸ்தானாதிபதி பாபர் உடன் கூடினாலும் 4ல் 4ஆம் அதிபதி ஆட்சி பெற்று காணப்பட்டாலும் 
ஜாதகர் கபடம் நிறைந்தவராக காணப்படுவர்
74
அஷ்ட லட்சுமி யோகம்
ராகு 6ல் அமைத்திருக்க எற்படுவது
ராகு தசை நடைபெறும்போது ஜாதகருக்கு திரண்ட செல்வம் சேருகிறது
75
லட்சுமி யோகம்
சுக்கிரன் 2 ,11 ல் அமர்த்திருக்க வேண்டும்
ஜாதகருக்கு சுக்கிர தசை நடைபெறும் பொழுது செல்வ சேர்க்கை உண்டாகும்
76
குபேர யோகம்
இரண்டாம் அதிபதி பாக்ய ஸ்தானத்தில் அமையப்பெற்றாலும் , இரண்டாம் வீட்டில்  9ம் அல்லது 11 ம் அதிபதி அமையப்பெற்றாலும்
 குபேரனுக்கு நிகராக செல்வ சேர்க்கை ஏற்படுகிறது
77
வெளி நாடு செல்லும் யோகம்
  9,12 ம் அதிபதிகள் மீனம் , கடகம் அல்லது மகரத்தில் அமையப்பெற்றால்,
9 , 12 ம் அதிபதிகள் பலம் பெற்று காணப்பெற்றாலும்

9 ,12 ம் அல்லது தசை புக்திகளில் ஜாதகர் வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படுகிறது
78
விஷ கன்னிகா யோகம்
ஒரு பெண் சனி, ஞாயிறு , செவ்வாய் கிழமைகளில் பிறந்து , கிருத்திகை , சதயம் , ஆயில்யம் நட்சித்திரங்களில் பிறந்திருந்தால்
அப்பெண்ணின் கணவனுக்கு உடல் நிலை பாதிக்கப்படும்  
79
ஸ்ரீ கட  யோகம்
அணைத்து கிரஹங்களும் திரிகோண ஸ்தானங்களில் இருப்பது
ஜாதகர் அரசாங்க பணி , சண்டை போடுவதில் விருப்பம் , நல்ல மனைவி , சந்தோஷமான வாழ்க்கை 
80
ரோககிரஹஸ்த யோகம்
லக்கினாதிபதி பலம் இழந்து 6,8,12 ல் அமர்ந்திருந்தாலும் , 6,8,12 கு உரியவர் லக்கினத்தில் அமர்ந்து யிருந்தாலும்
ஜாதகர் ஒல்லியாக , மெலிந்த தேகம் உடையவராக இருப்பார்.
81
அமாவாசை யோகம்
சூரியனும் சந்திரனும் இணைந்து காணப்படுவது
ஜாதகரின் வாழ்வே போராட்டமாக அமையும் . இதில் சந்திரனோ அல்லது சூரியனோ உச்சம் அல்லது ஆட்சி பெற்று காணப்பெற்றால் , நற்பலன்கள் உண்டாகும்
82
வீனா யோகம்
7கிரஹங்கள்  7ராசியில் அமையப்பெற்றிப்பது
நல்லஅறிவாற்றல்,உயர் கல்வி , பெரும் புகழ்
83
அரச கேந்திர யோகம்
கேந்திர ஸ்தானங்கிளில் உள்ள கிரஹங்கம்ள் யாவும் உச்சம் பெற்று காணப்படுவது
அரசியலில் யுயர்ந்த பதவி , புகழ்
84
அன்னதான யோகம்
2ம் அதிபதி பலமடைந்து புதன் அல்லது குரு சம்மந்தம் அடைந்திருப்பது
தொடர்ந்து அன்னதானம் செய்யும் யோகம்
85
கேதார யோகம்
7 கிரஹங்கள் 4 ராசியில் இருப்பது
தலை சிறந்த விவசாயீ
86
சதுரஸ்ஸ யோகம்
நான்கு கேந்திரங்களில் கிரஹங்கள் அமர்ந்திருப்பது
மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, அரசியலில் யுயர்ந்த பதவி
87
விமலா யோகம் 
12ம் அதிபதி 12ல் இருப்பது
பிறர்க்கு உதவி செய்யும் எண்ணம்
88
சாங்கியா யோகம்
லக்கினம் மற்றும் பாக்கிய ஸ்தானத்தில் ராகு, கேது தவிர மற்ற கிரஹங்கள் அமைந்திருப்பது
சாந்த சொரூபி , தர்ம காரியங்களில் ஈடுபாடு , திரண்ட செல்வம்
89
ராஜ யோகம்
கேந்திரதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் பரிவர்த்தனை அடைந்து காணப்படுவது
வீடு , வாகன யோகம் , மகிச்சியான குடும்ப வாழ்க்கை
90
பாக்கிய யோகம்
ஜீவன ஸ்தானத்தில் சுப கிரஹம் அமைந்திருப்பது மற்றும்  ம் அதிபதியின் பாக்கியாதிபதி  உச்சமோ அல்லது ஆட்சி பெற்று சுவரின் பார்வை பெற்றுயிருப்பது 
வாகன சுகம் , அழுகு , அறிவாற்றல்
91
 உப ஜெய யோகம் யோகம்
உப ஜெய ஸ்தனங்களான  3,6,10,.11 இடங்களில் சந்திரன் , புதன் , குரு , மற்றும் சுக்ரன் போன்ற சுபா கிரஹங்கள் அமையப்பெறுவது 
எல்லா காரியங்களிலும் வெற்றி , வசதியான வாழ்வு
92
லக்கின கர்மாதிபதி  யோகம் 
லக்கினாதிபதியும் ஜீவனாதிபதியும் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருக்க  வேண்டும்
ஜாதகர் சுய முயற்சியால் முன்னேறுவர்
93
அங்ககீன யோகம்
அயன சயன போக ஸ்தானாதிபதி கேந்த்ரா திரிகோண ஏறி ராகு பகவானுடன் சம்மந்தம் பெற்றுப்பது
ஜாதகர் அங்ககீனத்துடன் இருப்பார்
94
அசுர யோகம்
லக்கினாதிபதி ஸூபர் ருடன் கூடி யிருக்க , லக்கினத்தில் குருவும் மற்றும் சந்திரனுடன் கூடி இருத்தல்
  40 வயதுக்கு மேல் அரசியலில் ஈடுபடும் உயர்ந்த பதவி ஏற்படும்
95
சரள யோகம் 
அஷ்டமாதிபதி அஷ்டமத்தில் யிருப்பது
நீண்ட ஆயுள் , திறமைசாலி , உயர் பதவி , உயர் கல்வி
96
பாதாள யோகம்
12ம் இடத்தில சுக்ரன் அமையப்பெற்று  12ம் அதிபதி உச்சம் பெற்று  குருவுடன் சேர்ந்து காணப்பட்டால்
வாழ்வின் பின்பகுதியில் வசதியான வாழ்க்கை அமையப்பெறும்
97
சுமத்திர யோகம்
லக்கனத்தில் கேது அமையப்பெற்று  7ம் இடத்தில சந்திரன் அமையப்பெற்று சந்திரனுக்கு 8ல் சூர்யன் அமையப்பெறுவது
இளம் வயதில் யோக வாழ்க்கை ஏற்படும் . கிராம சபை அல்லது நகர சபை தலைவராக இருப்பர்
98
தன யோகம்  
·         லக்கினத்திற்கு 2,9 ,10 அதிபதிகள் இணைந்து காணப்படுவது
·         லக்கினத்திற்கு 2,5 ,6அதிபதிகள் இணைந்து காணப்படுவது
·         லக்கினத்திற்கு6,7,அதிபதிகள் பலம் பெற்று 2ம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றுப்பது 
செல்வ சேர்க்கை செய்யும் தொழிலால் ஏற்படும்
99
வசுமதி யோகம் 
சந்திரனுக்கோ அல்லது லக்கினத்திற்கோ 3,6.10.11 ல் ஷுப கிரஹங்கள் அமையப்பெறுவது
நல்ல செல்வ சேர்க்கை
100
கௌரி யோகம் 
சந்திரன் உச்சம் பெற்று குருவால் பார்க்கப்படுவது
நல்ல குடும்ப வாழ்க்கை , ஆன்மிகத்தில் நாட்டம்
101
சந்திர யோகம்
சந்திரனுக்கு 2ல் குருவும் சனியும் அமையப்பெற்றுப்பது
ஜாதகர் சுயநல வாதியாக யிருப்பர்
102
பிரபை யோகம் 
லக்கினாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து கேந்த்ரா ஸ்தானங்களில் அமையப்பெறுவது
வாழ்க்கையில் முற்பகுதியில் யோகத்தை அனுபவிப்பார். அரசியலில் ஈடுபாடு ஏற்படும்
103
இந்திர யோகம் 
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் அமையப்பெற்று , பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் லாபாதிபதி பரிவர்த்தனை அடையந்து காணப்படுவது
நல்ல புகழ் , மனோ தைரியம்
104
மாலா யோகம்
சந்திரனுக்கு 10ல் குரு அமையப்பெறுவது
அரசு பணி, செல்வ சேர்க்கை
105
பாரி ஜாத யோகம்
லாபாதிபதி ஆட்சி உச்சம் பெற்று காணப்படுவது
செல்வம் , செல்வாக்கு , நற்குணங்கள்
106
மஹாலட்சுமி யோகம்
பாகியாதிபதியும் , ஷுக்ரனும் 1,4,5,7,9, 10 ல் அமர இந்த யோகம் ஏற்படுகிறது 
திருமணத்திற்கு பிறகு செல்வ சேர்க்கை உண்டாகும்.உயர் பதவி வாகன வசதி ஏற்படும் 
107
காஹல யோகம்
சுபஸ்தானாதிபதி மற்றும் பாகியாதிபதியும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் அமைப்பெற்று லக்கினாதிபதி வலுவுடன் காணப்படவேண்டும்
ஜாதகர் பிடிவாதகராகவும் தைரியம் மிகுந்தவராகவும் காணப்படுவர்
108
களத்திர மூல தன யோகம்
இரண்டாம் வீடு அதிபதியை ஏழாம் வீட்டுஅதிபதி பார்வையிடுவது
மனைவி வழியில் திரண்ட செல்வ சேர்க்கை
109
மாத்ரு மூல தன யோகம்
இரண்டாம் வீடு அதிபதியுடன் நான்காம் வீட்டு அதிபதி சேர்ந்துஇருப்பது
தாய் வழியில் செல்வ சேர்க்கை உண்டாகும்
110
சதா சஞ்சார யோகம்
லக்கினாதிபதி சர ராசியில் அமையப்பெற்றிருப்பது
தொடர்ந்து தொழில் அல்லது வேலை நிமித்தமாக பிரயாணம் செய்வது , அதிக அலைச்சல்
111
வசீகர யோகம்
சனி , புதன் மற்றும் சுக்ரன் ஒன்று கூடி இருப்பது
ஜாதகர் முக வசீகரம் உடையராவாகும் , நிறைந்த அழகோடு இருப்பார்
112
அங்கீச யோகம்
குரு பகவான் உச்சம் பெற்று சந்திரனுக்கோ அல்லது லக்கினத்திற்கோ 5,7,9 ல் அமைதல் வேண்டும்
நீண்ட ஆயுள் , திரண்ட செல்வம்
113
உதாந்திரி யோகம்
2,5,9 ம் அதிபதிகள் லக்கினத்தில் ஒன்று கூடி அமையவேண்டும்
மகிழிச்சியான குடும்பம் , பிரபல வழுக்குரைஞர்
114
சௌரிய யோகம்
லக்கினத்திலோ அல்லது லக்கினத்திற்கு மூன்றிலோ சுப கிரஹம் அமைவது 
வசதியான வாழ்க்கை
115
ஆன்மிக யோகம்
சனியும் குருவும் எந்தவிடத்திலாவது சம்பந்த பெற்றிருப்பது சேர்க்கை பார்வை பரிவர்த்தனை
தெய்வீகம் மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு
116
புத ஆதித்ய யோகம்
சூரியனும் புதனும் ஒன்று கூடி இணைந்திருப்பது  1,4,8 ல் இருந்தால் உயர்ந்த பலன்கள்
நுண்ணிய அறிவாற்றல் , ஆராய்ச்சியில் ஈடுபாடு
117
இல்லற சந்நியாசி யோகம்
சனி வீட்டில் சந்திரன் இருப்பது அல்லது சனி தன் இரு வீடுகளில் ஒன்றை பார்ப்பது
இல்லற வாழ்க்கையில் ஈடு படு அற்ற தன்மை
118
படுக்கை சுக யோகம்
12கு உரிய கிரஹம் சுபர் சம்பந்தம் ஏற்பற்றிருப்பது 
கட்டில் சுகம் நிரம்ப உண்டு
119
பூமீ லாப யோகம் 
நான்காம் அதிபதி மற்றும் லக்கினாதிபதி பரிவர்த்தனை அடைந்து காணப்பட்டாலும் அல்லது நான்காம் அதிபதி பலம் பெற்று காணப்பெற்றாலும்
நிறைய பூமி மற்றும் சொத்து சேர்க்கை ஏற்படுகிறது
120
பந்து பூஜ்ய யோகம்
  4 ம் அதிபதி உச்சம் பெற்றோ அல்லது நடபு பெற்றோ குருவால் பார்க்க பெற வேண்டும்
உறவினர்களை ஆதரிக்கும் பண்பு
121
சுவீகார புத்ர யோகம்
கன்னி அல்லது மிதுன லக்கினமாக இருந்து 5ல் சனி , செவ்வாய் இருந்து  புதனின் பரிவை அல்லது சேர்க்கை ஏற்பட்டிருப்பது
ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லை சுவீகார புத்ரன் உண்டு
122
வாகன லாபயோகம்
4 கு உரிய கிரஹம் ஷுப கிரஹத்தினுடேன் கூடி 9ல் அமையப்பெற்றிருந்தாலும் அல்லது 9ம் அதிபதியுடன் கூடி  அமையப்பெற்றிருந்தாலும்
வீடு வாகனம்
123
சூரனாகும் யோகம் 
குழந்தை  இரவு பிறந்திருக்க வேண்டும் . செவ்வாய் லக்னோத்திலோ பத்திலோ அமர்ந்துஇருக்க வேண்டும்
ஜாதகர் வீர தீர பராக்கிரமசாலி
124
வீர்யம் குறைவு யோகம்
ஒற்றை படை ராசியாக லக்கினம் அமையப்பெற்று அங்கு சுக்ரன் அமையப்பெறவேண்டும்
மலட்டு தன்மை ஏற்படுகிறது
125
சர்ப்ப கண்ட யோகம்
2ல் மாந்தியுடன் ராகு கூடியிருக்க வேண்டும் 
பாம்பு கடிப்பதினால் மரணம் சம்பவிக்கும்
126
விமலா யோகம்
12ம் அதிபதி 12ல் இருப்பது
தொண்டு காரியங்களில் ஈடுபாடு உடையவர்
127
மகா பாக்கிய யோகம் 
ஆண் ஜாதகர்களுக்கு ஆண் ராசியில் சூரியன் சந்திரன்அமையப்பெற்றிப்பதும், பெண்  ஜாதகர்களுக்கு பெண்  ராசியில் சூரியன் சந்திரன்அமையப்பெற்றிப்பதும்
நாட்டிற்கோ அல்லது மாகாணத்திற்கோ தலைமை தாங்கும் குணம்
128
சகோதர லாப யோகம்
3ம் இடம் வலுப்பெற்று ,3 ம் அதிபதி வலுப்பெற்று, 3ல் ஸூபர் அமையப்பெறுதல்
சஹோதர்களால் மேன்மை உண்டாகும்
129
தீர்க்க தேக யோகம்
புதனுக்கு 7ம் இடத்தில செவ்வாய்    அமர வேண்டும்
திடகாத்திரமான உடல் வாகு அமையும்
130
சன்யாச யோகம்
கடக லக்கினத்தில் பிறந்தவர்க்களுக்கு ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரன் , சூரியன் , புதன் அமைதல் வேண்டும்
ஆன்மிக தலைவராகுவோ , மதத் தலைவரகுவோ இருப்பார்
131
மாத்ரு சாப புத்ர யோகம்
மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 5ல் பாபர் அமர சந்திரன் பாபர் நடுவிலோ அல்லது நீச்சம் பெற்றோ காணப்படுதல்  .
மாத்ரு சாபத்தால் புத்ர தோஷம் ஏற்படுகிறது
132
திரவிய நாச யோகம்
9ல் ராகு அமையப்பெற்றால்
பொருள் நஷ்டம் பெண்களால் ஏற்படுகிறது
133
அஷ்டலட்சுமி யோகம் :-
.

லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ 6 இல் ராகு இருந்து, குரு கேந்திரத்தில் இருத்தல் அஷ்டலட்சுமி யோகம்உண்டாகும்
சுகபோகமான செல்வாக்கான வாழ்கை அமையும்.
134
ஜடா யோகம் :-
லக்கனத்தில் உச்ச கிரககள் இருந்து அதை செவ்வாய் பார்க்க 3 இல் 9 அதிபதி இருதால் ஜடா யோகம் ஏற்படும்.
இந்த அமைப்பை உடைய ஜாதகர் இளம் வயதில் பெரும் செல்வந்தராக அடைவர்.செல்வாக்கு உயரும்.
135
மலா யோகம்
10 இல் சந்திரன் இருதால்:-
இந்த யோகத்திற்கு மலா யோகம் எனப்படும்.
இந்த அமைப்பை உடைய ஜாதகர் பெரும் செல்வந்தராக அடைவர்.சுகமான வாழ்கை அமையும்.அதிகாரம் செய்வதில் மிக திறமைசாலியாக இருப்பர் .
Top of Form
Bottom of Form

136
யாசக யோகம்;
லகினதிற்கு 1 இல் சந்திரன் இருக்க ,சனி கேந்திரத்தில் இருக்க,குரு 12 இல் இருக்க யாசக யோகம் உண்டாகும்.
இந்த அமைப்பு உடையவர்கள் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவார்கள்.6, 8 ,12,இல் லக்னாதிபதி இருந்தால் நாடு முழுவதும் திரித்து பிச்சை எடுத்து சாப்பிடுவார்கள்.
137
காம்ப யோகம் :
லகினதிற்கு 2 இல் குரு இருக்க,4 இல் சுக்கிரன் இருக்க, 7 இல் சந்திரன் இருக்க,லக்கினதிபதி சுபகிரகள் உடன் 
சேர்திருதால் காம்ப யோகம் உண்டாகும்.
மனைவி அல்லது கணவன் மூலம் பெருத்த லாபம் உண்டு.பணவசதி பெருகும்.பெயர் புகழ் செல்வாக்கு உயரும்.மேன்மையான வாழ்கை அமைவது உறுதி.
138
திரியோகம் :
லக்னத்திற்கு 7,8,9,10 ஆகிய இடங்களில் மட்டும் கிரகங்கள் தேறி நிற்க இச்சாதகனுக்கு திரியோகம் உண்டாகும் .
இந்த யோகம் உள்ளவர்கள் அவ்வமானம் தரும் காரியங்களைச் செய்வார்கள்.சோம்பல் உள்ளவர்கள்.நேர்மையற்ற தொழிலைச் செய்வார்கள்.பொதுமக்களிடம் அவமரியாதை பெற்றவர்.குலத்திற்கு தகுத்த தொழிலை செய்யமாட்டார்கள்.
139
பரவை யோகம் :
10 லோ அல்லது 4 லோ பெரும்பாலான கிரகங்கள் இருத்தால் பரவை யோகம் உண்டாகும் .
இந்த யோகத்தில் பிரதவர்கள் பல நாடுகள் சென்று வருவார்.ஞான மார்க்கம் அறிந்தவர் .சந்நியாசி என்று பெயர் பெறுவார் .
141
கோ-யோகம்
ஒரு ஜாதகத்தில் குரு தனதுமூலதிரிகோணத்திலும், 2 ம் அதிபதி அந்த குருவுடன் இணைந்தும் அமைந்து, லக்கினாதிபதி உச்சம் பெற்று நின்றால் அந்த அமைப்பிற்க்கு கோ-யோகம் என்று பெயர்.
உயர்ந்த குடியில் பிறந்தவராவார். அவரிடம் எக்கச்சக்கமான செல்வங்கள் குவிந்திருக்கும், அவர் அனைவராலும் மதிக்கப்படுவார்
142
மகுட யோகம் 
ஒரு ஜாதகத்தில் குரு லக்கினத்திற்க்கு 9ம் அதிபதி இருக்கும் இடத்தில் இருந்து 9ல் அமர்ந்து, அதே குரு இருக்கும் இடத்தில் இருந்து 9ல் ஒரு நல்ல கிரகம் அமைந்து,சனிலக்கினத்திற்க்கு 10ல் அமர்ந்தால்
மனித சமுதாயத்திற்க்கு மிகவும் சக்திவாய்ந்த தலைவனாக இருப்பார்கள். கெட்டவைகளை அழித்து நியாயத்தை நிலை நாட்டுவார்கள்.

பஞ்ச மஹாபுருஷ யோகங்கள்
143
மாலவ்ய யோகம்
சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது.
நல்ல தோற்றமுள்ள தேகமுடையவன், பேரும் புகழும் உள்ளவன். தனவான், வாகனங்கள் உள்ளவன். காமம் அதிகம் உள்ள ஜாதகன்
144
பத்ர யோகம்
புதன் ஆட்சி அல்லது உச்சத்தில் லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது.
கம்பீரத்தோற்றம், சபைகளில் பேசும் திறமை, நல்ல பணவருவாய்.
145
சசயோகம்
சனி பகவான் ஆட்சி உச்சங்களில் கேந்திரத்தில் நிற்பது
நல்ல படிப்பு, சொத்து, வாகனங்கள், பெரிய உத்தியொகம், ஆயினும் பொல்லாத குணம் உள்ளவன்.
146
ருசக யோகம்
அங்காரகன் ஆட்சி அல்லது உச்சத்தில் நின்று லக்னத்திற்கோ அல்லதுசந்திரனுக்கோ கேந்திரதிரிகோணங்களில் இருப்பது.
நல்ல பேரும் புகழும், தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை, உத்தரவுகளைப் பிறப்பிக்கும் பெரிய உத்தியோகங்கள்.
147
ஹம்ஸ யோகம்
குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது.
நல்ல பேருள்ள சீமான், பணவருவாய் உண்டு.
கிரஹ மாலிகா யோகம்
148
கிரஹ மாலிகா யோகம்

லக்கினத்தில் இருந்து தொடர்ந்து 7 ராசிகளில் இடைவிடாது ராகு கேதுவை தவிர மற்ற கிரஹங்கள் அமைவது
·         கீர்த்தி மாலிகா யோகம்- 1ம் வீடு முதல் 7ம் வீடு வரை
·         தன மாலிகா யோகம்- 2ம் வீடு முதல் 8ம் வீடு வரை
·         ரத்தனவாளி மாலிகா யோகம்- 3ம் வீடு முதல் 9ம் வீடு வரை
·         வேந்து மாலிகா யோகம்- 4ம் வீடு முதல் 10ம் வீடு வரை
·         பின் மாலிகா யோகம்- 5ம் வீடு முதல் 11ம் வீடு வரை
·         தரித்திர மாலிகா யோகம்- 6ம் வீடு முதல் 12ம் வீடு வரை
·         காம மாலிகா யோகம்- 7ம் வீடு முதல் 1ம் வீடு வரை
·         துர்பாக்கிய மாலிகா யோகம்- 8ம் வீடு முதல் 2ம் வீடு வரை
·         ஸுப மாலிகா யோகம்- 9ம் வீடு முதல் 3ம் வீடு வரை
·         கீர்த்தி மாலிகா யோகம்- 8ம் வீடு முதல் 2ம் வீடு வரை
·         விஜய மாலிகா யோகம்- 9ம் வீடு முதல் 3ம் வீடு வரை
·         அப தன மாலிகா யோகம்- 10ம் வீடு முதல் 4ம் வீடு வரை

அரசாளும் யோகம் ஏற்படுகிறது




திரண்ட செல்வம்






தான தர்மம் செய்வதில் நாட்டம்



தான தர்மம் செய்வதில் நாட்டம்






நற்பெயர் புகழ்






நற்பலன்கள் இல்லை






பெண்களை வைத்து தவறான தொழில் செய்பவர்கள்


நற்பலன்கள் இல்லை





ஆன்மிக ஈடுபாடு





நிறைந்த புகழ்







அனைவராலும் பாராட்டு பெருபவர்




நிறைந்த புகழ்
திறமைசாலி


4 comments: