சஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன? பரிகாரம் என்ன ?
சஷ்டாஷ்டகம் என்பது சமஸ்கிருத த்தில் ஷஸ்ட என்றால் 6 அஷ்டக என்றால் 8 அதாவது 6 க்கு 8 ஆக இருப்பது என்று பொருள்.
ஜோதிடத்தில் சஷ்டாஷ்டக தோஷம் என்று குறிப்பிடுவது எந்த ஒரு லக்னத்திற்கும் அந்த லக்கினத் தின் அதிபதி அதாவது லக்கினாதி பதி லக்கினத்திற்கு சத்ரு மற்றும் ருண ஸ்தானமான 6 ஆம் வீட்டில் அல்லது மறைவு ஸ்தானமான 8 ஆம் வீட்டில் இருப்பது சஷ்டாஷ்டக தோஷம் என்று அழைக்கப்படும்.
என்ன தீய பலன்கள் வாழ்வில் ?
இதனால் ஜாதகருக்கு பிறப்பு முதல் இறப்பு வரை தமது வாழ் வில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்திலும் ஏராளமான தடை மற்றும் தாமதங்கள் ஏற்படும் நிலை உண்டாகும். ஏற்றத்தாழ் வான வாழ்கை , எதிரிகளால் முன்னேற்றம் அடைய முடியாத நிலை , தாமத திருமணம் , திருமண வாழ்வில் சிக்கல் , நோயால் பாதிப்பு போன்ற அனுகூலமற்ற பலன்களே ஏற்படும்.
மேலும் இந்த தோஷத்திற்கு ஏராளமான விதிகளும் விதி விலக்குகளும் உண்டு.
சில விதி விலக்குகள் :
1.மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் லக்கின அதிபதி ஆகி அவரே 8 ஆம் வீடு ஆன விருச்சிக ராசி அதிபதி ஆவதால், இந்த 8 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பின் அங்கே செவ்வாய் ஆட்சி பெறுவதால் , அவருக்கு சஷ்டாஷ்டக தோஷம் இல்லை.
2.ரிஷப லக்கினத்திற்கு சுக்கிரன் லக்கின அதிபதி ஆகி அவரே 6 ஆம் வீடு ஆன துலாம் ராசிக்கும் அதிபதி என்பதால், அவர் 6 ஆம் வீட்டில் ஆட்சி பெற்று இருப்பின் அவருக்கு சஷ்டாஷ்டக தோஷம் இல்லை.
3.துலாம் லக்கினத்திற்கு சுக்கிரன் லக்கின அதிபதி ஆகி அவரே 8 ஆம் வீடு ஆன ரிஷபத்திற்கும் அதிபதி ஆக சுக்கிரன் இருப்பதால், சுக்கிரன் இந்த லக்கினத்திற்கு 8 ஆம் வீட்டில் ஆட்சி பெற்று இருந்தால் அவருக்கு சஷ்டாஷ்டக தோஷம் இல்லை. மேலும் 6 ஆம் வீடு ஆன மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவதால் அங்கு அவர் இருப்பினும் அவருக்கு சஷ்டாஷ்டக தோஷம் இல்லை.
4.விருச்சிக லக்கினத்திற்கு செவ்வாய் லக்கினாதிபதி ஆகி அவரே மேஷ ராசிக்கு அதாவது 6 ஆம் வீட்டுக்கும் அதிபதி ஆவதால் இந்த லக்கினத்திற்கு செவ்வாய் 6 இல் ஆட்சி பெற்று இருப்பின் சஷ்டாஷ்டக தோஷம் இல்லை.
5.தனுசு லக்கினத்திற்கு குரு 8 ஆம் வீட்டில் உச்சம் பெற்று இருப்பின் அவருக்கு சஷ்டாஷ்டக தோஷம் இல்லை.
6.எந்த லக்கினமாக இருந்தாலும் லக்கினாதிபதிக்கு அட்டமாதிபத் திய தோஷம் இல்லை. அதாவது லக்கினத்திற்கு அதன் அதிபதி 8 இல் இருப்பது ஆயுளுக்கு குறை பாடு இல்லை.
7.மேலும் லக்கினாதிபதிக்கு 6 ஆம் வீடு அல்லது 8 ஆம் வீடு நட்பு வீடாக இருக்கும் பட்சத்தில் இந்த தோஷத்தின் அளவு குறையும்.
8.மேலும் லக்கினாதிபதி 6 அல்லது 8 இல் இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருப்பின் இந்த தோஷம் விலகி விடும்.
சஷ்டாஷ்டகத்தின் விதிகள் :
இந்த விதி லக்கினத்திற்கு மட்டும் தான். ராசிக்கு சஷ்டாஷ்டக தோஷம் இல்லை. அதாவது லக்கினத்திற்கு ராசி 6 க்கு 8 ஆக இருப்பின் சஷ்டாஷ்டக தோஷம் இல்லை ஆனால் கடக லக்கினத் திற்கு மட்டும் இது பொருந்தாது. ஏன் எனில் சந்திரன் நிற்கும் வீடு தான் ராசி என்று அழைக்கப்படும்.
எவையெல்லாம் சஷ்டாஷ்டக தோஷத்தை தரும் ?
1.மேஷத்திற்கு செவ்வாய் 6 ஆம் வீடு ஆன கன்னி ராசி வீட்டில் இருப்பது
2.ரிஷபதிற்கு சுக்கிரன் 8 ஆம் வீடு ஆன தனுசு ராசியில் இருப்பது
3.மிதுனத்திற்கு புதன் லக்கினத்திற்கு 6 மற்றும் 8 ஆம் வீட்டில் இருப்பது
4.கடகத்திற்கு சந்திரன் 6 மற்றும் 8 ஆம் ராசியில் இருப்பது
5.சிம்மத்திற்கு சூரியன் 6 மற்றும் 8 இல் இருப்பது
6.கன்னிக்கு புதன் 6 மற்றும் 8 இல் இருப்பது
7. துலாத்திற்கு சுக்கிரன் 6 இல் இருப்பது
8.விருச்சிகத்திற்கு செவ்வாய் 8 இல் இருப்பது
9.தனுசுக்கு குரு 6 இல் இருப்பது
10.மகரத்திற்கு சனி 6 மட்டும் 8 இல் இருப்பது
11.கும்ப லக்கினத்திற்கு சனி 6 மற்றும் 8 இல் இருப்பது
12.மீனத்திற்கு குரு 6 மற்றும் 8 இல் இருப்பது
எந்த லக்கினமாக இருந்தாலும் லக்கினாதிபதிக்கு அட்டமாதிபத் திய தோஷம் இல்லை. அதாவது லக்கினத்திற்கு அதன் அதிபதி 8 இல் இருப்பது ஆயுளுக்கு குறைபாடு இல்லை.
மேலும் லக்னாதிபதிக்கு 6 ஆம் வீடு அல்லது 8 ஆம் வீடு நட்பு வீடாக இருக்கும் பட்சத்தில் இந்த தோஷத்தின் அளவு குறையும்.
பரிஹாரம்
1.லக்கினாதிபதி 6ல் இருப்பவர்கள் ஷஷ்டி தோறும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் நன்மையான கிடைக்கும்.
லக்கினாதிபதி 8ல் இருபவர்கள் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீ கால பைரவரை வழிபட்டால் மேன்மை உண்டு
மேலும் லக்கினாதிபதி 6 அல்லது 8 இல் இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருப்பின் இந்த தோஷம் விலகி விடும்.
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் ஆருடத்தின் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295
No comments:
Post a Comment