ரஜினிகாந் ஜாதகம்
என்ன சொல்கிறது ? ஜாதகப்படி அவருக்கு நாடாளும்
யோகம் யுள்ளதா ?
ரஜினிகாந்த்
மகர ராசி, திருவோணம் நட்சத்திரம், சிம்ம லக்கனம் கொண்டவர். ரஜினி ஜாதகத்தை இனி
அலசுவோம் .
ராகு
|
|||
குரு
|
ராசி
|
||
சந்திரன்
செவ்வாய்
|
லக்கினம்
|
||
சுக்கிரன்
புதன்
|
சூரியன்
|
கேது
சனி
|
சந்திரமங்கள
யோகம்
6ம் இடத்தில
செவ்வாய் உச்சம் பெற்று காணப்படுகிறார். மற்றும் சந்திரமங்கள யோகம் அமையப்பெற்று உள்ளது.
அதைச் ”சசிமங்கள” யோகம் என்றும் சொல்வார்கள்.
சந்திரமங்கள யோகம் பலன்
என்னவென்றால் ஜாதகனின் நிதி நிலைமை என்றும் வற்றாமல்
இருக்கும். எந்த வழியிலாவது பண வரவு இருக்கும். ஜாதகன் வசதியானவன். செல்வந்தன்.
அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், தீய கிரகமான செவ்வாய் சேருவதால் ஜாதகனுக்குப் பலவிதமான
மனப்போராட்டங்களும் கூடவே இருக்கும். ருண ஸ்தானமான ஆறாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு, ஜாதகனுக்குப் பலவிதமான பிரச்சினைகளைக்
கொடுக்கும். எதிரிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிம்ம லக்கினத்திற்கு அதி யோக காரர் செவ்வாய்
பகவான் ஆவார். ரஜினி ஜாதகத்தில் அதி யோக காரர் செவ்வாய் பகவான் உச்சம் பெற்று
சந்திரனுடன் சேர்ந்து l காணப்படுவது மத்யதரமான சந்திர மங்கள யோகத்தை
தந்துள்ளது.
கிரஹ மாலிகா
யோகம்
4ம் இடத்திலிருந்து
8ம் இடம் வரை தொடர்ந்து கிரஹங்கள்
அமைந்திருப்பது.
எண்ணிய இளகின்ங்
முதலெழு வீட்டில்
இடைவிடா மர்கிரஹ
மாலையென்ன
நண்ணிடனில் மாலை யோகம்
ரஜினி ஜாதகத்தில்
வலு பெறாத கிரஹ மாலை யோகம் அமையப் பெற்றுள்ளது.
சகட யோகம்
குருவுக்கு 6-8-12-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் பயம், பொருள் சேதம், நஷ்டம் ஏற்படும்.
யாரடா தம்பி கோளய் ஆரானுக்கு கீரார்
எட்டில்
பாரடா நிலவு நிற்க பயனிலா சகடயோகம்
கூறடா அழியும் செல்வம் குலப்புகழ் உற்றாரபெற்றொர் வேறடா வெறுப்பர் துண்பம் வேரூன்றும் வாழ்நாளெல்லாம் கதித்ததோர் ஆறெட்டாகில் கடினமாய் பலன் அற்பம்
பாரடா நிலவு நிற்க பயனிலா சகடயோகம்
கூறடா அழியும் செல்வம் குலப்புகழ் உற்றாரபெற்றொர் வேறடா வெறுப்பர் துண்பம் வேரூன்றும் வாழ்நாளெல்லாம் கதித்ததோர் ஆறெட்டாகில் கடினமாய் பலன் அற்பம்
சனி திசை 19 வருடங்களாக இருந்ததால் அவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. இம்மாதம், மே 31ம் (2017) தேதியுடன், ரஜினிகாந்த்துக்கு சனி திசை முடிவடைகிறது. பிறகு புதன் திசை
ஆரம்பமாகிறது.
ரஜினி காந்த்திக்கு புதன் தசை யோகம் தருமா?
ஸ்திர லக்னம் என்றழைக்கப்படுவதில் மிகவும் வலிமை
வாய்ந்தது சிம்மமே ஆகும். சிம்ம லக்னத்தில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டத்தோடு வாழ்க்கையும்
வளம் பெறும். சிம்ம லக்ன காரர்கள் எப்போதும் சுயம்புதான்.
பிறக்கும்போதே பல திறமைகள் உள்ளடங்கி இருக்கும்.சிம்மலக்கினக்காரர்கள் நல்ல
கம்பீரமான தோற்றத்துடன் இருப்பார்கள்
பலரையும் கவரக்கூடிய தோற்றமாக இருக்கும்.
சிம்ம லக்கினத்திற்கு பாதகாதிபதியான புதன் தசை ரஜினிக்கு
யோகத்தை தருமா?
புலிப்பாணி முனிவர் பாதகாதிபதி 11ம் இருந்து சரராசியில் பிறந்த ஜாதகனுக்கு தசை நடை பெற்றால் நன்மையான பலன்கள் ஏற்படாது என்று கூறுகிறார்.
சூடப்பா சரராசி
செனித்தபேர்க்கு
சுகமில்லை லாபாதி
பதியினாலே
ஆடப்பா
அகம்பொருளும் நிலமும்சேதம்
அப்பனே அரசரிட
தோஷமுண்டாம்
தேடப்பா
திரவியமு மளித்தாரானால்
திடமான அரிட்டமடா
தேடமாட்டான்
வீடப்பாகோணத்தில்
லிருக்கநன்று
விளம்பினேன் புலிப்பாணி
வினையைப்பாரே
|
சரராசியில் பிறந்த ஜாதகனுக்கு, பதினொன்றாம் இடத்திற்கதிபதியான லாபாதிபதியாலே சுகமில்லை. ஏனெனில் அவனது தசை காலத்தில் மனையும், பொருளும், நிலமும் சேதமாவதுடன் மன்னராலும் நஷ்டம் ஏற்படும். அவ்வாறன்றி நிறைந்த செல்வத்தை ஒருவேளை அளித்தாலும் கூட நோயுபாதை போன்ற அரிட்டங்களையும் தருவார். ஆனால் அவனால் நிறை தனம் தேட இயலாது. ஆயினும் திரிகோண ஸ்தானத்தில் (1,5,9) இருந்தால் நன்மையான பலன்களையே தருவேன் என்று புலிப்பாணி போகரருளாணையால் கூறினேன்.
ரஜினியின் ஜாதகத்தில்
பாதகாதிபதியான புதன் திரிகோண ஸ்தானமான 5ம் இடத்தில இருந்து தசை நடத்துவதால் தீமையான
பலன்களை தராது என்று கூறலாம்.
அரசியலுக்கு வருவாரா ?
ரஜினி
அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பதைத்தான் அவரின் ஜாதகம்
சொல்கிறது. தனிக்கட்சி தொடங்கத்தான் வாய்ப்பு அதிகம். 69 வயது 6 மாதங்களுக்குள் ரஜினியின் அரசியல் பிரவேசம்
இருக்கும்.
சிம்ம லக்கினத்திற்கு புத பகவான் 2ம் மற்றும் 11ம் அதிபதி அவர். மேலும் சிம்ம லக்கினத்திற்கு புதன்
பாதகாதிபதி ஆஹிறார். அவர் திரிகோணஸ்தானத்தில் இருந்து தசை நடத்த போகிறார். புதன்
தசை கண்டிப்பாக அவருக்கு யோகத்தை கொடுக்கும்.
ஆனால் புதன் பாதகாதிபதி என்பதாலும் , ரஜினி ஜாதகத்தில்
ராஜ யோகங்களோ , பஞ்ச மகா புருஷ யோகங்கொலோ
, கஜ கேசரி அல்லது தர்மகர்மாதிபதி யோகமோ
அமையாததால் , சகட யோகம் அமைந்துள்ளதால் ,அவரால் தமிழக
ஆட்சியை கைபபிடிப்பது என்பது கானல் நீராக அமையும்.
அன்புடன் ஆர் வீ சேகர்
No comments:
Post a Comment