Search This Blog

Thursday, August 10, 2017

உங்களக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா? உங்கள் ஜாதகத்தில் ஒரு கிரஹமாவது மூல திரிகோணம் அடைத்துள்ளதா ? Planets Moolathirigona Positions.


உங்களக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா? உங்கள் ஜாதகத்தில் ஒரு கிரஹமாவது மூல திரிகோணம் அடைத்துள்ளதா?  

Moolathiri Kona



காணொளியை காண கீழ்கண்ட லிங்கை அழுத்தவும் 

https://www.youtube.com/watch?v=oKfkItrk_Bs&list=PL-9JKp5CK10gVS1HscYPbIo-nVjpi2Giy&via=tb

மூல திரிகோணம் என்றால் என்ன ?

மூல திரிகோணம் என்பது ஒரு கிரகம் தன் கதிர் வீச்சுகளை நிலையாகவோ அல்லது அடர்த்தியாகவோ புவியின் மீது செலுத்தும் இடம் . அதனால் அவை நிச்சயம் ஆட்சி பெற்ற வீடாகவோ அல்லது உச்சம் பெற்ற வீடாகவோ இருக்க வேண்டும்.

ஒரு கிரகம் மூலத்திரிகோணம் அடைந்துஇருக்கிறது என்றால் அது மிகவும் பலம் பொருந்தி காணப்படுகிறது என்று அர்த்தம். அதாவது ஆட்சி ,உச்சம் நிலைகளை தாண்டி  மூலத்திரிகோணம் அடைந்த கிரகம் மிகவும் வலு பெற்றிக்கிறது என்று அர்த்தம்.

ஒரு மரத்திற்கு வேர்ப்பகுதி எப்படி வலுவை தருகிறதோ , அது போன்று , மூலத்திரிகோணம் அடைந்த கிரகம் ஒரு ஜாதகத்தை மிகவும் வலுவாக்குகிறது.
Moolathiri Kona

மூலத்திரிகோண ராசிகள் எவை?

கிரஹங்களின் மூலத்திரிகோண ராசிகள் எவை என்பதை கீழ்கண்ட அட்டவணை தெரிவிக்கிறது.

சூரியன்
சிம்மம்
சந்திரன்
ரிஷபம் 
செவ்வாய்
மேஷம்
புதன்
கன்னி 
குரு
தனுசு 
சுக்கிரன்
துலாம்
சனி
கும்பம் 
ராகுவிற்கு
கன்னி
கேதுவிற்கு
மீனம்

 புதன், சுக்கிரன்,செவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் சொந்தம். அந்த இரண்டு வீடுகளில் எது வேர்ப்பகுதியோ அதுதான் அந்த கிரகத்தின் மூலத்திரிகோணம் என்று குறிப்படுகிறது.


Moolathiri Kona

புதன் கன்னி ராசியில் இருந்தால் , அவர் ஆட்சி ,உச்சம் மற்றும் மூலதிரிகோணம் போன்ற மூன்று நிலைகளை அடைகிறார். நவகிரஹங்களில் புதனுக்கு மட்டும்தான் கன்னி ராசியில் இத்தகைய நிலை ஏற்படுகிறது.

கன்னி ராசியில்  உள்ள புதன் கிரகம் மிகவும் வலுவானது ஆகும். கன்னி ராசியில் உள்ள புதன் கேந்த்ர ஸ்தானங்களில் அமர்ந்தால் கேந்த்ர ஆதிபத்திய தோஷம் அடைந்து நன்மையான பலன்கள்  ஏற்படுவதற்கு தடை ஏற்படுத்துகிறார். 
Moolathiri Kona

மூலத்திரிகோணத்தில் இருக்கும் கிரகம் தங்களுடைய சொந்த காரியாலயத்தில் இருப்பதைப் போன்றது. அவைகள் கண்ணுறங்காமல்,  இரவு பகல் என்று பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும்.

மூலத்திரிகோணத்தில் இருக்கும் சுக்கிரன் ஜாதகருக்கு நல்ல மனைவியை ஏற்படுத்தித்தருவார். மூலத்திரிகோணத்தில் அமர்ந்த குரு  பகவான் ஜாதகருக்கு நல்ல பழக்க வழக்கங்களை தருவார் , தக்க நேரத்தில்  குழந்தை பாக்கியத்தையும் கொடுப்பார்.
Moolathiri Kona

மூலத்திரிகோணம் என்பது உச்சத்திற்கு ஈடானது மற்றும் வலுவானது.  சொந்த அலுவலகத்தில் அந்த அம  இருப்பதால்  வலிமையாக இருப்பதுடன், ஜாதகருக்கு  பல நன்மைகளையும் அள்ளித்தரும்!

ஒரு கிரகம் வர்கோத்தமம் பெறுவதைவிட, மூலத்திரிகோணம் பெற்றிருப்பது அதிக நன்மை தரும் . வர்கோத்தமத்தில்  கிரஹங்கள் தரும் பலன்கள் இறுமடங்காக இருக்கும்.. நன்மை  இரட்டிப்பாகும், தீய கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது கேடு பலன்களும்  இருமடங்காகும்.. ஆனால் மூலத்திரிகோணத்தில் உள்ள கிரகம் நண்மையான பலன்களே தரும்.

கிரஹங்களின் வலு

ஜோதிட மகரிஷி பராசரர் கிரஹங்களின் வலுவை பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறார்.
உச்சம்
100%
மூலதிரிகோணம்
75%
ஆட்சி
50%
நட்பு
25%
சமம்
12%
நீச்சம்/பகை
0%

உதாரணமாக ஆட்சி பெற்ற கிரகம் 50% நன்மை தருவர் . 50% தீய பலன்களை தருவார்.

பலம் பெற்ற கிரகம் கீழ்கண்டவாறு தீய பலன்களை தருவார்.
உச்சம்
0%
மூலதிரிகோணம்
12%
ஆட்சி
25%
நட்பு
50%
சமம்
75%
நீச்சம்/பகை
100%


கிரஹங்களின் உச்ச மூலதிரிகோணம் பலங்களை எப்படி அறிந்துகொள்வது?

Moolathiri Kona

பராசரர் ஹோரையின் படி ஒரு கிரஹதின் உச்ச பாகை என்பது 0 டிகிரி முதல் அந்த ராசியில் உச்சம் பெரும் டிகிரி வரை அந்த கிரகம் உச்சம் பெறுகிறது. உதாரணமாக , சூரியன் மேஷ ராசியில்  0 டிகிரி யிலிருந்து 10 டிகிரி வரை உச்சம் பெறுகிறது. ஆகையால் , சூரியன் மேஷ ராசியில் 10 டிக்ரீக்குள் காணப்பட்டால் அது உச்சம் பெறுகிறது. 11 டிகிரி முதல் 30 டிகிரி வரை சூரியன் இருந்தால் அது நட்பு என்று மட்டுமே எடுத்து கொள்ளப்படுகிறது. மற்ற கிரஹங்களின் உச்ச விபரம் கீழ்கண்ட அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம்.


உச்சம் அடையும் டிகிரி / நட்சத்திரம்

மேஷ சூரியன்
0 TO 10 டிகிரி வரை -அஸ்வினி முதல் 3 பாதம்
11 to 30 டிகிரி  வரை நட்பு
மேஷ செவ்வாய்
0 to 12 டிகிரி வரை மூலத்திரிகோணம் அஸ்வினி நட்சித்திரம் வரை
11 to 30 டிகிரி  வரை ஆட்சி
ரிஷப சந்திரன்
0 to 3 டிகிரி வரை உச்சம் கிருத்திகை 2ம் பாதம் மட்டும்
4 to 30 டிகிரி வரை வரை மூலத்திரிகோணம்
ரிஷப சுக்கிரன்

ராசி முழுவதும் ஆட்சி

ரிஷப கேது
ராசி முழுவதும் உச்சம்

மிதுன புதன்
ராசி முழுவதும் ஆட்சி

மிதுன ராகு
ராசி முழுவதும் மூலத்திரிகோணம்

கடக குரு
0 to 5 டிகிரி வரை உச்சம்- புனர்பூசம் 4ம் பாதம் பூசம் 1ம் பாதம்-
6 to 30 டிகிரி  வரை நட்பு
கடக சந்திரன்
ராசி முழுவதும் ஆட்சி

சிம்ம சூரியன்
0 to 20 டிகிரி வரை மூலத்திரிகோணம் மகம் பூரம் 1 2 ம் பாதம்
21 to 30 டிகிரி வரை ஆட்சி

கன்னி புதன்
0 to 15 டிகிரி வரை உச்சம்
16 to 20 டிகிரி வரை மூலத்திரிகோணம்
21 to 30 டிகிரி வரை ஆட்சி

துலா சனி

0 to 20  டிகிரி வரை உச்சம்
21 to 30 டிகிரி வரை நட்பு

துலா சுக்கிரன்
0  to 15 டிகிரி வரை மூலத்திரிகோணம்

16 to 30 டிகிரி வரை ஆட்சி
விருச்சிக  செவ்வாய்
ராசி முழுவதும் ஆட்சி

விருச்சிக  ராகு
ராசி முழுவதும் உச்சம்

தனுசு குரு
0 to 10 டிகிரி வரை மூலத்திரிகோணம்

11 to 30 டிகிரி வரை ஆட்சி
தனுசு கேது
ராசி முழுவதும் மூலத்திரிகோணம்

மகர செவ்வாய்

0 to 28 டிகிரி வரை உச்சம்
0 to 28 டிகிரி வரை சமம்
மகர சனி
ராசி முழுவதும் ஆட்சி

கும்ப சனி
0  to 20 டிகிரி வரை மூலத்திரிகோணம்

21 to 30 டிகிரி வரை ஆட்சி
மீன குரு
ராசி முழுவதும் ஆட்சி


Moolathiri Kona

பராசரர் ஹோரையின் படி கன்னி புதன் 16 to 20 டிகிரி வரை மூலத்திரிகோணம் அடைகிறது. ஆகவே, கன்னி ராசியில் புதன் எந்த டிகிரியில் உள்ளார் என்பதை பார்த்து பலன் சொல்வது அவசியமாகிறது.




புலிப்பாணி முனிவர்

 புலிப்பாணி முனிவர், திரிகோணத்தில் பாதகாதிபதி வலிமை இழப்பதாக சொல்கிறார். இதில் இருந்து திரிகோணம் ஜாதகருக்கு நல்ல வழிகாட்டியாகவும், தடைகளை தகர்க்கும் முன்னோர்களின் புண்ணியங்கள் என்றால் அது மிகையாகாது.

சூடப்பா சரராசி செனித்தபேர்க்கு
        சுகமில்லை லாபாதி பதியினாலே
            ஆடப்பா அகம்பொருளும் நிலமும்சேதம்
அப்பனே அரசரிட தோஷமுண்டாம்
தேடப்பா திரவியமு மளித்தாரானால்
திடமான அரிட்டமடா தேடமாட்டான்
வீடப்பாகோணத்தில் லிருக்கநன்று
விளம்பினேன் புலிப்பாணி வினையைப்பாரே

சரராசியில் பிறந்த ஜாதகனுக்கு, பதினொன்றாம் இடத்திற்கதிபதியான லாபாதிபதியாலே சுகமில்லை. ஏனெனில் அவனது பொசிப்பு காலத்தில் மனையும், பொருளும், நிலமும் சேதமாவதுடன் மன்னராலும் தோடம் ஏற்படும். அவ்வாறன்றி நிறைந்த செல்வத்தை ஒருவேளை அளித்தாலும் கூட நோயுபாதை போன்ற அரிட்டங்களையும் தருவார். ஆனால் அவனால் நிறை தனம் தேட இயலாது. ஆயினும் திரிகோண ஸ்தானத்தில் (1,5,9) இருந்தால் நன்மையான பலன்களையே தருவேன் என்று புலிப்பாணி போகரருளாணையால் கூறினேன்.

1, 5, 9 -ம் பாவ திரிகோண பலன்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் பாவங்களில்ஆட்சி பெற்ற கிரகங்கள் இருந்தால் அரசு உயர் பதவியும், சொகுசான வாழ்க்கையும் அமையும்.

திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில், உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தால் அரசனுக்கு இணையான வாழ்க்கை அமையும். அரசியலில் அழியாப் புகழ் கூடும்


 திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில் நட்பு, சமம் என்ற நிலையில் மூன்றிலும் கிரகங்கள் இருந்தால், நல்ல வாய்ப்புகள் தானாக வந்து உயர்வு தரும். முயற்சிக்கு உரிய பலன் கைமேல் கிடைக்கும்

 திரிகோண ஸ்தானமான, 1,5, 9 -ம் இடங்களில் பகை, நீசம் பெற்ற கிரகங்கள் இருந்தால், வாழ்க்கையே போராட்டமாக அமையும். கடின உழைப்பால் மட்டுமே தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில் சுப கிரகங்கள் இருந்தால் வெற்றிகரமான வாழ்க்கை அமையும். நினைத்ததையெல்லாம் சாதிக்க முடியும்.

லக்னத்தில்

லக்னத்தில் மட்டும் கிரகங்கள் இருந்தால் சொந்த உழைப்பில் முன்னேற்றம்நண்பர்கள், மனைவி மூலம் உதவிகள் பெற்று உயர்வு அடைவார்கள்.

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 - ம் இடத்தில் மட்டும் கிரகங்கள் இருந்தால்,  பிதுரார்ஜித சொத்துகள் வாயிலாகவோ தங்களின்  பிள்ளைகள்  மூலமாகவோ, அவர்களின் ஜாதகரின் சுயபுத்தியினாலோ உயர்வு அடைவார்கள்.
பாக்கிய ஸ்தானத்தில்

பாக்கிய ஸ்தானமான 9 - ம் இடத்தில் மட்டும் கிரகங்கள் இருந்தால், பிறருற்கு சேவை செய்வதன் மூலமாகவோஅப்பாவின் வழியாகவோ, தன்னுடைய கடின உழைப்பாலோதான் உயர்வு காண முடியும்.

சூரியன்

திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில் சூரியன் நின்று இருந்தால், அரசு வகையிலும், அரசியல், பொதுக் காரியங்கள், விசுவாசமான நபர்கள் மூலம் ஆதாயம் உயர்வு கிடைக்கும் 

சந்திரன்

திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில் சந்திரன் நின்று இருந்தால், தாய் வழியில் சொத்துகள், பெண்கள் வழியில் வருமானம், தன் சுய உழைப்பாலும் உயர்வு வரும்
குரு

திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில் குரு இருந்தால், கோயில், பொதுச் சேவை, வங்கி மூலம் ஆதாயம், பைனான்ஸ், முன்னோர் சொத்துகள் மூலம் சுகமான வாழ்க்கை அமையும்

சுக்கிரன்

திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில் சுக்கிரன் இருந்தால், கலைகளில் வருமானம், புகழ், பெண்கள் மூலம் ஆதாயம், திடீர் லாட்டரி யோகம், எதிர்பாராத அதிர்ஷ்டம், பிறரது பணம் வந்து உயர்வு தரும்.

சனி
திரிகோண ஸ்தானமான 1, 5 , 9 -ம் இடங்களில் சனி இருந்தால் வாழ்க்கையே பலவிதமான போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். எதுவும் அவ்வளவு எளிதாக அமையாது. நினைப்பது எதுவும் நடக்காமல் போனாலும், நடப்பது யாவும் நன்மைக்கே அமையும்.

ராகு கேது

திரிகோண ஸ்தானமான 1, 5 ,9 -ம் இடங்களில், ராகு, கேது இருந்தால் திடீரென முன்னேற்றம் அடைவார்கள்" .






3 comments: