உங்கள் கையில் மீன் சின்னம் உள்ளதா ? என்ன பலன் ?
மீன் சின்னம் உங்கள் கையில் எந்த மேட்டில் இருக்கிறது ?
உங்கள் கையில் மீன் மீன் சின்னம் இருந்தால் மலட்டுத்தன்மை அற்ற உடல் மற்றும் செல்வ சேர்க்கை யை குறிக்கிறது. கைரேகையில் , மீன் சின்னம் செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பரமான வாழ்கை ஜாதகரின் பிற்கால வாழ்க்கையில் நடைபெறும் என்பதை குறிக்கி றது. இருப்பினும் மீன் , சின்னம் உங்கள் கையில் எந்த மேட்டில் இருக்கிறது என்பதை வைத்து பலன் மாறுபடும்
சூர்ய மேட்டில் மீன் சின்னம்
சூர்ய மேட்டில் மீன் சின்னம் இருந்தால் அவர் புகழ் பெற்ற திரைப்பட நடிகர் அல்லது நடிகை , அரசியல் தலைவராக இருப்பர்.
புதன் மேட்டில் மீன் சின்னம்
புதன் மேட்டில் மீன் சின்னம் இருந்தால் , புகழ் பெற்ற கண்டுபிடிப்பார்களாக இருப்பார்கள் . திரைப்பட கதை ஆசிரியர் அல்லது புகழ் பெற்ற கதாஆசிரியர்கள் ஆக இருப்பா ர்கள். தங்கள் படைப்புகளால் கோடிக்கணக்கான பணத்தை வாரி குவிப்பார்கள்
குரு மேட்டில் மீன் சின்னம்
குரு மேட்டில் மீன் சின்னம் இருந்தால் தங்கள் அறிவாற்றலால் பெயர் , புகழ் , செல்வம் அடைவார்கள்.
சனி மேட்டில் மீன் சின்னம்
சனி மேட்டில் மீன் சின்னம் இருந்தால் அந்த நபர் ஜோதிடம் , மாந்திரீகம் , எதிர்காலத்தை உணரக்கூடியே ஆகிய துறைகளில் வல்லவராக இருப்பார்கள்.
சுக்கிர மேட்டில் மீன் சின்னம்
சுக்கிர மேட்டில் மீன் சின்னம் இருந்தால் அந்த நபர் தொழில் அதிபராக , திரைப்பட தயாரிப்பாளர் , புகழ் பெற்ற விவசாயி ஆக இருப்பார்கள்.
சந்திர மேட்டில் மீன் சின்னம்
சந்திர மேட்டில் மீன் சின்னம் இருந்தால் அந்த நபர் உலகம் சுற்றும் வாலிபராக இருப்பர். கதை ,கவிதை , புதிய கண்டுபிடிப்பு களில் ஈடுபட்டு பெரும் செல்வம் , புகழ் அடைவார்கள்.
செவ்வாய் மேட்டில் மீன் சின்னம்
செவ்வாய் மேட்டில் மீன் சின்னம் இருந்தால் , கட்டிட கட்டுமான துறையில் பெரும் புகழும் , செல்வமும் அடைவார்கள்.
மீன் சின்னம் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்ட சாலியே.!!!
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment