இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுணக் ஜாதகம் என்ன சொல்கிறது ?
ரிஷி சுணக் விருச்சிக லக்கினம் மேஷ ராசியில் பிறந்துள்ளார் .இவர் லக்கினாதிபதியின் தசையின் செவ்வாய் தசையில் சனி புக்தியில் சுக்கிரன் அந்திரத் தில் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ஆகியுள்ளார்.
நிலமெல்லாம் புறந்தருளும் ராஜ யோகம்
விருச்சிகமே லக்கினம் ஆகி மனை தன்னை சேய் நின்று பார்க்கில்
நிலமெல்லாம் புறந்தருளும் ராஜ யோகம் என்கிறது. இவரது ஜாதகத்தில் லக்கினாதிபதியான செவ்வாய் 10 இடத்தில திக்பலம் பெற்று லக்கணத்தையே பார்ப்பது இவருக்கு அந்நிய நாட்டில் நாடாளும் யோகத்தை தந்துள்ளது .
பாரத பிரதமர் திரு மோடி
பாரத பிரதமர் திரு மோடி விருச்சிகம் லக்கினம் மற்றும் லக்கினத்தில் செவ்வாய் . அதனால் நாடாளும் யோகம் பெற்றார்.
ராஜ கிரஹங்களான சூரியன் , மற்றும் செவ்வாய்
ஒருவர் நாடாளும் யோகம் பெற வேண்டும் என்றால் , ரிஷி சுணக் ஜாதகத்தில் ராஜ கிரஹங்களான சூரியன் , மற்றும் செவ்வாய் வலுபெறவேண்டும் ரிஷி சுணக் ஜாதகத்தில் சூரியன் 6ல் உச்சம் . பொதுவாக சூரியன் 3,6,11 ல் இருப்பது யோகத்தை தரும். செவ்வாய் 10ல் திக்பலம்.
தசாம்சம்
ரிஷி சுணக் ஜாதகத்தில் 10ம் இடத்தில செவ்வாய் ஆட்சி பெற்று ருசக யோகம் அமையப் பெற்றதா ல் , நாடாளும் யோகம் .
6 மற்றும் 10ம் அதிபதியான செவ்வாய் மற்றும் சூரியன் பரிவர்த்தனை -
பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தனது கிரக வலுவானது அதிகரிக் கிறது.இவை ஆட்சி பலத்திற்கு நிகரான பலத்தை அடைகிறது.
தர்மகர்மாதிபதி யோகம்
இந்த யோகம் நாடாளும் யோகத்தை தரும் . மேலும் வாழ்க்கையில் உயர்வு பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்.
மாத்ரு மூல தன யோகம்
ஒருவரது சுய ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதியும் நான்காம் வீட்டு அதிபதியும் சுப நிலையில் இணைந்து இருப்பது அல்லது பரஸ்பரம் பார்வை செய்து கொள்வது ஆகிய அமைப்புகளில் மாத்ரு தன யோகம் உண்டாகிற து.அதாவது ஒருவரது பெற்ற அன்னையின் மூலம் பெறப்படும் ஆசி மற்றும் பொருளாதார லாபத்தை அது குறிப்பிடுகிறது
அமாவாசை யோகம்
எதிரிகளுக்கு அஞ்சாத நிலை மற்றும் அனைத்து விதமான சுகபோகங்களை அனுபவிக்கும் யோகமும் ஏற்படும்.
சிவராஜ்ய யோகம் இவர் பேசும் வார்த்தைகள் 'கட்டளை வாக்கிய 'மாகவே அமைந்திருக்கும். அவர் சொன்னால் கேட்பதற்கும் பத்து பேர் காத்திருப்பார்கள் .அரசாங்க த்தில் சாதாரண அதிகாரி முதல் உயர் அதிகாரி வரை மந்திரி முதல் முதல்வர் வரை பதவி வகிக்கும் அமைப்பைப் பெறுவார். சிவராஜ யோகம் கொண்டவர்கள் சிவ வழிபாடு செய்வதன் மூலம் பல சிறப்புகளைப் பெறமுடியும்
குரு சந்திர யோகம்
. இந்த யோகம் அமையப் பெற்றவ ர்கள் தங்களுடைய 40 -வது வயதுக்கு மேல் புதிய தொழிலில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவா ர்கள். இந்த அமைப்பு பெற்ற அரசி யல் தொண்டர்கள் பலர் அரசியலி ல் 40 வயதுக்கு மேல் பெரிய பதவியில் அமர்ந்து புகழ் பெறுவார்கள்.ரிஷி சுணக் 42 வயதில் இங்கிலாந்து பிரதமர் ஆகி உள்ளார்.
வசுமதி யோகம்
சுபர்களான குரு ,சுக்கிரன் ,புதன் மூவரும் லக்கினம் அல்லது கேத்திரங்களில்ருந்து உபஜெய ஸ்தானங்களில் இருப்பது. ஜாதகருக்கு சொத்து , சுகங்களையும் , முன்னேற்றத் தையும் அளிக்கும்
அமலா யோகம்
ஜாதகர் வெளிநாடு செல்லும் பாக்கியத்தையும், தொழிலை கொண்டிருப்பர். இவர் இங்கிலாந்து நாட்டில் நிரந்திரமாக குடியேறியவர்.புதியவற்றை கற்றுக் கொள்ளும் ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருப்பர். நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.
தற்கால தசா புக்தி விபரம்
ரிஷி சுணக்கிற்கு தற்சமயம் லக்கினாதிபதியான செவ்வாய் தசையில் சனி புத்தியில் இங்கிலாந்து நாட்டு பிரதமர் ஆனார். செவ்வாய் 10 ல் திக் பலம் பெற்று தசை நடுத்துகிறார். லக்கினாதிபதி தசை ஜாதகருக்கு யோகத்தை கண்டிப்பாக யோகத்தை தரும்.
ரிஷி சுனக் எதிர்காலம் எப்படி இறுக்கும் ?
ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து பிரதமர் என்றால் , இவருக்கு பல எதிர்ப்புகள் கட்சிக்குள்ளும் , எதிர் கட்சிகலாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனாலும் இவர் இதை திறம்பட சமாளித்து திறமையாக ஆட்சி செய்வர் என்பது நிதர்சனம்.
பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் பணிச்சூழலும் எந்த வித மோதலும் இல்லாமல் மிகவும் இனிமையானதாக இருக்கும். இது வேலையை மகிழ்ச்சியாக மாற்றும்,
ரிஷி சுனக் ஒரு வளர்ந்து வரும் அரசியல் நட்சத்திரம். அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்து இருக்கிறது மேலும் இங்க்லாந்து அரசாங்கத்திலும் மற்றும் சர்வ தேச பிரச்சனைகள் உருவாகும்போது இன்னும் முக்கியமானவராக மாற வாய்ப்புள்ளது.
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , உங்கள் பிரச்சனைகளை ஜாமக்கோள் பிரசன்ன ஆருடத்தால் தெரிந்து கொள்ள , ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர்79047 19295
No comments:
Post a Comment