Search This Blog

Tuesday, January 17, 2023

ஜாதகத்தில் 6ம் அதிபதி 7ம் வீட்டில் இருந்தால் திருமண தாமதமா ?

 ஜாதகத்தில் 6ம் அதிபதி 7ம் வீட்டில் இருந்தால் திருமண தாமதமா ?

6ம் இடம் ருண மற்றும் சத்ரு ஸ்தானம்

ஜாதகத்தில் ஆறாம் இடம் என்னும் நோய்களை மற்றும் எதிரிகளை குறிப்பிடும் .வீண் தகராறுகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் திருமண வாழ்க்கை யில் பிரச்சனைகள் , கூட்டு வணிக ம் ஹயவற்றையும் குறிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் பாவம் சுத்தமாக இருந்தால், அந்த நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். சின்னச் சின்ன காய்ச்சல், ஜலதோஷம், வாயு தொல்லை தவிர பெரிய அளவில் நோய்கள் தாக்காது. மேலும் இவர்களுக்கு எதிரிகள் தொல்லை மிகஅதிகமாக இருக்கும்.

6ம் அதிபதி வலுக்க கூடாது

ஆறாம் பாவத்தில் எந்த கிரகமும் ஆட்சி, உச்சம் அல்லது நீச்சம் பெற்று இருக்கக்கூடாது. அதாவது 6ம் அதிபதி வலுக்க கூடாது. அப்படி இருந்தால் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகத்தின் நோய்கள் தாக்கும்.

ஆறில் அசுப கிரகம்

ஆறில் அசுப கிரகம் சூரியன், சந்திரன், குரு, புதன், சுக்ரன், இருந்தால் அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலி. இவற்றுக்கு மாறாக செவ்வாய், சனி, ராகு, கேது இருந்தால் உடலில் கெட்ட நீர், கெட்ட ரத்தம் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. எந்த நேரமும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டி வரும். இதனால் இல்லற வாழ்வு பாதிக்கும் நிலை ஏற்படும்.

6-ம் இடத்தின் அதிபதி 8, 12

6-ம் இடத்தின் அதிபதி 8, 12 ஆகிய இடங்களில் இருப்பதும், நீச்சம் பெற்று இருப்பதும் ஜாதகருக்கு நன்மையே செய்யும். திடீர் ராஜ யோகம் ஏற்படும். முயற்சிக ளில் வெற்றி கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் கை கூடும். ஒருவரு க்கு ஆறாம் பாவாதிபதி தசை அவரது வாழ்வு நாளில் நடக்கக் காமல் இருப்பதே நன்மை.

விபரீத ராஜ யோகம்

6-ம் இடத்தின் அதிபதி 8, 12 ஆகிய இடங்களில் இருப்பதும், அல்லது பரிவர்த்தனை பெறுவதும் அல்லது நீச்சம் பெற்று இருப்பதும் ஜாதக ருக்கு விபரீத ராஜ யோகத்தை ஏற்படுத்தும். திடீர் ராஜயோகம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எண்ணிய எண்ணங் கள் கை கூடும். லாட்டரி , பங்கு சந்தை , ஊக வியாபாரத்தில் திடீர் தனலாபம் , மற்றும் வெற்றிகளை தரும்.

போராடும் குணம்

லக்னத்திற்கு ஆறாம் அதிபதி ஜாதகருக்கு கடனையும்!,பகை, வியாதிகளை குறிக்க கூடியவர்.. அதேசமயத்தில் ஜாதகருக்கு போராட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தின் கொடுத்து ஜாதக ருக்கு தன்னம்பிக்கையை கொடுப்பவர்.

துலாம் லக்னம் துலாம் ராசி

துலாம் லக்னம் துலாம் ராசிக்கு குரு திசை அதாவது 6ம் அதிபதி தசை எதிரி போல் செயல்படும். தனுசு லக்னம் தனுசு ராசிக்கு சுக்கிர திசை அதாவது 6ம் அதிபதி தசைஎதிரி போல் செயல்படும்.. ஆறாம் அதிபதி தசா புத்தியில் ஜாதகர் அடக்கி வாசிப்பது மிக நன்மை தரும்.

6ம் இடத்தில பாபர்கள்

ஜாதகத்தில் லக்னத்திற்கு 6ம் இடத்தில் அல்லது ராசிக்கு ஆறாமிடத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு போன்ற பாபார்கள் இருக்கும் பொழுது இவர்களுக்கு நல்ல உடல் நலமும் ஆயுள் பலமும் உள்ளவர். இவர்கள் மிகுந்த தைரியசாலியாகவும் தன் உரிமையை எங்கும் எப்பொழுதும் விட்டுக்கொடுக்காத நபர்களாக இருப்பார்கள்..

தாமத திருமணம்

6ம் அதிபதி 7ம் இடத்தில் இருந்தா லும் , 7ம் அதிபதி 6ல் இருந்தாலும் ஆண் பெண் இருவருக்கும் திரும ணம் தாமதமாகிறது.அப்படியே திருமணம் நடந்தாலும் அது வெகு காலம் நீடிப்பதில்லை. கால தாமதம் மட்டுமே அல்ல .திருமண த்தின் முழு பலனும் கிடைக்காமல் போகலாம். இந்த பலன்கள் மற்ற பாவம் கிரகங்கள் திசை புத்தி அந்தரம் மற்றும் ஜாதகத்தில் மற்ற கிரஹங்கள் வலுவை பொறுத்து, கிரஹங்கள் சேர்க்கை , கிரஹங் களின் அமர்வு ஆகியவற்றை பொறுத்து அமையும்.

திருமணம் காலதாமதம் என்பது உறுதி அப்படியே திருமணமானா லும் திருமணத்தின் வாயிலாக அதாவது களத்திரத்தின் வாயிலாக காசு பணம் கிடைத்தாலும் நோய் நொடி கூடவே வந்து விடுகிறது என்பதை மறுக்க முடியாது. பல தடைகளை கடந்து திருமணம் நடக்கிறது. 6ஆம் அதிபதி திசை யில் திருமணம் நடக்காமல் இருப்பது மிகவும் நன்மை.

மீன லக்கினத்திற்கு சூரியன் 6ம் இடத்தில

உதாரணத்திற்கு மீன லக்கினத்தி ற்கு சூரியன் 6 ஆம் அதிபதி ஆவர். அவர் கன்னி ராசியில் 7 ஆம் வீட்டி ல் அமர்ந்துஇருந்தால் . சூரியன் 7 ஆம் வீட்டில் அமரும்போதெல்லா ம், இது திருமணத்தில் சில ஈகோ பிரச்சினைகளைக் கணவன் மனைவி இடையே கொண்டு வருகிறது மற்றும் இங்கே சூரியன் 6ம் இடமான சச்சரவுகள் மற்றும் மோதல்களின் வீட்டை ஆள்வதால், இது திருமணம் மற்றும் டதொழில் கூட்டாளிகளிகள் இடையே சில கடுமையான ஈகோ சண்டைகள் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. வாழ்க்கைத் துணையின் ஒவ்வொரு நடவடிக்கை பற்றிய விவரங்களைக் கண்டுபிடித்துத் தோண்டியெடுக்கும் குணம் கொண்டவர் என்பதால் , திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஒரு ஜாதகருக்கு 6ல் கேது குரு மறைவு. திருமணம் நடந்து பின்னர் பிரிவு ஏற்பட்டது

6ம் இடமும் தொழிலும்

6ம் இடத்தில பார்பார்கள் இருந்தா ல் , ஜாதகர் சொந்த தொழிலில் வெற்றி பெறக் கூடியவர்களாக/ சொந்தத் தொழிலில் இருக்கும் போட்டிகளை சமாளிக்க கூடியவர்கள்.

சூரியன் 6-ஆம் இடத்தில் இருந்தால்

சூரியன் 6-ஆம் இடத்தில் இருக்கும் பொழுது அரசாங்க வேலை கிடை ப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு.. சண்டை சச்சரவு வந்தால் பயப் படாத நபர்களாக இருப்பார்கள். அதிஷ்டம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். நல்ல நிர்வாகத் திறன் உடையவர்கள் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இவர்களுக்கு எப்பொழுதுமே இருக்கும்.

6ம் இடத்தில பாப கிரஹங்கள் - அதிக கடன்

ஆறாமிடத்தில் சூரியன் செவ்வாய் சனி ராகு இருக்கும் பொழுது ஆறாம் அதிபதி தசா புத்தியில் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் .. கடன் கிடைத்தாலும் கடனை அடைப்பதில் மிக சிரமமே.. வட்டி மேல் வட்டி கட்டி கொண்டே இருப்பார்கள். கடன் பெருகிக் கொண்டே இருக்கும்.. ஆறாம் இடத்திற்கு குரு பார்வை கிடைத்தால் ஓரளவு சமாளிக்கலாம்.

6ம் இடத்து அதிபதி நீச்சம் , அஸ்தங்கம்

ஆறாம் இடத்து அதிபதி நீசம் அஸ்தங்கம் பெறாமல் அல்லது பகை வீட்டில் இல்லாமல் இருக்கும் பொழுது மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் மிக சிறப்பாக இருக்கும்.

பராசர ஹோராவில் 6ம் அதிபதி 7ல் இருந்தால்

ஜாதகர் தனது உறவினர்களுடன் பகை கொண்டிருப்பார், ஆனால் மற்றவர்களுடன் நட்பாக இருப்பா ர், செல்வம் போன்ற விஷயங்க ளில் மிதமான மகிழ்ச்சியை அனுபவிப்பார்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க ஜாமக்கோள் ஆருடம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜாதகம் பார்க்க ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் என்னுடைய அலைபேசி மற்றும் whatsup No 7904719295



No comments:

Post a Comment