Search This Blog

Monday, January 2, 2023

கொரானாவில் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு உயிர் பிழைத்த ஜாதகர்

கொரானாவில் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு உயிர் பிழைத்த ஜாதகர்

கடக லக்கினம்

கடக லக்கினத்தில் பிறந்த ஜாதகர் இவர். இவருக்கு சுக்கிர தசை இப்போது நடைபெறுகிறது. சுக்கிரன் திசையில் புதன் புக்தி 22-1-2020 முதல் 22-11-2022 வரை நடை பெற்றது. கடக லக்கினத்திற்கு சுக்கிரன் 4 மற்றும் 11ம் அதிபதியாகி பாதகாதிபதி என்ற நிலையை பெறுகிறார். இங்கு சுக்கிரன் திரிகோண ஸ்தானமான 5 ம் இடத்தில் அமர்ந்தாலும் (சுபத்துவம்) பெற்றாலும் லக்கினத்திற்கு பாபி ஆன புதனுடைய சாரம் வாங்கி தசை நடத்தினார். மேலும் கடக லக்கினத்திற்கு 3 மற்றும் 12ம் அதிபதியான புதன் பாதகாதிபதியான சுக்கிரனுடைய சாரம் வாங்கி புத்தி நடத்தினார்.

கோமா நிலை

இந்த ஜாதகருக்கு சுக்கிர திசை புதன் புக்தி மிகவும் மோசமான பலன்களை தந்தது. கொரானா வில் கோமா நிலைக்கு தள்ளப் பட்டு உயூர் பிழைக்க வைத்தது. 3 நாட்கள் இவர் சுய நினைவு இழந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டு இருந்தார்.

பாதகாதிபதி திசையில் பாபி யின் புக்தி

இவர் இறந்து விட்டார் என்றே இவரது உறவினர்கள் கருதினா ர்கள். ஜாதகருக்கு பாதகாதிபதி திசையில் பாபி யின் புக்தி நடை பெற்றால் ஜாதகர் இறக்க நேரிடும் அல்லது இறப்புக்கு இணையான கண்டத்தை தரும் என்கிறது ஜோதிட நூல்கள்.

புலிப்பாணியின் கடக லக்கின பலன்

கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு

கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி

வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து

வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே

சீரப்பா திரிகோணம் மறிந்துநிற்க

சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு

கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா

கொற்றவனே நிலைசமயம் கூற்ந்துபாரே

பாடல் விளக்கம்

கடக லக்கினத்தில் ஜனித்த ஜாதகருக்கு, வெள்ளி என விளம்பும் சுக்கிராச்சாரியார்` மிகுதியான தீயபலன்களை த்தருவார். எவ்வாறெனில் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற இராவணன் மகனாகிய இந்திரசித்தும் இக்சுக்ராசாரியி னால் வகைதொகையாய் மாண்ட தையும் அறிவாயன்றோ? ஆயினும் இச்சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் சிவபரம்பொருளின் பேரருளினால் பெருந்தனம் வாய்க்கும். மற்றும் ரதம் முதலிய வாகன யோகமும் உண்டு. ஏனைய இடங்களில் இருப்பின் ஆகாது. இப்படிப்பட்ட ஜாதகரின் கிரக நிலை, திசாபுத்தி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்தறிந்து பலன் கூறுவதே சிறப்புடையது என்கிறார் புலிப்பாணி சித்தர்.

ஜாதகத்தில் ஆயுளை அறிவது எப்படி ?

எட்டாம் பாவம் என்பது ஜாதகரின் ஆயுள் பற்றி கூறுகிறது. ஆயுள் காரகன் சனி, ஜாதகரின் லக்னத் திற்கு பாதகம் செய்யும் பாப கிரக ங்களின் நிலையை வைத்துதான் ஒருவரின் ஆயுள் பற்றி கூற முடியும்.மனிதனுக்கு மரணமும், பிறப்புக்குரிய அனைத்து வேலைபாடுகளும் இந்த எட்டாம் பாவத்தில்தான் காண முடிகிறது

ஜாதகர்எப்படிஉயிர் பிழைத்தார் ?

லக்கினாதிபதியான சந்திரன் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்றுள்ளார். ஆயள் காரகர் மற்றும் அஷ்டமாதி பதி யான சனி பகவான் 3ம் இடத் தில் அமர்ந்து ஆயுளை விருத்தி செய்கிறார். பொதுவாக சனி பகவான் 3ம் இடத்தில இருந்தால் யோகமான பலன்களைதான் தருவார். மேலும் ஆயுள் காரகரான சனி பகவான் குருவுடன் சேர்ந்து இருப்பதால் சுபத்துவம் அடைகிறா ர்.

மரணத்திற்கு இணையான கண்டம்

குரு மாரக ஸ்தானமான 7 ம் இடத்தை பார்வை இட்டதும் , ஆயுள் காரகர் ஆன சனியுடன் குருபகவான் சேர்ந்து இருப்பதும் , கடகளனத்திற்கு பாபி யான புதன் 6ம் இடமான ருண , சத்ரு ஸ்தானத் தில் இருந்து புத்தி நடத்தியதால் ஜாதகர் மரணத்திற்கு விளிம்பில் சென்று மீண்டு உள்ளார்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் ஆருடத்தின் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295

May be an image of text that says "லக்கினம் ராகு கேது செவ்வாய் கொரானாவில் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு உயுர் பிழைத்த ஜாதகர் 03-01-1981 புதன் சூரியன் சந்திரன் சுக்கிரன் சனி குரு"

No comments:

Post a Comment