யோகம் யோகம் என்று அடிக்கடி கூறுகிறீர்கள் அவ்வாறு யோகம் அமையப்பெற்றவர்கள் யாரையாவது ஒருவரை கூறுங்களேன் ? யோக ஜாதகம் - உதாரண ஜாதகம்
பதில்
கீழ்கண்ட ஜாதக கட்டத்தை பாருங்கள் ،
ருசக யோகம்
இந்த ராசி கட்டத்தில் லக்கனத்தில் செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார் ۔செவ்வாய் 4க்கும் 11க்கும் அதிபதி ஆகி லக்கனத்தில் உச்சம் பெற்ற தால் ருசக யோகம் ஏற்பட்டுள்ளது சலியாத உழைப்பு தைரியம் திற மை இவைகள் ஏற்படும் ۔
லக்கணத்தில் செவ்வாய்
செவ்வாய் லக்கணத்தில் இருந்தா ல் நோஞ்சானாக நோயாளியாக இருக்க வேண்டும் ۔ஆனால் இவ ரோ பராக்கிரமசாலியாக திடகா த்திரமாக கட்டுமஸ்தாக உயிர் போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்۔ இதற்கு காரணம் கடகத்தில் உச்சம் பெற்ற குருவின் 7 ஆம் பார்வை ۔செவ்வா ய் ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்தால் கோபக்காரராக இருப் பார் இவரும் ரொம்ப கோபக்காரர் தான்۔
௨ச்சனை உச்சன்பார்த்தால் யோகம்
செவ்வாய் குரு உச்சம் பெற்று சம சப்த பார்வையுடன் இருப்பதே யோகம் அல்லவா۔ ௨ச்சனை உச்சன்பார்த்தால் யோகம் வேலை செய்யாது என்பர்۔ செவ்வாய் நின்ற ராசிநாதன் லக்னாதிபதி சனி பத்தில் உச்சம் பெற்றது இதற்கு காரணம்۔
தர்மகர்மாதிபதி யோகம்
9 மற்றும் 10ம் அதிபதியான புதன் சுக்கிரன் 10ல் சேர்க்கை - இதில் சுக்கிரன் ஆட்சி
தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் பாடல் வடிவில்
"சொல்லுமையா பாக்கியத்தோன்,
பத்தோன் கூடி சுகமாக வீற்றிருக்கும் பலனைக் கேளு!
எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு எவர்களுமே பணிவார்கள் இறைவன் போல !
தொல்லையில்லான் பல பேரை காக்க வல்லான் துணையாளர் பல பேரும் உண்டு பாரு!
வல்லவியா ஈஸ்வரியின் கடாட்ஷத்தாலே வளமையோடு வாழ்ந்திருப்பான் எந்நாளுமே!"
10ல் சுக்கிரன் ஆட்சி - மாளவ்ய யோகம்
மாளவியா யோகம் மகத்தானது. சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் ரிஷபம் அல்லது துலாமில் ஆட்சி யோ, மீனம் ராசியில் உச்சமோ பெற்றிருந்து அது கேந்திர ஸ்தான வீடுகளான 1,4,7,10 ஆம் இடமாக அமையப்பெற்றால் அந்த ஜாதக ருக்கு மாளவியா யோகம் அமையு ம். ஜாதகருக்கு யோகமான வாழ்வு , சொந்த வீடு , வாகன யோகம் அமையப்பெறுகிறது.
சனி உச்சம் - சச யோகம்
சச யோகத்தில் பிறந்தவர்கள் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, புகழ், நல்ல வேலையாட்கள், செல் வம் ஆகியவற்றை உடையவர்கள். மக்களிடையே உள்ள செல்வாக்கு காரணமாக ஒரு கிராமம் அல்லது நகரத்திற்கு தலைவராக பதவி வகித்து வருவார்கள். தன்னைப் பெற்ற தாயிடம் எப்போதும் பணிவாக நடந்து கொள்வார்கள். நீண்ட ஆயுள் . நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை குடும்பத்திற்காக சேர்த்து வைப்பார்கள்.
குரு , செவ்வாய் , சனி உச்சம்
ஒரு ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்ப ட்ட கிரகம் உச்சம் பெற்றால் என்ன பலன் ?- ஜாதக அலங்கார பாடல்
உள்ளதொரு கிரகம் உச்சமேவில் கிராமணியாம்
உபயம்உச்சம்பெறின்பலவூர்க்கிராமணியுமாவான்
தெள்ளியதோர் ஒரு மூன்று கிரகம் உச்சமானால் செங்கோல் மன்னவனாகிசிறிது அவனிபுரப்பன்
நள்ளியதோர் ஈரிரண்டு கிரகம் உச்சமானால்
நவிலொரு மண்டலந்தனக்கு நாயகமேயாகும்
புள்ளிசெறிஓரைந்துகிரகம் உச்சமானால்
பூலோக நாயகமாம் எனப்பலரும்புகழ்வர்தாம
மூன்று கிரகங்கள் உச்சமாகி இருந்தால்நாட்டுத் தலைவனாக ஆட்சி செய்வான்
நீசபங்க ராஜயோகம்
சுக்கிரன் ஆட்சி۔ சந்திரன் நீசம் பெற்று தானாதிபதி செவ்வாய் உச்சம் பெற்றதால் நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டுள்ளது۔ பல யோகங்களை உள்ளடக்கிய இந்த ஜாதகர் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து பெரிய காவல்துறை அதிகாரியாக வலம் வந்து நிலம் வீடு வாகனம் அதிகாரம் செல் வாக்கு ஆகியன பெற்று வாழ்வத ற்கு ஜாதகத்தில் உள்ள யோக பலனே காரணம் என்று கூறலாம்۔
நன்றி - Sundaram Dharam
உங்கள் ஜாதகத்தை விரியவாக அலச , ஜ்மாகால் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வு பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment