Search This Blog

Wednesday, July 12, 2023

கர்ணனை போல் தான தர்மங்களில் சிறந்து விளங்க ஜாதகத்தில் 12ல் புதன் அமையவேண்டும் 12ல் ஆட்சி உச்சம் வர்கோத்தமம் பெற்ற புதன் தரும் யோகம்

 கர்ணனை போல் தான தர்மங்களில் சிறந்து விளங்க ஜாதகத்தில் 12ல் புதன் அமையவேண்டும் 

12ல் ஆட்சி உச்சம் வர்கோத்தமம் பெற்ற புதன் தரும் யோகம் - 

இந்த ஒரு நிமிட காணொளியை முழுமையாக பாருங்கள் 

https://youtu.be/_4sBkrYScwE




ஒருவர் மகாபாரத கர்ணனைப் போன்று பெரிய கொடை வள்ளலாக இருக்க வேண்டாம். ஆனால் சிறிதளவாவது தர்மம் செய்யும் குணம் இருந்தால் தான், அந்த மனிதனுக்கு தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 12-ம் வீட்டில் புதன் அமையப்பெற்றவர், கண்டிப்பாக தர்ம காரியங்களில் பொருளுதவி செய்யும் எண்ணம் கொண்டவராக இருப்பார் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. குறிப்பாக 12-ம் வீட்டில் புதன் ஆட்சி பலமோ, உச்ச பலமோ இருந்தால் அல்லது வர்க்கோத்தம அம்சமாக இருந்தால் அந்த ஜாதகருக்கு இயற்கையாகவே தர்ம காரியங்களுக்கு பொருளுதவி செய்வதில் ஆர்வம் இருக்கும். அதன் மூலம் அவருக்கு தெய்வ பலம் உண்டாவதும் நிச்சயம்.

ஜோதிடத்தில் 12-ம் வீடு மறைவு ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒருவரது ஜாதகத்தில் 12-ம் வீடு மற்றும் 3, 6, 8 ஆகிய வீடுகள், மறைவு பெற்ற வீடுகள் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. அதே நேரம் மறைவு பெற்ற இடத்தில் புதன் இருந்தாலும், அந்த நபருக்கு தர்ம காரியங்கள் செய்யும் அளவுக்கு ஏதாவது ஒரு விதத்தில் புதன் பகவான் பொருளைக் கொடுத்துக் கொண்டே இருப்பார் என்றும் ஜோதிட சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. ஒருவருக்கு வாழ்வு தருகிற வசதியை, மறைந்த ஸ்தானத்தில் இருந்தாலும் புதன் தந்து கொண்டே இருப்பார்.


புதன் பலம் பெற்று அமைந்த ஜாதகர், சிறந்த பண்புகள் நிறைந்தவராகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையிலும் இருப்பார். அவருக்கு தெய்வீக விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். ஒருவரது ஜாதகத்தில் 12-ம் வீட்டில் புதன் இருந்து, அதுவும் பலம் பெற்றிருந்தால் அந்த நபர் தர்ம காரியங்கள் செய்து புகழ் சேர்ப்பார். அவருக்கு மகாவிஷ்ணுவின் பரிபூரண அருள் எப்போதும் இருக்கும்

மனிதனின் சுண்டு விரலுக்கு அடிப்பாகம் தான் புதன் மேடு என்று, கைரேகை சாஸ்திரம் குறிப்பிடுகிறது. புதன் மேட்டில் செங்குத்து ரேகை அமைந்தவருக்கு அளவற்ற செல்வம் உண்டாகும். கையில் அமைந்த புதன் மேடு உப்பலாகவும், ரோஜா வண்ணத்திலும் அமையப் பெறுவது சிறந்த யோகம். அந்த நபர் திருமாலை வணங்கும் குணம் கொண்டவராகவும், தாய்மாமனுக்கு பிரியமானவராகவும் திகழ்வார்.


No comments:

Post a Comment