Search This Blog

Sunday, December 17, 2023

திருநள்ளாறு வாக்கிய பஞ்சாங்க மிதுன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023 -20...


மிதுனம்:

திருநள்ளாறு சனி பெயர்ச்சி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5-20 மணிக்கு மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

சனி பகவான்  மிதுன ராசிக்கு   ஒன்பதாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகி அங்கு  இன்னும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்யவிருக்கிறார்.

பொதுவாக  ஒன்பதாம் வீடு  தகப்பனார், தீடீர் தனவரவு  மற்றும் தெய்வீக ஈடுபாட்டை  குறிக்கும். சனி தனது சொந்த வீடான கும்ப ராசியில், மூலத்திரிகோண ராசியில் சஞ்சாரம் செய்வது  மிதுன ராசி நேயர்களுக்கு  அதிர்ஷ்டத்தை அளிக்கும்.  அஷ்டம வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் பொழுது விவரிக்க முடியாத கஸ்டங்களை சந்தித்து இருப்பீர்கள். அவை அனைத்தும் இப்பொழுது முடிவிற்கு வருகிறது.



மிதுன ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில் மிதுன  ராசிக்கு  சனி 9ம் ஸ்தானமான பாக்கிய ஸ்தானமான  இருப்பதும் , ராகு 10ல் இருப்பதும் கேது 4 ல் இருப்பதும் குரு  11ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   12ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மை தரும்.. சனி 9ல்  கோச்சாரத்தில் இருப்பது அற்புதமான பலன்களை மிதுன ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். கேது 4ல் இருப்பதும் குரு 12 ம்  இடத்திற்க்கு வர இருப்பதும் சுமாரான பலன்களை தரும், ஆகையால் மிதுன   ராசி நேயர்கள் கேது மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

மிதுன   ராசி நேயர்கள் 80 சதவீதம்  யோகமான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். எதிர்பாராத தன லாபங்கள் மற்றும் செல்வ சேர்க்கை உண்டாகும். மிதுன  ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில்  யோகமான பலன்கள் நடக்க இருக்கிறது.

மிதுன ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே நடைபெறும்.

மிதுன ராசி நேயர்களுக்கு அஷ்டமத்து சனி முடிவுக்கு வரப்போவதால்  இது நாள் வரை மிதுன ராசிக்காரர்கள்  அனுபவித்த கஷ்டங்கள் தீரப்போகிறது. பொருளாதார நெருக்கடிகள் நீங்கி தாராள பணவரவு ஏற்படும்.. தீராத நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு விடிவுகாலம் வரப்போகிறது.

 உடல் ஆரோக்கியம்  மேலோங்கும். உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். அஷ்டம சனியால் எத்தனையோ பிரச்சினைகளையும் அவமானங்களையும் சந்தித்த மிதுன ராசி நேயர்களுக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கப்போகிறது.

ஒன்பதில் உள்ள பாக்ய சனியால் அதிர்ஷ்ட காற்று அதிகரிக்க போகிறது.. பணவரவு  சரளமாக இருக்கும். வேலையில் சம்பளம் மற்றும் பதவி  உயர்வு  கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம்  ஏற்படும்.. நகை, பொன் பொருள், சொத்து , வாகன  சேர்க்கை உண்டாகும்.. நிறைய தான தர்மங்களை தர்ம சனி காலத்தில் செய்வது கர்ம வினையை அகற்றும்.



மிதுன ராசி நேயர்களுக்கு இளைய உடன் பிறப்புகளுடனான உறவுமுறை  சற்று கரடு முரடாக இருக்கும்,  உங்கள் தந்தையின் இருந்து  ஆதரவு கிட்ட அதிக வாய்ப்பில்லை. உங்கள் குழந்தைகளின் நடத்தை மற்றும் பழக்க வழக்கங்கள்  உங்கள் மனதை பாதிக்கும். நீங்கள் அனுசரித்து  நடந்து கொள்வதன் மற்றும் விட்டு கொடுத்து போவதன்  மூலம் சில பிரச்சினைகள் தீரும்.இது நாள் வரை திருமண தடை ஏற்பட்டவர்களுக்கு  இந்த கால கட்டத்தில் இல்லற  வாழ்க்கை அமையும்.

திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் நெருக்கம் இருக்கும். இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்வீர்கள்.

.தொழிலில் சரளமான போக்கு காணப்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு சிலர் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் தொழிலை விரிவுபடுத்த ஒரு சிலர் கடன் வாங்குவீர்கள்.



மிதுன ராசி மாணவர்கள் கல்வியில்  சிறப்பான சாதனை புரிவார்கள். கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவார்கள். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். படைப்பாற்றல் பெருகும். போட்டித் தேர்வில் பங்கு பெறுபவர்கள் சிறப்பாக தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெறுவார்கள்.

மிதுன ராசி நேயர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். மனப் பதட்டம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது.

மிதுன   ராசி நேயர்கள் செய்ய வேண்டிய பரிஹாரம்

சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றலாம். மிதுன ராசிக்கு  ராசிக்கு கேது 4 ல் இருப்பதும் குரு   வருகின்ற 1 மே 2024 முதல்   12ம் இடத்தில் தனகாரகர் குரு அமர இருப்பதும் தீய பலன்களை  மிதுன  ராசி நேயர்கள் அனுபவிக்க நேரிடும். ஆகையால் உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .


No comments:

Post a Comment