Search This Blog

Tuesday, December 19, 2023

திருநள்ளாறு வாக்கிய துலா ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026 -துலா ர...


துலாம் சனி பெயர்ச்சி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.



துலா   ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்  துலா     ராசிக்கு  சனி  பஞ்சம   ஸ்தானமான  5ம் இடத்திற்கு வருவதும் , ராகு 6ல் இருப்பதும் கேது 12ல் இருப்பதும் குரு  7ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   8ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மை மற்றும் தீயபலன்கள் கலவையாக  நடைபெறும்.. சனி 5ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை  கன்னி ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். ராகு 6ல் இருப்பதும் குரு 7 ம்  இடத்தில்  இருப்பதும்  நன்மையான  பலன்களை தரும், ஆகையால் கன்னி ராசி நேயர்கள்,கேது மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

 துலா   ராசி நேயர்கள்   90 சதவீதம்  யோகமான பலன்களை  அனுபவிக்க இருக்கிறார்கள்.  துலா  ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மையான பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது. .துலா   ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.



மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி யோகமான  பலன்களைத் தரும்.  சனி பகவான் இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார்.

துலா  ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.  வருமானம் பெருகும். சேமிப்பு மிகும். அதன் மூலம் வீடு, சொத்து வாங்கலாம். புதிய முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.  இது நாள் வரை திருமணம் தடைபெற்றவர்களுக்கு திருமணம் செய்வதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.  நல்ல  வாழ்க்கைத்  துணை அமையும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து அதிக அன்பும் மரியாதையும் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளை  மேற்கொள்ளலாம்.. அவை லாபம் தரும்.

துலா ராசிக்கு இது நாள் வரை அர்த்தாஷ்டம சனியால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த நீங்கள், விபத்துக்களை சந்தித்த உங்களுக்கு நீங்கள் சந்தித்த  துன்பங்களில் இருந்து விடிவுகாலம் இந்த சனி பெயர்ச்சியால் உங்களுக்கு நடக்க போகிறது.



சனிபகவான் பஞ்சமஸ்தானமான ஐந்தாம் வீட்டில் அமர்வது சிறப்பு. பூர்வஜென்ம புண்ணியங்களை பலன்களை  அனுபவிக்க போகிறீர்கள்.. நன்மையான பலன்களே உங்களுக்கு அதிகம் நடக்க இருக்கிறது. அர்த்தாஷ்டம சனியால் வேலை இழந்தவர்களுக்கும், வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கும்விரைவில் புதிய வேலை கிடைக்க போகிறது. நீங்கள் நினைத்து பார்த்திரதா  சம்பளத்தில் நல்ல வேலை உங்களுக்கு கிடைக்க இருக்கிறது.

வேலை செய்யும் இடத்தில் சங்கடங்களை சந்தித்தவர்களுக்கு இனி மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். வேலை  உயர்வும் , சம்பள உயர்வும்  ஒரு சேர கிடைக்கும். சிலருக்குவிரும்பிய  இடத்திற்கு  அனுகூல இடமாற்றம் கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் துலா ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறார்கள்.. பணவரவுசரளமாக  இருக்கும். செய் தொழில் வளர்ச்சி பெறும். திருமண தடைகள் நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும்.

ராகு 6ல் இருப்பது எதிரிகளை பந்தாடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .மனைவி மற்றும்  நண்பர்களினால் அதிக நன்மையே அடைவீர்கள். பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கி ஆனந்தமாய் இருப்பீர்கள்.12ல் கேது இருப்பது  ஞானமார்க்கத்தில் ராசி நேயர்களை ஈடுபடவைக்கும். பல கோயில்களுக்கு ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தான தர்மம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்படும்.

பரிஹாரம்

உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில்ராகு  பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி சனிக் கிழமைகளில் வழிபடலாம். செவ்வாய் கிழமை தோறும் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .ஸ்ரீ ஆஞ்சநேயரை  தினமும் வழிபட்டு வருவது நல்லது.


No comments:

Post a Comment