ரிஷப ராசி
ரிஷப ராசிக்கு குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024 வரை
12ல் சஞ்சரிப்பார். வேலை அல்லது தொழில் நிமித்தமாக
அலைச்சல் இருக்கும். விரய சிலவுகளை தவிர்க்கவும்
வருகிற 1 மே 2024 முதல் ரிஷப ராசிக்கு
குரு ஜென்ம ராசியில் அமர்ந்து 5,7,9 இடங்களை பார்வை இடுவார். இதுநாள் குழந்தை பாக்கியம்
இல்லாதவர்களுக்கு தற்சமயம் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்விக சொத்து சார்ந்த சிக்கல்கள்
நீங்கி சொத்து அவர்கள் கைக்கு வரும்குழந்தைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
உயர் கல்வி வாய்ப்பு , மருத்துவம் போன்ற துறைகளில் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின்
வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் பெற்றோர்கள் மனது குளிரும். இல்லற வாழ்க்கை
இனிமையை அமையும்.
கனனவன் மனைவி உறவில் நல்ல அன்னியோன்யம்
ஏற்படும். கூட்டாளிகளால் நல்ல லாபம் அமையும். இதுநாள் வரை பிரிந்து இருந்த கணவன் மனைவி
தற்சமயம் மனக்கசப்பு நீங்கி ஒன்று சேருவார்கள். பல கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்யும்
யோகம உண்டாகும். தானம் , தர்மம் செய்யும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும்,
வெளிநாட்டில் வேலையும் கிடைக்க வாய்ப்புகள்
அதிகம். தந்தையின் தொழில் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷப ராசி நேயர்கள் 85 சதவீதம் யோகமான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். எதிர்பாராத
தன லாபங்கள் மற்றும் செல்வ சேர்க்கை உண்டாகும் ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் யோகமான பலன்கள் நடக்க இருக்கிறது.
புதிய கடன்கள் வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். வங்கிகளில் தொழில் செய்வதற்காக புதிய கடன்கள் கிடைக்கும். ரிஷப ராசிக்கு பத்தில் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் அமைவதால் யோக பலன்கள் ஏற்படும்.சனியால் உங்களுக்கு
கிடைக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் தடுக்க முடியாது.
இது நாள் வரை திருமணம் தடை பெற்றவர்களுக்கு தற்சமயம் சனி பகவான் அருளால் திருமணம் நடக்கும்,
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.
புது வேலை அல்லது தொழில் அமையும். நீங்கள் வகிக்கும் பதவியில் புது உற்சாகம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.
2024 முழுவதும் ராகு பகவான் 11ல் இருப்பது
யோகமான பலன்களை ரிஷப ராசி கேயர்களுக்கு யோகமான பலனகளை தர இருக்கிறது. கேது 5ல் இருப்பது
குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய மன கலக்கத்தை தரும். செவ்வாய் கிழமைகளில் கேது பகவானுக்கு
நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். உங்கள் குலதெய்வத்தை அடிக்கடி மனிதில் நினைத்து
வழிபட்டு வர வளமான வாழ்வு அமையும்.
No comments:
Post a Comment