Search This Blog

Wednesday, January 24, 2024

ஏமனில் ரத்த பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா?நிமிஷா ப...


நிமிஷா பிரியா  -யார் இவர்?

ஒருவருடையபிஜாதகத்தில் ஏழரை சனி , அஷ்டம சனி , பாபிகளின் தசை , மாரகாதிபதி தசை போன்றவை நடைபெற்றால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்ப்படும் என்பதை கீழ்காணும் நிகழ்வு உணர்த்துகிறது. பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் பொழுது எந்த மாதிரியான தீய பலன்கள் ஏற்படலாம் என்பதை கீழ்கண்ட உண்மை நிகழ்வு உணர்த்துகிறது.

நிமிஷா பிரியா  கேரளாவை சேர்ந்த செவிலியர். இவர் ஏமன் நாட்டில் செவிலியரயாக பணிபுரிந்து வந்தார். ஆனால் அவர் 2017ம் முதல் ஏமன் சிறைச்சாலையில் மரண தண்டனை கைதியாக உள்ளார். அவர் மீது ஏமன் குடிமகனான தபோல் அபிடோ மஹதி என்பவரை கொன்றதாக வழக்கு நிலுவையுள்ளது.

இவர் தன்னை இந்த கொலை வழக்குவில் இருந்து விடுவிக்க கோரி மேல்முறையீடு மனுக்கள் ஏமன் நாடு உச்ச நீதி மன்றத்தால் நிராகரிக்கபட்டுள்ளது. இந்த தீர்ப்பை டெல்லி உயர்நீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. நிமிஷா பிரியா கேரளாவில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த பயிற்சி பெற்ற செவிலியர் ஆவார். இவர் செவிலியராக ஏமன் நாட்டில் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். அவர் ஏமன் நாட்டில் செவிலியர் சம்மந்தப்பட்ட பயற்சிகளை முடித்து அங்குள்ள சில தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரிந்து வந்துள்ளார். 2017 ஆண்டு நிதி பிரச்சனைகளால் இவருடைய  கணவர் மற்றும் குழந்தை இந்தியாவிற்கு திரும்ப நேரிட்டது. பிரியா மட்டும் ஏமெனிலில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.



2014 ஆண்டு இவர் தபோல் அபிடோ மஹதி என்பவரை யேமெனிலில் சந்தித்தார். இவர் ப்ரியாவிடம் அவர் ஒரு மருத்துவ மனை தொடங்க உதவி செய்வதாக கூறினார். ஏமன் நாட்டு சட்டத்தின்படி ஏமெனில் தொழில் செய்ய அந்த நாட்டு பிரஜை ஒருவரை கூட்டாளியாக இருக்கவேண்டும். 2015ம் ஆண்டு பிரியா ஒரு சிறிய மருத்துவ மனையை ஏமெனில் தொடங்கினார்.

தபோல் அபிடோ மஹதி -தொழில் கூட்டாளியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியாவுடைய மருத்துவ மனை விரைவில் மூடப்பட்டது. இந்த கருத்து வேறுபாடு ஏமன் மருத்துவ மனையின் நிதி சம்பந்தபட்டது ஆகும். இதன் காரணமாக அபிடோ மஹதி ப்ரியாவை மிரட்ட தொடங்கியுள்ளார். அபிடோ மஹதி ப்ரியாவின் பாஸ்ப்போர்ட்டையும் முடக்கினார். இதன் காரணமாக பிரியா 2016ம் ஆண்டு ஏமன் காவல் நிலையத்தில் அபிடோ மஹதி மீது புகார் ஒன்றை அளித்தார்.

இதனால் அபிடோ மஹதி 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அபிடோ மஹதி சிறையிலிருந்து வெளியே வந்தார்.

சிறையிலிருந்து வெளி வந்த பிறகும் அபிடோ மஹதி பிரியாவை மிரட்டி வந்தார். 2017ம் ஆண்டு பிரியா அபிடோ மஹதிக்கு மயக்க மருந்தை செலுத்தி அவருடைய கடவு சீட்டை பெற முயன்றுள்ளார். மயக்க மருந்து அதிகமாக செலுத்தப்பட்டதால் அபிடோ மஹதி அகால மரணமடைய நேரிட்டது. பிரியா தன்னுடைய மற்றொரு ஏமன் நாட்டு நன்பரான ஹனன் என்பவருடன் கூடி அபிடோ மஹதி உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு நீர் சேமிப்பு தொட்டியில் எரிந்துள்ளார்.

இதனை அடுத்து பிரியா மீது கொலை குற்றம் 2018ல் சாற்றப்பட்டு கைது செய்யப்பபட்டு ஏமன் சிறையில் அடைக்க பட்டார்.



 ஏமன் நாட்டின் கீழமை நீதிமன்றம் ப்ரியா மீது சாற்றப்பட்ட கொலைக்குற்றம் நிரூபணம் ஆனதாக தீர்ப்பு அளித்தது. ப்ரியாவின் குடும்பம் அவரை விடுதலை செய்வதற்கு தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன.

ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால் மரண தண்டனையில் இருந்து தப்ப மற்றொரு வாய்ப்பு நிமிஷாவுக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெற்று இழப்பீட்டுத் தொகை செலுத்தி மரண தண்டனையில் இருந்து விடுதலையாவதே நிமிஷாவிற்கு இருக்கும் அந்த ஒரே வாய்ப்பு.

 இதன் காரணமாக அபிடோ மஹதி குடும்பத்திற்கு ரூபாய் 70 லக்ஷம் அளித்தால் அவரை விடுதலை செய்யலாம் என்று சமரச உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டது. ஆனால் பிரியா தன்னிடம் அவ்வளவு பெருந்தொகை இல்லை என்று மன்றாடினார். இதற்கிடையில் ப்ரியாவின் தாய் டெல்லி உயர்நீதி மன்றத்தில் தன் மகளை சந்திக்க ஏமன் நாட்டுக்கு செல்ல அனுமதி தருமாறு ஒரு விண்ணப்பம் அளித்துள்ளார். அனுமதி கிடைக்கப்பெற்றால் அபிடோ மஹதி குடும்பத்த்தை சந்தித்து கருணை தொகையை குறைக்க முயற்சி மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

டெல்லி உயர்நீதி மன்றமும் பிரியாவின் தாயின் மனுவை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசுக்கு உத்தரவு இட்டுள்ளது.

ஆனால், ஏமன் நாடு ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை.

எனவே இந்திய குடிமக்கள் ஏமனுக்கு செல்வது ஆபத்தானதாக இருக்கும் என இந்திய அரசு கருதுகிறது. எனவே இங்கிருந்து நிமிஷாவின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சென்று அவரை மீட்பதில் சிக்கல் நிலவி வந்தது.

சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் குழு சார்பில் (Save Nimisha Priya International Action Council) டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரேமா குமரியை தங்கள் கவுன்சிலை சேர்ந்த இரு உறுப்பினர்கள் உடனிருந்து அழைத்துச் செல்வார்கள் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏமனுக்கு நிமிஷாவின் தாயார் மற்றும் அவருடன் மேலும் ஒரு நபரும் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த பயணத்திற்கு அவர்கள் மத்திய அரசைச் சாராமல், சொந்த பாதுகாப்பை தாங்களே உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஏமன் செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


No comments:

Post a Comment